இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்களை அங்கு செல்ல வேண்டாம் என்று இரந்து கேட்கும் பல அமைப்புக்களையும் தனி நபர்களையும் காண்கிறோம். இன்று பிரித்தானியாவில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கனவான்கள் குழு ஒன்று பிரித்தானியப் பிரதமரை இலங்கை செல்ல வேண்டாம் என்று கோருவதற்காக சந்தித்துள்ளது. இது குறித்து சனல் 4 செய்தி ஆய்வு ஒன்றையும் வெளியிடது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வில்லியம் ஹேக் இலங்கைக்குச் சென்று ராஜபக்சவை மிரட்டப்போவதாகக் கூறித் தப்பிக்கொண்டார். ராஜபக்சவை மிரட்டும் ஏகாதிபத்திய நாடுகள் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக்கொள்கின்றனவா அல்லது வியாபாரப் பேரம் நடத்துகின்றனவா என்பதே இங்கு பிரதான கேள்வி. இவ்வேளையில் கோப்ரட் வாச் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி கவனத்திற்குரியது.
செய்தியின் தமிழ் வடிவம்:
கூட்டுநிறுவன கண்காணிப்பகம் [Corporate Watch] அமைப்பானது எதிர்வரும்
நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடக்க இருக்கும் பொதுநாலவாய நாடுகளின் வணிக
சம்மேளனத்தினால் [Commonwealth Business Council] மேற்கொள்ளப்பட உள்ள
இரண்டு பில்லியன் டொலர் பெறுமதியான வியாபார ஒப்பந்தங்களை ஆராய
உத்தேசித்துள்ளது.
இந்த வணிக சம்மேளனதின் நிகழ்ச்சி நிரலே இம்முறை சர்ச்சைக்குரிய பொதுநாலவாய
நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதான பங்குவகிக்கவுள்ளது. சர்சைக்குரிய
இந்தப் பொதுநாலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு பல மனித உரிமை
ஆர்வலர்களாலும் அமைப்புக்களாலும் புறக்கணிப்பு செய்ய கோரப்படுகின்றது.
பொதுநாலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டினால் இலங்கையின் இனப்படுகொலை
அரசியலுக்கு உலக அங்கீகாரம் வழங்கப்படுமாயின் இந்த வணிக சம்மேளனத்தின் ஊடாக
வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் தமிழ் மக்கள் அல்லலுறுவதில் இலாபமடைய
உதவுவதுடன் இராணுவத்தால் தமிழ் மக்களிடம் இருந்து இன்னும்
அபகரிக்கப்பட்டிருக்கும் நிலங்களை அவர்களின் வியாபாரத்திற்கான உடமைகளாக
மாற்றுவதற்கும் உதவும்.
இந்த மூன்று நாள் வர்த்தக மாநாடே இதுவரை இலங்கையில் நடைபெற்ற மிகப் பெரிய
வணிக நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன் நிகழ்வானது
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டு வர்த்தக நிறுவனங்களையும் உலக அரசியற்
தலைவர்களையும் இலங்கையில் ஒரு கூரையின்கீழ் திரட்டவுள்ளது. இம்மாநாட்டு
மேசையில் புரளவுள்ள பெருந்தொகைப் பணமானது உலக அரசியல்வாதிகளை இலங்கை அரசின்
தீவிர மனித உரிமை மீறல்களை கண்டும் காணாததுபோல் இம்மாநாட்டில் பங்குபற்ற
வைக்கும் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இன் நிகழ்வானது
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தினைத் தனியார்
மயமாக்குவதற்காக 1997 ஆம் ஆண்டு டோனி பிளேயரினால் லண்டனில் உருவாக்கப்பட்ட
பொதுநாலவாய நாடுகளின் வணிக சம்மேளனத்தினால் [Commonwealth Business
Council] ஒருங்கமைக்கப்பட்டிருக்கிறது . இந்த அமைப்பானது பிரித்தானிய
அதிகாரவர்க்கத்தினுள் இன்னும் பெரும் செல்வாக்குடன், மூத்த கொள்கை
வகுப்பாளரும் பிரித்தானிய அரச சான்சிலரின் மாமானாரும் ஆன ஹோவெல் பிரபு
போன்றவரால் வெற்றிகரமாக வழி நடத்தப்படுகிறது.
கூட்டுநிறுவன கண்காணிப்பகம் [Corporate Watch] அமைப்பு இன் நிகழ்வில்
பிரித்தானிய பிரதமர், டேவிட் கமரூனின் குழுவினரால் கைசாத்திடப்படவுள்ள
வர்த்தக ஒப்பந்தங்களை கண்டறிந்து அம்பலப்படுத்த உத்தேசித்துள்ளது. டேவிட்
கமரூன் அரசு இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக அகதித் தஞ்சம் கோருவோரை
இலங்கைக்கு திருப்பி அனுப்பிய நிலையில் கடந்த ஜூன் மாதம் பிரித்தானிய
நீதிமன்றங்கள் திருப்பி அனுப்பப்படுவோர் இலங்கை அரசால் சித்திரவதை
செய்யப்படலாம் என்ற காரணத்தால் நாடுகடத்துவது ஆபத்தானது என்று
தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையிலும் பிரித்தானிய
பெருவர்த்தக நிறுவனங்களும் அவற்றுடன் சார்புடைய பிரித்தானிய அமைச்சர்களும்
“சர்வாதிகார ஆட்சி முறை அதிகரித்துவரும்” இலங்கையில் வர்த்தக முதலீடுகளை
மேற்கொள்ள தயாராகிவிட்டனர்.
இவ் விடயத்தை நன்கு கண்டறிந்து பிரித்தானிய தேசிய ஊடகங்களில்
வெளியிடுவதுடன் புலம்பெயர்ந்த மற்றும் இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள
தமிழ் ஊடகங்களிற்கும் தமிழ் மொழிபெயர்ப்பையும் வழங்க குறிபார்க்கின்றோம்.
இவ்விசாரணையின் விளைவாக இலங்கையில் நடைபெறும் பொதுநாலவாய நாடுகளின்
தலைவர்கள் மாநாட்டினால் ஏற்படும் சீரழிவான விளைவுகளை யாவருக்கும் விளக்கும்
முக்கிய தகவல் தரும் ஆவணங்கள் உருவாகும்.
http://corporatewatchshop.org.uk/chogm
தாம் சார்ந்த நாடுகளின் பல்தேசிய கோப்ரேட் வியாபார நிறுவனங்களின் அடியாட்களாகச் செயற்படும் அரசுகள் பல நாடுகளின் வழங்களைச் சுரண்டுவதற்காக இனக்கொலைகளை நடத்தியிருக்கின்றன. இலங்கையில் இனப்படுகொலை நடைபெறுவதற்கு ஆதாரமாகவிருந்த இந்த அரசுகளுக்கு ராஜபக்ச ஒரு வரப்பிரசாதம். ராஜபக்சவை மிரட்டி தமது நிறுவனங்களுக்கான முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே இவர்கள் முனைவார்கள். மனிதர்களின் உரிமைக்காக அல்ல. 2 பில்லியன் முதலீட்டைப் பகிர்ந்துகொள்ள இவர்களோடு தமிழ் மில்லியேனேர் ஒருவரின் தொலைபேசி நிறுவனம் ஒன்றும் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கனவான் அமைப்புக்கள் பல்தேசிய கோப்ரட் கொள்ளை குறித்துப் பேசுவதில்லை. அவர்களில் பலர் இந்த அரசுகளுக்குச் சேவை செய்யும் அடிமைகள்.
Manmohan, Sonia to take final call on CHOGM
A final call on Manmohan Singh’s trip to Colombo to attend the Commonwealth Heads of Government Meeting (CHOGM) will be taken by the Prime Minister himself, the Ministry of External Affairs, and Congress president Sonia Gandhi, even as opinion was divided in the Union Cabinet and the Congress Core Group.
The decision will be taken, Congress sources said, after weighing the conflicting views of the people of Tamil Nadu, reflected in stands taken by Congress and DMK leaders, on the one hand, and maintaining good relations with a neighbour, on the other. The Prime Minister’s trip, they said, could jeopardise the Congress chances of finding an ally in Tamil Nadu for the next general election.
At its last meeting on October 30, Defence Minister A.K. Antony and Union Finance Minister P. Chidambaram expressed their reservations about Dr. Singh travelling to Colombo.
Support for the visit, however, came from Minister of State for Commerce and Industry and Congress MP from Tamil Nadu E.M. Sudarsana Natchiappan, who met Dr. Singh and explained how India would be in an advantageous position if he attended CHOGM. “I briefed him on the environment prevailing among Tamils in Lanka as well as those in Tamil Nadu and clearly told Dr. Singh that he should take the appropriate decision in the interests of Tamils in both countries,” he told The Hindu.
Asked why his colleagues G.K. Vasan, V. Narayanasamy and Jayanthi Natarajan were opposing Dr. Singh’s visit while he favoured it, Mr. Natchiappan quipped: “It is part of the democratic process in the Congress. The party allows debates which is good.”
If peace returned and development took place in the Tamil areas in Sri Lanka, it would be advantageous for Tamil Nadu in the form of more industrial investments. At present, 10 lakh youths from Tamil Nadu’s southern districts migrate every year to other States in search of jobs, the Minister claimed.
CPI national secretary D. Raja said Dr. Singh and the Congress could not ignore the resolution passed by the Tamil Nadu Assembly on boycotting CHOGM. If Dr. Singh ignored these protests and decided to visit Colombo, it would be nothing but a move to justify the “genocide” committed by the Rajapaksa government against Tamils, he said.
LawAsia president-elect and advocate Prashant Kumar said the Sri Lankan government had denied entry to the participants of the International Bar Association’s Human Rights Institute’s (IBAHRI) high-level delegation which included the United Nations Special Rapporteur on the Independence of Judges and Lawyers.
The IBAHRI delegation was intending to travel to Colombo to participate in a conference co-hosted by the Bar Association of Sri Lanka and the IBAHRI titled ‘Making Commonwealth Values a Reality: the Rule of Law and the Independence of the Legal Profession’.
Asian Centre for Human Rights Director Suhas Chakma urged Dr. Singh to attend CHOGM and demand accountability for the “war crimes and crimes against humanity committed by Sri Lanka.”
http://www.thehindu.com/news/national/manmohan-sonia-to-take-final-call-on-chogm/article5326772.ece?homepage=true
TNA too on the horns of dilemma…
With CHOGM barely 10 days away, the Tamil National Alliance, which recently formed the Northern Provincial Council government by securing a thumping majority, finds itself unable to decide between boycotting the government’s grand show and the need for political engagement — in regard to both, its own participation and Prime Minister Manmohan Singh’s.
Much like their counterparts in Tamil Nadu, TNA politicians have so far demanded that Dr. Singh boycott the meeting, but moderate voices in the Alliance told The Hindu in private that some of them were, in fact, not opposed to his visit, especially if it included a trip to Jaffna.
http://www.thehindu.com/news/international/south-asia/tna-too-on-the-horns-of-dilemma/article5322812.ece
CHOGM 2013: Low level Canadian delegation expected to visit Jaffna
Premier Harper represented by Tanzanian of Indian origin
Speculation is rife that a low level Canadian delegation, arriving here for the Commonwealth Heads of Government Meeting (CHOGM) in Colombo next week, too, would seek to visit the Jaffna peninsula.
The military brought the peninsula under government control in early 1996.
External Affairs Ministry sources told The Island that Commonwealth countries with large population of Tamils, of Sri Lankan origin, were likely to send their delegations to Jaffna. The government was ready to facilitate such visits in accordance with the post-war policy of openness, sources said.
As Canada remains the country with the largest, as well as the most influential Diaspora grouping, The Island queried the Canadian government whether its delegation would be visiting Jaffna.
Canadian spokesperson, Béatrice Fénelon said that an announcement would be made if or when Canada had something to say.
Canada is represented by Deepak Obhrai, Parliamentary Secretary to the Minister of Foreign Affairs and International Human Rights.
The Canadian High Commission in Colombo said that all queries, regarding CHOGM should be directed to the spokesperson.
Canadian Premier Stephen Harper and Foreign Minister John Baird are boycotting the Colombo meet alleging that the government was yet to address accountability issues.
Tanzania-born Obhrai is the senior most Indian origin MP in the Canadian parliament. He has represented Calgary East since 1997.
Ministry sources said that the Canadian MP had the opportunity to visit the Vanni shortly after the conclusion of the conflict in May 2009. The government facilitated the visit in the wake of at least two Canadian passport holders, of Sri Lankan origin, fighting for the separatist terrorist LTTE being captured on the battle front. Sources recalled the circumstances under which Obhrai toured the war zone subsequent to Sri Lanka turning away Canadian Liberal MP Bob Rae at the Bandaranaike International Airport.
Defence sources said as a one of the few foreign dignitaries who had an opportunity to visit the Vanni, immediately after the end of war, MP Obhrai would be able to comprehend the developments taking place on the ground. At the time the Canadian visited the North, there had been over 300,000 war displaced and nearly 12,000 ex-LTTE combatants in government custody, sources said. Four years later, both civilians and ex-combatants had returned to their villages to lead a normal life, sources said.
Sources said that there couldn’t have been a better person than MP Obhrai to examine the situation on the ground. “We expect the Canadians to visit the Northern Province,” a senior official said, adding that in addition to the British, the New Zealand delegation wanted to visit Jaffna.
Sources based in Canada said that in the wake of Harper’s government downgrading Canadian participation at the CHOGM, an LTTE rump had launched a project to boost up those politicians backing the boycott call. About 300 LTTE activists gathered opposite the Canadian parliament on Oct. 28 to express their gratitude to Premier Harper’s government. Sources said that the vociferous crowd was joined by at least four ministers as well as a dozen MPs. Much to the surprise of those opposed to LTTE antics, Canadian Conservative politician, Patrick Brown was seen with Nehru Gunaratnam, widely believed to be a member of the group led by Perinpanayagam Sivaparan alias Nediyavan. Sri Lanka denied visas to MP Brown and his colleague, Paul Calandra, to visit the Vanni at the end of the conflict. Sources pointed out that Gunaratnam had been the spokesperson for the Canada based World Tamil Movement, at the time it was proscribed in Canada.
Well informed Tamil sources said that Gunaratnam had been to the Vanni twice in 2002 and 2003 during the Norwegian arranged Ceasefire to meet LTTE leader Velupillai Prabhakaran. Prabhakaran named Gunaratnam to a political committee comprising one representative from countries home to large Diaspora groups. In addition to that, Gunaratnam was appointed to a 15-member committee headed by ‘Castro,’ overseeing Diaspora activities.
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=91678
நாங்கள் உலக நாடுகளின் தலை நகரங்களிலும் தமிழ் நாட்டிலும் CHOGM 2013 க்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதைவிட சம்பந்தன் – சுமந்திரன்- விக்கி கூட்டணி CHOGM 2013 இல் பங்கு பற்றுவதற்கு எதிராக ஏதாவது ஆர்ப்பாட்டகள் நடத்தினால் அது நன்மை தரலாம்
மன்மோகன் பங்குபற்றுவதை விட விக்கி அங்கு பங்குபற்றுவது மிக அவமானமாதாக இருக்கும்
தமிழர்களின் அபிலாசையை அவர்கள் மதிப்பார்களா ?????
PM unlikely to go to Sri Lanka for Commonwealth meet: sources
Besides Mr Chidambaram, two other union ministers from Tamil Nadu – Jayanthi Natarajan and GK Vasan – had opposed the Prime Minister’s visit to the island nation.
In detail…
http://www.ndtv.com/article/india/pm-unlikely-to-go-to-sri-lanka-for-commonwealth-meet-sources-443561
இலங்கையின் மொத்த நிலப்பரப்பு, தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் ஏறக்குறைய பாதி அளவே இருக்கும். அந்த தீவு நாட்டின் மொத்த மக்கள் தொகையோ வெறும் இரண்டு கோடி தான். அதில் சிங்களர்கள் ஒன்றரை கோடி பேர். தமிழகத்தின் மக்கள் தொகை ஏழு கோடிக்கும் மேல். உலகளவில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை எட்டு கோடிக்கு மிகாமல் இருக்கும். ஆனால் தனி நாடும் இறையாண்மையும் தனி இராணுவமும் இருப்பதால் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. தமிழகத்துக்கு சொந்தமான கச்சத்தீவை தந்திரமாக கைப்பற்றிக்கொண்டு எல்லை தாண்டி வந்தார்கள் என்று சொல்லி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். கூடவே அக்கரையில் இருக்கும் தமிழ் மீனவர்களை இக்கரையில் இருக்கும் தமிழக மீனவர்களோடு மோதவும் விடுகிறார்கள். தமிழர்கள் எட்டு கோடி பேர் இருந்தாலும் இவர்களுக்கு தனி நாடும் இறையாண்மையும் தனி இராணுவமும் இல்லை. இந்தியா என்னும் நாட்டில் மிகக்குறைந்த அதிகாரங்களோடு ஒரு மாநில அரசு மட்டும் தமிழர்களுக்கு உண்டு. அதனால் தமிழர்கள் மேல் பயப்படாமல் தாக்குதல் நடத்தலாம், இன அழிப்பை செய்யலாம் என சிங்கள அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் இராணுவத்தினரும் நினைக்கிறார்கள். இந்திய அரசும் இதே காரணத்தால் தான் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் உதாசீனப்படுத்தி விட்டு சிங்களர்களை பல வகைகளிலும் தாஜா செய்கிறது. தமிழர்களாலும் அவர்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களாலும் பெரிதாக துள்ள முடியாது என்று தில்லியில் இருக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் நன்கு தெரியும். அப்படி துள்ள முயற்சித்தால் அதை எப்படி அடக்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு தெரியும். அதனால் தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் இணைந்து ஒருமனதாக எத்தனை வரலாற்று சிறப்புமிக்க(!) தீர்மானங்களை கொண்டு வந்தாலும், எத்தனை லட்சம் பேர் முட்டுச்சந்தில் நின்று கூவி எதிர்ப்பு தெரிவித்தாலும் தில்லியில் இருப்பவர்கள் அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. தமிழக அரசியலை பற்றியும் இங்கிருக்கும் அரசியல்வாதிகளின் யோக்கியதையை பற்றியும், இன்னும் சொல்லப்போனால் ஒட்டு மொத்த தமிழக மக்களின் இளிச்சவாய்த்தனம், அறிவீனம் ஆகியவற்றை பற்றியும் அவர்கள் நன்கு அறிவார்கள். தமிழகத்தின் அரசியல்வாதிகள், குறிப்பாக திராவிட அரசியல்வாதிகள், வாய்ச்சொல் வீர்ர்கள் என்பது உலகறிந்த விசயம். இவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் சொந்த மக்களைத்தான் சுரண்டுவார்கள். தி.மு.க என்னும் கட்சி கூட்டணிக்கு ஒட்டு மொத்தமாக நாற்பது எம்.பிக்கள் இருந்தார்கள். அப்போது மத்திய ஆட்சியே இவர்களை சார்ந்து தான் இருந்தது. இந்திய அரசியலில் தமிழகமும் உலகத்தமிழர்களும் பலனடைய அரிதாக கிடைத்த வாய்ப்பு இது. இதை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் தமிழ்நாட்டுக்கும் உலகத்தமிழர்களுக்கும் தி.மு.க-வினர் எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. மாறாக, உள்ளூரில் நிலப்பறிப்பு தொடங்கி தலைநகரில் 2ஜி ஊழல் வரை செய்தார்கள். அதனால் இவர்கள் தயவில் மத்திய ஆட்சியாளர்கள் இருப்பது போய் அவர்கள் தயவில் இவர்கள் இருக்கவேண்டி வந்தது. இப்போது அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் படித்த அறிவுஜீவிகளுக்கு ஈழப்பிரச்சினையை பற்றி பாமரத்தனமான அறிவே உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கோ வகுப்பை புறக்கணித்து எஞ்ஜாய் பண்ண கிடைத்த வாய்ப்பு. தமிழ் அமைப்புக்களோ லெமூரியா கண்டம் போன்ற அடிப்படையே இல்லாத கட்டுக்கதைகளிலும் சாதித்திமிரிலும் மூழ்கி கிடப்பவை. மார்க்ஸிய குழுக்களின் பார்வையோ ஈழத்தமிழர்களின் பிரச்சினையை வெறும் டாட்டா பிர்லாவின் லாபவெறியாக மட்டும் பார்ப்பது. சிங்கள பாட்டாளி வர்க்கத்தினரும் தமிழ் பாட்டாளி வர்க்கத்தினரும் இணைந்து(?!) ஈழ மக்களின் விடுதலைக்காக போராட வேண்டும் என கற்பனை கூட செய்ய முடியாத அபத்தங்களை வாய் கூசாமல் பேசுவதும் எழுதுவதும் மட்டுமே இவர்கள் முன் வைக்கும் தீர்வு. இந்த மார்க்ஸிய கும்பல்களின் ஆர்ப்பாட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் நாற்பது ஐம்பது பேர் தேறினால் அது பெரிய விசயம். இவர்களின் சித்தாந்தம் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவுக்கே வெளிச்சம். தமிழ்நாடும் அதன் மக்களும் வெளியில் இருப்பவர்களால் சீப்பாக எடை போடப்படுவதில் ஆச்சரியம் இல்லை. இப்போது ஈழத்தில் இருக்கும் எஞ்சிய தமிழர்களும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்படுகிறார்கள். அங்கு வாழும் மக்களில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஊசலாடிக்கொண்டு இருக்கிறார்கள். இளம்பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுகிறது. தமிழர்களின் நிலம் சிங்கள இராணுவத்தினரின் ஆதிக்கத்தில் உள்ளது. தமிழ் மக்களுக்கு போட்டியாக விவசாயம் போன்ற தொழில்களை செய்து குறைந்த விலைக்கு தமிழர்களுக்கே அவர்கள் விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் தமிழர்களின் தொழில் வளர்ச்சி முடங்கியுள்ளது. சிங்கள குடியேற்றவாசிகளுக்கு நிலம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. வளர்ச்சி திட்டங்கள், சுற்றுலா வளையம், இராணுவ முகாம் என்ற பெயரில் தமிழர்களின் பாரம்பரிய தாயகம் தந்திரமாக ஆக்கிரமிக்கப்படுகிறது. திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் அடங்கிய ஈழத்தின் கிழக்கு மாகாணத்தை பற்றி இப்போது யாரும் மூச்சுவிடுவதில்லை. அங்கு நடக்கும் சிங்கள ஆக்கிரமிப்புக்கு மறைமுகமாக அங்கீகாரமே கொடுக்கப்பட்டு விட்டது. வட மாகாணத்தையாவது விட்டுவையுங்கள் என்று தான் குய்யோமுறையோ என கூக்குரலிடுகிறார்கள். இன்று உலகத்துக்கு நாட்டாமை செய்யும் அமெரிக்கா என்னும் நாட்டுக்கு வெறும் முன்னூறு ஆண்டுகள் வரலாறே உண்டு. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் வெள்ளை இன மக்கள் இல்லை. இன்றைய உலகின் பெரும்பாலான நாடுகளின் வரலாற்றை நோக்கினால் அவை ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மிகாதவை. ஆனால் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாண ராச்சியத்தை நிறுவி அரசாண்ட ஈழ மக்கள் இன்று சொந்த மண்ணிலேயே அந்நியர்களாகவும் அடிமைகளாகவும் உழன்று அழியவேண்டிய நிலை!. தமிழ் மொழிக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய மரபு இருப்பதாக கூறுகிறார்கள். தமிழர்களுக்கு மிகப்பெரிய வரலாறு இருப்பதாகவும் சொல்கிறார்கள். இப்போது இருக்கும் கையறு நிலை வரலாற்றில் எப்போதாவது வந்ததா என தெரியவில்லை. தமிழர்களின் இந்த கையறு நிலை இந்தியா போட்ட பிச்சை. விடுதலைப்புலிகளின் முப்பது ஆண்டுகால ஆயுதப்போராட்டத்தை பயங்கரவாதம் என உலகம் நம்புகிறது. ஆனால் சிங்கள இனவெறி அரசின் அறுபதாண்டுகால பயங்கரவாதத்தை அது பார்க்க மறுக்கிறது. இதற்கும் இந்தியா தான் காரணம். இந்த காமன்வெல்த் மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்கு சிங்கள அரசை விட இந்திய அரசு தான் மிகுந்த முனைப்போடு முயற்சிகளை எடுத்து வந்தது. இந்தியாவின் சார்பில் கமலேஷ் சர்மா என்னும் அதிகாரி இதற்காக இரவு பகல் பாராமல் ஓடியாடி உழைத்து உலகளவில் ஆதரவு திரட்டி வந்தார். இந்த மாநாடு மூலம் இலங்கைக்கும் ராஜபக்சவுக்கும் உலகளவில் செல்வாக்கு ஏறும். இதன் மூலம் தமிழ் இனப்படுகொலையை உலகின் நினைவிலிருந்து அகற்றலாம். எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களை முனை மழுங்க செய்யலாம் என்பது கணக்கு.
//ஸலனன்
Pஒச்டெட் ஒன் 11/09/2013 அட் 13:38
இலங்கையின் மொத்த நிலப்பரப்பு, தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் ஏறக்குறைய பாதி அளவே இருக்கும். அந்த தீவு நாட்டின் மொத்த மக்கள் தொகையோ வெறும் இரண்டு கோடி தான். அதில் சிங்களர்கள் ஒன்றரை கோடி பேர். தமிழகத்தின் மக்கள் தொகை ஏழு கோடிக்கும் மேல். /
/ இது தான் இந்தியாவிலிருந்த்து ஈழம் பற்றி பேசக் கூடாது என்பது. அப்பு ராசா, இலங்கை திருச்சி மாவட்டம் அளவுக்கே இருக்கும்.
எமது இனத்துக்கு துரோகம் செய்பவர்கள் எமது தமிழ்த் தலைவர்கள் இன்று வரை தமிழ் மக்களை ஏமாற்றி தேர்தலில் வென்ற பின்பு திரும்பிப் பார்ப்பது இல்லை. கொழும்பில் இருந்து கொண்டு சகல சலுகைகளையும் பெற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். இலங்கை வாழ் தமிழர்கள் சிந்திக்காது விட்டால் இனிமேல் தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லை.