கோத்தாபய ராஜபக்சவினால் இலங்கை அரசின் முழு ஆதரவோடு உருவாக்கப்பட்டுள்ள பௌத்த துறவிகளின் நாஸி அமைப்பான பொதுபல சேனா என்ற அமைப்பிற்கு எதிராக நாளை 12.05.2013 அன்று இரவு கொழும்பு 5 ஹவலக் வீதியில் அமைந்துள்ள சிறீ சம்புதாத்வ ஜெயந்தி சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சிங்கள முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து ஒழுங்கு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் அனைத்துப் பிரிவினரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளர்கள் அனுப்பிவைத்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தேவையேற்படும் போது இன வன்முறையை தோற்றுவிக்கும் நோக்கோடு பொதுபல சேனா என்ற நாஸி அமைப்பை இலங்கை அரசு பின்னணியில் நின்று நடத்திவருகிறது.