Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புவி வெப்ப உயர்வு – புத்தரின் பாதையே தீர்வு! : இராமியா

இனியொரு... by இனியொரு...
05/08/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
6
Home பிரதான பதிவுகள் | Principle posts

ஆச்சாரியப்பட வேண்டாம்! எது நடந்தாலும் அது ஏற்கனவே பழங்காலத்தில் இருந்த எங்கள் முனிபுங்கவர்களுக்குத் தொரியும் என்றும், அது எங்கள் புனித நூல்களில் உள்ளது என்றும் சனாதனவாதிகள் கூறுவது போல், புத்தர் புவி வெப்ப உயர்வைப் பற்றி அறிந்திருந்தார் என்றோ, அதற்கான தீர்வை அன்றே கூறிவிட்டார் என்றோ நிச்சயமாகச் சொல்லப் போவதில்லை. புத்தர் சமூக மாற்றத்திற்காகப் போராடிய போது இருந்த சமூகச் சூழலுக்கும் இன்றைய புவி வெப்ப உயர்வுக்கும் ஓர் ஒப்புவுவமை இருக்கிறது.

“யாகங்களினால் ஒரு நரை மயிரைக் கரு மயிராக்கவும் முடியாது” என்று பொரியார் கூறி இருந்தாலும், யாகங்களினால் இந்த உலகையே மாற்ற முடியும் என்று தொடர் ஏமாற்றங்களுக்குப் பிறகும் பலர் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்; நம்ப வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட யாகங்களைப் பற்றி ஒரு சில உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று ஒருவருக்கு நல்ல வேலை கிடைக்கிறது; அல்லது தேர்வில் சிறந்த முறையில் வெற்றி பெறுகிறார்; அல்லது மகிழ்ச்சிகரமான நிகழ்வு ஏதாவது நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நண்பர்களும் சுற்றத்தினரும் அவாரிடம் விருந்து கொடுக்கும்படி கேட்கிறார்கள் அல்லவா? அவரும் விருந்து கொடுக்கிறார் அல்லவா? (சில சமயத்தில் விரும்பாவிட்டாலும் விருந்து தர வேண்டிய கட்டாயத்திற்கும் உள்ளாவதும் உண்டு) அதற்கு என்ன செய்கிறார்கள்?அவரவர் வசதிக்கு ஏற்ப வீட்டிலோ, சாதாரண தேனீர்க் கடையில் இருந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரையிலும் எங்காவது விருந்து விழா கொண்டாடப்படுகிறது.

இதே போன்ற நிகழ்வுகள் பழங்காலச் சமூகத்தில் எப்படி நடந்து இருக்கும்? அது தான் யாகம். அரசர்களோ மற்ற செல்வந்தர்களோ, விரும்பியோ விரும்பாமலோ மற்றவர்களுக்கு அளித்த விருந்து தான் இந்த யாகம். இந்த யாகங்களில் ஆடு, மாடு, குதிரை போன்ற மிருகங்களைக் காவு கொடுப்பார்கள். பின் அவற்றின் இறைச்சியை நெய்யில் தடவி, யாக நெருப்பில் சுட்டு உண்பார்கள். இன்றைய விருந்துகளில் மதுபானங்கள் இடம் பெறுவது போல அன்றைய விருந்துகளில் அதாவது யாகங்களில் சோமபானம் சுராபானம் போன்ற மதுபானங்களைப் பருகும் வழக்கம் இடம் பெற்று இருந்தது.

இப்படிப்பட்ட விருந்தளித்தல் அதாவது யாகங்கள் செய்தல் என்பது அளவிற்கு அதிகமாகப் போன போது, காவு கொடுக்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கையும் அதிகமானது. இது எந்த அளவிற்குச் சென்றது என்றால், விவசாயத்திற்குத் தேவைப்படும் கால்நடைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயமே நலிந்து போகும் அளவிற்குச் சென்றது. இதன் தொடர் விளைவாக, சமூக இயக்கம் தடைபடுவது பற்றிய கவலை அரசர்களை வாட்டிக் கொண்டு இருந்தது. அவர்கள் யாகங்கள் செய்வதைக் குறைக்க வேண்டும் என்று எண்ணத் தலைப்பட்டனர்.

யாகங்கள் செய்வது குறைந்தால் தங்களுடைய வாழ்க்கைத் தரம் குறைந்து விடும் என்று அஞ்சிய பார்ப்பனர்கள், யாகங்களைச் செய்யாவிட்டால் தீமைகள் உண்டாகும் என்று அச்சுறுத்தினார்கள். பார்ப்பனர்களின் அச்சுறுத்தலுக்கும் விவசாயம் அழிந்து கொண்டு இருக்கும் யதார்த்தத்தின் அச்சுறுத்தலுக்கும் இடையில் அரசர்கள் மாட்டிக் கொண்டு விழித்துக் கொண்டு இருந்தார்கள். பார்ப்பனர்களின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஒரு வலுவான கருத்தியலின் தேவை வலுவாக உருவாகி இருந்தது.

தேவை தான் கண்டுபிடிப்புகளின் தாய் (Necessity is the mother of invention) என்ற வாசகம் இயற்கை அறிவியலுக்கு மட்டும் அன்றி சமூக அறிவியலுக்கும் பொருந்தும். விவசாயம் அழிவுப் பாதையில் செல்வதன் தொடர்ச்சியாக சமூகமே அழிவுப் பாதையில் சென்று கொண்டு இருப்பதைத் தடுக்க வேண்டுமானால் முதலில் யாகங்கள் செய்வது தடுக்கப்பட வேண்டும் என்ற சூழலில் தான், சமூகப் போராட்டத்தில் புத்தர் புகுந்தார்.

யாகங்கள் செய்யக் கூடாது என்று புத்தர் கூறிய போது, யாகங்கள் செய்யாவிட்டால் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நோரிடும் என்று பார்ப்பனர்கள் அச்சுறுத்தினார்கள். புத்தரோ கடவுளின் இருப்பையே மறுத்தார். பார்ப்பனர்கள் சுற்றி வளைத்து எப்படி எப்படி வினவினாலும், மிக உயர்ந்த ஞானம் படைத்த புத்தர் நேரடியாகவும் எளிமையாகவும் அனைவருக்கும் பு¡ரியும்படியாக விடையளித்தார். பார்ப்பனர்கள் விவாதத்தில் புத்தரை வெல்ல முடியவில்லை என்பது அல்ல; போட்டியிடக் கூட முடியாமல் திணறினார்கள்.

பார்ப்பனர்களின் யாகத்திற்கு எதிரான வலுவான கருத்தை புத்தர் வைத்த உடன், மனதளவில் உடன்பட்டாலும் உடன்படாவிட்டாலும் சமூக இயக்கம் உயிர்ப்புடன் இருக்கும் பொருட்டு புத்தாரின் அறிவுரையைப் பின்பற்றியே தீர வேண்டிய கட்டாயத்தில் அரசர்கள் இருந்தனர்; பின்பற்றவும் செய்தனர். யாகங்கள் செய்வது மிக மிக ….மிகப் பெருமளவு நிறுத்தப்பட்டு விட்டது. அதனால் கால்நடைகளைக் காவு கொடுப்பதும் நிறுத்தப்பட்டு விட்டது. அதன் தொடர் விளைவாக விவசாயம் நலிவுப் பாதையில் இருந்து செழுமைப் பாதைக்குத் திரும்பியது. சமூக இயக்கத்தின் உயிர்ப்புத் தன்மை தொடர்ந்தது.

சரி! இப்பொழுது இன்றைய சூழலுக்கு வருவோம். இன்று புவி வெப்ப உயர்வு பற்றி அனைவரும் அறிவர். இதற்குக் காரணம் நம்முடைய செயல்பாடுகளினால் காரியமில வாயுவையும் பச்சை வீட்டு வாயுக்களையும் அளவிற்கு மீறி உமிழ்வது தான் என்பதும் தொரியும்.

இன்றைய கால கட்டத்தில் நமது செயல்பாடுகளை வழி நடத்துவதும் கட்டுப்படுத்துவதும் எது? அது நமது முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை தான். இம்முறையில் என்னென்ன பொருட்களை உற்பத்தி செய்தால் சந்தையில் விற்று இலாபம் சம்பாதிக்க முடியுமோ அப்பொருட்களை உற்பத்தி செய்வதில் தான் ஊக்கம் இருக்கும். ஊக்கம் இருக்கும் என்பதை விட அப்பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கடுமையான வற்புறுத்தலும் இருக்கும். ஆயுதங்கள், வாகனங்கள், குளிர் சாதனங்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்வதில் அதிக இலாபம் கிடைப்பதால் அவற்றின் உற்பத்தி நாளுக்கு நாள்அதிகாரித்துக் கொண்டு இருக்கிறது. இவற்றின் பயன்பாடு காரியமில வாயுவையும் பச்சை வீட்டு வாயுக்களையம் மேலும் மேலும் உமிழ்வதிலும், அதன் விளைவாக புவி வெப்பம் மேலும் மேலும் உயர்வதிலும் இட்டுச் செல்கிறது.

புத்தர் காலத்தில் சமூக இயக்கம் தொடர்வதற்கு யாகங்கள் செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்று இருந்தது போல், இன்று புவி வெப்பம் உயராமல் தடுப்பதற்கு சந்தைப் பொருளாதார முறையிலான உற்பத்தி முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டி இருக்கிறது. அதோடு மட்டுமின்றி சந்தைப் பொருளாதார முறையின் படி நஷ்டம் வரும் என்பதால் ஆர்வம் காட்டப்படாத விவசாயத்தையும் மரம் வளர்த்தலையும் பெரும் அளவில் முன்னெடுப்பது ஏற்கனவே உயர்ந்து இருக்கும் புவி வெப்பததைக் குறைக்கும் பொருட்டு அவசியமாகிறது. இப்பணிகளை முதலாளித்துவப் பொருளாதார முறையில் நினைத்துப் பார்க்கவும் முடியாது. சோஷலிச முறையில் தான் முடியும். ஆகவே முதலாளித்துவப் பொருளாதார முறையை உடனடியாக ஒழித்துக் கட்டுவது அரசியல்வாதிகளின் முதன்மையான கடமையாகிறது.

புத்தர் காலத்திலும் கேளிக்கைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்த சில அரசர்கள் யாகங்கள் செய்வதைத் தொடர விரும்பினாலும், விவசாயத்தை அழிவுப் பாதையில் இருந்த மீடக வேண்டிய கட்டாயத்தினால் புத்தாரின் வழியைப் பின்பற்ற வேண்டி இருந்தது. அது போலவே உழைக்கும் வர்க்கத்தை அடிமை கொள்ளும் ஆசை இருந்தாலும் இப்புவியை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறையைக் காவு கொடுத்தே தீர வேண்டும். சோஷலிச முறையில் குறைபாடுகள் இருப்பதாக நினைப்பவர்களும் அக்குறைபாடுகளைக் களைந்து செயல் பட வேண்டி இருக்குமே ஒழிய முதலாளித்துவப் பொருளாதார முறையைத் தொடர முடியாது என்பதைப் பு¡ரிந்து கொள்ள வேண்டும். புத்தர் காலத்தில் யாகங்கள் ஒழிக்கப்பட்டதால் ஆதிக்க வர்க்கத்தினாரின் சுகங்கள் காவு வாங்கப்பட்டது போல இப்பொழுது உழைக்கும் வர்க்கத்தை அடிமை கொள்ளும் சுகங்களைக் காவு கொடுத்தே ஆகவேண்டும். இதற்கு முன் வராத அரசியல்வாதிகளை அரசியல் களத்தை விட்டே மக்கள் விரட்ட வேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழ் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் இலங்கை அரசு

Comments 6

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Jewish Jesus is the name of a book. One day someone may write a book titled, Hindu Siddartha.

  2. chandran.raja says:
    14 years ago

    துடைப்பம் எட்டாதயிடத்தில் தூசிதானாக போகதென்பது ஒரு முதுமொழி. உலகரீதியளவில் முதாலித்துவத்தால் கொண்டுவரப் பட்ட இந்த ஆதாயத்திற்கான உற்பத்திமுறை ஒருகண்டம் விட்டு கண்டம் தாண்டி மோதல்களை ஏற்படுத்துவதுமல்லால் பேரழிவுகளையும் ஏற்படுத்துகின்றன.
    இன்றையநிலையில் அதுஅணுவாத யுத்தத்தையே தோற்றிவிட்டுவிடுமோ என்ற பீதி ஏற்படுவதும் ஒரு நியாயமாகவே தோன்றுகிறது. தூசியென்பது ஏகாதிபத்தியமும் சொந்தநாட்டில் இருக்கும் முதாலித்துவ வர்க்கமுமே!. இதற்கு துடைப்பமா மாறக்கூடியது. சிங்களவனோ தமிழனோ அல்ல.மாறாக உற்பத்தியோடு பிணைக்கப்பட்டிருக்கிற இலங்கை தொழிலாளவர்கமே!. இந்த வர்க்கம் சர்வதேச தொழிலாளவர்கத்துடன் இரண்டறக் கலப்பதினால் மட்டுமே! சொந்தநாட்டு பிரச்சனைகளை மட்டுமல்ல உலகமயமான பிரச்சனைகூட தீர்ப்பதில் ஒரு முடிவுக்கு வரமுடியும். ஏனெனில் தொழிலாளவர்க்கம் தாய் நாடு தந்தைநாடு இல்லாத உற்பத்தியோடு பிணைக்கப்பட்டு மாற்றத்தை கொண்டுவரகூடிய ஒரேயொரு வர்க்கம்.இதைவிட வேறு எந்த வார்த்தைப் பிரயோகங்களும் வெறும் ஆலாபரணையாக
    மட்டுமே! காதில் ஒலிக்கும்.

  3. இராமியா says:
    14 years ago

    துடைப்பம் எட்டாத இடத்தில் தூசி தானாகப் போகாது என்ற முதுமொழி மிகச் சரியானது தான். இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள புவி வெப்பம் என்னும் பிரச்சினைக்கு எப்பாடு பட்டேனும் தீர்வு கண்டே ஆகவேண்டும். இல்லை எனில் இம்மண்ணில் மனித இனம் மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களும் மறைய நேரிடும். இதற்கு முதலாளித்துவ உற்பத்திமுறை முற்றிலும் தடையாக இருக்கிறது. இதற்கு மாற்றாக, சோஷலிச உற்பத்தி முறையை இவ்வுலகில் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல என்பது உண்மை தான். ஆனால் அதைச் செய்து முடித்தே தீர வேண்டி உள்ளது. இதற்கு விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் ஏற்படுத்துவது மிக மிக முக்கியமான வேலையாக இருக்கிறது. அது மிகச் சிரமமான வேலை தான் என்றாலும் அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி பெற வாய்ப்பு இருக்கவே செய்கிறது. ஒரு பன்னாட்டு முதலாளியிடம் (அவர் தமிழ் தெரியாத தமிழர்) நிறைய நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் புவி வெப்ப உயர்வுப் பிரச்சினையை முதலாளித்துவ உற்பத்தி முறை மேலும் மேலும் சீர் கேடு அடையவே செய்யும் என்பதையும் சோஷலிச உற்பத்தி முறையில் தான் அப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பதையும் விளக்கினேன். சிறிது அதிர்ச்சி அடைந்த அவரிடம் அதனால் தான் நான் அவரிடம் அதிகமான பேச்சை வைத்துக் கொள்ளவில்லை என்பதையும் கூறினேன். அதற்கு அவருடைய பதில் நன்றாகவே இருந்தது. தான் ஒரு முதலாளி தான் என்றும் ஆனால் பிரச்சினை என்று வரும் பொழுது அடிப்படையில் மனிதனாக இருப்பதை மறந்துவிட முடியாது என்றும் கூறினார். விமானத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொழுது பழுது ஏற்பட்டு விட்டதால் அனைவரும் பாராசூட்டைப் பயன் படுத்தி, தப்பிக்க வேண்டி இருந்தால், அப்பொழுது, தான் விமானத்தில் கொண்டு வரும் அளவற்ற செல்வத்தைப் பற்றி அக்கறை கொள்வது அறிவுடைமையாக இருக்காது என்றும் எப்படியும் உயிர் தப்புவதைப் பற்றிய சிந்தனை தான் மேலோங்கி இருக்க வேண்டும் என்றும் கூறி விட்டு, இத்திசையில் தொடர்ந்து செல்லும்படியும் கூறினார். இது ஒருவரால் செய்து முடிக்கக் கூடிய செயல் அல்ல. மக்கள் அனைவரும் இப்பணியை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இது அனைவரின் பிரச்சினையுமாகும். சோஷலிசப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் மற்ற பல பிரச்சினைகளுக்குத் தானகவே தீர்வு வர பழி ஏற்படும்.

  4. Aaravan says:
    14 years ago

    ஒருநாளைக்கு சோசலிஸம் க்கிறாரு இனொருனாளைக்கு புத்தருஇங்கிறாரு. எப்பதான் முடிவுக்கு வருவாரோ தெரியாது.

  5. amal says:
    14 years ago

    புத்த மதத்தை இந்தியாவில் பரவ விடாமல் தடுத்ததே இந்த பார்ப்பன பரதேசிகள் தானே. புத்த மதம் வந்திருந்தால் இவர்களின் ஆதிக்கமும், கடவுளின் பெயரை கொண்டு ஏமாற்றும் வேலைகளும் இருக்காது.

  6. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Amal, there was never a religious vaccum in India. That is why this beautiful island became a shrine for Theravada Buddhism.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...