ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தங்களுடைய தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள் என்றும், அதனால் தான் சிறையில் இருந்து கொண்டே படிப்பது, இசை கற்றுக் கொள்வது என்று பொழுதைக் கழிக்கிறார்கள் என்று, கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களது வாக்குமூலம் கூடத் தவறானது என அவர்களை விசாரணை செய்தவர்களே கூறும் நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் அவர்களைக் கொலை செய்வதிலேயே குறியாக உள்ளன.
முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் வாதம் எழுத்துமூலமாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறையில் தாங்கள் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று கூறியுள்ள அவர்கள். தங்களின் கருணைமனு 15 ஆண்டுகள் கழித்து நிராகரிக்கப்படுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.