சரத் பொன்சேகா நேற்றிரவு சினமன் லேக் வியூ ஹோட்டலிலிருந்து வெளியேறினார் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். அவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக அவரது இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால், தனக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு இந்தியாவிடம் உதவி கேட்க சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவு வெளியான சிறிது நேரத்தில், சரத் பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலை இராணுவம் முற்றுகையிட்டது.
இதனால், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சரத் பொன்சேகா அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் சிறிது காலத்துக்கு இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தங்கப் போவதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இது குறித்துக் கூறுகையில்,
“சரத் பொன்சேகா, பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அண்டை நாடான இந்தியாவின் தூதரக அதிகாரிகளை சந்தித்து, பொன்சேகாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கவிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்தியாவின் ஆள் மகிந்தரல்லவோ!
அமெரிக்காவையல்லவோ மனோ கணேசன் கேட்க வேண்டும்.
மகிந்தவை தட்டி வைக் இந்தியாவால் பயன் படுத்தப்பட்டவரே ச்ரத் இல்லை என்றால் மகிந்த இந்தளவுக்கு இறங்கி வந்திருக்கமாட்டேர்.சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தனகல் என் சில புண்ணாக்கு தளங்கள் எழுதும் அவை உண்மை அல்ல.அமெரிக்காவும் இந்தியாவும்நட்புத் தளத்தில் இயங்குகினறன இதில் சரத் யாருடைய ஆள். தனியாள்.வெறூம் கருவேப்பிலை.
“சரத் யாருடைய ஆள். தனியாள்.வெறூம் கருவேப்பிலை”
சும்மா கருவேப்பிலை இல்லை அமெரிக்கன் கருவேப்பிலை.
புண்ணாக்குக் கதை என்றால் இது தான்: “மகிந்தவை தட்டி வைக் இந்தியாவால் பயன் படுத்தப்பட்டவரே ச்ரத் “