இந்தியாவில் மணிப்பூர் மானிலத்தின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் 1964 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தோற்றத்துடன் அமைப்பு மயப்பட்டது. அந்த அமைப்பின் செயலாளர் எம்.கே.மேகன் இந்திய இராணுவத்திற்கு எதிரான போரை நடத்திவருவதாக ஆயுதப்படைகளால் தேடப்படுகிறார். அண்மையில் மேகன் விடுத்துள்ள அறிக்கையில் நாங்கள் பிரிவினை வாதிகள் அல்ல பிரிந்து செல்லும் உரிமைக்காகவே போராடுகிறோம் என்றார். இந்தியாவோ அதன் இராணுவமோ எமது எதிரிகள் அல்ல, ஆனால் இந்திய இராணுவத்தை எமது பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு போராடுகிறோம் என்று தெரிவித்திருந்தார்.
தேசிய இனங்களை ஒடுக்கும் இந்திய இராணுவம் பல்வேறு இனப்படுகொலைகளை நடத்தியுள்ளது. பதின்னான்கு ஆண்டுகளின் முன்னர் மாலோம் என்ற கிராமதினுள் புகுந்த இந்திய இராணுவச் சிப்பாய்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரையோகம் செய்தனர். 10 பேர் மாண்டு போக 34 பேர் படு காயங்களுக்கு உள்ளாகினர். மாலோம் படுகொலைகள் என அழைக்கப்படும் இப்படுகொலைகளை நடத்திய இராணுவச் சிப்பாய்களோ அன்றி உத்தரவு பிறப்பித்த தலைவர்களோ இதுவரை தண்டிக்கப்படவில்லை. ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தின் அடிப்படையில் இராணுவத்தினர் தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர்.
படுகொலைகள் நடைபெற்று மூன்றாம் நாளிலிருந்து இச்சட்டத்தை நீக்கக் கோரி ஐரோம் ஷர்மிளா என்ற போராளி சாகும் வரை உண்ணாவிரதமிருக்க ஆரம்பித்தார். 14 வருடங்கள் கடந்த பின்பும் அவர் உணவு ஏதும் அருந்தாமல் உண்ணாவிரதமிருக்கிறார்.
தனது 28ஆவது வயதில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியதில் இருந்து, கடந்த 14 ஆண்டுகளாக அந்தப் போராட்டத்தை ஷர்மிளா தொடர்ந்து வருகிறார். மணிப்பூர் மானில அரசு அவரை மருத்துவமனையில் அடைத்து வைத்திருக்கிறது.
இந்த வழக்கு இம்பால் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.குணேஷ்வர் சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:
ஷர்மிளா மீது தற்கொலைக்கு முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. அவர் மீது வேறு எந்த வழக்குகளும் இல்லை என்றால், ஷர்மிளாவை உடனடியாக விடுதலை செய்யலாம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
சுயநிர்ணைய உரிமையைக் கருத்தளவிலேயே எதிர்க்கும் எல்லா நாடுகளையும் தமது நட்பு நாடுகளாகக் கருதும் தமிழ்த் தலைமைகள் ஷர்மிளாவின் உறுதியின் முன்னால் தலைகுனிய வேண்டும்.
Thank you for the information. I named my second daughter as Sharmila in 1981 after Actor Sharmila Tagore. My Sharmila has been to Malaysia from Australia.