1957 ஆம் ஆண்டு பேராசிரியர் தமது முதற்கலiமாணி பட்டத்தை முதலாம் வகுப்பில் சித்தியடைந்த பின்னர் தினகரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். அவரரது திறமையின் காரணமாக மிக குறுகி காலத்திலேயே பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அன்றைய சூழலில் யாழ்பாண சமூகத்தில் நிலவிய உத்தியோக மனப்பாங்கு காரணமாக அவர் அரச நிர்வாக பதவியொன்றினைத் தேர்ந்த்தெடுத்திருக்கலாம.; அல்லது தமது உயர்கல்விக்காக வெளிநாடு சென்று வந்திருக்க முடியும். அவரது தந்தையின் எதிபார்ப்பும் அதாக தான் இருந்தது என்பதை சுபைர் இளங்கீரன் தமது பதிவுகளில் குறிப்பிடுகின்றார்.
பத்திரிகை துறையில் பணியாற்றி வருகின்ற பலர் பத்திரிகை என்பது கருத்து களத்தில் முக்கிய சாதனங்களில் ஒன்று என்பதையும் அது மக்களின் சிந்தனையை உருவாக்குவதில் கனிசமான அளவு தாக்கம் செலுத்துகின்றது என்பதையும் உணரத் தவறி விடுகின்றனர். இதன் காரணமாக பத்திரிகை உரிமையாளர் பிற்போக்கு அரசியல்வாதிகள், உயர் பதவியில் உள்ளோர், பணக்காரர்கள் ஆகியோரை திருப்திபடுத்தும் வகையிலும் அவர்களுக்கு புகழ் மலைச்சூட்டும் வகையிலும்; பத்திரிகைத்துறை சார்ந்த பணியமைந்து விடுகின்றது. இவ்வாறான சூழலில் பேராசிரியர் மேற்குறித்த விடயத்தினை சிறப்பாக உணர்ந்துள்ளதுடன் நாகரீக தளத்தில் நின்று தமது பத்திரிகை துறைசார்ந்த பணியினை முன்னெடுத்துள்ளார்.
பேராசிரியர் பத்திரிக்கை துறையில் காலடி எடுத்து வைத்த காலத்தில் மேனாட்டு மோகம், ஆங்கில மொழியின் அதிகாரம் சார்ந்த பற்று என்பனவற்றுக்கு எதிரான உணர்வு மக்களிடையே பரவியிருந்தது. இதன் தாக்கத்தை இலங்கை அரசியல் வரலாற்றிலும் காண முடிகின்றது. திரு. எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா போன்றவர்கள், கிறிஸ்த்தவ சமயத்திலிருந்து பௌத்த சமயத்திற்கு மாறியதம் மோனாட்டு உடையை விட்டு தேசிய உடையில் காட்சியளித்ததும் யாவற்றுக்கும் மேலாக சிங்களத்தில் உரையாற்ற முனைந்ததையும் இக்காலத்தரில் ஏற்பட்ட மாறதல்களாக காண்கின்ற கைலாசபதி ‘ சிங்கள இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது’ என அக்காலத்தின் இலக்கிய போக்கினை மதிப்பீடுகின்றார்.
மறுப்புறத்தில,; சிங்களத்தை அரச கரும மொழியாகக்கியதும் பௌத்த மதமே அரச மதம் என்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டதும் இதே காலப்பகுதியில் தான். இதன் விளைவாக தமிழர்கள் தமது இனத்தேசியம் குறித்து சிந்திக்கத் தளைப்பட்டிருந்தனர்.
தேசிய இலக்கியம், இயக்கம் என்பன கோட்பாட்டு ரீதியான போராட்டங்களுடாக முன்னெடக்கப்பட்ட காலமாகும். இந்த சூழலில் இலங்கை தமிழ் இலக்கியத்தின் பாராம் பரியத்தை பின்னோக்கி பார்த்து அதனூடே நமது தேசியத்துவத்தை நிலை நிறுத்த வேண்டிய தேவையேற்பட்டது.
இவ்வாறான சூழலில் இலங்கை தமிழ் இலக்கியத்தின் பாராம்பரியத்தையும் அதன் வளர்ச்சி போக்குகளையும் வெளிக் கொணரும் வகையில் ஆக்க இலக்கியங்களும் அது சார்ந்த கட்டுரைகளும் வெளி வவருவதற்கு களமாக தினகரன் பத்திரிக்கை அமைந்திருந்தது. இலங்கை தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தை வலியுறுத்திய அதே சமயம் பொதுவான தமிழ் இலக்கியத்தின் வளரச்;சிபோக்கினையும் கவனத்திலெடுத்து செயற்பட்டமை பேராசிரியரின் தனித்துவமான சிறப்புகளில் ஒன்றாகும்.
தேசிய இலக்கிய செல்நெறி காரணமாக ஒவ்வொரு பிரதேசம் சார்ந்த மண்வாசனையும் மக்களின் சமகால பிரச்சனைகளும் இலக்கியத்தின் பாடுபொருள்கனாயின. அந்தவகையில் வடகிழக்கு மலையகம் சார்ந்து இலக்கிய படைப்புகளை தினகரன் பத்திரி;ககையின் ஊடாக வெளிக்கொணர்ந்ததில் பேராசியருக்கு முக்கிய பங்குண்டு.
பேராசிரியர் தினகரன் வாரப் பத்திரிக்கையில் பிதம ஆசிசியராக பதவியேற்ற காலத்தில்
அத்துடன் பல தரப்பட்டோரை தன்னோடு இணைத்துக் கொண்டு செயற்படத் தொடங்கினார். தன்னுடன் ஒத்த கருத்துடையவர்களுடன் மாத்திரமன்று மாறுப்பட்ட கருத்துக் கொணடவர்களும் தினகரனில் எழுதுவதற்கான களத்தை அமைத்துக் கொண்டார். அத்தகையவர்களில் செ. கணேசலிங்கன், சில்லையூர் செல்வராசன், அ.ந. கந்தசாமி. சுபைர் இளங்கீரன், என்.எஸ்.எம். இராமையா, சி.வி. வேலுப்பிள்ளை, வரதர், வ.அ. இராசரத்தினம், நந்தி, கனக. செந்திநாதன், சிற்பி தேவன், அ. முத்துலிங்கம், உதயணன், செ. கணேசவிங்கம், என். கே. ரகுநாதன், கே.டானியல், எஸ். பொன்னுதுரை, டொமினிக் ஜீவா, பெனடிக்பாலன், நீர்வை பென்னயன், ஏ. இக்பால், முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். சி.வி.யின் வாழ்வற்ற வாழ்வு, எல்லைப்புறம், பார்வதி, முதலிய நால்கள் தொடர்கதையாக வெளிவந்தன. பேராசிசியர் சி.வி.யின்; எழுத்து முயற்சிகளுக்கு எத்தகைய தூண்டுதலை வழங்கினார் என்பதை பேராசிரியரின் அஞ்சலி உரையில் ‘ அரசியல் அநாதைகளாய் புழுங்கிக் கொண்டிருந்த எங்களை உள்ளங்கனிந்து அன்புடன் நேசித்தவர் கைலாஸ். எங்கள் பெருமகன் அவர்.’ எனக் குறிப்பிடுகின்றார். எனக் கூறும் கவிஞர் தன்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கையை எழுத்தாளர்கள் மத்தியிலே எவ்வாறு வளர்த்திருந்தார் என்பதனையும் தமதுரையில் சுட்டிக் காட்டியிருக்கின்றார். இக்காலத்தில் இலங்கை எழுத்தாளர்களின் படைப்பாளுமையை இனங்கண்டு அவர்களினை எழுதத்தூண்டியது பேராசிரியருக்கு முக்கிய இடமுண்டு அக்காலத்தில் இளம் எழுத்தாளர்களாக உருவாகியவர்களில் பின்னாட்களில் இலங்கையில் புகழ் பெற்ற படைப்பாளினளாகவும் விமர்சகர்களாகவும் தடம் பதித்தவர்கள். யாவற்றுக்கும் மேலாக தினகரனில் வாரகர்களின் கருத்துகளுக்கும் அபிராயங்களுக்கும் முக்கியத்துவம் வழுங்கப்பட்டன. இது தொடர்பில் பேராசிரியர் சி.தில்லைநாதன் பின் வருமாறு கூறுகின்றார்.
‘பல புதிய அம்சங்களும் பரிசோதனைகளும் தினகரனில் இடம் பெற்றன. வுhசகர்கள் பங்கெடுக்க கூடிய வகையில் திங்கட் கிழமைகளில் திங்கள் விருந்தும் புதன் கிழமைகளில் புதன் மலரும், வெள்ளிக் கிழமைகளில் முஸ்லிம் மஞ்சரியும், சனிக்கிழமைகளில் மாணவர் உலகமும் இடம் பெற்றன. சுவாரிதம்பர், சித்திரகானம், ஆகிய கேலிச்சித்திரங்களும் தினகரனைப் பிரபலப்படுத்துவனவாயின. ஆவற்றை வரைந்த ‘சிரித்திரன்’ சிவஞான சுந்தரம் தமக்கு பல வேலைகளில் கைலாஸ் வழங்கிய பாராட்டுகளையும் ஆலோசனைகளையும் குறித்துப் பல முறை விதந்துறைத்ததுண்டு.’
இக்காலத்தில் இலங்கை பிரச்சினையை மையமாகக் கொண்டு அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை இலக்கியம், விஞ்ஞான அறிவியல் சார்ந்த கட்டுரைகள் பரவலாக இடம்பெற்றன. அவை வாசகர்கள் இலகுவாக கற்க கூடியவகையில் மிகவும் கவர்ச்சிகரமான எழுத்து நடையில் எழுதப்பட்டிருந்தன. அத்துடன் ஆங்காங்கே இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்த செய்திகள் உண்மையின் பக்கம் நின்று வெளியாயின.
எவர் ஒருவர் மற்றவர்களுடைய கருத்துக்களை கேட்டும் பக்குவம் உடையவராக இருக்கின்றாரோ அவரே தமது கருத்துக்களை கூறும் உரிமையுடையவர் என்பது மனித நிலைப்பட்ட நாகரிகமாகும். இத்தகைய உயரிய பண்பினை கைலாசபதி இறுதிவரை கடைப்பிடித்தவர் என்பதை அவர் பற்றிய சக எழுத்தாளர்களின் குறிப்புகளிலிருந்துக் காணமுடிகின்றது. பத்திரிகை துறையில் கடமையாற்றிய காலத்தில் நாட்டின் பல தரப்பட்ட எழுத்தாளர்களுடனும் தொடர்பை மேற்கொண்டு அதனூடாகவே தமது பணியினை விசாலப்படுத்தியுள்ளார்.
எடுத்துக்காட்டாக தினகரன் பத்ரிகையில் கடமையாற்றிய காலத்தில் வாரம் ஓருமுறை எழுத்தாளர்களுடன் கலந்துரையாடுவர். காரசாரமான விவாதங்களின் பின் அத்தகைய கலந்துரையாடல்களில் பெற்ற அறிவு அனுபவத்தைக் கொண்டு தமது பணியினை பட்டைத் தீட்டிக் கொள்கின்ற உயரிய நாகரிகம் அவரிடத்தில் இருந்துள்ளது.
பேராசிரியருடன் பத்திரிகை தொடர்பான கலந்தாலோசனைகளில் பங்கு பற்றியவர்களுள் சுபைர் இளங்கீரன், கா.சிவத்தம்பி, எச். எம். பி. முஹியதீன், பி. ராமநாதன், சில்லையூர் செல்வராசன், இ.முருகையன், கே. கணேஷ், அ.ந. கந்தசாமி,முஹமது சமீம் முதலானோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் தினகரன் பத்திரிக்கை குறித்த கலந்துரையாடல்களில் பங்கு பற்றியதுடன் தொடர்ந்து அப்பத்திரிகையில் கட்டுரைகளையும் எழுதிவந்தனர்.
பேராசிரியர் தமக்கு கீழ் பணிப்புர்ந்தவர்களுக்கு பத்திரிக்கை துறைசார்ந்து வழிக் காட்டுவதிலும் நேர்மையுடன் உழைத்தவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வுகளைப் பெற்றுத் தருவதிலும் முன்னின்று உழைத்தவர். மற்றும் எழுத்தானர்களுக்கான கொடுப்பனவுகளும் உரிய முறையில் வழங்கப்பட்டன. இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்தும் நோக்க வேண்டியுள்ளது. பத்திரிக்கையில் வெளியாகின்ற செய்திகள், கட்டுரைகள் .ஆக்கங்கள், கேலிசித்திரங்கள் மக்கள் விரோத சக்திகளை ஆந்திரங் கொள்ளச் செய்வது எதிர்பார்க்க கூடியதெர்னறே. அத்தகைய சந்தர்ப்பங்களில் கைலாசபதி பொறுப்புணர்வுடன் நின்று தமக்கு கீழ் பணியாற்றியவர்களைப் பாதுகாத்தார் என்பதையும் பேராசிரியர் பொறுத்து வெளிவந்துள்ள சி. தில்லைநாதன், சுபைர்இளங்கீரன், செ. கணேசலிங்கன் முதலானோரின் நினைவுக் குறிப்புகளில் காணமுடிகின்றன.
பேராசிரியர் பணியாற்றிய காலத்தை தினகரன்; பத்திரிக்கை வரலாற்றில் பொற்காலம் என வர்ணிப்பர். இக்காலத்தில் தினகரன் பத்திரிக்கை வாசகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படத்தியிருந்தது. அதன் விற்பனையும் முன்னரை விட பல மடங்கான பெருகியிருந்தது.
இவ்வாறு பேராசிரியர் தினகரனில் பெற்ற அனுபவம் பின்னாட்களில் பொதுவுடமைக் கட்சி இதழ்களான தொழிலாளி, தேசாபிமாணி, செம்பகத்தாகை, ரெட்பனர் முதலிய பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதுகின்ற போது பெரிதும் உதவியுள்ளது என்றே கூறத்nhதன்றுகின்றது. அவர் ஜனமகன், அபேதன், அம்பலத்தான், உதயணன், அம்பலத்தாடி போன்ற புனைப்பெயர்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
பேராசிரியர் பிரபல்யமான பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதி அதனூடாக தனக்கான ஒரு அங்கீகரத்தை தேடியவரல்லர். இலட்சியப ;பீடிப்புடனும் கொள்கைப் பற்றுடனும் வெளிவந்த சிறு சஞ்சிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுவதிலே முக்கிய கவனம் செலுத்தினார். எடுத்துக் காட்டாக புதுமை இலக்கியம், மரகதம், மல்லிகை, புது வசந்தம், தாயகம், சமர் போன்ற சஞ்சிகைகளில் கட்டுரைகளை எழுதினார்;. இச்சிறுப் பத்திரிகைகளின் தரம் வெளியீடு இலக்கிய கோட்பாடு என்பனவற்றை உற்று நோக்குகின்ற போது நுண்ணிய தத்துவார்த்த வேறுபாடுகள் காணப்பட்ட போதும் மக்கள் சார்பு பண்பு இப்பத்திரிகைகளில் ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் முனைப்புற்று இருப்பதை காணலாம். பேராசிரியரை பொறுத்தமட்டில் எழுத்தை வெறும் புத்தகவாதச் சிந்தனையாகவோ அல்லது கல்வி நாகரீக போக்காகவோ கொண்டவரல்லர். மாறாக அது மக்களைத் தழுவியதாக அது மக்களின் சமூகமாற்றப்; போராட்டத்தில்; ஆற்றல் வாய்ந்த ஒரு ஆயுதமாக திகழ வேண்டுமென வழியுறுத்தியவர். அந்த வகையில் மக்களை சென்றடையக் கூடிய சஞ்சிகைகள், இதழ்களில் தமது கட்டுரைகளை வெளிவரச் செய்தார்.
பேராசிரியரின் மேற்குறித்த பத்திரிகை துறை சரந்த பங்களிப்பின் காரணமாக இலங்கை பத்திரிகை முன்னோடிகளில் ஒருவராக ஆளுமைச் சுவடுகளை பதித்து சென்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
கைலாசபதி அவர்கள் ஈழத்தமிழ் எழுத்தாளர் தமிழக இலக்கிய களத்தில் விவாதிக்கப்பட்டவர் எனும் பெருமைக் குரியவர் அதே நேரம் குறஞ்ச சாதிக்காரடோடு கூடித் திரிந்ததால சிலர் அவரை கணக்கில் எடுக்கவில்லை.இங் கு விழல் கதை கதைப்போரில் அனேகரும் அவரைப் பற்றீ அறீந்திருக்கவில்லை என்பதை இங் குள்ள வெற்றீடமே காட்டுகிறது.
அமரர்களான வேலன் மாஸ்டர்,சிவ்ராமலிங்கமய்யாவுக்கு திரு கைலாசபதி அவர்கள பிடித்திருக்கவில்லை எனது வாசிப்புக்களீல் திரு நாவலன் ,ஜெயபாலன் .ராஜாகரன் அவரால் கவரப்பட்டிருந்தார்கள்.இன்றூள்ள இளம் வட்டங்களூக்கு அவரைத் தெரியாதென்பதால் எழுத வேண்டிய கடமை உள்ளது.
கைலாசபதி பற்றிய மறுபார்வை.
இடதுசாரியம் பேசியபடி,”SLFP” அரசாங்க அரவணைப்பில் தூக்கி நிறுத்தப்பட்டவர்.பேரினவாதத்தின் கங்காணியாக யாழ் வளாகத்திற்கு நியமிக்கப்பட்டவர்.
‘இந்திய விஷ்தரிப்புவாதம்’ என்ற சீனக் கம்யூனிஷ் கட்சிக்கு உபயகாரர்.அதற்கு வலுவேற்ற தமிழகப் பத்திரிகைகளை இலங்கையில் இறக்குமதித் தடைக்கு அடிகோலியவர்.
இவர் படைப்பாளியல்ல,விமர்சகர்.
ஆங்கில ஆளுமை,வாய்க்குள் வராத பெயர்களை,தத்துவங்களை வைத்து தமிழில் நடத்திய இவரின் சிலம்பாட்டங்கள் அன்று பிரபலமானவை.
தன்னை வணங்குபவர்களை மட்டும் யாழ் வளாகத்தில் வளையவிட்டவர்.
தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்தையோ,அவர்களின் சுயநிர்ணய உரிமையையோ ஆதரிக்காதவர்.
உலகத்தில் முதன்முதலாக ஒரு படைப்பின் முன்னட்டையில்,கொட்டை எழுத்தில் இந்த விமர்சகரின் பெயர் வந்தது என்றால்,அன்றைய படைப்பாளிகளின் முதுகெலும்பு வளைவும்,இவர் மற்றயவர்கள் தலையில் பாறாங்கல்லாக இருந்தார் என்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அரசு தான் அவரை நிறுத்தியது. ஏனனில் தகுதியான வேறொருவரும் தட்டுப்படவில்லை. யாழ் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தமிழரசும் தமிழ் கொங்கிரசும் நின்றன. அதன் பொருள் அரசாங்க அரவணைப்பு அல்ல. (பேராசிரியர் துரைராசாவும் அரசால் தான் அமர்த்தப் பட்டவர். ஆனால் புலி அரவணைப்பில்)
தமிழகப்பத்திரிகைகள் தடையானது உள்ளூர் பத்திரிகைகளை ஊக்குவிக்கவே. தமிழகம் இலங்கைப்பத்திரிகைகளைத் தடை செய்தே இருப்பதை நீங்கள் அறிவீர்கள் தானே. 1983ற்குப் பிறகும் கூட இதில் மாற்றமில்லை.
கைலாசபதி தன்னோடு முரண்பட்டவர்களையும் யாழ் பல்கலைக் கழகத்திற்கு அழைத்து வந்தவர். தேசிய வாதியான பேரா. வித்தியானந்தன் முதல் பல விஞ்ஞான பீட பேராசிரியர்கள் வரை இவரால் யாழ் வளாகத்திற்கு ஈர்க்கப்பட்டார்கள்.
படைப்பின் முன்னட்டையில் இவரின் பெயர் வந்திருந்தால் அது இவரின் ஆளுமையையும் ஆள் பார்த்துச் செய்யாத விமர்சனத்தையுமே காட்டுகிறது.
இன்னா சாமி பெரிய்ய அரிவாலியாட்டம் எலுதுரியே,புலிதான் அரவணைக்கும்,சிங்கம் நிறுத்துமுன்னு.
‘பிள்ளையை பெற்றவர்’ தன் பிள்ளையின் பெயருக்கு முன்னால் ‘இன்னொருவரி’ன் பெயரை இட்டால்,அது அந்த ‘இன்னொருவரி’ன் ஆளுமையை மட்டுமல்ல,’பிள்ளையை பெற்றவரி’ன் மலட்டுத்தனத்தையும் வெளிக்காட்டும்.
என் பிள்ளையை வளர வைக்க எல்லாப் பிள்ளைகளையும் குட்டையாக்குவது நல்ல முறை.
.”எடுப்பார் கைப்பிள்ளையை அடுப்பாரும் எடுப்பாரே’ எனத் ‘திர்யோஷ்கி க்ரோஷ்கின்’ என்ற மேனாட்டு தத்துவ மேதை “பொறப்பியல்வாதம்” என்ற புரட்சிகர சிந்தனையில் புரட்டி விட்டிருக்கிறார்.படியுங்கப்பா..
நெருஞ்சி அண்ணா நட்நத்திரச் செவ்விந்தியனின் மாணவனோ? அவர் சொல்வது அத்தனையையும் அபப்டியே சொல்கின்றீர்களே!
இடதுசாரியம் பேசியபடி,”SLFP” அரசாங்க அரவணைப்பில் தூக்கி நிறுத்தப்பட்டவர்.பேரினவாதத்தின் கங்காணியாக யாழ் வளாகத்திற்கு நியமிக்கப்பட்டவர்..
நெருஞ்சி !
புலிகள் மாறி மாறி வந்த சிங்கள அரசுகளிடம் கோடி கோடியாக பணம் வாங்கியது தான் தமிழ்தேசியத்தின் யோக்கியதை.!!??
இந்த – வாய் கொழுப்பு – தான் ஈழ தமிழரின் இன்றைய அலங்கோலங்களுக்கு காரணம்.
இன்னும் ஏழேழு ஜன்மம் எடுத்தாலும் திருந்தாத இனம்.
உங்கள் ‘சர்வரோக’ நிவாரணி புலி என்றால்,அடிக்கடி பாவித்து கொள்ளுங்கள்.அதற்காக தனிமனித துதிபாடல்களில் இனத்தையே இழிவது ‘வம்பில்’ பிறந்த வாழ்வாகிவிடும்
உண்மையில் எப்படியோ எல்லாப்படைப்புகளுக்கும் தமிழ்மாறன் கருத்துச்சொல்லவிளைகிற நல்ல பண்பு உண்மையில் போற்றப்படவேண்டியது. இதில் வெற்றிடம் இருப்பதால் கைலாசபதியவர்கள் பற்றி எவரும் அறிந்திருக்கவில்லையோ என்கின்ற உங்கள் வாதம் தவறானது.வெற்றிடம் என்பது வெறுமை மட்டுமேயல்ல. அது பல விடயங்களை உங்களுக்குச் சொல்ல விளைந்திருக்கலாம்………. பூரணமான ஒரு பகுத்தறிவுச் சிந்தனையாளனுக்கு மாற்றுக்கருத்தில்லை என்பதாகக்கூட அது இருந்திருக்கலாம்.///நெருஞ்சி அவ்ர்கள் வைத்திருக்கின்ற வாதங்களை விடவும் அதிகப்படியான வாதங்கள் அவரை நோக்கி ஏற்கனவே எழுந்து அவை தாக்குப்பிடிக்காமல் விழுந்தும் விட்டன. தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்தையோ,அவர்களின் சுயநிர்ணய உரிமையையோ ஆதரிக்காதவர்.என்பதற்கு எந்த ஆதாரங்களயும் நீங்கள் வைக்கப் போவதில்லை.
உலகத்தில் முதன்முதலாக ஒரு படைப்பின் முன்னட்டையில்,கொட்டை எழுத்தில் இந்த விமர்சகரின் பெயர் வந்தது என்றால்,அன்றைய படைப்பாளிகளின் முதுகெலும்பு வளைவும்,இவர் மற்றயவர்கள் தலையில் பாறாங்கல்லாக இருந்தார் என்று நீங்கள் சொல்ல்வதை விடவும் படைப்பாளர்களின் படைப்பிலக்கியத்தை பாராட்டுகிற,பரிசீலிக்கின்ற,வளர்த்தெடுக்கின்ற நற்குணங்கள் அவரிடம் இருந்தன என்பதற்கு அடையாளங்கள் அவை. நீங்கள் அவர் பற்றி ஒரு பார்வை என்ன ஓராயிரம் பார்வை பார்த்தாலும் அவர் தமிழிலக்கியத்திற்கு நல்ல பார்வையாக இருந்தார் என்பதை மறக்க வேண்டாம்.
ஆதவன்!
எனக்கு அண்ணையும்,மாணவனும் அடைமொழியாய்படவில்லை.இதில் யாரைத் தூக்கி நிறுத்த அல்லது யாரைத் தூக்கி எறிய முற்படுகிறீர்கள்?
நெருஞ்சி
புகழ் பெற்றவர்களை சில சில்லறைகள் வசை பாடுவது ஏன் என்றால் தாங்கள் புகழ் பெறவே.இது ஒரு வகை நோய்.இதற்க்கு வாழும் உதாரணம் சாரு நிவேதிதா. இது தான் வம்பில் பிறந்தவர்களின் கதை.
சாருநிவேதா நல்ல எழுத்தாளன் ஆனால் தன்னுடைய சிந்தனையை லாப் டான்ஸீல் தொலைத்து விட்டான்.இந்தியாவுக்கு அமெரிக்கா வந்து அய்ந்து பில்லியனுக்கு பிஸீனஸ் எழுதும் நிலையில் தமிழன் இன்னும் மலம் அள்ளூகிறான்,மனித அழுக்குகள தன் கையாலே அகற்றூகிறான் சக்கிலியன் அவனது பெயர்.இந்த அவலத்தை தன் எழுத்தின் மூலம் தமிழ் அரசியல்வாதிக்கு சொல்லும் ஆற்றல் சாருவுக்கு உண்டு ஆனால் சாரு நிவேதா அன்ரியோடு செக்ஸ் வைக்க நினைக்கும் மகனைப் பற்றீ எழுதுகிறான்.சாருநிவேதா ஏணீயில் ஏறீ விட்டான் அதில் இருந்து இறங்கினால் அவனும் ஒரு சேகுவரா.தமிழ்மாறன்.
தமிழ் மாறன் சாருநிவேதிதா என்றகுடிகார கோமானை செ குவரவுடன் ஒப்பிட உங்கள் மனம் எப்டை ஒப்பியுது இனிநிதானமாக் எழுதுங்கள்
சாரு நிவேதா இப்போது குடிப்பதில்லை அதை அவர் விட்டு விட்டாராம் இதை அவரது – மரம் கொத்திப் பறவை= பத்தியில் எழுதுகிறார்.
ஒரு வேளை ஈரல் கெட்டிருக்கும் அவருக்கு தமிழ்நட்டில் என்ன மதிப்பு
துடைக்கும் பேப்பர்தான் அவர்போய் சே போன்று வீரபுர்ட்சியாளர்களுடுண் ஒப்பிட வேண்டாம்
எனக்குத் தெரிந்த கைலாஷ் பற்றிய பார்வையில் பிறழ்விருந்தால் எடுத்து வை.கருத்துகளை எதிர்கொள்ளத் தெரியாத மலட்டுத்தனத்தைக் காட்டாதே. மற்றவனை ‘நோய்’ப் படுத்தாதே.சில்லறையைக் கண்டு சிலிர்த்துக் கொள்ளாதே! நோட்டாக’விருந்து காலத்தை ஓட்டு!.முடிவாக, பிறந்த இனத்திற்கு பிடிசாம்பல் போடாதே.
நெருஞ்சி
சரியானவைகளை> உண்மைகளை தூக்கி நிறுத்தலாம்! பிழைகளை> அவதூறுகளை தூக்கி எறியலாம்!
தமிழ்தேசியத்தின் யோக்கியதையை / தலைமை தாங்கிய தமிழ்தேசிய வரட்டுவாத தலைமையால் வந்த துன்பத்தை இன்று மக்கள் நன்கு அனுபவித்தார்கள்.இன்னுமா பாடம் படிக்கவில்லை.இலங்கையில் சீன கம்யூனிஸ்டுக்கள் கணித்து சொன்னவை எல்லாம் உணமையாகி விட்டது.
கைலாசபதியின் பணியை யாரும் தனிநபர் வசை மூலம் குறைத்து மதிப்பிட முடியாது.பொறாமை மிகக் கொடியது.அது நோய் அப்பு நோய்.
கைலாசபதியை முற்போகிலக்கியத்தின் முன்னோடியாகப் போற்றும் பலருக்கு சாதாரண வாசகனாக ஒரு கேள்வி.
56 இல் பண்டாரநாயக்கவின் தனிச்சிங்களச் சட்டம் உருவான போது இவர் தினகரனிலோ அல்லது வேறு எங்காவதோ அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறாரா, இல்லை அப்போதும் சீனாவையும் ரஷ்யாவையும் பற்றி மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தாரா. தோழர் மதிவானம் கூட இந்தக் கேள்விக்கு பதில் தரலாம்.
வன்மத்துக்கும் ஒரு எல்லை வேண்டாமா?
1956இல் கைலாசபதி தினகரனில் இல்லை.
அவர் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி எந்தத் தமிழ்த் தலைமையையும் விட வன்மையாக சிங்கள மொழிச் சட்டத்தை எதிர்த்தது.
(1948 இல் மலையகத் தமிழரைத் தமிழ்த் தேசியத் தலைவர்கள் காட்டிக் கொடுத்தபோதுகிடதுசாரிகள் உறுதியாக நின்றனர்).
கைலாசபதியின் ஊடகப் பணி சற்றுக் குழப்பமாகவும் குறைபாடாகவும் பதிவாகியுள்ள இக் கட்டுரைக்கும் பின்னூட்டங்களுக்கும் என்ன தொடர்பு?
ஐயா எந்திரா உமக்கு நீரும் உம்மை சார்ந்தவரும் எழுதுவதை தவிர வேறு யார் எழுதினாலும் அது குழப்பகரமான சிந்தனையாக தான் தெரியும். உம்மைத் தவிர இக்கட்டுரையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது வாசகர்களுக்கு புரியும். உமது வக்கிரத்தையும் வித்துவக் காய்ச்சலையும் புறக்கணிப்பதே மக்கள் இலக்கியத்திற்காய் நாம் ஆற்றும் பங்களிப்பு.
சிங்களப் பேரினவாதத்தை பூதாகாரப் படுத்தியதும்,தமிழ்த் தேசியவாதத்தை சிதறு தேங்காயாக்கியதும்தான்,சீன கம்யூனிஸ்டுகள் செய்த கைங்கரியம்.
பளபளப்பான CHINA PICTORIALக்காக சீன கம்யூனிஸ்டுகள், நாலு பேரோட தொடங்கி,நாற்பது பேர் மாற்றம் செய்ததுதான் இவர்களின் மாவோ-சீனிப் புரட்சி.
ஆப்ரிக்க,தென்னமெரிக்க நாடுகளைச் சுரண்டிக் கொழுத்து,ஆசிய,மத்திய கிழக்கு நாடுகளையும் அரித்து ஏகாதிபத்தியத்தின் உச்சத்தில் நடைபயிலும் சீனாவின் கம்யூனிசம் பற்றி மந்திரமாக இன்றும் மனப்பாடம் செய்யிங்கோ.
பைபிளும் முன்னமே ஆருடம் சொன்னதாக காவிகள் கன பேர் திரியினம்.
ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் இருந்தால் அதில் ஒன்று தலைமைப்பாத்திரம் வகிக்கும் அதைக்> கோடிட்டு காட்டினால்; அது பூதாகரமல்ல! புரட்சிகர வெகுஐனப் போராட்ட (மக்கள்) மார்க்கமற்ற எத்தேசியப் போராட்டமும் தன் குறித்த இலக்கை அடையாது. அதனால்தான் தமிழ்த்தேசியப் போராட்டம் மாத்திரமல்ல> பிரபாகரனின் மண்டையும் சிதறு தேங்காயாகியது! சீனாவை “சோசலிச” நாடென சொல்லும் பழம் பஞ்சாங்களை “காலாவதியான மரபுக்குள்த்தான்” தள்ளமுடியும்! இதை எல்லோருக்கும் பொருத்த முற்படக்கூடாது! புரட்சி நடைபெற்ற நாடுகளில் எல்லாம் சோசலிசம் மலர்ந்ததாக வரலாறு இல்லை! சோசலிச இலக்கை நோக்கிய சில கட்டுமானங்கள் மட்டுமே! இவை புரட்சிக்கு பிந்திய சமுதாயங்களாகவே கணிக்கப்பட்டன!
எழுதியது புரியாமல்,” பிரபாகரனின் மண்டையும் சிதறு தேங்காயாகியது” என்கிற வெறித்தனமான சிந்தனையையும்,மற்றைய மனப்பாடக் கருதுகோள்களையும் எழுதுகிற நீங்கள் எல்லாம், நுகக் கயிற்றை எவருடமோ கொடுத்து விட்டு,நடைபயிலும் நலமடித்த நாம்பன்கள்.
இந்த “வாய்க் கொழுப்பு ” தான் தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்டு சென்று அரசியல் அனாதைகள் ஆக்கியது.இன்னும் இந்த “வாய்க் கொழுப்பு ” குறையவில்லை என்பது வருந்தத்தக்கது.திருந்தாவிட்டால் கடவுளாலேயும் உங்களை போன்ற ” விமர்சகர்களை “திருத்த முடியாது.
இதோ ஆனந்த சங்கரியின் வாக்கு மூலம். வசை பாட முன்பு உமது நாட்டு வரலாறை கொஞ்சம் படியும்.
தேசம்: உங்களுடைய அரசியல் அனுபவம்:
சங்கரி: என்னுடைய அரசியல் வாழ்க்கை இடதுசாரிக் கட்சியில் தான் துவங்கியது. நாங்கள் பெரியதொரு பிழைவிட்ட நாங்கள். அதே பிழையை இப்போதும் விடுறம். எங்களுடைய முதலாவது பிரதம மந்திரியாக வந்திருக்க வேண்டியவரே இடதுசாரியாகிய என் எம் பெரேரா தான். யுஎன்பி டி எஸ் செனநாயக்காவுக்கு பெரும்பான்மை இல்லை. அனைத்து தமிழ் கட்சிகளும் இடதுசாரிகளும் இணைந்திருந்தால் இடதுசாரி ஆட்சி அமைந்திருக்கும். அது கை கூடவில்லை. பிரஜாவுரிமைச்சட்டம் வரும்போது அதற்கு எதிராக வாக்களித்து சமசமாஜக்கட்சி தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி இருந்தது. அப்போது என்றாலும் இந்த தமிழ் சாதிக்கு அறிவு வந்திருக்க வேணும்.
1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதனை எதிர்த்து தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து கோரியவர் என் எம் பெரேரா. முதல் முதல் ஆயுத வன்முறை பயன்படுத்தப்பட்டது என் எம் பெரேராவிற்கு எதிராகவே. கொழும்பு நகரசபை மண்டபத்தில் அவருக்கு கைக்குண்டு வீசப்பட்டது. ஆனால் இடதுசாரிகள் இணைந்து நின்றும் தமிழ் கட்சிகள் அவற்றுக்கு ஆதரவளிக்கவில்லை. ஆட்சிக்கு வந்த எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்கா தனிச்சிங்களச் சட்டத்தை அமுல்படுத்தினார். தமிழரசுக்கட்சி காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போதும் என்எம் பெரேராவுக்கு எதிராக பெரும் கோசங்கள் வைக்கப்பட்டது. அப்படி இருந்தும் என் எம் பெரேரா அங்கு வந்து உரையாற்றினார்.
அதற்குப் பின் 1960 அம் ஆண்டுத் தேர்தல். அதில் நானும் சமசமாஜக் கட்சியில் தேர்தலில் நின்றனான். அப்ப அ அமிர்தலிங்கம் வந்து என்ன பேசினவர். ‘அவனும் சிங்களவன். இவனும் சிங்களவன்;.’ இந்த வாய்க்கொழுப்பு தான் எங்கள் இனத்தின் கேடு. அப்போதாவது இடதுசாரிக்கு கட்சிகளுடன் தோழமை கொள்ளவில்லை. ஒரு ஆசனம் கூட வெல்லப்படவில்லை. தமிழர்களுக்கு குரல்கொடுத்ததாலேயே அழிந்த கட்சி அது. 1960இல் இலங்கையில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஆட்களைப் போட்டனர். ஒரு சீற்றும் வெல்லவில்லை. அப்படி இருந்தும் சம அந்தஸ்து கொள்கையை அவர்கள் விடவில்லை.
1965இலும் அவர்கள் தோல்வியையே தழுவினர். அப்போது தான் நானும் சமசமாஜக் கட்சியில் இருந்த நான் வெளியேறினேன். நான் பின்னர் மன்னிப்புக் கேட்டனான். உங்களுக்கு தந்த இன்ரவியூவிலும் அந்தத் தவறை ஏற்றுக்கொண்டனான். அந்த நேரம் இடதுசாரிக் கட்சிகள் எவ்வளவோ தியாகத்தைச் செய்தும் நாங்கள் அதற்கு மதிப்புக் கொடுக்கவில்லை. ‘நாங்கள் தமிழர்களுக்காகக் கதைத்து தோற்றுப்போகிறோம். தமிழர்கள் வெற்றி பெற்று யுஎன்பி உடன் போகிறார்கள்’ என்ற எண்ணம் சிங்கள இடதுசாரிகள் மத்தியில் எழுந்தது. இடதுசாரிகளில் சிலரையாவது நாங்கள் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பி இருந்தால் இவ்வளவு மோசமானநிலை வந்திருக்காது.
தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கொஞ்சம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ப்ளீஸ் .பிறகு எழுதலாம்.
கேட்டெழுதி,பார்த்தெழுதி,படித்தெழுதி வாழப் பழகிய வரிகள் புரிகிறது.
புலியை,சாருவை,புறம்போன சீனக்கம்யூனிசத்தை,போதாக் குறைக்கு சங்கரியை இழுத்து………….இன்னும் வேறு ஏதாவது………
எழுதிக் கிழியும்,ஏலாட்ட கடவுளைக் கூப்பிட்டபடி கர்ப்பக்கிருகத்தில் காலத்தைக் கழியும்
இடது சாரிகளை முற்றிலும் புற்க்கணித்த தமிழ்த்தேசியர்கள்[ ஈழம்] தமிழர்களைர்களை முற்றிலும் புறக்கணித்த இடது சாரிகள் இருவருமே குற்றவாளிகள் ஒரு குற்றம் மற்றொரு குற்றத்தை சரிபடுத்த முடியாது ஆனால் இன்று வெற்றிடதை மட்டுமே விட்டுச்சென்ற போராட்டக் குழுவினர் தவறு மன்னிக்க முடியாத்து
சவுந்தர், அவசர வேன்டுகோள்!
தயவு செய்து பார்ப்பனியத்தைப் பற்றி எதையாவது எழுதித் தொலையும்.
இந்த ஆள் இப்போது தனக்கு விளங்காத பல விஷயங்களிலும் காலை விடுகிறது.
இளமுருகு இது அரட்டை அரங்கம் அல்ல.
பிற்கு வேறு என்னவாம்? தனக்கு தெரியாத விடயங்களை எமக்கு வில்ங்கச்சொல்லுமே உங்களுக்குள் கதைதுக் கொள்ளுவத்ற்கு பெயர் அரட்டை அரங்கம் இல்லமல் என்ன இடது சாரிகளை முற்றிலும் ஒழீகவில்லை இன்னும் சிலங்காவில் இருக்கிறார்கள் என்று சொல்லுகீறிகளா/? எமக்கு விளங்கவில்ல்யே? எமது கண்ணுக்கு எட்டியவரை யரியும் காணோம்நான் தமிழ்நடிலிருந்து பார்ப்பதினால் தெரியவில்லைபோலும்
விஸ்வா
நீங்கள் சொன்னது மெத்தச் சரி
அதற்கு மேல் எதுவும் தேவையில்லை.
சொல்லிப் பயன் விளையப் போவதுமில்லை.
நெருஞ்சி
கொஞ்சம் மூளையை பயன்படுத்தும்.இல்லாவிட்டால் ஆற்றங்கரையில் இன்னுமொரு மூளை காகம் தின்ன கொடுக்க வேண்டி வரும்.உலகம் தெரியாட்டி பேப்பரை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
// நுகக் கயிற்றை எவருடமோ கொடுத்து விட்டு,நடைபயிலும் நலமடித்த நாம்பன்கள் ///.நுகக் கயிற்றை எவருடமோ கொடுத்தவர் ரகசியமாய் சரணடைந்த கூத்தை ஏன் மறைக்கிறீர்கள.
குறிஞ்சி அல்லது பேப்பரைப் பார்த்து உலகம் தெரிந்து கொள்ளுகிற திண்ணைப் பேர்வழியே!
கூத்தைத் திறந்து விட்டால் மட்டும் ‘நக்கினார் நாவெடார்’ என்று மகிந்தவின் கோவணத்திற்கு மண்டியிடுவீரோ!
உங்களப் போன்ற ‘விரல்னொட்டி’களுக்கு அடிவிழுந்தால், ஒரே விடயத்தை தூக்கியபடி ஏனய்யா ஓடுகிறீர்கள்!
திண்ணைக்கு வெளியே மண் இருக்கிறது.அந்தக் கால்களை அதில் படவிடும்.பின்னெல்லாம் சரியாகும்.
சங்கரி சொல்கிறாராம்.யோகன் நகலெடுக்கிறாராம்//
1965இலும் அவர்கள் தோல்வியையே தழுவினர். அப்போது தான் நானும் சமசமாஜக் கட்சியில் இருந்த நான் வெளியேறினேன். நான் பின்னர் மன்னிப்புக் கேட்டனான். // மன்னிப்புக்கேட்டால் எல்லாம் சரியாப்போய்விடுமா??? கிளிநொச்சியின் அபிவிருத்தியை தன்வீட்டு அபிவிருத்தியாக்கிவிட்டு,தன்குடும்பத்தை வளர்த்து இவரை நம்பி வாக்களித்துப் பாராளுமன்றம் அனுப்பிவைத்த கிளிநொச்சிமக்களை ஏமாற்றியவர். அப்பாவிக் கிளிநொச்சி மக்களைப் புலித்தலையில் கட்டிவிட்டு வெளிநாடுகளில் உல்லாசம் புரிகிற சங்கரியிடம் நீங்கள் நகலெடுக்கிறீர்கள். இடது சாரிக்கொள்கைதான் நாட்டுக்குமுக்கியம் என்றால் இந்தச்சங்கரி ஏன் இடது சாரிகளுடன் இறுதிவரைக்கும் இருந்திருக்ககூடாது பதவி ஆசைகொண்டு ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சியாகப் பாய்ந்த விண்ணன். 9 கட்சிகள் 9 கொள்கைகள் 9 து அதுகள் என்று தொகை வாரியாகக் கணக்கு வைத்திருந்த மனிதரை தேசம் பேட்டியெடுக்கிறதாம். இவர் உதாரண புருசராகத் தமிழருக்கு இருக்கவில்லை. சங்கரியைப்ப் பற்றி கைலாசபதியின்கட்டுரையில் விமர்சிக்க என்ன கொடுமை…… என்ன நடக்கிற திங்கே???
நமக்குள்ள எதற்கு சண்ட? எதைக் கதைத்தாலும் தலைவர் மாவீரர் நாளூக்கு வருவரோ என்றூதான் முடிக்கிறார்கள்.சுற்றீச் சுற்றீ சுப்பற்ற கொல்லக்க நிற்கும் நம்மால் கைலாசபதி அவர்கள பற்றீப் பேசத் தெரியேல்ல சும்மா கண்டதையும் கதைச்சுப் பிரிகிறோம்.
சொல்லுங்கோ, சங்கரிக்கும் சம்பந்தனுக்கும் என்ன வித்தியாசம்?
கிளிநொச்சிச் சனங்களை முள்ளிவாய்க்காலிலை பலியிடக் கொண்டு போனது மட்டும் துரோகமில்லையோ?
ஒரு பெரிய அநியாயத்தப் பற்றி வாயை மூடிக்கொண்டு அதிலும் குறைஞ்ச இன்னொண்டைப் பற்றிக் கூப்பாடு போடுகிறது என்ன நியாயம்?
தமிழ்த் தேசியவாதத் தலைவர்மாரிலை உதாரண புருசராக ஆரிருந்தினை? தெற்கிலை சொத்தையெல்லாம் வைச்சிருந்த்த செல்வநாயகத்தையும் சேர்த்துத் தான் கேக்கிறன்.
கைலாசபதி இலக்கியவாதி சங்கரி அரசியல்வாதி இரண்டுக்கும் முடிச்சுப் போடும்போது நாம் கைலாசபதி அவர்களது இலக்கிய பங்களீப்பு பற்றீப் பேசாது அரசியலில் இறங்குகிறோம் இதுதான் தலைவர் மாவீரர் நாளூக்கு வருவாரோ கதை.தந்தை செல்வா தான் உழைத்த காசில் சொத்து வாங்கினார் ஆனால் தாம் அடித்த காசில் சொத்து வாங்கியோரை அறீந்திருப்பீர்கள்?இலக்கியம் சுகமானது யாராவது கைலாசபதி அவர்களது ஆய்வுகள தொடர்ந்து எழுதுங்கள்.
அரசியல் என்பது,மனித வாழ்வில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பது.அதைப் பிரித்துப் பார்ப்பவர்களால்,இங்கே வந்து பூராயம் புடுங்கத்தான் முடியும்.இராமநாதனிலிருந்து பிரபாகரன் வரை எம்மினம் தோற்றுப் போனதற்கு,அந்தரங்க அரசியல் தொடர்புடன், இலக்கியப்படகில் சுகச் சவாரி செய்த கைலாசுகளுக்கும் சமபங்குண்டு என்பதை அறைந்து கூறவே என் பதிவு.
இதை விட தனி மனித விருப்பு வெறுப்புகளில்,வெளிநாட்டான் நடத்திய ‘பங்கர்’ அரசியலில்,’விரல் நொட்டி’ விமர்சனம் பண்ணும் திண்ணைப் பேர்வழிகளில்,நான் சேர்த்தியில்லை.
சேற்றில் கால் வைத்தவன்,நாற்று நட்டவன் என்கிற ஆத்மார்த்த உறவில்,என் மக்களின் அழிவைப் பார்த்த ஆற்றாமை வெறியில் எழுதியவை இவை.
நான் ஆறாம் வகுப்பில் தமிழ்ப் புத்தகத்தில் படித்த, அன்ரன் செக்கோவ் எழுதிய “சலிப்பு” என்ற கதைதான்,இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது.
அடேங்கப்பா இவ்வளவு தணிக்கையா? அப்படி என்னத்தைதான் எழுதினீர்கள் ரககியமாகவாவ்து சொல்லும்
இலக்கியப் படகில் சுக சவாரி செய்வது சுகமெனில் இப்போதும் செக்கோவ் சுகமே.அவரது விமர்சனங்களூக்கு உள்ளீருக்கும் கருத்துச் செறீவு உங்கள் உங்களூக்கு இனம் காட்டும்.சத்தியம் பண்ணூங்கள் கைலாசபதியினது பாதிப்பு உங்களீடம் இல்லை.பாயாசம் குடிக்கும்போது ஏலக்காயில் என்ன இருக்கிறது எனப் பகிடி விடாதீர்கள்.
நெருஞ்சி
நீங்க ரொம்ப உசத்தி ! ஏதோ மண் ,கிண் என புலம்புறீர்கள்.இந்த மண் புராணம் பாடி நீங்கள் தமிழரை ஏமாற்றியது போதாதா சாமி ?இதை உரத்து கேட்கிறோம்.கேட்டால் // மகிந்தவின் கோவணத்திற்கு மண்டியிடுவீரோ! /// என்கிறீர். மகிந்தாவை அரியணையில் அமர தலையால் நின்றவர் யார் குஞ்சு !?
கடைசியாய் அவரின் தலை கழண்டது தான் மிச்சம்.!!
கைலாசபதியின் இலக்கிய விமர்சனம்களை இந்திய அறிஞர்களும்.வாசனை உள்ளவர்களைப் போய் கேளும்.
ஐயா xxx நீங்கள் வலிந்து வழக்காட வருகிறீர்கள். //தமிழ்த் தேசியவாதத் தலைவர்மாரிலை உதாரண புருசராக ஆரிருந்தவை? // என்பது நியாயமான கேள்வி . ஆனால் தமிழ்த் தேசியவாதத் தலைவர்மார் என்று நீர் இவர்களுக்கு அடை மொழிகொடுப்பது தான் கொடுமையானது. தமிழ்த் தேசியவாதத் தலைவர்மார் என்று,அப்படியெவரைப் பற்றியும் நான் பேசவில்லையே. அதிலும் மட்டமான மனிதராக இருந்த சங்கரியைப் பற்றிச்சொன்னவுடன் நீர் சம்பந்தர் நல்லவரோ என்கின்றீர். யாரப்பா சம்பந்தர் .இப்படித்தான் காலத்திற்குகாலம் ஏமாற்றுகிற பேர்வழிகளுக்கு கூசாத்தூக்கியே காலத்தை ஓட்டுங்கள்.
நான் வலிந்து வழக்காடவில்லை. உங்கள் கருத்துக்களுள் பொதிந்துள்ள சில விடயங்களை விசாரித்தேன்.
ஆனந்த சங்கரியை வலிந்து தாக்குகிறீர்களே, அவரை விட மற்றத் தமிழ்த் தலைவர்கள் யோக்கியமா என்பதே என் கேள்வி.
மட்டமான ஆட்களென்றால் தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்த அத்தனை தலைவர்களும் ஏறத்தாழ ஒரே மட்டம் தான்.
ஆனந்த சங்கரி தானே தமழ்ர் விடுதலைக் கூட்டணியின் தலைராக இருக்கிறார். அவரை அப்படி வர விட்டவர்கள் தமிழ்த் தேசியத் தலைவர்களில்லையா? அதில் புலித் தலைமைக்குப் பங்கில்லையா? அவருடைய சீரழிவில் இந்தியாவுக்குப் பங்கில்லையா? யாரை நோகிறிர்கள்?
இப்போது ஒரு கும்பல் இந்தியாவுக்குக் கூசாத் தூக்குகிறது.
இன்னொன்று மேற்குலகுக்குக் கூசாத் தூக்குகிறது.
வேறொன்று அரசாங்கத்துகுக் கால் பிடிக்கிறது.
ஊருக்கு இளைத்தவன் பிள்ளயார் கோவில் ஆண்டி என்று, மக்கள் நிராகரித்து விட்ட ஒரு ஆளைத் தாக்குவதை விட்டு, இப்போது ஏமாற்றித் திரிகிற கூட்டங்களைப் பற்றிக் கதைப்போமா!