பூசா தடுப்பு முகாமிலிருந்து 41 முன்னை நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளதாக அறிவிக்கிறது. புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஆரம்பத்தில் 20 ஆயிரமாக அறிவிக்கப்பட்ட போராளிகளின் தொகை பின்னதாக 15 ஆயிரமாக அறிவிக்கப்பட்டது. இவ்வருட ஆரம்பத்தில் இத்தொகை 12 ஆயிரமாகக் குறைத்து அறிவிக்கப்பட்டது.
போராளிகளைப் பார்வையிடுவதற்கு எந்தச் சுயாதீன அமைப்புக்களும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இந்திய இலங்கை அரசுகள் சாட்சியின்றி ஆயிரக்கணக்கான மக்களையும் போராளிகளையும் கொன்றொழித்தன. ஆயுதப்போராட்டத்தின் சுவடுகளையே அழித்தொழிக்கும் அரச பாசிசம் சரண்டைந்த புலிகளின் முதன்மை உறுப்பினர்களை சரணடைந்த கணத்திலும் சிறைகளிலும் கொலைசெய்திருக்கின்றது.
இவற்றை மறைப்பதற்காக அவ்வப்போது சிலரை விடுதலை செய்கிறது. பூசா முகாமிலிருந்து இன்று விடுதலை செய்யப்பட்ட இவர்கள் அரசின் படுகொலைகளை மறைப்பதற்காகப் பிரயோகிக்கப்பட்ட ஆயுதங்களே.