உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும், மக்கள் சீனத்தின் மகத்தான பொருளா தார வளர்ச்சியானது, தனது சொந்த மக்களுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் பொருளாதார நிலைத் தன்மைக்கு மிகப்பெரும் பங்களிப்பு செய்துள்ளது என்று சீன ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோ பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
130 கோடி மக்களைக் கொண்ட வளரும் நாடான சீனாவின் பொருளா தாரம், உலகப் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துள்ளோம் என்றும், அதே நேரத்தில் எங்களது சொந்த தேசத்தின் நலன்களை முதன்மையாக முன் வைத்தே திட்டங்கள் வகுக்கிறோம் என்றும் ஹூ குறிப்பிட்டார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஆசிய – ஐரோப்பிய நாடுகளின் (அசெம்) உச்சி மாநாடு வெள்ளியன்று துவங் கியது. பெய்ஜிங் நகரின் மக்கள் மாமன் றத்தில் துவங்கிய இந்த மாநாட்டிற்கு சீனப் பிரதமர் வென் ஜியா பவ் தலைமையேற்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட 45 ஆசிய மற் றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர் கள் பங்கேற்ற இந்த மாநாட்டை துவக்கி வைத்து சீன ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோ உரையாற்றினார். அப் போது, உலகப் பொருளாதார நெருக் கடியை சில குறிப்பிட்ட, தீர்மானகர மான நடவடிக்கைகளை மேற்கொள் வதன் மூலம் எதிர்கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அவரது பேச்சின் சுருக்கம் வருமாறு:-
உலகளாவிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பல்வேறு நாடுகள் சில முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. அந்த முயற்சிகள் விரைவில் நல்ல பலனைத் தரும் என்று எதிர்பார்க்க லாம். சீனாவும், இந்த நெருக்கடியை தீர்க்க தீவிர முயற்சி மேற்கொள்கிறது. எங்களது உள்நாட்டின் நிதிக் கட்ட மைப்பின் நிலைத்தன்மையை கண் காணித்து பேணுவது, நிதிச் சந்தைகள் மற்றும் நிறுவனங்களின் நிதி நிலை மையை அதிகரிப்பது, பிற நாடுக ளுடன் ஒத்துழைப்பு போன்ற முயற் சிகளில் சீன அரசு ஈடுபட்டுள்ளது.
சீனாவின் நிதித்துறையில் வேக மான பொருளாதார வளர்ச்சியும், அதே நேரத்தில் நிலையான வளர்ச்சி யையும் ஏற்படுத்தி வருகிறோம். ஆனால் சீனப் பொருளாதாரத்தின் அடிப்படையான அம்சங்கள் எதை யும் நாங்கள் மாற்றவில்லை.
உள்நாட்டிலும், உலக அளவிலும் மாறி வரும் பொருளாதாரச் சூழலில், சீனா தனது பொருளாதார நடவடிக் கைகளையும் நிதி கண்காணிப்பையும் மேலும் ஒழுங்குபடுத்தும். பொருத்த மான முறையில் கொள்கை மாற்றங் கள் மேற்கொள்ளும்.
குறிப்பாக, உள்நாட்டில் தேவை யின் அளவை மிக வேகமாக அதிகப் படுத்துவதை முக்கிய நடவடிக் கையாக சீனா வரையறை செய்துள் ளது. பொருளாதார மற்றும் நிதித் துறையில் நிலைத்தன்மையை பாது காக்க நுகர்வோரின் தேவைகளை அதிகரிக்க தேவையான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும். பொரு ளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஆசியாவும், ஐரோப்பாவும் அந்த பொதுத்தளத்தில் நின்று ஒத்து ழைப்பை மேம்படுத்த வேண்டும்.
ஆசிய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் பரஸ்பரம் இதர நாடுகளின் சமூக அமைப்பு, தத்துவார்த்த கட்ட மைப்பு, கலாச்சார பின்னணி, வளர்ச்சி நிலைமை மற்றும் அரசியல் நிலைமை போன்ற அனைத்து அம்சங் களையும் மதிக்க வேண்டும். தொடர்ச் சியான பேச்சுவார்த்தைகள் மூலம் பொருளாதார மற்றும் வர்த்தக குறைபாடுகளை களைந்து வளர்ச்சிக் கான புதிய துறைகளில் ஒத்து ழைப்பை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, சர்வதேச எரிசக்தி, உணவு சந்தைகளில் ஆசிய மற்றும் ஐரோப் பிய நாடுகளின் ஒத்துழைப்பை தீவி ரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இம்மாநாட்டில் பிரான்ஸ் ஜனா திபதி நிக்கோலஸ் சர்கோசி, ஜெர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கெல், ஜப்பான் பிரதமர் தாரோ அசோ மற்றும் ஐரோப்பிய கமிஷனின் தலை வர் ஜோஸ் மனுவேல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
உலகின் 50 சதவீதத்திற்கும் அதிக மான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்ட 45 நாடுகள் பங்கேற்றுள்ள இம்மாநாடு சனிக்கிழமையும் தொடர் கிறது. எரிசக்தி தேவை, புவி வெப்ப மயமாதல், உணவுப் பாதுகாப்பு உள் ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் இம் மாநாடு விவாதிக்கிறது.