கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது ஆதரவை தெரிவித்து வருகிறார் இந்நிலையில் நேற்று அதிகாலை 3.00மணியளவில் பிள்ளையானின் வாசஸ்தலத்துக்கு பல சட்டவிரோத வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டுள்ளதாக ஆங்கில இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வாக்குப்பெட்டிகளைக் கொண்டு வந்த 42-3944 இலக்கமுடைய வாகனத்தை தொடர்ந்து ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தமது ஜீப்பில் பாதுகாப்பு கொடுத்து வந்ததாக அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது. இதுதவிர சட்டவிரோத வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்களிக்கும் விண்ணப்பங்களைக் கொண்டு சென்ற இலங்கை கடற்படைக்குரிய வாகனத்தை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குருநாகலில் டயஸ் சந்திக்கு அண்மையில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஆனால் இந்த வாகனத்தை விடுவிக்குமாறு பொலிஸ் உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிய வருகிறது.
தகவல் : அலெக்ஸ் இரவி