இலங்கையின் பொலிஸ் நிலையங்களில் சித்திரவதையானது தொற்று நோயாக உருவெடுத்திருப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்குரிய அரசியல் விருப்பம் இல்லாத நிலைமை தென்படுவதாகவும் ஆசிய மனிதஉரிமைகள் குழு நேற்றுமுன் தினம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
சாதாரண குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின்போதும் விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டு யுத்தத்தின் ஒரு பகுதியான விசாரணை நடவடிக்கைகளின் போதும் சித்திரவதையானது ஒரு தகுதிவாய்ந்த நடைமுறையாக கடைப் பிடிக்கப்படுவதாக ஹொங்கொங்கை தளமாக கொண்டியங்கும் ஆசிய மனிதஉரிமை ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையான ஆதாரங்கள் இல்லாதவையென்று அரசாங்கம் கூறியிருக்கிறது.
ஆயிரக்கணக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்ட போதும் அதிகாரிகளின் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பாக மட்டுமே விசாரணைகளை சட்டமா அதிபர் அலுவலகம் ஆரம்பித்திருப்பதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
சிறிய குற்றங்கள், பாரிய குற்றச் செயல்கள் அல்லது அவசர காலநிலை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழான குற்றச் செயல்கள் என்பன தொடர்பான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படுவதானது இலங்கையின் பொலிஸ் நிலையங்களில் வாழ்க்கை முறைமையாக காணப்படுவதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரவதைகள் தொடர்பான விசாரணைகள் அரசியல் ரீதியாக தடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இவை அரசியல் ரீதியாக தடுக்கப்பட்டுள்ளன. சித்திரவதையை இல்லாதொழிப்பதற்கான அரசியல் விருப்பம் பற்றாக்குறையாக இருப்பது நீதி, நிர்வாகத்துறையையே முழுமையாகப் பாதித்துள்ளது என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.