பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இன்று (06/07/2011)இரவு இலங்கை நேரம் 8.30 அளவில் 79ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.
கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றிருந்த அவர் இன்று அவரது கொழும்பு இல்லத்தில் காலமானார்.கரவெட்டியை பிறப்பிடமாக கொண்ட அவர் பேராதனை பல்கலைக்கழகம், யாழ்.பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் அவர் பேராசிரியராக பணியாற்றியதுடன் தமிழ் இலக்கிய பரப்பில் தலைசிறந்த தமிழறிஞராகவும் திகழ்ந்தார்.
யாழ் மையவாத நிலப்பிரபுத்துவ சிந்தனை மேலோங்கியிருந்த காலப்பகுதியில் சிவத்தம்பியின் எதிர்ப்பிலக்கியங்கள் சமூகத்தின் சிந்தனை மாற்றத்தில் காத்திரமான பங்கு வகித்திருக்கின்றன. ஈழத்து முற்போக்கு இலக்கியம் குறித்த எந்த உரையாடலிலும் பேராசிரியர் சிவத்தம்பியை உள்ளடக்கியதாகவே அமையமுடியும்.
பிந்தி வந்தாலும் பிந்தாமல் நின்றவர்.
பிரிந்து தவிக்கும் சமூகம் சார் அஞ்சலி.
நினைவுகளால் வாழ்வார்; நித்தியத்தில் தோய்வார்.
எம் இதயக் காணிக்கைகள் தங்களுக்கு…
எங்களால் தங்களிடம் கல்வி கற்க முடியாமல் போனது பெரும் துரதிஸ்டமே…
பிரிவால் வாடும் தமிழ்ச் சமூகத்தில் நானும் ஒருவன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கின்றோம்.
உலகத்கதமிழுக்கும் தமிழுலகுக்கும் இது நல்ல செய்தில்லை..
அவர் காலமாகவில்லை..
காலமாக ஆனவர்….
நீ போனாய் என்பது
உயிரொன்று தன் வாழ்வு
முடித்த கதையல்ல
இரண்டாயிரமாண்டுகால
இன வரலாற்றின் பேரிழப்பு
உன்னைத் தகனம் செய்வது என்பது
யாழ் நூலகத்தை இரண்டாம் முறை எரிப்பதை போன்றது.
உன்னைத் தகனம் செய்வது என்பது
யாழ் நூலகத்தை இரண்டாம் முறை எரிப்பதை போன்றது
…………..உண்மை இதுதான்…
//யாழ் நூலகத்தை இரண்டாம் முறை எரிப்பதை போன்றது//
இது ரொம்ப ஓவர். புழுகை தாங்க முடியல்ல!
அப்ப மூத்த வினாயர் கோயில முதலாம் முறை எரிப்பதை போல என வெச்சுக்கொள்ளலாமே.
அம்சா தயவிலை தங்களுக்கு கிடைக்கும் ஆட்டிறைச்சி பங்கும் சிவாசும் என்று சொல்லுங்கோ.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பேரறிஞராக இருக்கலாம். பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி புத்தகங்களை எழுதியிருக்கலாம். பல தகுதிகளை பெற்ற பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எந்த காலத்திலும் மனித நேயமுள்ளவர் மனச்சாட்சியுள்ளவர் என்னும் தகுதியை பெறவில்லை. மூதூரில் நடந்த அகிலன் செல்வன் கொலை மட்டுமல்ல, புளொட்டில் நடந்த பல்வேறு கொலைகள் முதல் மக்கள் விரோத செயற்பாடுகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டசிவராமை ”நீ எத்தகைய பெரிய மனிதன்” என்று பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதி புகழ்ந்தவர். கண்மூடித்தனமான புலி அபிமானம் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் புலமைவாழ்வுக்கு நிரந்தரமான களங்கத்தை கொடுத்துள்ளது. புலிகளால் படுகொலை செட்டப்பட்ட விஜிதரன், விமலேஸ்வரன், செல்வநிதி போன்ற யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்களின் கொலைகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்கு எதிராக பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி செயற்பட்டவர். பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ஒருபோதும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காதவர். புலிகளால் படுகொலை செய்யப்பட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் மருமகன் தமிழ் மாறன்(புலிகளில் ஆரம்பத்தில் இணைந்து பின்னர் NLFTஇன் முக்கிய உறுப்பினராக இருந்தவர்) பற்றி தனது பட்டம் பதவிக்காக வாயே திறக்காதவர்தான் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. மாமனிதர் பட்டத்திற்காகவே புலிகளால் படுகொலை செய்யபட்டவர்களை துரோகிகள் என நிரூபிப்பதற்கு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி படாத பாடுபட்டவர்.கடந்த காலத்தில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எப்படி வாழ்ந்தார் என ஒரு தடவை திரும்பி பாருங்கள். தனது வாழ்வுக்கு மட்டுமே ஜால்ரா போட்டவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி என்பது ஊரறிந்த விடயம்!!
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் அரசியல் நிலைப்பாடு தொடர்பான குற்றச் சாட்டுகளே அவர் காலமாகிய செய்தி வெளியான நாளில் இருந்து பதியப்பட்டு வருவதை காண முடிகிறது. ஏனைய கல்விசார் ‘பேரறிஞர்களை’ காட்டிலும் தேசிய இனப்பிரச்சனை தொடர்பாகவும் சமூக ஒடுக்கு முறைகள் பற்றியும் கூடுதலாக சிந்தித்தவர் சிவத்தம்பி அவரது எழுத்துக்களே இதற்கு ஆதாரம் நீங்கள் கூறுகின்ற சம்பவங்கள் தொடர்பில் ஆதாரம் காட்டப்படுதல் கட்டாயமானது ஏனெனில் கைலாசபதி தொடர்பில் இன்றும் சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதை நான் பார்த்திருக்கிறேன்.