ராஜபக்ச குடும்ப ஆதரவில் இயங்கும் போதுபல சேன என்னும் சிங்கள பௌத்த நாஸி அமைப்பிற்கு எதிராக தயா குழு என்ற பௌத்தர்களின் அமைப்பும் பொதுபல சேனாவை கேள்விக்குள்ளாக்கும் பௌத்தர்களின் அமைப்பு என்ற அமைப்பும் சில முஸ்லீம் அமைப்புக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தன. 12.05.2013 அன்று இரவு கொழும்பு 5 ஹவலக் வீதியில் அமைந்துள்ள சிறீ சம்புதாத்வ ஜெயந்தி சந்தியில் பொது பல சேனாவின் அலுவகலத்தின் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கூடியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் அங்கு வந்த பௌத்த துறவிகள் குழு ஒன்று ஆர்பாட்டக் காரர்களைக் கலைந்து செல்லுமாறு வன்முறை கலந்த முழக்கங்களை எழுப்பியது. அவ்வேளையில் அங்கு வந்த போலிஸ் படை வன்முறை ஏற்படுத்திய துறவிகளைக் கண்டுகொள்ளாமல், அமைதிவழி ஆர்ப்பாட்டக் காரர்களைக் கலைந்து போகுமாறு கோரியது. மறுத்தவர்களை போலிஸ் வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையம் வரை கொண்டுசென்று மிரட்டி விடுதலை செய்திருக்கின்றனர். பொது பல சேனாவிற்கு எதிராக தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும் நிலையில் மக்கள் புரட்சியை அமைதி வழியில் மேற்கொள்ளப் போவதாகக் கூறும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற குழுக்கள் துணடறிக்கை கூட வெளியிட்டதில்லை. சுய நிர்ணய உரிமை கோரினால் இனவாதமாகத் தெரியும் அவர்களது சிந்தனைக்கு பௌத்த துறவிகள் நாசிசக் கோட்பாடுகள் பேரினவாதமாகத் தெரிவதில்லை.