பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்திலுள்ள சிங்கா பஞ்சாயத்தில் பெண்கள் ஜீன்ஸ் மற்றும் செல்ஃபோன் பயன்படுத்துவது பற்றி முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது தொடர்பாக முடிவெடுக்க ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டது.
இக்கூட்டத்தின் முடிவில், பெண்கள் வழிதவறி செல்ல ஜீன்ஸும் செல்ஃபோன்களும் முக்கிய காரணங்களாக இருப்பதாக முடிவு எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அப்பஞ்சாயத்திலுள்ள பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கும் செல்ஃபோன் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
ஆயிரமாயிராமக் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் அதிகாரவர்க்கம் பெண்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என உத்தரவிடுகின்றது. உழைக்கும் பெண்கள் வேலைக்கு எனக் கடத்திவரப்பட்டும், வேலை செய்யுமிடங்களிலும், தெருக்களிலும், பிரயாணம் செய்யும் போதும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது இந்திய அதிகாரவர்க்கத்தின் ஆணாதிக்க வாத சிந்தனையால் மட்டுமே. குடும்பங்களில் கூட பெண்கள் பல நூற்றாண்டுகள் பிந்தங்கிய அடிமைகளாகவே நடத்தப்படும் நாடு இந்துத்துவ இந்தியாவில்தான்.
தடைவித்தித்த பஞ்ச்சாயத்துகாரர்களின் இந்தியச் சிந்தனை மரபில் பெண்கள் வெறும் பாலியல் நுகர்வுப்பண்டங்களே. அவர்களே பாலியல் வக்கிர உணர்வைத் தூண்டும் ஊடகங்களிலிருந்து பாலியல் விடுதிகள் வரைக்குமான பாவனையாளர்கள்.
இத்தடை 2015 ஜனவரி மாதம் 1 ஆம் தேதியிலிருந்து அமுலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர், பெற்றோர் தம் வீட்டு பெண்களுக்கு ஜீன்ஸ் மற்றும் செல்ஃபோன் வாங்கித் தரக்கூடாது என இதே பஞ்சாயத்து அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
This is about devolution of power at District and State Provincial level.
பெண்ணியம் பேசுபவர்கள் இதை எதிர்பார்கள். அனால் இதை தடுபதற்கு வழி கேட்டால் ஆண்களை குறை கூறுவார்கள்!!
பெண்களின் உரிமைகளையும் வசதிகளையும் தடைசெய்வதால் மட்டும் குற்றங்கள் குறைந்து விடாது. ஒரு பெண் வழிதவறுகிறாள் எனும் பொழுது அங்கே ஒரு ஆணின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். இத்தடைகளை ஆண்களுக்குப போடுவதின் மூலம் இதை விட அதிகமான வழிதவறல்களைத் தடுக்கலாமே. உலகளவில் சனத்தொகையில் 2/3 பங்கு பெண்களைக் கொண்டிருந்தாலும் குற்றங்களின் அதி அதி உயர்பெரும்பான்மை கொண்டவர்கள் ஆண்களே. சட்டங்களும் தடைகளும் இடப்படவேண்டியது ஆண்களுக்கே.