மத்திய குழுக் கூட்டங்கள் இரண்டு மூன்று தடவை நடைபெறுகிறது. ஒவ்வொரு தடவையும் பிரபாகரன் தனது அதிர்ப்தியைத் தெருவித்துக்கொள்கிறார். புதியபாதையின் ஒரு இதழ் மட்டுமே வெளிவருகிறது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வெளிவந்த அந்த வெளியீட்டின் பின்னர் அது நிறுத்தப்பட்டு விடுகிறது. அப்போது நடைபெற்ற மூன்று மத்திய குழு ஒன்று கூடல்களுக்கும் பிரபாகரன் தவறாமல் வருகிறார்.
இராணுவ வழிமுறை தான் சரியானது என மீண்டும் மீண்டும் வாதிக்கிறார். இலங்கை அரசின் பேரினவாத அடக்குமுறைக்கு எதிரான எமது நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவில் பேசப்படுவதைவிட எமது உள்முரண்பாடுகள், இயக்கத்தின் திசைவழி ஆகியவற்றைச் சுற்றியே விவாதங்கள் தொடர்கின்றன. வெகுஜன அமைப்புக்களை உருவாக்குவது என்பது பிரபாகரனிற்குத் தேவைவற்ற ஒன்றாகவே தென்படுகிறது. புதிய தாக்குதல்கள் மேற்கொள்ள வேண்டும்; ஆயுதங்களையும் அவற்றைக் கையாளத் தெரிந்தவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் அவரது நோக்கமாக இருந்தது.
ஒரு வகையில் இன்றைய புறநிலைகளிலிருந்து சிந்திக்கும் போது இந்த விவாதங்கள் என்பன ஒரு அரசியல் இயக்கத்தின் செல் திசை நோக்கிய ஆரம்ப விவாதங்களாகவே அமைந்திருக்கலாம் என்று கருதுவதுண்டு. இரண்டு முரண்பட்ட பக்கங்களிலும் அனுபவமின்மை அரசியல் வளர்ச்சியின்மை போன்றன விவாதங்கள் தனிநபர் பிரச்சனைகளாக மாறியதுண்டு. தவிர, தமிழர் விடுதலைக் கூட்டணி தமது உணர்ச்சி அரசியலூடாக ஏற்படுத்தியிருந்த தேசிய அலையின் சூழ்நிலைக் கைதிகளாக பலர் மாற்றமடைந்திருந்தனர்.
இன்று கூட்டம் கூட்டமாக மக்களைக் கொலைசெய்யும் நிலைக்கு வளர்ச்சியடைந்திருக்கும் இலங்கை நவ பாசிசப் பேரினவாதம் அன்று தனது வேர்களை தமிழ் மக்கள் மீது ஆழப்படரவிட்டுக்கொண்டிருந்தது. 79ம் ஆண்டு காலப்பகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டம் இலங்கை அரசால் மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது.
பிரபாகரன் சார்ந்தவர்கள் எமக்கு எதிரான பிரச்சாரங்களை உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொள்கின்றனர். மறுபுறத்தில் சுந்தரம் போன்றோரும் தமது பிரச்சாரங்களை பிரபாகன் மீதும் அவர் சார்ந்த குழுவினரின் மீதும் விமர்சனங்களாகப் பிரச்சாரம் செய்கின்றனர். பிரபாகரனிற்கோ சுந்தரம் போன்றோருக்கோ இவ்விணைவிலும் மத்திய குழுவின் இருப்பிலும் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. அவர்கள் இணைவை விரும்பவும் இல்லை.
பல சந்தர்ப்பங்களில் சுந்தரத்தினதும் பிரபாகரன் குழுவினரதும் விமர்சனங்கள் தனிமனித வசைபாடல்களாகவும் காணப்பட்டன.
சுந்தரம் சார்ந்தோர் தவறுகள் அனைத்திற்கும் பிரபாகரன் தான் காரணம் என்ற வகையில் அவரின் இயல்புகள், நடைமுறைகள் குறித்த வசைபாடல்களையும், மறு புறத்தில் பிரபாகரன் சார்ந்தோர் நான் உட்பட சுந்தரம் போன்றோருக்கு எதிரன பிரச்சாரங்களை உறுப்பினர்கள் மத்தியிலும் ஆதரவாளர்கள் மத்தியிலும் மேற்கொண்டனர்.
பிரபாகரன், ராகவன், தனி, அன்டன், போன்றோர் முன்பிருந்தவாறே பிரிந்து செல்கின்றனர். நானும் சார்ந்தனும் எமது குழுவோடு இணைந்து கொள்கிறோம். பிரிவு நிரந்தரமாக, தனித்தனியாகச் செயற்பட ஆரம்பிக்கிறோம்.
இப்போதும் நாம் பிரிந்து செல்லும் வேளையில் குமரப்பா, மாத்தையா போன்றோர் மிகவும் மன வேதனையடைகின்றனர். மாத்தையா என்னிடம் மறுபடி வந்து நானும் பிரபாகரனும் தனது இரு கண்கள் போல தான் எங்கு செல்வது என்ற மனக் குழப்பத்தில் இருப்பதாகச் சொல்கிறார். குமரப்பா அரசியலிலிருந்து விலகிச் சென்றுவிடுகிறார்.
நாம் தனியாகச் செயற்பட ஆரம்பித்ததுமே புதியபாதை இதழின் வெளியீட்டுக்கான செயற்பாடுகளையும் ஆரம்பித்துவிட்டோம். சுந்தரம் மிகத் தீவிரமாகச் செயற்பட ஆரம்பிக்கிறார்.
இதே வேளை மாத்தையா, மனோமாஸ்டர், அன்டன், தனி, ராகவன்,ஆசீர்,பண்டிதர், சங்கர் , புலேந்திரன் போன்றோர் இணைந்த பிரபாகரன் சார்ந்த குழுவும் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்த ஆரம்பிக்கிறது. பிரபாகரன் குழுவிலிருந்த பெரும்பாலானோர் இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தவர்கள். எது எவ்வாறாயினும், மத்திய குழுவற்ற கூட்டு முடிவுகளற்ற நடைமுறைகளின் எதிர் விளைவுகளை அவர்கள் உணர்ந்திருந்தனர். இதனால், அவர்கள் மத்திய குழு ஒன்றை உருவாக்குவதற்கான கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றனர். இந்தக் கோரிக்கையுடன் பிரபாகரன் முரண்பட ஆரம்பிக்கிறார்.
ஒரு இராணுவக் குழுவிற்கு அதிகாரி போன்ற தனித் தலைமை ஒன்றே அவசியமானது என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
பிளவு ஏற்படுவதற்கு முன்பதாக இருந்த மத்திய குழுவில் பிரபாகரனுக்கு ஏற்பட்ட அனுபவங்களும் கூட குறைந்தபட்ச ஜனநாயகத்தைக் கூட ஏற்றுகொள்ள முடியாத நிலைக்கு வருகிறார். உமாமகேஸ்வரன் இயக்கத்திலிருந்து விலகிச்சென்றதும் பிரபாகரன் ஏற்கனவே முற்றாக இந்த முடிவிற்கு வந்திருக்க வேண்டும் என்றே நம்புகின்றேன். இந்தியாவில் அவரோடு தங்கியிருந்த ஏனையோருக்கு குறிப்பாக ரவி போன்றோருக்கு தலைமைக்கு எதிராகப் பேசக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டதாக அறிந்திருந்தேன்.
இதே வேளை சுந்தரம் கண்ணன் போன்ற எமது குழுவிலிருந்தவர்களுக்கு உமாமகேஸ்வரனுடன் தொடர்புகள் ஏற்படுகின்றது. அவ்வேளையில் இந்தியாவிலிருந்த உமாமகேஸ்வரன் இலங்கைக்கு வருகிறார். எழுபத்தி ஒன்பதாம் ஆண்டு காலிறுதிப் பகுதியில் கண்ணன், சுந்தரம் போன்றோர் தாம் உமாமகேஸ்வரனைச் சந்தித்ததுப் பேசியதாக எமக்குத் தெரிவிக்கின்றனர்.
உர்மிளா தொடர்பான பிரச்சனையில் உமாமகேஸ்வரனைக் கொலைசெய்வதற்காக அனுப்பிவைக்க்பபட்டவர்களில் சுந்தரமும் ஒருவர். அவ்வேளையிலிருந்தே உமாமகேஸ்வரனுடன் சுந்தரத்திற்குத் தொடர்பிருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எம்மில் பலருக்கிருந்த சந்தேகம் இப்போது உறுதியானது போலிருந்தது.
சுந்தரத்தின் அனுசரணையோடு சுழிபுரம் பகுதியிலேயே உமாமகேஸ்வரன் தங்கியிருந்தாகவும் அவர்கள் எமக்குத் தெரிவிக்கின்றனர்.
உமாமகேஸ்வரனுக்கும் எமது கருத்தோடு உடன்பாடு இருப்பதாகவும் அவர் எம்மோடு இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்தாகவும் சுந்தரம் சில நாட்களில் எங்களுக்குத் தெரிவிக்கிறார். எம்மில் பலர் சுந்தரத்தின் இந்தச் செயற்பாடு குறித்து ஆச்சரியமடைகிறோம். உமாமகேஸ்வரனும் பிரபாகரன் போலவே தூய இராணுவக் கண்ணோட்டத்தை உடைய ஒரு போராளியாகவே வாழ்ந்த காலங்களை நாம்மில் பலர் அறிந்திருந்தனர். இதனால் எமக்குள் எதிர்ப்புக் குரல்கள் மேலெழுகின்றன. அழகன், நந்தன், நாகராஜா, நெப்போலியன் போன்றோருடன் நான் உட்பட பலர் உமாமகேஸ்வரன் உள்வாங்கப்படுவதை விரும்பவில்லை.
பல இழப்புகள் தியாகங்களுக்கு மத்தியில் உருவான எமது உறுப்பினர்களின் ஒன்றிணைவைப் பாதுகாக்கும் நோக்கோடு உமாமகேஸ்வரனின் வருகையை அதிகமாக விரும்பாத நான் உட்பட நம்மில் பலர் இறுதியில் அவரை ஏற்றுக்கொள்கிறோம். அதே வேளை இதனை முற்றாக எதிர்த்த நந்தன் சிவம் போன்றோர் விலகிச் சென்றுவிடுகின்றனர்.
குமணன் போன்ற பலர் மிகுந்த அதிர்ப்தியுடனேயே செயற்படுகின்றனர். உமாமகேஸ்வரனும் மக்கள் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறியதும் நான் அவரது இணைவை ஏனையோர் போல எதிர்க்கவில்லை. 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் எமது குழுவிற்கு ஒரு பெயர் ஒன்றைத் தெரிவி செய்யவேண்டும் என்ற கருத்துப் பரவலாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சுந்தரம் முன்மொழிந்த பெயர் பின்னதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்ப்படுகிறது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)) என்ற பெயர் அப்போது தான் உருவாகிறது.
இதே காலப்பகுதியில் உமாமகேஸ்வரனின் இணைவைத் தொடர்ந்து சந்ததியாரும் எம்மோடு இணைந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார். உமாமகேஸ்வரனுடனூடான தொடர்பின் வழியாக எம்மோடு இணைவதற்கு முன்வருகிறார். இறைகுமாரன் உமைகுமாரன் ஆகியோருடன் சந்ததியார் தனிக் குழுவாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களின் குழுவில் இணைந்திருந்தவாறே அவர்களுக்குத் தெரியாமல் சந்ததியார் எம்மோடும் இணைந்து தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கிறார்.
இப்போது புளட் அமைப்பிற்கு மத்திய குழு ஒன்றைத் தெரிவுசெய்து எமது செயற்பாடுகளை வேகப்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறோம்.
அந்த மத்திய குழுவிற்கு சாந்தன், உமாமகேஸ்வரன், சுந்தரம், நான், சந்ததியார் ஆகியோர் தெரிவுசெய்யப்படுகிறோம்.
மத்திய குழு தெரிவான பின்னர் நடைபெற்ற விவாதங்களில் இராணுவத் தாக்குதல்களைத் நிகழ்த்த வேண்டும் என்ற கருத்தை உமாமகேஸ்வரன், சுந்தரம், சந்ததியார் ஆகியோர் முன்வைக்கின்றனர். நானும் சாந்தனும் முதலில் வெகுஜன அமைப்புக்களை உருவாக்கி அதன் பலத்தில் இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவோம் என்ற கருத்தை முன்வைக்கிறோம். பின்னதாக இரண்டு நடவடிக்கைகளையும் சமாந்தரமாக முன்னெடுக்கலாம் என்ற கருத்து மேலோங்கிறது.
மறுபடி சிறிய அளவில் எம்மத்தியில் விவாதங்கள் ஆரம்பமாகின்றன. பல உறுப்பினர்கள் மத்தியில் விரக்தியும் வெறுப்பும் குடிகொள்கிறது. சுந்தரம், உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றோர் எமது குழுவின் மீது அதித செல்வாக்குச் செலுத்துவதாகவும் தவறான வழியில் மறுபடி செல்வதாகவும் பலரால் உணரப்படுகின்றது.
இதன் மறுபக்கத்தில் எமக்கிருந்த பண நெருக்கடியும் ஒரு காரணமாக சுந்தரம், உமாமகேஸ்வர போன்றோரால் முன்வைக்கப்படுகிறது. எமது அன்றாட வாழ்விற்கான பணத்தைத் திரட்டிக்கொள்வதில் மிகுந்த சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில் உமாமகேஸ்வரன் சுந்தரம் போன்றோர் இதனை எதிர்கொள்வதற்காக கொள்ளை முயற்சி ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
மக்களிடம் சென்று அவர்கள் அவர்களில் தங்கியிருத்தல் என்ற நிலை நிராகரிக்கப்பட்டு மக்களிலிருந்து அன்னியப்படும் செயற்பாடுகள் ஆரம்ப்பிக்கப்படுகின்றன. இவற்றை இறுதியில் நாங்களும் நிராகரிக்கவில்லை. இதே வேளை பிரபாகரனுக்கும் அவர் சார்ந்த குழுவினருக்கும் இடையேயான முரண்பாடு உச்ச நிலையை அடைகிறது. பிரபாகரன் மத்திய குழு அமைப்பதற்கும் கூட்டு முடிவிற்கான தளத்தை ஏற்றுக்கொள்வதிலும் முழுமையான நிராகரிப்பைத் தெரிவிக்கிறார். அவர்களின் உறுப்பினர்களிடையேயான அதிர்ப்தி காரணமாக செயற்பாடுகள் எதுவுமின்றி நாட்களை நகர்த்துகின்றனர்.
குறிப்பு: மேலதிக ஆவணங்களுடன் அச்சு நூலாக வெளிவரவரவிருக்கும் இத் தொடர்,இன்னும் சில பதிவுகளின் பின்னர் முடிவுறும். அந்தக் கால வெளிக்குள் கட்டுரையாளர் ஐயரின் நேர்காணல் ஒன்றை வெளியிட ஆலோசித்துள்ளோம். இந்த நேர்காணலின் ஒரு பகுதி அச்சுப்பதிவாகும் நூலின் பின்னிணைப்பிலும் இனியொருவிலும் சில நாட்களில் பதியப்படும். இனியொரு வாசகர்கள், ஆர்வலர்கள், படைப்பாளிகள் இந்த நேர்காணலுக்கான வினாக்களை இங்கே பின்னூட்டமாகப் பதிவிடலாம்.
(இன்னும்வரும்..)
தொடரின் முன்னைய பதிவுகள்…
பாகம் 21 | பாகம் 20 | பாகம் 19 | பாகம் 18 | பாகம் 17 | பாகம்16 | பாகம்15 | பாகம்14 |
பாகம்13 | பாகம்12 | பாகம்11 | பாகம்10 | பாகம்9 | |||
பாகம்8 | பாகம்7 | பாகம்6 | பாகம்5 | பாகம்4 | |||
பாகம்3 | பாகம்2 | பாகம்1 |
* பிரபாகரனுடன் என்ன காரணுத்துக்காக அய்யர் முரன்பட்டாரோ அதே காரணத்தைக் கொண்ட உமா மகேஸ்வரனுடன் இணைகிறார். இது முரனாக உள்ளது. அடுத்த அத்தியாயங்களில் சில வேளை உமாமகேஸ்வரனுடனும் இவர் முரண்பட்டு மீண்டும் தனியாக இயங்கலாம்.
*பிரபாகரன் எல்லோரையும் கொலை செய்து சர்வாதிகாரமாக இயங்கினால், ஏன் இவர்கள் பிரபாகரனை கொலை செய்து விடுதலையைப் பெற்றுத்தர முடியவில்லை…!!
மொத்தத்தில பிரபா மீது சுந்தரத்துக்கு இருந்தது தனி மனித பகை. ஐயரே வயதில் மூத்த நீர் இந்த பிரச்சனையை தீர்க்காமல் சுந்தரத்துடன் சென்று கடைசியில் உமாவை இணைத்து ஒட்டுமொத்த விடுதலை வேட்கை கொண்ட வாலிபர்களை பலி கொடுத்தது தான் மிச்சம்.நீரே சொல்லும் அன்றையா காலப்பகுதியில் நீங்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இராணுவ வழியில் வென்றிருக்க முடியாதா? உங்கள் பிரிவு தான் சிங்களவனுக்கு சாதுரியமாக போனது காட்டி கொடுப்புக்களும் ஆரம்பமானது. கொள்கையில் பற்று கொண்டவன் எவன் கீழும் போராடுவான்.
போராட்டத்தில் பிரபா,உமா போன்ற தலைமை ஆசை கொண்ட பேய்களை அன்றைய நிலையில் அடையாளம் கண்டு,அதனால் இப்படியான பேரழிவுகள் வரும் என்று ஐயர் என்ன கனவா கண்டிருப்பார்,தமிழரின் சுதந்திரத்துக்கு என்ன வழியில் போராடுவது என்பதில் மாறுபாடுகள் வந்தபோது பிரிந்தார்கள்,அதனால் உட்கொலைகள் ஏற்படவில்லை,கட்டுக்கடங்காத போராளிகளின் அதிகரிப்பாலும் அதிலிருந்த விசுவாசிகளாலுமே உட்படுகொலைகள் நடாத்தப்பட்டன.புலிகளின் உமாவை கொல்லும் நோக்கமே இதற்கு பிளாட்டில் உட்கொலைகளுக்கு காரணமானது,மற்ற இயக்கமாகவோ,அரச உளவாளிகளாகவோ தமிழரை பிளாட்டினர் சந்தேகிக்கவில்லை.இப்பொழுதே போராட்டத்தைப்பற்றி விளக்கமில்லாமல் அமெரிக்க வரும் ,பிரித்தானியா உதவு என எவற்றுக்குஎதிராக புலிகள் போராட்டம் ஆரம்பித்ததோ அவரிடமே உதவி கேட்டு இடதுசாரித்தன்மையையே இழந்துபோய் நிற்கும் எம்மின அறிவிலிகளும் போராளிகள் கூட அரசியல்வாதிகள் போல மாறுவார்கள் என ஐயர்தான் அறிந்து பிரபாவின் தலைமையின் கீழ் ஆயுதபோராட்டம் நடத்தியிருந்தால் வென்றிருக்கலாம் என உலக அறிவில்லாமல் புலம்புபவர்களும் இருக்கையில் அன்று ஆரம்பகட்டத்தில் எதுவுமற்ற நிலையில் போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கம் மட்டும் கொண்ட ஐயர் நண்பர்களாக நம்பிய தமிழர்கள் கொலைஞர்கள் என்று எண்ணியிருக்க முடியும்,இன்று போல துரோகிகளை கொள்ளுதல் என்று நினைத்தது உண்மையில் போட்டியாளராக கருதக்கூடியவர்களை அழிப்பது என்பதை பல கொலைகளின் பின்னே புரிந்திருப்பார் இப்பொழுதும் புரியாமல் கேள்வி கேட்பவர்களே!!
http://maruaaivu.wordpress.com/2010/08/04/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e2%80%93-08/
சரவணன்..ஜ்யர் அன்று எமது தேசியத்தலைவர் மேதகு.பிரபாகரனிடமிருந்து பிரிந்தது, தமிழ்மக்களின் தேசிய நலத்திற்காகவா , இல்லை சுய நலத்திற்காகவா என்று கேட்டால்,நான் அடித்துச்சொல்வேன், அவெர் சுய நலத்திற்காகத்தான் எண்டு. ஜ்யர் பொது நலத்திற்காகத்தான் பிரிந்தார் எண்டால் , ஒன்றில் உமாமகேஸ்வரனுடன் கடைசிவரை இருந்திருப்பார். இல்லை எண்டால் உமாமகேஸ்வரரைப் போலவாவது ஒரு அமைப்புத்தொடங்கி கடைசிவரைப் போராடியாவது வீரமரணம் அடைந்திருப்பார். ஜ்யர், வரலாறு எழுதுறேன் என்று, கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியப் பாக்கிறார்.
மொத்தத்தில் சுந்தரம் மீது பிரபாவிற்கு பகையிருந்தது 02.01.1982 இல் அப்பகை நரித்தனமாக தீர்க்கபட்டது. அதற்கு பழி வாங்க இறை , உமையை கொன்றது அதை விட கேவலம்.
ஐயர் எழுதுங்கோ எழுதுங்கோ எல்லாம் எழுதுங்கோ.
அப்பா நிங்கள் சொல்றீங்கள் சுந்தரம் தங்களால் உருவாக்கபட்ட தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில உமாமகேசுவரனும் சந்ததியாரும் ஒரே நேரத்தில இணைந்து உள்ளார்கள்.
//உமாமகேஸ்வரனுக்கும் எமது கருத்தோடு உடன்பாடு இருப்பதாகவும் அவர் எம்மோடு இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்தாகவும் சுந்தரம் சில நாட்களில் எங்களுக்குத் தெரிவிக்கிறார்//
//பல இழப்புகள் தியாகங்களுக்கு மத்தியில் உருவான எமது உறுப்பினர்களின் ஒன்றிணைவைப் பாதுகாக்கும் நோக்கோடு உமாமகேஸ்வரனின் வருகையை அதிகமாக விரும்பாத நான் உட்பட நம்மில் பலர் இறுதியில் அவரை ஏற்றுக்கொள்கிறோம்//
//இதே காலப்பகுதியில் உமாமகேஸ்வரனின் இணைவைத் தொடர்ந்து சந்ததியாரும் எம்மோடு இணைந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார்//
இயக்கங்களிண்டை ஆரம்பங்கள், வளர்சிகள் தெரியாத இப்பத்தைய வாலுகள் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் எதோ உமாமகேசுவரனோட தனிப்பட்ட சொத்து எண்டெல்லோ கதைக்கினம். அதோட இந்த உமாமகேசுவரன் தானே சந்ததியாரையும் போட்டது. அதையும் கொஞ்சம் விலாவாரியா எழுதுங்கோ. சுந்தரம் இருந்திருந்தாலும் சுந்தரத்தையும் இந்தக் கூட்டம் போட்டிருக்காது என்று எப்படி ஏற்ப்பது.
//சுந்தரம், உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றோர் எமது குழுவின் மீது அதித செல்வாக்குச் செலுத்துவதாகவும் தவறான வழியில் மறுபடி செல்வதாகவும் பலரால் உணரப்படுகின்றது.//
//மத்திய குழு தெரிவான பின்னர் நடைபெற்ற விவாதங்களில் இராணுவத் தாக்குதல்களைத் நிகழ்த்த வேண்டும் என்ற கருத்தை உமாமகேஸ்வரன், சுந்தரம், சந்ததியார் ஆகியோர் முன்வைக்கின்றனர். நானும் சாந்தனும் முதலில் வெகுஜன அமைப்புக்களை உருவாக்கி அதன் பலத்தில் இராணுவத் தாக்குதல்களைத் திட்டமிடுவோம் என்ற கருத்தை முன்வைக்கிறோம்//
இப்ப எல்லாமே தவறாகவே பொய் விட்டது. இதில வேறை இப்பத்தைய புலோட்காரர் எண்டு சொல்றவை தாங்கள் எதோ வானத்தில இருந்து குதித்த அப்பாவிகள் மாதிரியில்லோ புலியை வசை பாடினம்.
இவையின்டை கிளிநொச்சி வங்கியில அடிச்ச நகையெல்லாம் எங்கை? யார் யார் கையாடினதேண்டு அந்த காலத்தில விவசாயத்துக்கேண்டு வங்கியில அடைவு வச்ச கிளிநொச்சி வாழ் மக்களுக்கு கணக்கு சொல்லுவினமோ?
ஏன் தூள் வியாபாரி வாமதேவன் தலைமையில சிங்கள நாட்டுக்கு வங்கி கொள்ளைக்கு எண்டு போய் சிங்கள பெட்டையளுடன் குடிச்சு கும்மாளமிட்டு அடிச்சு கொண்டுபோன நகைகளுக்கு என்ன நடந்தது.
ஐயர் எழுதுங்கோ எழுதுங்கோ எல்லாம் எழுதுங்கோ.
உங்களை மாதிரி புளொட்காரரிண்டை தொடரும் திருகுதாளங்கள், மாலை தீவுக்கு ஏன் போனவை, தொடரும் உட்கொலைகள், ஆட்கடத்தல்கள், ஜனநாயக கட்சி எண்ட பெயரில நடக்கிற ஜனநாயக மறுப்புகள் எல்லாம் யாரவது எழுத மாட்டாங்களா?
ஐயர் எழுதுங்கோ எழுதுங்கோ எல்லாம் எழுதுங்கோ.
அய்யர் எழுதுவது இருக்கட்டும் நீர் ஏனய்யா புல்ம்பிறீர்.தமிழ்ப்ப்ட் வில்ல்ன் போலொரு கோவிந்தன் அய்யா நீர்.
போராட்டம் என்ற பெயரில் தமிழ் இனத்தை நாசமாக்கியத்தில் அரசியல் அரிச்சுவடி தெரியாத பள்ளிக்குட வாசல் மிதியாத பிரபாகரன் என்ற கழிசடை
மட்டும் காரணமல்ல படித்தவர் என்று கருதப்பட்ட உமாமகேஸ்வரனும் காரணம் தான் இவங்களை முதலே போட்டுத்தள்ளி இருந்தால் எல்லாம்
நல்லா நடந்திருக்கும். அதை விட்டிற்று இப்ப புலம்பி என்ன செய்வது. ஆச்சிராஜன் போன்றவர்கள் (உமாவை போட்டவர் ) அந்தக் காலத்தில உருவாகாமல்
விட்டதால் வந்த வினை. இவங்கள் சிங்களவனை அளித்ததை விட தமிழர்களை தான் அதிகமாய் அளித்தவர்கள். சொந்த இயக்கத்தை அளித்தவர் உமா
சொந்த இனத்தயே அளித்தவர் பிரபா. பிரபாவை விட உமா கொஞ்சம் பறுவாயில்ல.
தமிழ் எழுதுவதைப் பார்த்தாலே தெரியுது படித்துக் கிழிததவர் என்று.
ஆச்சிராஜன் அப்ப இருக்கவில்லையே என்று கவலைப்படும் பண்டிதரே நீங்கள் அப்போது இந்த உலகத்திலே இல்லையா?
போட்டுத் தள்ளவேண்டும் என்று ஆதாங்கப்படும் அரசியல் ஆசானே ஏன் பிரபாகரன் போட்டுத்தள்ளினது பிழையாகத் தெரியுது?
தமிழரைக் கொன்று குவித்தது சிங்கள வெறியரே ஒழிய வேறு யாருமில்லை பாமரனே!
ஓமோம், நீர் யாழ்பல்கலைக்கழகத்தில் 1 வருடமும், கண்டி பேராதனைப்பல்கலைக்கழகத்தில் 1 வருடமும் , மிச்ச இரண்டு வருடங்களில் ஒன்றை தமிழ் நாடு ” அண்ணா ” பல்கலைக்கழகத்திலும், இறுதியாண்டை லண்டன்” ஒக்ஸ்பேர்ட்” பல்கலைக்கழகத்திலும் படிச்சு கிழிச்சனீர். அதுதான் பள்ளிக்கூட வாசலே மிதியாத தமிழ்மக்களின் தேசியத்தலைவர் மேதகு.பிரபாகரன் வீரமரணம் அடைந்துவிட்டார் அல்லோ…இனி நீர் ஆற அமர இருந்து தமிழ் மக்களை வழிநடத்தும். ” ஆலை இல்லாத ஊரில, இலுப்பைப் பூ சக்கரையாம் “:
நாம் தமிழர்கள்!
நாம் யாராவது எழுதும்போதோ அல்லது பேசும்போது,
அதை முழுமையாக கேட்பதும் இல்லை, வாசிப்பதும்
இல்லை, ஆனால் முந்திரிக்கொட்டைமாதிரி முந்திரிவினம்
கருத்து சொல்ல, தனக்குத்தான் எல்லாம் தெரியும்,
தான் சொல்லுறதுதான் சரி, மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது,
தெரிந்தாலும் சொல்லக்கூடாது.
இப்படித்தான் ஒரு முந்திரிக்கொட்டை
30 வருடமா சொன்னது, இப்ப நாங்கள்
அதை முள்ளிவாய்க்காலுக்குள் தேடுகிறோம்.
ஐயர் எழுதுகிறதை எழுதட்டும், எழுதிமுடிந்தபின்
சரியா? அல்லது பிழையா என்று பார்ப்போம்
கோவிந்தன்_ உமக்கு ஒரு கோவிந்தா கோவிந்தா,,,,,,,……
ஐயர் யார், எந்த அமைப்பில் இருந்தார் இப்போது ஏன் எழுதத் தொடங்கினார் என்று மண்டையைப்போட்டுக் குழம்பியவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும், இவர் அலாவுதீன் விளக்கென்று.
ஒரு தலைமையின்கீழ் ஒற்றுமையாக இயங்க முடியாதவர்கள், காலம் வரும்வரை பொறுத்திருந்து தகுதியிருந்தால் தலைவனாக முடியாதவர்கள் பலர் தலைவனாகவர வெளிக்கிட்டத்தால்தான் தமிழருக்கு இந்தநிலை.
எழுதிமுடியும்வரை பொறுத்திருந்து முடிந்தபின் புத்தகமாக வரப்போகும் இவரின் கதைக்கு என்ன நீங்கள் முன்னுரையா எழுதப்போகிறீர்கள்?
சொல்பவர் சொன்னால் கேட்டு கொண்டு பதுங்கி இருந்த நீர் என்ன கேணப்பயலா? நெஞ்சை நிமித்தி நின்று போராட தெரியாத நீர் புலம் பெயர்ந்து வந்து குடும்பம் குட்டி எண்டு சொகுசாக இருந்து கொண்டு இதுவும் கதைப்பீர் இன்னமும் கதியளைப்பீர்!!! அது சரி ஊருக்கு போயி டக்லஸ் அண்ணையிடம் ஏதாவது டீலீங்கோ???
எமது போராட்டத்தின் ஆரமபமே பிழையான வழியில் போய் விட்டது.சில வேளை 83
கலவரம் வந்திருக்காவிட்டால் ஒரு மக்களுக்கான போராட்டம் வர சந்தர்ப்பம் இருந்திருக்கும்.புலிக்ளும் தங்களுக்குள் அடிபட்டு ஒரு சிலரே தப்பியும் இருந்திருப்பார்கள்.இந்தியாவிற்கு இந்த கும்ம்பலெல்லாம் அள்ளுப் பட்டு ரோ வின் கையில் போராட்டம் போயிருக்க மாட்டாது.பிரபாகரனை இப்படியே விட்டால் முழுப் போராட்டமும் என்றோ ஒருநாள் நாறிவிடும் என இவர்களுக்கு ஏன் தெரியாமல் போனது.
தலைவர்கள் அனைவரும் தமது பாதுகாப்பிற்காக நடக்கும் கொலைகள் என்று கண்டும் காணாமல் விட்டுவிட்டார்கள்.கொலை செய்தால் கூட பரவாயில்லை இவர்கள் செய்த சித்திர வதைகள் இருக்கின்றதே உலகில் எங்கும் இல்லாததது. ஈனப் பிறவிகள் எல்லாம் தொலைந்து விட்டதுகள் .ஆனால் இப்ப இருப்பதுகளும் அவற்றை இன்னமும் நியாயப் படுத்திக் கொண்டிருப்பதாஇ
பார்த்தால் எமது இனத்திலே ஏதோ பிழை இருக்கு போலிருக்கு.
ரதன், சரியாக சொன்னீர்கள். தமிழன் பல ஆயிரம் வருடம் முன்னே கப்பல் ஒட்டி இருந்தால், நாம் ஈன்று உலக ஒழுங்கை சீர் செய்து இருப்போம். ஆனால் இன்றும் தமிழ் நாட்டிலேயும் சரி ஈழத்திலேயும் சரி தமிழன் மூன்றாம் தர குடிகள் தான். இன்று தமிழ் இனம் என்ன நிலையில் இருக்கின்றது என்பது தான் இனத்தின் வளர்ச்சியின் அளவுகோல். பழம் பெருமை பேசியே பலர் இன்று தம்மையும் மற்றவர்கழையும் மூடர் ஆக்குகிறார்கள்.
தமிழ் கலாச்சாராம் என்பது பல பெருமைகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் காலப் போக்கில் ஏதோ காரணங்களால் இனம் என்பதை விடுத்து சுயம் என்பதை முன்னிலைப் படுத்தியே சமுதாயத்தில் தனி மனித வளர்ச்சி இருந்தமையால் இன்று எமக்கு இந்த நிலை. ஆயுதப் போராட்டமும் பலருக்கு புலம் பெயர் தேசங்களில் வாழ்வாதாரமாக மாறியதால் இன்று நம் இன வளர்ச்சி பல நூறு வருடங்கள் பின் தங்கி போய் விட்டது. எதிலும் சுயலாபம் எங்கும் சுயம்! தமிழ் தேசிய வாதம் என்பதும் எம்மை மனிதம் என்ற பரந்த சிந்தனையை விடுத்து குறுகிய இனம் என்ற வட்டத்துக்குள் கட்டுப் போட்டு விட்டது.
ஆகவே தமிழன் என்று சொல்வதில் தலை நிமிர ஒன்றும் இல்லை. பல காரியங்கள் நாம் முன்னே பரந்து கிடக்கின்றன நாகரீகப்பட்ட இனமாக முன்னேற
ஐயா இப்போது என்ன சொல்ல வருகிறார்…
அவரே இதை நிதனமாகக் கிரகித்துச் சொல்லட்டும்…!
ஐயா
உங்களின் இத் தொடரின் 5தாவது பந்தியுடன் வாசிப்பதை உடனடியாக -தற்பொழுது நிறுத்தினேன். ( இதை சகிக்க முடியவில்லை!) .
அடித்துத்துச் சொல்கிறேன்…
1979…
(பி.ரீ.ஏ) இன்பம், செல்வத்தின் படுகொலை நடந்த காலம்…
ஐயா காலத்தை எட்டி நடக்க முற்படுகிறாரா????
”இன்று கூட்டம் கூட்டமாக மக்களைக் கொலைசெய்யும் நிலைக்கு வளர்ச்சியடைந்திருக்கும் இலங்கை நவ பாசிசப் பேரினவாதம் அன்று தனது வேர்களை தமிழ் மக்கள் மீது ஆழப்படரவிட்டுக்கொண்டிருந்தது. 79ம் ஆண்டு காலப்பகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டம் இலங்கை அரசால் மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது.”
(பயங்கரவாதச் தடைச் சட்டம்: அதைக் குறிக்கி வெளியிட்ட ”படம்” – act. Gi f*gif) இதை இக்கட்டுரையில் கிளிக் செய்து உண்மையை அறியவும்)
”பிரபாகரன் சார்ந்தவர்கள் எமக்கு எதிரான பிரச்சாரங்களை உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொள்கின்றனர். மறுபுறத்தில் சுந்தரம் போன்றோரும் தமது பிரச்சாரங்களை பிரபாகன் மீதும் அவர் சார்ந்த குழுவினரின் மீதும் விமர்சனங்களாகப் பிரச்சாரம் செய்கின்றனர். பிரபாகரனிற்கோ சுந்தரம் போன்றோருக்கோ இவ்விணைவிலும் மத்திய குழுவின் இருப்பிலும் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. அவர்கள் இணைவை விரும்பவும் இல்லை.
பல சந்தர்ப்பங்களில் சுந்தரத்தினதும் பிரபாகரன் குழுவினரதும் விமர்சனங்கள் தனிமனித வசைபாடல்களாகவும் காணப்பட்டன.
சுந்தரம் சார்ந்தோர் தவறுகள் அனைத்திற்கும் பிரபாகரன் தான் காரணம் என்ற வகையில் அவரின் இயல்புகள், நடைமுறைகள் குறித்த வசைபாடல்களையும், மறு புறத்தில் பிரபாகரன் சார்ந்தோர் நான் உட்பட சுந்தரம் போன்றோருக்கு எதிரன பிரச்சாரங்களை உறுப்பினர்கள் மத்தியிலும் ஆதரவாளர்கள் மத்தியிலும் மேற்கொண்டனர்.
பிரபாகரன், ராகவன், தனி, அன்டன், போன்றோர் முன்பிருந்தவாறே பிரிந்து செல்கின்றனர். நானும் சார்ந்தனும் எமது குழுவோடு இணைந்து கொள்கிறோம். பிரிவு நிரந்தரமாக, தனித்தனியாகச் செயற்பட ஆரம்பிக்கிறோம்.
இப்போதும் நாம் பிரிந்து செல்லும் வேளையில் குமரப்பா, மாத்தையா போன்றோர் மிகவும் மன வேதனையடைகின்றனர். மாத்தையா என்னிடம் மறுபடி வந்து நானும் பிரபாகரனும் தனது இரு கண்கள் போல தான் எங்கு செல்வது என்ற மனக் குழப்பத்தில் இருப்பதாகச் சொல்கிறார். குமரப்பா அரசியலிலிருந்து விலகிச் சென்றுவிடுகிறார்.
நாம் தனியாகச் செயற்பட ஆரம்பித்ததுமே புதியபாதை இதழின் வெளியீட்டுக்கான செயற்பாடுகளையும் ஆரம்பித்துவிட்டோம். சுந்தரம் மிகத் தீவிரமாகச் செயற்பட ஆரம்பிக்கிறார்.”
முதலில் புலிகளுக்குள் 79 திலா அல்லது 80 துகளிலா பிரிவுகள் ஆரம்பமானது?
இதை முதலில் வாசகருக்கு தெளிவாக விளக்கவும்…
(அதைத் தொடர்ந்து பதில் எழுத நினைக்கும்) நான்..
அதற்கு முதல் ஐயாவுக்கு இதுவரை பதிவான வரலாறுகளின் ‘ கொசுறுகளில் ‘ இருந்து…
· 1979 07 14 யாழ்ப்பாணத்திலுள்ள இன்பத்தின் சிறிய வீட்டுக்குள் காக்கி பொலீஸ்படை பி.பகல் 1.00 மணியளவில் இன்பத்தையும், அவரது மைத்துனன் செல்வம் என்று அழைக்கப்படும் வெல்வரத்தினத்தையும், இதே போல வேறு வீடுகளில் இருந்து மேலும் நால்வரையும் – மொத்தமாக இன்று 06 பேரை பிரீஏ தடைச்சட்டத்தின் கீழ் ஆயுதப்பொலீசார் கைது செய்துள்ளனர்.
· 1979 07 15 நேற்றுக் கைதான ஆறுபேரில் இன்பமும், செல்வமும் இன்று காலை யாழ் கடற்கரை ஓரமாக (அல்லைப்பிட்டி) பிணமாகக மீட்கப்பட்டனர். ஏனைய நால்வரில் ஒருவரான (இந்திரராசா) யாழ்க் கோட்டை கைதிகள் வைத்தியசாலையில் சில நாட்களின் பின்னர் இறந்ததாகவும் அங்கு வேலைசெய்தசிலர் கூறினர். ஏனைய மூவரான ( பரமேஸ்வரன், இராஸ்வரன், நவாலி பாலேந்திரன்) இன்றுவரை கிடைக்கவில்லை! (31 வருடமாக)
· 1979 08 14 வவுனியா மாவட்டத்திலுள்ள நெடுங்கேணியில் அமைந்த – டொலர் பாம்- பொறுப்பாளரும் தொண்டரும், கெனற்பாம் உதவித்த் தொண்டராகவும் கடமையாற்றிய பரராஜசேகரம் ( பேபி) இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இவ் பேபிக்கு உதவியாக இருந்த ரி. உதயகுமாரனும், அவரது மணைவி (ஆசிரியர்) உம் , டொலர் பாமில் குடியேறிய அகதியான
– ராஜீயும் – இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்!.
1979 08 15 -கெனற்- பாமுக்குப் பொறுப்பாக இருந்த தொண்டர் தயாபரசிங்கம் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
இக்கைதை அடுத்து, -கெனற்றில்- குடியிருந்த கந்தசாமி என்பவரும் கைது செய்யப்பட்டார்….
கொசுறுக்கு வெயியே…
ஐயா நேர்மையாகப் பதில் தந்தால் அது மனிதத்துக்குரியது..
-மிகவும் மனவருத்தத்துடன்-
ரூபன்
130810
எங்கட ஊர் அரசடிப் பிள்ளையார் கோவில்ல நான் சின்னனா இருக்கேக்க அப்பாவோட 15 பேர் வரைக்கு பின்னேரத்தில வந்து ஊர் வம்பளப்பினம். அப்ப கோள்மூட்டி பொன்னுத்துரையும் வருவார். அவருக்கு கோவன்னா பொன்னுத்துரை தான் ஆகு பெயர். கோவன்னா போனா வுக்கு யார் என்ன சொன்னாலும் குறுக்கால வந்து வம்பளந்து…… சில வேளை அப்பப்பாவை வீடு வரைக்கும் கத்திக்கொண்டே கொண்டந்து விட்டுட்டுப் போவார். அப்பபா கொமுனிஸ்ட். எதும் பேசார். எனக்கு மட்டும் சொல்லுவார். கோவன்னாக்கு ஒரு விதமான மன்நோய், யார் கதைச்சாலும் எதிராக ஏதாவது பேசோணும் என்டு.. நீங்கள் எல்லாம் பெருசா வரேக்கே உலகம் வளந்துடும் இப்படியான ஆக்கள் இராயினம் எண்டு.. அப்பப்பா மேல போட்டார். .. ஆன அப்பப்பா .. எங்கட போராட்டம் எத்தின கோவன்னாக்கள உருவாக்கியிருக்கு தெரியுமே?
வருத்தத்தோட
பேத்தி
விஜிதா
பேத்தி
விஜிதாவுக்கு,
நீங்கள் உங்கள் ‘அப்பாவின் பிள்ளையாக’ இருக்கிறீர்கள்.
நல்லது…
”சில வேளை அப்பப்பாவை வீடு வரைக்கும் கத்திக்கொண்டே கொண்டந்து விட்டுட்டுப் போவார். அப்பபா கொமுனிஸ்ட். எதும் பேசார். எனக்கு மட்டும் சொல்லுவார். கோவன்னாக்கு ஒரு விதமான மன்நோய், யார் கதைச்சாலும் எதிராக ஏதாவது பேசோணும் என்டு”
‘பேசாத – கொமுனிஸ்ட்- டுக்கள் உங்கள் பரம்பரை…
உங்கள் பேரனின் தத்துவம்:- ”நீங்கள் எல்லாம் பெருசா வரேக்கே உலகம் வளந்துடும் இப்படியான ஆக்கள் இராயினம் எண்டு”
‘பேசாத – கொமுனிஸ்ட்- டுக்களுக்கு’ எப்பொழுதும் இதுதான் -எதிர்கால -உலகம்…
பேத்தி சொல்லுறா….
”அப்பப்பா .. எங்கட போராட்டம் எத்தின கோவன்னாக்கள உருவாக்கியிருக்கு தெரியுமே?
வருத்தத்தோட
பேத்தி
விஜிதா”
” எங்கட போராட்டம்”
வாழ்க உங்கள் பரம்பரை…
ரூபன்
140810
நீங்கள் தொடர்ந்து வாசிக்காமல் இருப்பதே உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது ஜயருக்கும் நல்லது
அடுத்து…
‘ரதனுக்கு…’
”நீங்கள் தொடர்ந்து வாசிக்காமல் இருப்பதே உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது ஜயருக்கும் நல்லது”
ரதன் இதனூடக எதைச் சொல்ல வருகிரீர்கள்??
சந்ததியார் இளைஞர் பேரவைக்கு எதிராகப் போராடியவர்….
”தொடர்ந்து சந்ததியாரும் எம்மோடு இணைந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார். உமாமகேஸ்வரனுடனூடான தொடர்பின் வழியாக எம்மோடு இணைவதற்கு முன்வருகிறார். இறைகுமாரன் உமைகுமாரன் ஆகியோருடன் சந்ததியார் தனிக் குழுவாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களின் குழுவில் இணைந்திருந்தவாறே அவர்களுக்குத் தெரியாமல் சந்ததியார் எ
ம்மோடும் இணைந்து தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கிறார்.
‘ரதன் ஓர் உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன்…
சந்ததியார் இளைஞர் பேரவைக்கு எதிராக 75 இன் பின்னர் போராடியவர்….
‘பாருங்கள் ஐயாவின் பதிவை’—-
”இப்போது புளட் அமைப்பிற்கு மத்திய குழு ஒன்றைத் தெரிவுசெய்து எமது செயற்பாடுகளை வேகப்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறோம்.
அந்த மத்திய குழுவிற்கு சாந்தன், உமாமகேஸ்வரன், சுந்தரம், நான், சந்ததியார் ஆகியோர் தெரிவுசெய்யப்படுகிறோம்”
மேலே ஐயர் சொன்னபடி.. ”இறைகுமாரன் உமைகுமாரன் ஆகியோருடன் சந்ததியார் தனிக் குழுவாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களின் குழுவில் இணைந்திருந்தவாறே அவர்களுக்குத் தெரியாமல் சந்ததியார் எ
ம்மோடும் இணைந்து தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கிறார்”
அடடா வரலாறுகள் ஏறுமாறாக இருக்கிறதே!
1980 ஆம் ஆண்டு மே மாதம் வரை..
ஏப்பிரல்’ 29 வரை…
உமைகுமரன், இறைகுமாரன் கூட்டனியின் ‘சுதந்திரன்’ 20 ஆவது இதழுடனும், கோவைமகேசன் .21 வது இதளுடனும்
முரண்பட்டனர்….
ஆனால் ஐயரின் வரலாறு…
”
எம்மோடு இணைவதற்கு முன்வருகிறார். இறைகுமாரன் உமைகுமாரன் ஆகியோருடன் சந்ததியார் தனிக் குழுவாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களின் குழுவில் இணைந்திருந்தவாறே அவர்களுக்குத் தெரியாமல் சந்ததியார் எம்மோடும் இணைந்து தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கிறார்.
இப்போது புளட் அமைப்பிற்கு மத்திய குழு ஒன்றைத் தெரிவுசெய்து எமது செயற்பாடுகளை வேகப்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறோம்.
அந்த மத்திய குழுவிற்கு சாந்தன், உமாமகேஸ்வரன், சுந்தரம், நான், சந்ததியார் ஆகியோர் தெரிவுசெய்யப்படுகிறோம்.”
ரதனுக்கு இந்த முரண்பாடுகள் தேவையில்லை!
இது ரதன் போன்றவருக்கு….
கூட்டணிக்குள் முரண்பாடுகள் தோன்றிய பின்னரே,
புலிகளுக்குள் உடைவு (அரசியல் முரண்பாடு தோன்றியது)..
ஐயரின் வரலாறு இதை மறுதலித்தால்…
யாதார்த்த வரலாறு தொடரும் (மக்களின் வரலாறு…)
ரூபன்
140810
ஜயரின் பதிவை ஒன்றும் நான் வேதவாக்காக எடுக்கவில்லை .நடந்து முடிந்தவற்றைஇனி அக்குவேறு ஆணிவேறாக ஆராய வேண்டிய தேவையும் எனக்கில்லை.ஓரளுவு எனக்கு தெரிந்த அறிவுக்கு பலரிடம் கேட்டு தெரிந்த சம்பவங்களுடனும் ஜயரின் பதிவு ஒத்து போகின்றது.இனி அதில் முட்டையில் மயிர் பிடுங்க எனக்கு விருப்பமில்லை.முடிந்தால் நீங்களுமொரு பதிவு எழுதுங்கோ வாசிக்கின்றோம்,அதைவிட்டு 3ம் பதிவில் அப்படியிருந்தது 6 பதிவில் இப்படியிருந்தது என்றால் அதை திரும்ப போய் வாசிக்க நேரமும் இல்லை,தேவையும் இல்லை
நேரமும் தேவைஞம் உங்கள் சுகம்! !!
நல்லது, இது உங்களின் சமாளிப்பு….
ரூபன்
150810
/…இறைகுமாரன் உமைகுமாரன் ஆகியோருடன் சந்ததியார் தனிக் குழுவாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்./
இது ஒரு தவறான தகவல்.இறைகுமாரன் இளைஞர் பேரவை(விடுதலை அணி),உமைகுமாரன்(விடுதலைப்புலி),அப்போது சந்ததியார் ஒரு அங்கிடுதெத்தி.
அய்யர் தெரியாத விடையத்தில் அகலக்கால் வைக்கிறார் என்பதற்கு இது இஒரு உதாரணம்.
“வங்கம் தந்த பாடம்” என்ற அரிய நூலின் ஆக்கவியளாளரில் சந்ததியாரும் ஒருவர்.நீங்கள் கூறித்திரிந்த தீர்க்கதரிசிக்கும் இந்த எதிர்வுநோக்கிய சிந்தனையாளனுக்கும் ரொம்ப தூரம்.
தராக்கியை வேண்டுமென்றால் அங்கிடு தத்தியென அழையுங்கள்.
இலங்கை இராணுவத்தைபோல ஐயரும் அகல கால் வைக்கிறாரோ. பாவம் ஐயர் உள்ளே விட்டு அடித்து விடாதீர்கள்.
ஐயரிடம் இதுவரை கேட்தப்ட்ட கேள்விகளுக்குப் பதில் கட்டுரை தொகுத்துப் புத்தகமாக வரும்போது கொடுக்கப்படுமா?
பிரபாகரனும் அவரின் ஆட்தளும் என்ன செயதார்களென்று அறிய ஐயர் அப்போதே ஒரு உளவுப்பிரிவை வைத்திருந்தாரோ?
தமிழனுக்குள்ள தாழ்வுமனப்பான்மை படித்தவன் சொன்னால் அது எப்பவும் சரியாகத்தான் இருக்கும் என்று நினைப்பதுதான். பலதும் படித்தவன் என்ன ஆவான் என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை. படிப்பு என்பதே தெரிந்தவன் தெரியாதவனுக்கு ஒன்றை சொல்லிக்கொடுப்பதுதான். இதை ஒருவன் தானாகவும் படித்து அறிந்துகொள்ளலாம், இப்படிப் படித்தவனுக்கு பட்டம் இல்லாததால் அவன் மோடன் அல்ல.
அயிரே!
ஆறு மத்திய குழு உறுப்பினர்களில் நீங்களும்,பிரபாகரனும் கதாநாயகர்கள்.மற்ற நால்வரும் மொக்கைகள்.
முப்பது வருசத்திற்கும் பின்னும்
உங்களுக்கு
பட்டறிவும் இல்லை,
படிப்பறிவும் இல்லை,
அட பகுத்தறிவு கூடவா இல்லை!
அவன் தொலைந்தான்,நீங்கள் ஏனய்யா கிடந்து இழுக்கிறியள்!
Dear friends
The war in every country, comes unseen and when it goes off only we can see but mostly the people who were in begining of the war will not have any kind of ideas about the war and also at the same time, most of them will not be survived to witness the whole drama. The most of you who are sending these comments also were not involved in the begining part of this war. So, in the situations, especially in those days. our heros, whoever it is or may be it was Prbhakaran, or Umamaheswaran, or Sri Sabharatnam or Balakumar, or Pathmanapa or Panagoa maheswaran or let it be anyone, but you have to appreciate these people came forward to do something for our future generations. In the begining, they all came for the same goal.And later on,they went on their different parth according to their knowledge, idea, experience and plans. Today,the war has taken changed the country in entirely a different directions. Non of our heros surrendered to the Sinhalese leaders but fought to death. At the same ,now the war has changed the way of thinking of the Sinhalese peopel and their leaders as well.Ok you can write your comments as you like. There should be some limit in our comments. Now what are we doing ? are we going to keep on writing about the same things again and again or are we having any plan to rebuild our society? Let ‘s talk about it and then we can do something for our people. It is ok if Iyar keeps on writing his stories because we also can learn something form the past incidents.:- continued
வேலவன், தயவுடன் தொடராதீர்கள். தொடருவதென்றால் ஒன்றில் பெரிய ஆங்கில எழுத்துகளைப் பாவியுங்கள் அல்லது தமிழில் எழுதுங்கள். தமிழ் இணயத்தில் தமிழில் எழுத முயற்சியுங்கள்.
Dear Soorya
I really respect you for your humble request. Unless someone or anyone wants me to write,you will not find my english comments any more in http://www.inioru.com. I always respect everyone to show that I know what is respect.
Thank you
அன்பின் வேலவன்,
உங்கள் பெரும்தன்மைக்கு நான் தலைவணங்குகின்றேன். உங்களை எழுதவேண்ட்டாமென்று நான் சொல்லவில்லை. அப்படி சொல்வதற்கு நான் யார்? சிறிய எழுத்து வாசிக்கக் கடினமாக இருக்கிறது. அதனால் சொன்னேன். அத்துடன் தமிழில் எழுத முயற்சிக்கச் சொன்னேன். அவ்வளவுதான்.
உமாமகேஸ்வரனும் பிரபாகரன் போலவே தூய இராணுவக் கண்ணோட்டத்தை உடைய ஒரு போராளியாகவே வாழ்ந்த காலங்களை நாம்மில் பலர் அறிந்திருந்தனர்….
உண்மை, ஆனால் அந்த உமாமகேஸ்வரனின் போராட்ட பாதைக்கும் பிற்காலத்தில் என்ன நடந்தது?
IN FUTURE WE CAN FORM ORGNS ,SELECT EXE.COMMITTEE,DECIDE ALL DECISIONS BASED ON DEMOCRATIC SECRET VOTING! IF 51% SAY ANYTHING, REST 49% SHD AGREE AND ACCEPT THEN WORK TOWARDS GOAL,UNITY & PROGRESS! THIS IS NOT PERFECT METHOD! BUT WE CAN USE IT UNLESS WE FIND BETTER METHODS! SECRET OPINION POLLS AMONG PUBLIC MAY HELP TO TAKE BETTER/CORRECT DECISIONS! SO NO ONNE BLAME A SINGLE PERSON!
IYER! WHAT ROLE DR.RAJASUNDARAM,GANDHIYAM PLAYED IN UNITING ALL……???!!!
உமா மகேஸ்வரனுக்கு இராணுவ கண்ணோட்டமிருந்தது ஆனால் அதை செயற்படுத்தும் திறன் இருக்கவில்லை. ஆதனால்தான் சுந்தரம் குறிவைக்கப்பட்டார். ஏன் உமா போடாமல் சுந்தரத்தை போட்டீர்கள் என்று மூத்த உறுப்பினர் வினாவியபோது அவரின்(பிரபா)பதில் உமா தானாகவே புளட்டை அழித்துவிடுவார் ஆனால் சுந்தரம் நாம் எல்லோரையும் அழித்து விடுவார் (வாய்வழிவந்த தகவல்)
அப்ப பிரபாகரன் சுந்தரத்தை அழித்திரா விட்டால், சுந்தரம் ஒட்டுமொத்த புலிகளையும் அழித்திருப்பார்.
மாமணி வாய் வழி வந்த தகவல்
If Sundaram had done that, Mullivaikal massacare could have been avoided!!!
புளட்டின் ஆரம்பகால உறுப்பினர் என்று ஐயர் குற்ப்பிடும் நால்வரில் சாந்தன் யார் என்று யாராவது அறிய தர முடியுமா?
பாணும் சம்போலும் பிரெக்பாஷ்டா எடுத்து,கொலும்பில வாழ்ந்து,இங்கீலிசு பேசக்கூடிய,வெள்ளையும் சொள்ளையுமான உடல்வாகு கொண்ட,உமா’வால் உள்வாங்கப்பட்ட மனிதன்.
எதையும் வெளிப்படையாகப் பேசத் தெரியாத,அமைதியான சுபாவம் கொண்டவர்.ஆளுமையாக கருத்து கொண்டிராதவர்.இப்போது என்ன செய்கிறார்,எங்கிருக்கிறார் என்பது தெரியாது.
கூபா'(cuba)வில் நடந்த இளைஞர் மாநாட்டிற்காக,விடுதலைப்புலிகளால் ஆங்கிலத்தில் முதன் முதலாக வெளியிட்ட பிரசுரத்துடன்,உமாவுடன் பயணம் செய்தவர்.(இந்தப் பிரசுரத்தில் உமா தன்னை ‘CHAIRMAN’ ஆக வரித்துக் கொண்டார்.)
DEAR SOORIA ! NOT THAT I DIDN’T TRY TO MAKE MY COMMENTS IN TAMIL BUT IT TAKES A LONGER TIME FOR ME TO KNOW THE TECHINICS OF TAMIL TYPINGS. THAT IS WHY , I AM TYPING IN ENGLISH. ANYWAY. THANK YOU FOR YOU UNDERSTANDING MY PART.
THANK YOU
VELAVAN
இரவின் மடியில் சாய்ந்து கொண்டு
விடியலுக்காக காத்திருப்பதை விட
இரவின் கைபிடித்து நடைப்பயணம்-செய்த்து பார்
விடியல் உனக்காக வரவேற்பு கம்பளம்
விரித்து காத்திருக்கும்.
உழைப்பெனும் உளி கொண்டு
செத்துக்கிப்பார்-உன் மனதை
உயிருள்ள சிற்பமாய் காச்சியிளிப்பாள்
உன் வெற்றி தேவதை
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் என
காலச்சக்கரத்தை வேடிக்கை பார்ப்பதை விட
காலச்சக்கரத்துடன் நீயும் சுழன்று பார்
வாய்ப்புகள் உன் வாசலில் வரிசையில்
நிற்க வாய்ப்பு கேட்கும்
கற்கள் கால்களை பதம் பார்த்தாலும்
நதிகள் தன் ஓட்டத்தை நிறுத்துவதில்லை
கடலில் கலக்கும் வரை
மனிதா
நீயும் கடிவாளாம் கட்டிய குதிரையாய்-ஓடிப்பார்
உன் இலச்சிய பாதையில்
உன் இலக்கு உன் கையில் ஜொலிக்கும்
நிலக்கரி பிரித்த வைரமாய்.
நாம் போகும் பாதை மனல் பாதையாக இருக்க வேண்டும் என்று அசை படலாம்,
ஆனால் ஒரு முல் கூட இருக்க கூடாது என்று அசை படுவது அசட் தனம்.
நல்ல் அனுபவம் கிடைக்கும் போது பரவசம் படனும்,
மோசமான அனுபவம் கிடைக்கும் போது பக்குவபடனும்.
தயவு செய்து ஒருக்கா கீற்று இணையதளத்திற்கு விசிட்பன்னி அங்கு முஸ்தீன் என்ற இலங்கையரின் நேர்காணல் இருக்கிறது படிங்கோ.
இந்த இனைய தளத்திலும் அதை பிரசுரித்தால் நன்றாக இருக்கும். பிரச்சிகனகளை அனுகும் விதம் வரலாரை அனுகும் விதம் பாருங்கோ அற்புதம்.
any one knows Satkuneswaran Kandiah also known as Valavan who was initially with PLOTE as a man in-charge for Mannar and later joined LTTE.
If so, please let me know.
thalaivaa nee marupadium vara vendum. ♥♥♥♥