ஜனநாயக வழியில் சென்று எங்கள் இலக்குகளை அடைவதற்கான ஒரு வழியாகவும் இத் தேர்தல் அமைகின்றது. எனவே இந்தப் போராட்டத்தில் பங்காளிகள் ஒவ்வொருவரும் போராளிகள் என்பதை மனதிற் கொண்டு செயற்பட வேண்டும் என கூட்டமைப்பின் வட,மாகாணசபை முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபைக்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரச ஆதரவு துணைக் குழுக்கள் ஒரு பக்கத்திலும் விக்னேஸ்வரனின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுபக்கத்திலும் வாக்குப் பொறுக்குவதற்காக மகிந்த ஜனநாயகத்தைப் பாதுகாகாக்க முற்படுகின்றனர். மகிந்த அரசு உருவாக்கியிருக்கும் பாசிசத்தை ஜனநாயகம் என்று மக்களுக்குக் கூறும் விக்னேஸ்வரனும் அதே பாசிசத்தை நிர்வகிப்பதற்காக தேர்தலில் வாக்குப் பொறுக்கும் இனக்கொலை ஆதரவுக் கட்சிகளும் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தப்படுதல் அவசியமானது.
பாசிசத்தின் முப்பாட்டன் யாரென்றால் உண்மைக்கு புறம்பான மனிதர்கள் எனப்படும் இரண்டுகால் விலங்குகள் . இந்த இடது சாரிகள் தான் இதில் முதன்மை வகிக்கின்றார்கள். இந்த செய்தியை பாருங்க ஊடக சுதந்திரம் இருக்கிற இந்த நாட்டில் அந்தால் ஆமிக்காரனுக்கும் முன்னாலை பேசினதை முழுசா போட எந்த புலம் பெயர் இணையத்துக்கும் மனம் வரவில்லை . இவையளுக்கு சுதந்திரம் கிடைத்து இவையிலை ஒருத்தர் ஊடக அமைச்சரானால் மகிந்தா அன்ட் கோ நடத்துற ஊட்கங்கள் தோத்துப் போகும் . மகிந்தவாவை விட உவற்ரை எழுத்தை தடை செய்யும் என்று உத்தரவு போகும். நான் முதலில் இடது சாரி எண்டு பேசுற சுத்த பயங்கரவாதிகள்.
தங்களுக்கு தங்களுக்கு வசதியானதை போட்டு கும்மாளம் அடிக்கினம் . சுய இன்பம் காணுகினம் . எவனுக்கும் ம்க்க்கள் மீது அக்கறை இருப்பதாக தெரியவில்லை. வியாபாரம், பெருமை , குழுவாதம் தான் மிஞ்சி இருக்கு .
மக்கள் உண்மைகளை அறிவார்கள் . என்பது தானே இடது சாரித்துவ அடிப்படை . அப்ப ஏன் மறைக்கிறியள். அந்தாள் சொன்னதை அப்பிடியே போட்டு விமர்சனம் பன்ணுங்கோவன் .
எனக்கு உந்த பாசிசம் பாயாசம் எல்லாம் தெரியாது . இடதுசாரி எண்டு இடறுப்படவும் தெரியாது. மனிதன் மனிதனாக வாழவேண்டும் . அவ்வளவுதான். சொல்வதைச் செய்யவேண்டும். செய்வதைச் சொல்லவேண்டும் .
அல்லாதவர்கள் நான் முதலில் இடதுசாரி பிறகு தான் தேசியவாதி எண்டு ரவிக்கு சொன்னாலும் சரி புவிக்கு சொன்னாலும் சரி . சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இருந்தால் அவன் இதயமில்லா அயோக்கியன் தான் .
விக்கினேஸ்வரன் ஐயாவின் முழு உரையையும் போடாமல் பாயாசம் காச்சக் கூடாது. முழு உரையையும் முக்கியமான பகுதிகளையும் கீழே பதிகின்றேன் . அதன் படி அவர் சிங்களத்துக்கு சேவகம் செய்கின்ரார் என்ற கூற்று பொய் என்பது புரிய எந்த கயிட்டமும் ஈக்காது !!!
1) எங்கள் ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்களே.
2)தெருக்களை அவசரமாக போட்டார்கள் அது யார் பணம்?அங்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்தது யாருக்கு? எம்மவருக்கா? தெற்கிலிருந்து வந்த சிங்கள மக்களுக்கா?
3)1956ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டுவரை இந்தப் பக்கம் தலைவைத்தும் பார்க்காத ஆட்கள் தெருக்களை ஏன் போட்டார்கள்?
4)வீடுகளை, உறவுகளை பறிகொடுத்து சொந்த வாழ்விடம் திரும்ப முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மக்களுக்காகவா தெருக்கள் போடப்பட்டது? இல்லை.
இராணுவம் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்லவே வீதி போடப்பட்டது.
5)காப்பற் வீதிகளை காண்பித்து எங்கள் விவசாயிகள் வியர்வை சிந்தி உழைத்த உழைப்பை எடுத்துச் சென்று தெற்கில் விற்றுக் கொள்ளை லாபம் பெறவே இந்த வீதிகள் உதவி வருகின்றன.
6) டக்ளஸ், தவராசா, அங்கயன் ஆகிய மூவரும் தமிழ் பேசும் சகோதரர்கள். அவர்கள் போகும் பாதை தவறு என்பது எங்கள் கருத்து.
எங்கள் அரசியல் வரலாற்றை ஆராய்ந்தால். எங்களை வைத்துக் கொண்டு எங்களை அழித்தார்கள். மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
7)உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு துயரம். 2009ம் ஆண்டு நடந்த துயரம் என முக்கியமான சம்பவங்கள் பலவற்றின் போது அரசாங்கத்தில் தமிழ் அமைச்சர்கள் அங்கம் பெற்றிருந்தார்கள்.
8) எம்மவர்களைக் கொண்டே எங்களை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
9)மேலும் நாம் இருநோக்குகளைக் கொண்டிருக்கின்றோம். ஒன்று தூரநோக்கு, மற்றயது கிட்டிய நோக்கு. தூரநோக்கு என்பது தமிழ் மக்கள் பாராம்பரியமாக வாழ்ந்த அவர்களது பூர்வீகமான வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
நாம் ஒரு தேசிய அலகு என்ற அடிப்படையில் எம்மை நாமே ஆளும் வகையிலான சுயநிர்ணய உரிமை எமக்குரித்தாகின்றது என்பதே அந்தத் தூரநோக்கு, அதனை நாம் அடைந்தே தீருவோம்.
10 ) இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்பு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுடைய மறுவாழ்வு போன்றவற்றுடன் கல்வி, பொருளாதாரம் என சகல துறைகளிலும் எங்கள் சமுகத்தை வளர்த்தெடுக்கப் உழைப்போம் என்றார்.
EVEN IT IS SPEECH BY POLITICAL ENEMY REPORT THE RELEVANT PARTS IF THERE IS AN ISSUE OF SPACE , PARTIAL REPORTING TO TWIST THE STORY IS THE “paayaasasim”
====================Here is the full speech ===========================
வடமாகாண தேர்தல் மூன்றாம் கட்டப் போர்! தமிழன் அவ்வளவு சுலபமாக துவண்டு விடமாட்டான்!- விக்னேஸ்வரன்
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 05:45.52 AM GMT ]
உலகத்தின் உதவிகளுடன் ஜனநாயக வழியில் சென்று எங்கள் இலக்குகளை அடைவதற்கான ஒரு வழியாகவும் இத் தேர்தல் அமைகின்றது. எனவே இந்தப் போராட்டத்தில் பங்காளிகள் ஒவ்வொருவரும் போராளிகள் என்பதை மனதிற் கொண்டு செயற்பட வேண்டும் என கூட்டமைப்பின் வட,மாகாணசபை முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபைக்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் உரையாற்றுகையில்,
தமிழன் அவ்வளவு சுலபமாக துவண்டு விடமாட்டான். வருவது வரட்டும் என முன்னேறுவோம். புதிய பரிணாமத்தில் எங்கள் போராட்டத்தை நடத்த வல்லவர்கள் நாங்கள் என்பதை உலகத்திற்கு சொல்ல நாங்கள் முயற்சிக்கிறோம்.
பிரிந்து நின்ற தமிழ் பேசும் மக்கள் வட மாகாணசபை என்ற அலகின் கீழ் எங்கள் ஒற்றுமையினை உலகறியச் செய்வோம். அதற்கான மிகச் சிறந்த வாய்ப்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தல் அமைந்திருக்கின்றது.
எங்கள் ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்களே. சொந்த மக்களை எதிரிகளாக சித்தரித்து, தொடர் யுத்தத்தில் ஈடுபடுத்தி, வாழ்வாதாரத்தை அழித்து, உயிர்களைப் பறித்து, உடல்களைச் சின்னாபின்னமாக்கி விட்டு இராணுவத்தை பயன்படுத்தி இப்போதும் அடக்கு முறைக்குள் வைத்திருக்கும் அரசாங்கத்தின் தூதர்களான அவர்கள் அரசியலை பண்டமாற்றாக கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் தெருக்கள் தருகிறோம். நீங்கள் வாக்குகளை தாருங்கள் என்று கேட்கிறார்கள்.
தெருக்களை அவசரமாக போட்டார்கள் அது யார் பணம்? எங்களுடைய அவலங்களைப் பார்த்து அண்டை நாடுகள் கொடுத்த பணத்தில் போடப்பட்டது.
அங்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்தது யாருக்கு? எம்மவருக்கா? தெற்கிலிருந்து வந்த சிங்கள மக்களுக்கா?
1956ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டுவரை இந்தப் பக்கம் தலைவைத்தும் பார்க்காத ஆட்கள் தெருக்களை ஏன் போட்டார்கள்?
வீடுகளை, உறவுகளை பறிகொடுத்து சொந்த வாழ்விடம் திரும்ப முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மக்களுக்காகவா தெருக்கள் போடப்பட்டது? இல்லை.
இராணுவம் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்லவே வீதி போடப்பட்டது.
காப்பற் வீதிகளை காண்பித்து எங்கள் விவசாயிகள் வியர்வை சிந்தி உழைத்த உழைப்பை எடுத்துச் சென்று தெற்கில் விற்றுக் கொள்ளை லாபம் பெறவே இந்த வீதிகள் உதவி வருகின்றன.
அதைவிட யாரோ கொடுத்த பணத்தில் செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை திறப்பதற்கு நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு செலவிடப்படும் பணம் மக்களுடைய பணம்.
இராணுவத்தை எம் மத்தியில் நிலை நிறுத்துவதற்கும், தங்கள் பகட்டுக்குமே இந்த மாதியான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
டக்ளஸ், தவராசா, அங்கயன் ஆகிய மூவரும் தமிழ் பேசும் சகோதரர்கள். அவர்கள் போகும் பாதை தவறு என்பது எங்கள் கருத்து.
எங்கள் அரசியல் வரலாற்றை ஆராய்ந்தால். எங்களை வைத்துக் கொண்டு எங்களை அழித்தார்கள்.
மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு துயரம். 2009ம் ஆண்டு நடந்த துயரம் என முக்கியமான சம்பவங்கள் பலவற்றின் போது அரசாங்கத்தில் தமிழ் அமைச்சர்கள் அங்கம் பெற்றிருந்தார்கள்.
எம்மவர்களைக் கொண்டே எங்களை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நாம் பண்டமாற்று அடிப்படையிலான அரசியல் செய்ய விரும்பவில்லை. எங்கள் அரசியலும், நிர்வாகமும் மக்களுடைய நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஊழல் அற்ற உயிருள்ள நிர்வாகம்.
அதன் மூலம் சட்டத்தின், நீதியின், ஆட்சியை நிலை நிறுத்துவோம். அதிகார துஸ்பிரயோகத்திற்கு இடமில்லை.
மேலும் நாம் இருநோக்குகளைக் கொண்டிருக்கின்றோம். ஒன்று தூரநோக்கு, மற்றயது கிட்டிய நோக்கு. தூரநோக்கு என்பது தமிழ் மக்கள் பாராம்பரியமாக வாழ்ந்த அவர்களது பூர்வீகமான வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
நாம் ஒரு தேசிய அலகு என்ற அடிப்படையில் எம்மை நாமே ஆளும் வகையிலான சுயநிர்ணய உரிமை எமக்குரித்தாகின்றது என்பதே அந்தத் தூரநோக்கு, அதனை நாம் அடைந்தே தீருவோம்.
கிட்டிய நோக்கை பொறுத்தவரையில் உடனடித் தேவைகளை கருத்தில் கொண்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடைய நலன் சார்ந்த நடவடிக்கைகளை நாம் உடனடியாக மேற்கொள்வோம்,
காணாமல்போனோர் பிரச்சினை, நிலப்பறிப்பு பிரச்சினைகள் போன்றவற்றுடன், இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குவது. படிப்படியாக எங்கள் மண்ணிலிருந்து முழுமையாக இராணுவத்தை அகற்றுவது போன்றவற்றிலும் நாம் கவனம் செலுத்துவோம்.
அதற்காக மத்திய அரசுடன் நம்பிக்கை அடிப்படையில் புரிந்துணர்வை வளர்க்க வேண்டும். அதேபோன்று இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்பு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுடைய மறுவாழ்வு போன்றவற்றுடன் கல்வி, பொருளாதாரம் என சகல துறைகளிலும் எங்கள் சமுகத்தை வளர்த்தெடுக்கப் உழைப்போம் என்றார்.
above was from Tamil win , waht is below is from puthinappalakai .
I do not think these two webs work together. The information seems to be same . Hence it must be the true reporting சுயநிர்ணய உரிமையை அடைந்தே தீருவோம் – சி.வி.விக்னேஸ்வரன்
சுயநிர்ணய உரிமையை அடைந்தே தீருவோம் – சி.வி.விக்னேஸ்வரன்
[ திங்கட்கிழமை, 26 ஓகஸ்ட் 2013, 08:53 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ]
நம்மை நாமே ஆளும் வகையிலான சுயநிர்ணயஉரிமை என்ற தூரநோக்கு இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில், நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது, வடக்கு மாகாணசபைத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “தமிழன் அவ்வளவு சுலபமாக துவண்டு விடமாட்டான், வருவது வரட்டும் என முன்னேறுவோம்.
புதிய பரிணாமத்தில் எங்கள் போராட்டத்தை நடத்த வல்லவர்கள் நாங்கள் என்பதை உலகத்திற்கு சொல்ல நாங்கள் முயற்சிக்கிறோம்.
பிரிந்து நின்ற தமிழ்பேசும் மக்கள் வடக்கு மாகாணசபை என்ற அலகின் கீழ் எமது ஒற்றுமையை உலகறியச் செய்வோம்.
அதற்கான மிகச் சிறந்த வாய்ப்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தல் அமைந்துள்ளது.
எங்கள் ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்களே.
தேர்தல் காலத்தில் மட்டும் தேனாகப் பேசி, தேர்ந்தெடுக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசதரப்பினர் முன்வருகிறார்கள்.
அதன்பின் எங்களை மறந்து விடுகிறார்கள். வாக்குரிமை என்பது அவர்களுக்கு ஒருவித பண்டமாற்றாகி விட்டது.
நாங்கள் இதைத் தருகின்றோம். நீங்கள் அதைத் தாருங்கள் என்கிறார்கள்.
ஆனால் தருவது அவர்களா? ஒரு போதும் இல்லை.
இந்த நாட்டு மக்களை எதிரிகளாகக் கருதி கொடும் போரை நடத்தி, எமது மக்களின் வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்கி, எமது மக்களின் உயிர்களை கொய்தெறிந்து, உடல்களைச் சின்னா பின்னமாக்கி விட்டு தற்பொழுது இராணுவத்தை வைத்து எம்மை அடக்குமுறைக்குள் அகப்படுத்தியிருக்கும் அரசின் தூதர்களே இத்தகைய பண்டமாற்றில் ஈடுபட்டுள்ளார்கள்.
உங்களுக்குத் தெருக்கள் தந்தோம், வீதிகள் தந்தோம், இன்னும் தருவோம் உங்கள் வாக்குகளை எமக்குத் தாருங்கள் என்கிறார்கள்.
தெருக்கள் போட்டார்களே, அதுவும் அவசர அவசரமாகப் போட்டார்களே, அது யார் பணத்தில்?
பாதிக்கப்பட்ட எமது மக்களின் இன்னல்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அண்டை நாடுகள் எமக்கனுப்பிய பணத்தைக் கொண்டு தான் தெருக்கள் போடப்பட்டன.
இதில் வேலை வாய்ப்பு யாருக்குக் கிடைத்தது? எமது மக்களுக்கா அல்லது தெற்கில் இருந்து வந்த சிங்கள மக்களுக்கா?
1956 ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டு வரை இந்தப் பக்கம் தலை வைத்தும் பார்க்காத ஆட்சியாளர்கள், ஏன் தெருக்களைப் போட்டார்கள்?
வீடிழந்து, வேலையிழந்து, உற்றார் உறவினரைப் பறிகொடுத்து தமது பாரம்பரிய காணிகளுக்குள் செல்ல முடியாது இராணுவக் கெடுபிடிக்குள் அல்லலுறும் எமது மக்களுக்காகவா இந்த தெருக்கள் அமைக்கப்பட்டன?
இராணுவம் வடமாகாணத்தின் எந்தப் பகுதியையும் உடனேயே சென்றடைய வேண்டும், தமிழ் பேசும் மக்களை அடக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமல்ல,வடமாகாண விவசாயி வியர்வை சிந்திப்பெறும் விளைச்சல்களை எல்லாம் நேரடியாக விவசாயிகளிடம் இந்த வீதி வழி சென்று குறைந்த பணம் கொடுத்து வாங்கிப் போய் கூடிய விலையில் தெற்கில் விற்கவும் தான் அவை அமைக்கப்பட்டன.
எமது தமிழ்பேசும் அமைச்சர்களை தன்னிடம் வைத்துக் கொண்டே, எமக்கெதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எம்மை கொண்டே, எமக்கு குழிபறிக்க பெரும்பான்மையின அரசு பின் நின்றதில்லை.
டக்ளஸ் தேவானந்தா, தவராசா, அங்கஜன் ஆகிய மூவரும் தமிழ் பேசும் சகோதரர்கள். அவர்கள் போகும் பாதை தவறு என்பது எங்கள் கருத்து.
எங்கள் அரசியல் வரலாற்றை ஆராய்ந்தால், எங்களை வைத்துக் கொண்டு எங்களை அழித்தார்கள்.
மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு துயரம். 2009ம் ஆண்டு நடந்த துயரம் என முக்கியமான சம்பவங்கள் பலவற்றின் போது அரசாங்கத்தில் தமிழ் அமைச்சர்கள் அங்கம் வகித்திருந்தார்கள்.
எம்மவர்களைக் கொண்டே எங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் பண்டமாற்று அடிப்படையிலான அரசியல் செய்ய விரும்பவில்லை.
எங்கள் அரசியலும், நிர்வாகமும் மக்களுடைய நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஊழலற்ற உயிருள்ள நிர்வாகம்.
அதன்மூலம் சட்டத்தின், நீதியின், ஆட்சியை நிலை நிறுத்துவோம். அதிகார துஸ்பிரயோகத்திற்கு இடமில்லை.
உலகத்தின் உதவிகளுடன் ஜனநாயக வழியில் சென்று எங்கள் இலக்குகளை அடைவதற்கான ஒரு வழியாகவும் இந்தத் தேர்தல் அமைகிறது. நாம் எமக்கென ஒரு அரசை நிறுவி எம்மவரை இணைத்து முன்னேறுவதே காலத்தின் தேவையாக இருக்கிறது.
எமது வடமாகாணத்துக்கு தமிழ் பேசும் எம்மால் அரசு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் பங்காளிகள், போராளிகள் என்பதை மனதிற் கொண்டு செயற்பட வேண்டும்.
நாம் இருநோக்குகளைக் கொண்டிருக்கின்றோம். ஒன்று தூரநோக்கு, மற்றயது கிட்டிய நோக்கு.
தூரநோக்கு என்பது தமிழ் மக்கள் பாராம்பரியமாக வாழ்ந்த அவர்களது பூர்வீகமான வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
நாம் ஒரு தேசிய அலகு என்ற அடிப்படையில் எம்மை நாமே ஆளும் வகையிலான சுயநிர்ணய உரிமை எமக்குரித்தாகிறது என்பதே அந்தத் தூரநோக்கு, அதனை நாம் அடைந்தே தீருவோம்.
கிட்டிய நோக்கை பொறுத்தவரையில் உடனடித் தேவைகளை கருத்தில் கொண்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடைய நலன் சார்ந்த நடவடிக்கைகளை நாம் உடனடியாக மேற்கொள்வோம்,
காணாமல்போனோர் பிரச்சினை, நிலப்பறிப்பு பிரச்சினைகள் போன்றவற்றுடன், இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குவது. படிப்படியாக எங்கள் மண்ணிலிருந்து முழுமையாக இராணுவத்தை அகற்றுவது போன்றவற்றிலும் நாம் கவனம் செலுத்துவோம்.
அதற்காக மத்திய அரசுடன் நம்பிக்கை அடிப்படையில் புரிந்துணர்வை வளர்க்க வேண்டும்.
அதேபோன்று இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்பு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுடைய மறுவாழ்வு போன்றவற்றுடன் கல்வி, பொருளாதாரம் என சகல துறைகளிலும் எங்கள் சமுகத்தை வளர்த்தெடுக்கப் உழைப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.
I think he is very sensible.
##அல்லாதவர்கள் நான் முதலில் இடதுசாரி பிறகு தான் தேசியவாதி எண்டு ரவிக்கு சொன்னாலும் சரி புவிக்கு சொன்னாலும் சரி . சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இருந்தால் அவன் இதயமில்லா அயோக்கியன் தான் …….##
உம்முடைய அயோக்கிய வியாக்கியானம் நல்லாத்தான் இருக்குது.
நான் அடிப்படையில் பொதுவுடமைவாதிதான். உமக்கு ஏதாவது சிந்தனை இருந்தால் கூறும்.
கருத்தோடு மோத வக்கற்றவர்கள், புலிகளில் முதலாம் batch இல் இருந்தேன்..இரண்டாம் batch இல் இருந்தேன் என்று கதையளக்கக் கூடாது.
உம்முடைய எழுத்துக்களைப் பார்த்தால் போராளியாக இருந்தது போல் தெரியவில்லை.
/////////////நான் அடிப்படையில் பொதுவுடமைவாதிதான். உமக்கு ஏதாவது சிந்தனை இருந்தால் கூறும். —–Ithayachandran /////////////// —-Here you go Question Number 1 of 100 -அட சின்ன புழுவாப் போட்டேன் பெரிய திமிங்கிலம் எல்லே மாட்டி இருக்கு. நல்ல சாப்பாடுதான். இங்கே எல்லோருக்கும் நல்ல விருந்து காத்திருக்கு .ஓடிடிடிமோ தெரியாது முயற்சிப்பம் .
அங்காலை ஒன்றும் இஞ்சாலை ஒன்றும் பேசுபவனை. சொன்னதைச் செய்யாதவனை அல்லது செய்ததை சொல்லாதவனை உம்மடை பொது உடமை சபையில் என்ன பெயர் சொல்லுவீர்கள் ?
என்ரை கிராமத்து எழுத்தறிவில்லா மூன்றாம் தரப் பாசையில் நாங்கள் படிக்காதனாங்கள் அயோக்கியன் எண்டு சொல்லுவம் .
சிண்ட ணை சிப்பியள் அப்டி எப்ப்படி ஆக்களை தோழர் என்பதற்கு பதிலாக தோலர் எண்டா செல்லுவியள்?
The main question is how do you those who does not live up to their words.
வணக்கம் சந்திரமௌலீசன்,
கலாச்சாரம் என்பது வரலாற்று வழிவந்த பண்பாடுகளின் தொகுப்பே. இந்துத்துவத்தின் ஆளுமைக்கு உட்பட்ட கலாசாரக் கூறுகளைத் தவிர்த்துப் பார்த்தால் தமிழுக்கு அழகான எழுத்து மரபு உண்டு. சங்க இலக்கிய காலத்திலிருந்து வளர்ச்சியுற்ற எழுத்து மரபு ஈழத்தில் புதிய விமர்சன மரபை ஏற்படுத்தியிருந்தது. பல அழிவுகளைக் கடந்து வாழ்ந்திருக்கிறது. கைலாசபதி, காராளபிள்ளை மாஸ்டர் முதல் டானியல் வரைக்கும் அதற்குப் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். இவை எமக்குத் தெரியாமலிருக்கலாம் ஆனால் அவற்றைத் தெரிந்து கொள்வதும் கருத்தை எதிர்கொள்ளப் பழகிக்கொள்வதும் எமது மொழியைச் செழுமைப்படுத்தும்.
வெறுமனே நவீன சொற்களை இணைத்துக்கொள்வது மட்டுமல்ல நாகரீகமான எழுத்து மரபைக் கற்றுக்கொள்வதும் இன்று அவசியமானது. உங்களது கருத்தோடு எனக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம் அதற்காக நான் உங்களை துரோகி என்றும் அயோக்கியன் என்றும் திட்டுவது உங்களது கருத்தை மாற்றவோ அன்று உங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவோ பயன்படாது.
ஆக, நீங்கள் ஏனையோரை அயோக்கின் என்று திட்டுவதற்குப் பதிலாக உங்களது கருத்தைக் கூற முற்படுங்கள் அது ஆரோக்கியமான விளைவுகளை மட்டுமல்ல எமது எழுத்து மற்றும் விமர்சன மரபை வளர்க்கவும் உதவும். இல்லையேல் நாமே ´’அயோக்கியத்தனமான’ எழுத்து மரபை தோற்றுவித்த ‘துரோகிகள்’ ஆகிவிடுவோம்.
அப்படி போடு …இதயசந்திரன்.
தட்டி கேட்ட ஆளில்லாட்டா தம்பி சண்ட பிரசண்டன்..
I sugest Mr Ithayachandran to propose a “பொதுவுடமை” Tamils word which match the description as given below .
Navalan please give him a chance to show his பொதுவுடமை capacity .
” ”அங்காலை ஒன்றும் இஞ்சாலை ஒன்றும் பேசுபவனை. சொன்னதைச் செய்யாதவனை அல்லது செய்ததை சொல்லாதவனை உம்மடை பொது உடமை சபையில் என்ன பெயர் சொல்லுவீர்கள் ? ” ”
I promise I will use it if appropriate word is suggested by him.
Please note “தமிழுக்கு அழகான எழுத்து மரபு உண்டு. சங்க இலக்கிய காலத்திலிருந்து வளர்ச்சியுற்ற எழுத்து மரபு ஈழத்தில் புதிய விமர்சன மரபை ஏற்படுத்தியிருந்தது. பல அழிவுகளைக் கடந்து வாழ்ந்திருக்கிறது Navalan . ” so there must be word
யார் இந்த விகிகினேசுவரன்! இந்த மனிதனால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவன் எனது சொந்த சகோதரன்! 1983 ஆம் ஆண்டு முதல் பூசாவில் 3 ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்ட என் சகோதரன் இந்த விக்கினேசுவரன் முன் தான் என் தம்பி பயங்கர வாதத்திற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு நிறுத்தப்பட்டான்.
கணம் கோட்டார் அவர்களே உங்கள் முன் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் பயங்கரவாதத்திற்கு உதவியுள்ளார். இவருக்கு அதிக பட்ச தண்டனையாக 5வருட கடூளிய சிறை தண்டனை விதிக்க வேண்டும் என அரசதரப்பு வக்கீல் வாதாட. இந்த விக்கினேசுவரன் என் தம்பிக்கு விதித்தது அதிக பட்ச தண்டனையான 5 வருட கடூளிய சிறைத்தண்டனை.
என் தம்பி செய்த குற்றம் தனது நண்பனுக்கு உதவியது. நண்பன் ஒரு இயக்கத்திற்கு வேலை செய்பவன். என் தம்பியிடம் மச்சான் ஒரு இடத்துக்கு போகவேணும் சைக்கிள்லை வாறியா எண்டு கேட்க! தம்பி அப்பாவியாக அவனுடன் போக அவன் போன இடத்தில் தம்பியை மறைவாக நிக்க சொல்லிப்போட்டு அங்கை பிரச்சாரம் செய்தான். அவன் ஒரு அமைப்பின் அரசியல் போராளி என்பது கூட என் தம்பிக்கு தெரியாது!
யாரோ தகவல் கொடுத்து சில நாட்களில் என் தம்பியை பொலீஸ் பிடிக்க அவனும் அடி கொடுமையில் அரசியல் போராளியை காட்டிக்கொடுத்த விட்டான். பிறகென்ன ஓரு 3 வரிசமாக பூசாவிலை வைச்சுப்போட்டு அவங்கள் 1986இலைதான் இந்த நீதவான் விக்கினேசுவரினுக்கு முன்னாலை நிப்பாட்ட 3வருசம் இருந்தததை பற்றி கூட ஒரு கருணை இல்லாமல் 5 வருட கடூளிய சிறை! கடூளிய சிறை என்றால் சிறையில் படிக்க கூட முடியாது! என் தம்பிக்கு அப்ப 18 வயசு! சிறையில் படிக்க முடியாது வேலை செய்ய வேணும்.
ஆனால் இதிலை மிகப்பெரிய கொடுமை என்னவென்றால். எனது தம்பியை அழைத்து சென்ற அந்த அரசியல் போராளிக்கு விதித்த தண்டனைதான்! எனது தம்பிக்கு தண்டனை கொடுத்து சில நாட்களில் எனது தம்பியின் நண்பன் – அந்த அரசியல் போராளியை ஒரு சிங்கள நீதவான் முன் நிறுத்தியுள்ளனர். குற்ற பத்திரிகையில் பயங்கரவாத இயக்கத்திற்கு பிரச்சார நோட்டீஸ் ஒட்டிய குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஏன் அப்படி செய்தாய் என்று அந்த சிங்கள நீதவான் கேட்க – ஐயா நான் தெரியமால் செய்து விட்டேன். இனி அப்படி செய்யமாட்டேன் என்று அவன் கூற. சரி நீ படிக்கிற வயசு ஏற்கனவே பல காலம் சிறையில் இருந்து விட்டாய். உன் எதிர் காலத்தை விணாக்க நான் விரும்பவில்லை! நீயும் வீணாக்காதே என்று கூறி விட்டு நீதி மன்றில் இரண்டு மணி நேரம் நின்று விட்டு போய்விடு என்று அந்த சிங்கள நீதவான் தீர்ப்பு கூறிவிட்டு போய்விட்டார்.
இது இத்துடன் முடியவில்லை! இந்த விக்கினேசுவரன் இப்படியான ஒரு சிங்கள நீதிபதிக்கு எதிராக சட்டமா அதிபரிடம் புகாரும் கொடுத்துள்ளார். அது கூட இன்று ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்! அரசுக்கு அவ்வளவு விசுவாசியான இந்த விக்கினெசுவரனை நம்புங்கள்! நல்லா நம்புங்கள்! இந்த விக்கியும் மகிந்தாவும் என்ன டீல் போட்டார்களோ! இதிலை சம்பந்தன் என்ன பேரம் பேசினாரோ! எல்லாம் அந்த விக்கிக்கே வெளிச்சம்!
மன்னிக்க வேண்டும்! தம்பியை நீதிமன்றில் நிப்பாட்டியது 1987இல்! 1986 என்று தவறாக பதிந்து விட்டேன்!
ஒரு யோக்கியம், ஏடு தொடக்குகிறது.
” ………………சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இருந்தால் அவன் இதயமில்லா அயோக்கியன் தான்………………” சி.சந்திரமெளலிசன் Posted on 08/26/2013 at 14:20
“……………..உம்முடைய அயோக்கிய வியாக்கியானம் நல்லாத்தான் இருக்குது…..” Ithayachandran Posted on 08/27/2013 at 12:11
“…..இல்லையேல் நாமே ´’அயோக்கியத்தனமான’ எழுத்து மரபை தோற்றுவித்த ‘துரோகிகள்’ ஆகிவிடுவோம். ….”
Navalan Posted on 08/27/2013 at 14:30
முழுமையான உரையை அறுத்தெடுத்து,செய்தி கோர்த்தவர்,அதிதீவிர இடதுசாரியாகக் காட்டி,’இனியொரு’ மட்டுமே அழைக்கின்ற ‘பாஸிசம்’ என்கிற வார்த்தையை,விக்னேஸ்வரன் கூறிய ‘ஜனநாயகம்’ என்ற சொல்,களங்கப்படுத்தியதாக அலறும் செய்தியும்,அதன் பின்னே எழும் ஓட்டங்களும்……
கணக்கு சரியாச்சண்ணே!
one of the recent and politically significant usage of word in inioru was on 27 Nov 2012 .
this is the page link and here is the post . you can see more at the link given in the previous post . https://inioru.com/?p=14842subramaiyam.
Posted on 11/27/2012 at 20:56
போராட்டம் என்ற பெருமரத்தின் ஆணிவேரில் நானும் ஒரு மூல வேர் என்று தங்களை தாங்களே பீத்திக்கொள்ளும் கனவான்களே . இன்று வரை நீங்கள் சாதித்ததுதான் என்ன . ஐயர் குமணன் மனோ சுந்தரம் சித்தார்த்தன் உமாமகேசவரன் பற்குணம் செட்டி இப்படி பலரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டி அவர்களுடன் பழகி சில காலங்கள் வாழ்ந்தவன் நான் . இவர்கள் அனைவருமே ஒரு நிலையில் இருந்ததில்லை குழப்பவாதிகள், மாறி மாறி எதையாவது உளறி கொண்டே இருப்பார்கள். ஒரு மனிதன் ஒரு இலட் ச்சியத்தில் பற்றுகொண்டால் நேர்வழி செல்ல கூடியவனாக இருக்க வேண்டும் . அன்று தொடங்கி இன்றும் இன்னும் பிரபா கரனை அவர் நேர்மையை மதித்து அந்த வழியில் அசையாது நம்பிக்கை கொண்டு பயணிப்பவர்களில் நானும் ஒருவன். உங்கள் ஒவ்வொருவருடைய நேர்மை இன்மையும் செயலுமே உங்களை நிலையான பாதையில் செல்ல வைக்கும் . சந்தர்ப்பவாதங்களும் சறுக்கும் எண்ணங்களும் உங்களை பித்தலாட்ட காரர்களாக மாற்றிவிடும், அனாலும் நாங்கள் யோகியர்கள் என்று சொல்லும் ஆசை மட்டும் மாறது எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கும் இந்த அயோக்கியர்கள் எமது விடுதலை போராட்ட த்தை பலவழிகளில் பின் இழுத்து செய்த குளறுபடிகள் கொஞ்சமா . உங்களால பிரபாகரன் ஒருவனை மட்டுமே விமர்சிக்க முடியும் . காரணம் அவன் ஒருவனே இறுதிவரை அன்று நாம் கொண்டா இலட்சிய பாதையில் நேர்மையாக சென்றான்,
தனிமனித கொலைகள் பற்றி பேசும் உத்தம சீலர்களே உங்கள் கரங்களால் வீழ்ந்த ஆயிரம் அப்பாவிகளை நாங்கள் பட்டியல் இட்டால் எங்கே போகும் உங்கள் நியாடங்கள். உங்கள் ஈன செயல் பாடுகள் இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் உதவியாக நின்றதே அன்றி உங்களால் மக்கள் விடுதலை , ஈழ விடுதலை நோக்கி நகர முடியவில்லை/ இந்தியா ஈழம் அமைவதை எவ்வளியிலும் தடுக்கும் என்று தெரிந்தும் நீங்கள் ஆடிய ஆட்டங்கள் போட்ட வேசங்கள் உலகம் அறிந்ததே . ஈழம் அமைய வேண்டும் என்று உறுதியுடன் போர்போராடிய பலர் மனதில் மாற்று கருத்துக்களை விதைத்து அந்த பாதையை குலைத்து தமிழின துரோகிகளை உருவாக் கிய பெருமை இந்த பாவிகளையே சேரும்.
உங்களை போன்று பிரபாகரன் சிங்களவனிடம் இந்தியனிடம் பிச்சை கேட்டு கைகட்டி நிற்கவில்லை மாறாக உறுதியுடன் போராடினார். உலக சக்தியின் முன் இன்றைய வியாபார நலன்கள் பெரிதுபடுத்த படுகின்றது . ஈழம் 1995 இல் அமைந்தது. 2008 வரை அதன் நிழல் அரசு இயங்கியது. ஐக்கிய நாடுகளின் அயோக்கிய தனமும் இந்தியாவின் கபடமுமே ஈழத்தை வீழ்த்தியது. பிரபாகரன் தனது இலட்சியா பாதையில் தன இலக்கை அடிந்து விட்டார் . ஈழம் அமைத்து பலநாடுகளின் பிரதிநிதிகளை தன இருப்பிடம் வர வைத்து பேசிய மா மனிதன். உங்களைப் போன்று வேதாந்தம் பேசிக்கொண்டு வீணான கற்பனையில் இன்று கோவனம் கூட சிங்களவன் கையால் தந்தாலே உடுத்த முடியும் என்னும் ஈன அரசியல் நடத்துபவர்கள் ஆகிவிட்ட நீங்கள் , ஈழம் அடையவில்லை என்று குருட்டு வாதம் பேசும் துரோகிகளாக இருப்பதை உலக தமிழ் இனமே அறிந்த படியால், இன்றும் பிரபாகரனை தலைவனாக மனதில் ஏற்று அணி வகுத்து நிற்கின்றது உலக தமிழ் இனம். ஒரு சில ஓநாய்கள் வேட்டையாடும் திறன் இல்லாது சிங்கங்கள் வேட்டையாடி உண்ட விலங்குகளில் அழுகிய எச்சங்களை நக்கி புலியின் வரல்லற்றை பேசுகின்றன….வேடிக்கை …. இந்த ஐயர் யார் விடுதலை புலிகள் அமைப்பின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராக இருந்து பின்னர் அந்த அமைப்பிற்குள் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளில் ஜீவிக்க முடியாது சுயநல பாலியல் தேவை மறுப்புக்களால், பிரிந்து சென்ற உமா மகேஸ்வரனுடன் புளொட் அமைப்பில் இணைந்து அங்கேயும் தனது வக்கிரகங்கள் விலைபோகாது அதேநிலை தொடர பின்னர் என்.எல்.எவ்.ரி அமைப்புடன் இணைந்தபோதும் அங்கேயும் அவர் தோல்வி கண்டார். என்ன நோக்கத்திற்காக விடுதலை என்று புறப்பாடார்களோ தெரியவில்லை ஆரம்ப காலங்களில் மக்களின் ஆதரவு இன்றி தவித்து படிப்படியாக மக்களின் ஆதரவை பெற புலிகள் கொண்ட பண்புகளை இவர்கள் கொண்டிருக்கவில்லை . ஆயுத கவர்ச்சி என்று பேசியபடியே ஆயுதங்களை காட்டி விலாசமாக திரிந்தவர்கள், விடுதல் என்னும் அனலில் வெந்து சாக் முடியாது சொகுசாக விடுதலி பெற்று விடலாம் வாரீர் என்று இந்தியாவின் வர்கைக்காக தவம் கிடந்த வெள்ளை வெட்டி கொக்குகள். விடுதலை பாதையை விட்டு வெளியேறி சமூக கொலருபடிகளில் சிக்கி ஓரத்தநாடு என்னும் கோல களத்தில் காணமல் போன பல் அப்பாவி இளைஜர்கள் போன்று காணாமல் போன மனிதர் எங்கோ மன்னர் காடுகளில் உமாமகேஸ்வரன் மகிமையால் மண்ணாகி மக்கிபோயிருகின்றார் என்று அறிந்தோம் . தோல்வியையே தொடர்ந்தும் சந்தித்து தனது இலக்கினை அடையமுடியாது ஜயர் எழுதிய புலம்பல் தன்னை நியாய படுத்த எழுதியவையே .. இது ஒரு தோல்வியை தழுவிவான் புலம்பல்.
—by subramaiyam.
The pacification process is not yet over. Please hold your horses. None should take the people through agony again.