ஹெய்டியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக நிலத்தை வழங்குவதாக செனகல் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். த்துடன் ஹெய்டியில் உள்ளவர்கள் செனகலுக்கு வரவிரும்பினால் அதற்கான ஏற்பாடுகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி அப்டோலயே வேட் தெரிவித்துள்ளார்.
ஹெய்டி அடிமைகளால் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ளவர்கள் ஆபிரிக்காவின் மைந்தர்களெனக் குறிப்பிட்டுள்ள வேட் செனகலிலிருந்து சென்றவர்களும் அங்கிருப்பதாகக் கருதப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் செனகலுக்குத் திரும்ப விரும்பும் எந்தக் ஹெய்ட்டியன்களுக்கும் தன்னிச்சையாக நாடு திரும்பும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதியின் பேச்சாளர் மமடோ பெம்பா நிடயே தெரிவித்துள்ளார்.
மேலும் ஹெய்டியன்களுக்கு சிறியளவு நிலத்தையோ அல்லது ஒரு பிராந்தியத்தையோ வழங்க செனகல் தயாராக இருப்பதாகவும், வழங்கப்படும் நிலத்தின் அளவு எவ்வளவு பேர் வருகிறார்கள் என்பதில் தங்கியுள்ளதெனவும் தெரிவித்துள்ள பெம்பா நிடயே;சிறி ய எண்ணிக்கையானோரே வந்தால் அவர்களுக்கு வீடுகளையோ அல்லது நிலங்களையோ வழங்குவோம். பெரியளவான எண்ணிக்கையானோர் வந்தால் ஒரு பிராந்தியத்தையே அவர்களுக்கு வழங்குவோம். அவ்வாறு ஒரு பிராந்தியம் அவர்களுக்கு வழங்கப்படுமானால் நாட்டிலுள்ள ஏனைய பாலைவனப் பகுதியை விடவும் வழங்கப்படும் நிலம் வளம் மிக்கதாக இருக்குமெனத் தெரிவித்துள்ளார்.