பேஸ்புக்கில் ஈழத் தமிழர்களின் அவலங்களை விற்று பணம் சம்பாதிக்கும் ஊடகங்கள் கணக்குகளை வைத்துள்ளன. இவர்கள் ஒருவகையான அடிப்படை வாதம் கலந்த வெறித்தனத்தை தேசியம் என்றும் ஈழம் என்றும் சொல்லிக்கொள்வார்கள். இவர்களுள் கணக்குகளின் முன்பக்கத்தில் பெரும்ப்பாலும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கப் போவதாக பீற்றிக்கொள்ளும் பதிவுகள் வெளியாகியிருக்கும் அதன் ஆழத்தில் குடைந்து பார்த்தால் மிகக் கேவலமான சிறுவர்களின் பார்வைக்குத் தடைசெய்யப்பட வேண்டிய மஞ்ச்ள் படங்களோ அன்றி மஞ்சள் வீடியோக்களோ காணப்படும். அவை தொடர்பான பாலியல் வக்கிரம் கலந்த முழு வர்ணனையுடன் சிறிய கண்டிப்பு அடிக்குறிப்பாக வெளியாகியிருக்கும்.
பிரா போடாமல் விழாவிற்கு வந்து மாட்டிக்கொண்ட நடிகை,
மாணவியோடு சில்மிசம் செய்யும் ஆசிரியர்,
கலைஞரின் 91வது பிறந்தநாள்; குமரிகளின் குத்தாட்டம்
போன்ற செய்திகளைக் காணலாம். இவற்றைக் கடந்து இணையத்தளத்திற்குச் சென்றால் குறுக்கும் நெடுக்குமாகத் தொங்கி தொல்லை தரும் விளம்பரங்கள். சற்றுக் கீழே எங்காவது ஒரு மூலையில் தேசியத் தலவர் புலம்பெயர் தமிழர்களிடம் போராட்டத்தை ஒப்படைத்திருக்கிறார் என்ற சிறிய குறிப்புக் காணப்படும்.செய்திகள் என்றால் நடுநிலையாக இருக்குமாம் என்று அவர்களே வரை முறை வைத்திருக்கிறார்கள்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அபிவிருத்திக்கு முக்கியத்துவமளிக்கிறார் என்று இன்னொரு செய்தி தொங்கும். அபிவிருத்தி என்று அவர்கள் கூறுவது திட்டமிட்ட அழிப்பு என்பதை விளங்கிக்கொள்ளாத இவர்கள், இனக்கொலையாளி ஜனாதிபதியை மாண்பு மிகுந்தவர் ஆக்கிவிடுகின்றனர். அதற்கும் தேசியம் என்றே பெயர்வைத்துத் தொலைத்திருக்கிறார்கள்.
இந்த ஊடகக் கோமாளிகள் நடத்தும் பிழைப்பு மக்களின் நாளாந்த வாழ்வில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.
mjpHT ,izaj; jsk; iyf;fh nkhigYf;F tpsk;guk; nra;J nfhz;L rhjhuz kf;fSf;F vd;d vOJfpwJ
ஸ்ரீலங்கா அரசுக்கு காசை அள்ளிக்கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்.
ஈழத் தமிழர்கள் என்ற இனத்தை அன் நாட்டில் இருந்தே அழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டி ஆடிவரும், இலங்கைக்கு சில புலம்பெயர் தமிழர்கள் பணத்தை வாரி வாரி வழங்கிவருகிறார்கள். ஆம் 2014ம் ஆண்டில் கடந்த 5மாதத்தில் அன்னியச் செலாவணியாக மட்டும் இலங்கை அரசுக்கு சுமார் 814 மில்லியன் டாலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த 5 மாதத்தில் மட்டும் இலங்கைக்கு சுமார் 90,000 ஆயிரம் பேர் சென்றுள்ளார்கள் என்றும், அவர்கள் கொண்டு வந்து செலவழித்த காசு, மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பலர் இலங்கைக்கு அனுப்பியள்ள பணத்தை மதிப்பிட்டே இந்த அறிக்கையை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
இலங்கைப் பொருட்களை புறக்கணியுங்கள் ! இலங்கை செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் ! இலங்கைக்கு பணம் அனுப்பும்போது தமிழர் நிறுவனங்கள் ஊடாக அனுப்புங்கள் என்று இளையோர்களும், செயல்பாட்டாளர்களும் தொண்டை கிழிய கத்தி வருகிறார்கள். ஆனால் எம்மில் பலர் அப்படிச் செயவதே இல்லை. இலங்கைக்கு தான் சுற்றுலா செல்கிறார்கள். வக்கியூடாக பணத்தை அனுப்பி இலங்கைக்கு பெரும் அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிறார்கள். இலங்கையில் சிங்களவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களை விரும்பி வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.
குறிப்பாக அந்தக் கம்பெனிகள் நன்றாக ஊதிப் பெருகி வருகிறது. இலங்கை அரசாங்கத்தின் பெரும் வருமானம் தற்போது , தமிழர்களை நம்பியே இருக்கிறது. வருடம் தோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை சென்று வருகிறார்கள். இதனூடாக இலங்கை அரசு பெரும் பணத்தைச் சம்பாதிக்கிறது. இப் பணத்தில் தான் அவர்கள் தமிழர் தாயகங்களில் புத்த கோவில்களை கட்டுகிறார்கள் ! சிங்கள நினைவுத் தூபிகளை எழுப்புகிறார்கள் ! அங்கு வாழும் தமிழர்களை மேலும் அடிமையாக்குகிறார்கள். இதற்கு எல்லாம் ஒருவகையில் மறைமுகமாக நாமே துணைபோவது மிகவும் வெட்க்கக்கேடா விடையமாக உள்ளது.
தமிழர்கள் நினைத்திருந்தால், தற்போது இலங்கை சம்பாதித்துள்ள 814 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(484 மில்லியன் ஸ்டேலிங் பவுன்ஸ்) பணத்தில் பல மடங்கை இழக்கச் செய்திருக்க முடியும். இனியாவது நான் யோசித்து நடப்பது நல்லது.