01.01.2009.
எகிப்தின் தலைநகர் கைரோவில் நடந்த அரபு லீக்கின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில், பாலத்தீனத்தில் உள்ள போட்டிக் குழுக்கள் தங்களுக்கிடையேயான வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
காசாவில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற பிரான்ஸின் யோசனையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. தற்போதைய சூழல் உகந்ததாக இல்லை என்றும் போர் நிறுத்தம் என்பது நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் எகுத் ஒல்மார்ட் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீதான பாலத்தீன ராக்கெட் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச கருத்தொற்றுமை இருப்பதாக அவர் கூறினார்.
ஹமாஸ் சார்பில் பேசவல்ல ஒருவர், இந்நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் முதலில் காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் போர் நடவ டிக்கை குறித்து ஐ.நா., ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, அமெரிக்கா ஆகி யவை தொலைபேசியில் ஆலோசனை நடத்தின. ஹமாஸ் ஆட்சி செய்யும் காசா பகுதியில் குண்டு வீசு வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ் ரேல் பகுதியில் ராக்கெட் வீச்சு தொடர்வதை நிறுத்த வேண்டும் என்றும் உலக நாடுகள் கேட்டுக் கொண் டுள்ளன.
உலக நாடுகளுடன் தொலை பேசி ஆலோசனையை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நடத்தினார். போர் தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் போதிய மருந்து வசதி இல்லாத நிலை யில் இறக்கும் அபாயம் உள் ளது என ஐ.நா. முகமைகள் எச்சரித்ததை தொடர்ந்து பான் கி மூன் உலக நாடுகளு டன் அவசர தொலைபேசி ஆலோசனையை நடத்தினார்.
உலக சுகாதார நிறுவ னம் எரிபொருள் மற்றும் முக்கிய உயிர் காப்பு கருவி களுக்கு வழி செய்ய வேண் டும் என இஸ்ரேலை அவ சரப்படுத்தி உள்ளது.
பாலஸ் தீன அகதிகளுக் கான ஐ.நா. நிவாரண மற் றும் பணிகள் முகமை கிழக்கு ஆணையர் ஜெனரல் காரன் அடி சயத் கூறுகை யில், தற்போதைய சூழ் நிலை மிக மோசமாக உள் ளது என்றார்.