சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான சட்டத்தரணிகள் குணரத்ன வன்னிநாயக்க மற்றும் லிலான் அமரகோன் ஆகியோர் தெரிவித்தனர்.
இராணுவ அதிகாரிகள் சிலர் பெண்களை விசாரிப்பதாக கூறி, அவர்களை நிர்வாணப்படுத்தி, மனிதாபிமானற்ற வகையில், சித்தரவதைகளுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர். தறபோது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான பெண்ணொருவர், தனது சட்டத்தரணியிடம் இது பற்றி தெரிவித்தை அடுத்து, சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு அதனை கொண்டு வந்தனர்
உலகம் பூராவும் மனித உரிமை மீறல்களும் மனிதாபிமான நெருக்கடிகளும் தாராளமாக இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக, கொலனித்துவத்திலிருந்து விடுபட்ட அல்லது விடுதலையடைந்த நாடுகளிலேயே அவை இன்று கொந்தளிப்பு மிக்கவையாகக் காணப்படுகின்றன. இன்று மனித உரிமை மீறல்களையும் மனிதாபிமான நெருக்கடிகளையும் அந்தந்த நாடுகளின் தேசிய அரசுகள் என்பன பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடித்தல், நாட்டின் இறைமையைப் பாதுகாத்தல் என்ற பெயர்களில் முன்னெடுக்கின்றன. அவ்வாறே விடுதலைக்காகப் போராடும் இயக்கங்களும் விடுதலைக்கான பாதையில் மனித உரிமை மீறல்களும் மனிதாபிமான நெருக்கடிகளும் தவிர்க்கவியலாதவை என்ற நியாயப்படுத்தல்களுடன் மக்களுக்கு அநீதிகள் விளைவிக்கின்றன. இதனால், ஒட்டுமொத்தத்தில் பாதிக்கப்படுபவர்கள் சாதாரண மக்களாகவே உள்ளனர்.
தங்கள் போராளிகள் அழிவிற்கு தாங்களும் ஒரு காரணமாக இருந்து போராளிகளை அழித்துவிட்டு, எங்களை பாதுகாக்க யாருமில்லையே எனக் கூப்பாடுபோடும் தமிழினம்போல் ஒரு இனத்தை உலகில் காண்பதரிது.
do not worry they are SRI LANKAN ARMY they are barbarians they do not know HR, FR, Humanity, privacy, law , any thing other than killing, raping, nudging and doing illegal immoral acts like as this government. Who will or can ask this. while the head of the evil on chair, law owned to evil and rule will not same