பொதுபலசேனா அமைப்புடன் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக மேல் மாகாணசபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்புடன் தொடர்பு கிடையாது என அரசாங்கம் மறுத்த போதிலும், உண்மையில் அந்த அமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த இஸ்லாமிய நாடுகள், முட்டாள்தனமான தீர்மானம் எடுத்து விட்டதனை உணர வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் காத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பொதுபல சேனா அமைப்புடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லை எனத் தெரிவித்த போதிலும், பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ஷ அந்த அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்தத் தாக்குதல் சம்பவங்களை கண்டு கொள்ளாது அமைச்சர் ஹக்கீம் உறங்கிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.