இலங்கைப் பேரினவாத அரசாங்கத்தால் வன்னித் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு உடல் உளவியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட வன்னி மக்கள் தெருக்களில் அனாதைகளாக எந்தத உதவியுமின்றி அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளை அரசாங்கம் தடுத்துவருகிறது. இந்த நிலையில் வட கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை பேரினவாத அரசு மேற்கொண்டுவருகிறது. வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து இன்று நடைபெற்ற தமழ்க் கட்சிகள் அரங்கக் கூட்டத்தில் சிவாஜிலிங்கம் பிரஸ்தாபித்தார். இதற்குப் பதிலளித்த ராஜபக்ச தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கொழும்பில் வசிக்கும் போது சிங்களவர்கள் ஏன் வடக்கில் மீள்குடியேற முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். தவிர, அரசியல் கைதிகள் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கைதிகளை விரைவில் விடுதலை செய்ய முடியாது. சிறு குற்றம் புரிந்தவர்களை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கட்டம்கட்டமாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு சட்டமா அதிபருக்கு நான் வலியுறுத்துகின்றேன் என தெரிவித்தார். தமிழ்ப் பேசும் மக்களின் இனச்சுத்திகரிப்பின் இன்னொரு வடிவமாகவே திட்டமிட்ட குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் ஒரு நாட்டின் ஜனாதிபதி சிங்கள மக்களின் வக்கீல் போல பேரினவாதத் தீயில் எண்ணைவார்த்துள்ளார். இவை தவிர வடகிழக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்ற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த மாத்தயா…கோமத மாத்தயா..பப்பிளிக்கா சொல்லுறேன் என்று கோவிச்சு , வெள்ளை வேன் வச்சு என்ன கடத்திப்போடாதேங்கோ. 20 வருசத்துக்கு முதல் எட்டு வயசில அப்பா அம்மா,நாய் , மாடு , கோழி ,சொத்துப்பத்திரம் எண்டு எல்லாத்தோடையும் வெளிக்கிட்டு, இண்டைக்கு உயிர் மட்டும்தான் மிஞ்சி இருக்கு மாத்தயா.83 ஆம் ஆண்டு வெளியேறிய உங்கடையாக்கள் சொந்த இடத்தில் குடியேறலாம் எண்டால், எங்களையும் குடியேற விடுவீங்க தானே. இல்ங்கை ஒருநாடு எண்டு சொல்லுறீங்க , அப்ப சட்டமும் ஒண்டு தானே மாத்தயா. நீங்க 68 வயசு மட்டும் ( இப்ப 67 தானே)பல்லாண்டு வாழனும் மாத்தயா. தை பிறந்தால் , வழி பிறக்கும். : ) 🙂
கொக்கரிக்கும் கோழிகளூம், கூச்சலிடும் ஆடுகளூம் வெட்டப்பட்டுத்தான் விற்பனை செய்யப்படுகின்றன மகிந்தாவும் துரியோதனன் போல துள்ளீக் குதிப்பது தெரிகிறது நகரும் உலகில் ம்கிந்தா எனும் நகாசரனும் நாசமாகும் நாள் தூரத்தில் இல்லை.இடிந்து போனால் விடிந்து விடாது பார்ப்போம் ராஜ பக்கச்வுக்கு எத்தனை காலம் பதவி யோகம் என்றூ.
முன்னாள் மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவே யாழ்.வந்திருக்கும் சிங்கள மக்கள் பூர்வீக அல்லது எண்பதுகளில் குடியிருந்தவர்களல்ல என்று பகிரங்கமாகவே கூறியிருந்தார்!அதனால் தானோ என்னவோ புதிய?!அமைச்சரவையில் அவருக்கு அந்த அமைச்சு கொடுக்கப்படவில்லை!நியாயத்தை புரிந்து கொண்டே இவ்வாறு மந்தி சிவாஜிலிங்கத்திடம் அப்படிக் கூறியிருக்கிறது!உண்மை நிலை என்னவென்று தெற்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் சிங்கள மக்களுக்குத் தெரியும்!தெற்கிலோ வேறும் நாட்டின் ஏனைய பகுதிகளிலோ தமிழ் மக்கள் நூற்றாண்டுகளாகவே பரம்பரை,பரம்பரையாக வாழ்ந்து வருகிறார்கள்!ஒரு சில நூறு மக்களே இனப்படுகலை உச்சத்தின் போதும்,சில பத்து ஆண்டுகளுக்கு முன்னரும் தலை நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் குடியேறினர்!உண்மைகள் உறங்கி விடாது!ஆண்டாண்டு காலமாக இனக் கலவரங்களை ஊக்குவித்து தமிழ் மக்களை கப்பல்களில் ஏற்றி வடக்குக்கு அனுப்பியவர்கள்!உங்கள் பிரதேசம் வட,கிழக்கென்று தானே அவ்வாறு அனுப்பினார்கள்!இப்போது இனப்பரம்பலை ஊக்குவிக்க இவ்வாறான பேரினவாத பேச்சுக்கள் தேவைப்படுகிறது!தெற்கிலும்,நாட்டின் வேறு பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் வடக்குக்கும்,கிழக்குக்கும் சென்றால் நாட்டைப் பிரித்துக் கொடுத்து விடுவாரா?பலமின்றி இருக்கிறோம் என்ற மமதை!வேறொன்றுமில்லை!!!!!!!!!!