25.11.2008.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று ஐக்கிய நாடுகள் அமைப்பு விடுத்துள்ள செய்தியில், உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தமது வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்திலாவது துஷ்பிரயோகத்தை சந்தித்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பல நாடுகள் பெண்களைப் பாதுகாக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாக உள்ளது என்று ஐ நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியுள்ளார்.
வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் புதிய பிரச்சாரத்தை முன்நின்று செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேநேரத்தில் கென்யாவில் உள்ள பெண்களில் சரி பாதி வீதத்தினர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவதாக தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபோம் கூறியுள்ளது.
பெண்கள் சந்திக்கும் பாதிப்பு தொடர்பான மிக மோசமான உதாரணங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
BBC.