மணிநேரக் காலப்பகுதியில் 1000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 1600 பேர் வரை காயமடைந்தும் உள்ளதாகவும் காயமடைந்தவர்களில் சிறுவர்கள், பெண்கள் அடங்குகின்றனர் எனவும் சர்வதேச ஊடகங்களில் பொய்யான செய்திகள் வெளியாகியிருந்தன” என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல இன்று கொழும்பு பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மைக்காலமாக சிவிலியன்கள் கொல்லப்படுவது தொடர்பில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களில் பல பொய்யான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. புலிகள் இன்று தமது பலத்தை இழந்துள்ளதால், அவர்கள் சர்வதேசத்தின் பார்வையை ஈர்க்க முயல்கின்றனர். ஐ.நாவின் கவனத்தையும் ஈர்க்க முயற்சி செய்கின்றனர்.
இதற்கு சிவிலியன்களின் உயிரையே தமது கருவியாக அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
சர்வதேச ஊடகங்களோ உண்மை என்னவென்று தெரியாது செயற்படுகின்றன. இது எமக்குக் கவலை அளிக்கிறது. பாதுகாப்பு வலயங்களில் சிவிலியன்களின் உயிரிழப்புகள் தொடர்பான தகவல்களை வைத்தியர்களிடமே அவர்கள் பெற்றுக் கொள்வதாகக் கூறப்படுகின்றது. செல் தாக்குதல்களிலேயே சிவிலியன்கள் உயிரிழப்பதாக அல்லது காயமடைவதாகக் கூறப்படுகிறது.
2-1/2 கிலோமீற்றர் வரையில் விடுதலைப் புலிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று பலர் விடுதலைப்புலிகளின் தலைவரை நியாயப்படுத்த முற்படுகின்றனர்.
எமது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நோர்வே மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பில் கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
என்ன குற்றச்சாட்டுகள் வந்தாலும் அரசு மக்களின் நலன்கருதியே செயற்படும் என்பது உறுதி” என்றார்.
இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார
இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவிக்கையில்,
“59 ஆவது படையினர் வடுவக்கால் நந்திக்கடல் வழியாக தமது பலத்தை ஸ்திரப்படுத்தி முன்னேறி வருகின்றனர்.
இப்பகுதியில் 3 தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, பல ஆயுதங்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் 10 சடலங்கள் கைப்பற்றப்பட்டன.
இதுவரை 1,88,500 பொதுமக்கள் வரை படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இன்று 59 ஆவது படையணியினரால 40 பேரும் 58 ஆவது படையணியினரால் 50 பொதுமக்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி 16 வயதுக்குட்பட்ட மூன்று விடுதலைப்புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர். அதேபோன்று நேற்றைய தினமும் 5 பேர் வரை 53 ஆவது படையணியினரிடம் சரணடைந்துள்ளனர்.
இவர்கள் புனரமைப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்றையதினம் 58 ஆவது படையணியினர் 27எம்.எம். விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் கைப்பற்றினர்” என்றார்.
கடற்படைப் பேச்சாளர்
கடற்படைப் பேச்சாளர் பேசுகையில்,
“படகுகளில் தப்பி வந்த சிவிலியன்கள் எவரும் கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்படவில்லை எனவும் 20,000க்கும் அதிகமான மக்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இது வரையில் கடற்புலிகள் 7 தடவைகள் தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். கடற்படையினர் டோராப்படகுகளின் உதவியுடன் முல்லைத்தீவுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் 17 படகுகளைத் தாக்கியழித்தும் சில படகுகளைக் கைப்பற்றியுமுள்ளனர். அதேவேளை, 100க்கும் அதிகமான புலிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அண்மைக் காலமாக விடுதலைப்புலிகள் அதிகளவிலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் தற்போது பலமிழந்து காணப்படுகின்றனர். அதனால்தான் இவ்வாறான தாக்குதல்களை அவர்கள் நடத்துகிறார்கள்” என்றார்.