இஸ்லமியர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியான இந்திய சமூக ஜனநாயகக் கட்சி பொது நலவாய நாடுகளிலிருந்து இலங்கையை வெளியேற்றுமாறும் இனப்படுகொலை அரசு ஆட்சிசெய்யும் இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்திய வெளியுறவுத்துறை அமச்சரைக் கண்டிப்பதாகவும் டெல்லியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. பாகிஸ்தான், பிஜி, தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் பொது நலவாய நாடுகளின் பெறுமானங்களை மதிக்கவில்லை என்ற காரணத்தால் வெளியேற்றப்பட்டன. தமிழர்கள் மீது இனப்படுகொலை நடத்திய இலங்கை மனித உரிமை மீறலில் இந்த நாடுகள் எல்லாவற்றிற்கும் முன்னணியில் திகழ்கிறது என்று ஆர்ப்பாட்டத்தைத் தலைமை தாங்கிய சயீத் தெரிவித்தார். தமிழ் நாட்டு மக்களின் உனர்வுகளிற்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று கட்சியின் தேசிய செயலாலர் முல்லா ராபிக் தெரிவித்தார்.
உண்மையில் இலங்கை நிலைவரம் என்ன என்பதை இங்கு வந்து பார்த்தால் தான் அறிந்து கொள்ளலாம். தன்னினத்தையே அழிக்கும் சதிவேலைகள் நடைபெறுகின்றன. கசினோ கிளப்புகள். சந்தியெதல்லாம் சூதாட்டம் (அபிவிருத்தி லொத்தர. கொவிஜன லொத்தர்> சனிதா வாசனா. மகஜன சம்பத் என எண்ணிலடங்கா ) சூதாடட லொத்தர்கள்> சகல னபநகர்களிலும் மதுத்தவரணைகள். ரெஸ்டுரன்ட்கள்> இவற்றுக்கு எதிராக மகாத்மா பிக்குகள் ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றனர.
மறுபுறம் இவைஎவற்றையும் கண்டுகொள்ளாமல் இலங்கையில் சிறுபான்மையினருக்குஎதிராகஇனத்துவேசத்தைத் து{ண்டும் பிக்குகள். இவர்கள் அரவணைக்கப்டுகின்றனர்.