பராக் ஒபாமா, தனது ஏற்புரையில் ஆப்கானிஸ்தானுக்கு 30 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பியது பற்றி விவாதிப்பார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ், “போர் நடத்தும் அதிபராகவே நோபல் அமைதி விருதை ஒபாமா ஏற்றுக்கொள்வார்” என்றார்.