பொதுநலவாய நாடுகள் எனப்படும் பிரித்தானியாவின் முன்னைநாள் காலனி நாடுகளது கூட்டமைப்பு தனது உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தத் தீர்மானித்துள்ளது. இதற்கு சில நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இன்று இந்த நாடுகளின் கூட்டமைப்பின் தலைவராக அவுஸ்திரேலிய ஜூலியா கில்லார்ட் செயற்படுகிறார். இலங்கையில் உச்சி
மாநாடு நடைபெறுமானால் அதற்கு இனக்கொலையாளி ராஜபக்சவே எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு தலைமைதாங்க வேண்டிய நிலை ஏற்படும். எது எவ்வாறாயினும் வன்னிப் படுகொலைகள் நிகழ்ந்த போது அதன் பின்னணியில் செயற்பட்ட நாடுகள் பல பொதுநலவாய நாடுகளுக்கு ராஜபக்ச தலைவராவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக நாடகமாடுகின்றன.