யு எல் 504 என்ற இலக்கத்தைக் கொண்ட விமானத்தில் ஸ்கொட்லன்ட்யாட் காவல்துறையினர் என நம்பப்படும் நால்வரால் அழைத்து செல்லப்பட்ட கருணா, இலங்கையின் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டார். இதனையடுத்து பாதுகாப்புக்கு மத்தியில் கருணா கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்தநிலையில் கருணா, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பேச்சாளர் அசாத் மௌலானா, தெரிவித்துள்ளார். இதேவேளை இது தொடர்பாக கருத்துரைத்த தேசிய பாதுகாப்பு மையத்தின் பணிப்பாளர் லச்மன் உலுகல்ல, கருணா இலங்கைக்கு அனுப்பப்பட்டமை குறித்து தமக்கு எதுவும தெரியாது என தெரிவித்தார். கருணா, கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் 2007 ஆம் ஆண்டில்,வாஸ் குணவர்த்தனா என்ற போலியான பெயரைக்கொண்ட கடவுசீட்டுடன் பிரித்தானியாவுக்கு சென்றார். இதனையடுத்து, பிரித்தானிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட கருணா நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு 6 மாதக்காலம் சிறை தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். பிரித்தானிய அதிகாரிகளின் விசாரணைகளின் போது தமக்கு போலியான கடவுச்சீட்டை இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்சவே தயார்படுத்திக்கொடுத்ததாக கருணா கூறியிருந்தார்.
அன்ரனி என்ற போலிப் பெயரில் அனுப்பப்பட்ட கருணாவை நேற்றய தினமே பல மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் சந்த்தித்ததாகக் கூறப்படுகிறது.
சின்ன மாஸ்டர் அல்லது ஞானம் உள்பட பல பிள்ளையான் குழு சர்ந்தவர்களுடன் பணக் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளுட்பட பல சிக்கலான பிரச்சனைகளைக் கொண்டிருக்கும் கருணா சர்வதேச சக்திகளாலும் கையாளப்படக்கூடிய வாய்புகளிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவலை இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்காக பேசவல்ல அதிகாரியான டோமினிக் வில்சன் உறுதி செய்தார்.
கருணா இலங்கை திரும்பியுள்ளதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் ஆசாத் மௌலானாவும் உறுதி செய்துள்ளார்.
இதற்கிடையே கருணா இலங்கை திரும்பிவிட்டாலும், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டாது என்று அவரது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.