மேற்கு வங்கம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் துணை இராணுவப்படையில் முகாம் ஒன்றுக்குள் புகுந்த மாவோயிஸ்டுகள் நடத்திய கெரில்லா தாக்குதலில் 24 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாக்குதல் ந்டந்த அடுத்த அரைமணி நேரத்தில் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட மாவோயிட் தலைவர் கிஷஜி பிரபல ஆங்க்ல சேனல் ஒன்றிருக்கும் செய்தி அனுப்பின்னார். அதில் உடனடியாக சிதம்பரத்தால் முன்னெடுக்கப்படும் ஆப்ரேஷன் க்ரீன்கண்ட் என்னும் பழங்குடி மக்கள் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், இல்லை என்றால் இது போன்ற பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கிஷன்ஜி தெரிவித்துள்ளார். ஏற்கனவே சமூகத்தில் செல்வாக்கான பணக்கார வர்க்கத்தினர் கூடும் வெளிநாட்டு பேக்கரியைக் குறிவைத்து புனேயில் நடத்தப்பட்ட தாக்குதலில் உள்துறை அமைச்சகமும் புலனாய்வுத்துறையும் செயலிழந்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிற வேளையில் மிட்னாப்பூர் தாக்குதலால் மேலும் பதட்டம் அதிகரித்திருக்கிற வேளை. தெலுங்கானா கிளர்ச்சி நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதும் உள்துறை அமைச்சகத்திற்கு தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது.