மழை வெள்ளம் உருவாக்கும் சேதங்கள் பல சென்னை நகர் சார்ந்து வாழும் ஏழைகளுக்கு மழை வந்தால் அது போன்ற துன்பத்தைப் பார்க்க முடியாது. நெருக்கமாக அடுக்கிக் கட்டப்பட்ட குடிசைப்பகுதி மாற்று வாரியக் கட்டங்கள், கூவக்கரையோரம் வாழும் மக்கள் என பெரும்பாலான ஏழைகள் நிலை இதுதான்.ஆனால், வீடு உள்ளவர்களை விட வீடற்றவர்களில் நிலை இன்னும் பரிதாபம்.
இந்நிலையில்தான் பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி என்பவரால் ஒரு இளைஞர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கபப்ட்ட நிகழ்வு இந்தியா முழுக்க கவனம் பெற்றிருக்கிறது. ஆனால், அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
சென்னை கீழ்பாக்கத்தில் பழமையான கல்லறைத் தோட்டம் உள்ளது. இந்தகல்லறைத் தோட்டத்தில் பணி செய்து வந்தவர் இளைஞர் உதயகுமார் இவருக்கு வயது 28. சென்னை டிபி சந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. உதயகுமார் தங்க இடமின்றி இரவு முழுக்க மழையில் நனைந்ததாக கூறப்படுகிறது.
மறு நாளும் மழையில் நனைந்தபடி கல்லறைத் தோட்டத்தில் வேலைக்கு வந்தவர் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகத் தெரிகிறது. அவர் இறந்து விட்டதாகக் கருதி அங்குள்ள ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் சொல்ல அதைப் பார்பதற்கு வந்த வந்தவர்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர் வந்து பரிசோதித்த போது அந்த இளைஞருக்கு உயிர் இருப்பது தெரியவர தன் தோளில் சுமந்து அவரை மருத்துவமனையில் சேர்ந்தார். அந்த நிகழ்வு விடியோவாக பதியப்பட்டு பகிர அது வைரல் ஆனது.
பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை அழைத்து பாராட்டினார். காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ராஜேஸ்வரி அந்த இளைஞரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்காக அனுப்பி வைத்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.