கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் அதன் பரிந்துரைகள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பில் அவுஸ்திரேலியா கண்காணிக்கும் என அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் ஊடாக இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி அறிக்கை இனப்படுகொலை அரசாலும், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களாலும் நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. அவுஸ்திரிரேலியா உட்பட்ட மேற்கு நாடுகள் மக்கள் எழுச்சியை மட்டுப்படுத்தும் நோக்குடனேயே போர்க்குற்றம் குறித்து இதுவரை பேசிவந்தன. இனப்படுகொலை நிகழ்ந்து இரண்டு வருடங்களில் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்ட இந்த அரசுகள் இப்போது பேரினவாதிகளை ஆதரிக்க ஆரம்பித்துள்ளன.