போதை பொருள் கடத்தல் வழக்கில் சில ஈழத்தமிழர்கள் கைதாகியுள்ளனர். லட்சத்தீவின் மினிக்காய் கடற்கரையில் ஏ.கே. 47 துப்பாக்கிகள், 300 கிலோ போதைப் பொருட்கள்ம் ஆயிரம் கிலோ தோட்டார்க்களுடன் 6 ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை என். ஐ.ஏ எனப்படும் இந்திய பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அக்டோபர் 5-ஆம் தேதியன்று புலிகளின் முன்னாள் உளவுப்பிரிவின் உறுப்பினர் சற்குணன் என்ற சபேசன் கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார் அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பை மீள கட்டமைக்க முயன்றார்” என்றது.
ஆனால், சற்குணன் சீமான் குடியிருக்கும் வளசரவாக்கத்தில் குடியிருந்திருக்கிறார் மேலும் சீமானோடு நெருக்கமான தொடர்புகளையும் பேணியிருக்கிறார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருகிறது. அண்மையில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையில் சீமான் பேசியது, சமூக ஊடகங்களில் வெளியானது. இத்தகைய கூட்டங்களில் வன்முறையைத் தூண்டும் வகையிலும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவுடன் தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசனை என்.ஐ.ஏ கைது செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. வளசரவாக்கம், ஐயப்பன்தாங்கல் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்த இவரிடம் இருந்து அதிர்ச்சியூட்டும் ஆவணங்களும் தமிழ்நாட்டில் இருந்து பெரும் நிதியை இலங்கைக்கு அனுப்பிய ஆதாரங்களும் சிக்கியுள்ளன..S.ALAGIRI/FACEBOOK
இவர் ஏற்கெனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு அண்மையில்தான் வெளியில் வந்திருக்கிறார். சர்வதேச போதைக் கடத்தலில் சம்பந்தப்பட்டு பாகிஸ்தான், துபாய், இலங்கை என தொடர்பு கொண்டிருந்ததற்கான ஆதாரங்களும் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் வாழ்கின்ற புலி ஆதரவாளர்கள் இவர் மூலமாக பெரும் நிதியை வழங்கி வருகிறார்கள். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சற்குணனுக்கும் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் மூலமாக பெரும் நிதி சீமானுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டில் தேச விரோத சக்திகளின் நடமாட்டத்தைத் தடுக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே இலங்கையில் இருந்து போதை பொருள் கடத்தல் தொடர்பாக சிலர் கைது செய்யப்படுகிறார்கள். இந்தியாவின் குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளிநாட்டிற்கு செல்ல முயன்றதாகவும் பலரும் கைது செய்யப்படுகிறார்கள். இப்போது போதை, ஆயுதக் கடத்தல் கும்பலோடு தொடர்புடையோர் கைது செய்யப்படுகிறார்கள். இது தமிழ்நாட்டில் இருக்கும் சூழலை அமைதியைக் கெடுத்து விடும்.