பஞ்சாப் சீக்கிய பொற்கோவில் வளாகத்தில் சீக்கியர்கள் இரு பிரிவனர்கள் வாள் மற்றும், ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் 6 பேர் காயமுற்றனர். ஒப்பரேசன் புளூ ஸ்ரார் இராணுவ நடவடிக்கையில் நினைவு நாள் இன்று. பஞ்சாப் அமிர்தர்சரஸ் போற்கோவிலுக்குள் இந்திய இராணுவம் நுளைந்து அங்கு படுகொலைகளை நடத்திய 30 வது ஆண்டு நினைவு நாளானா இன்று அது தொடர்பான விவாதம் ஒன்றில் இரண்டு சீக்கியத் தரப்புக்களிடையே வன்முறை வெடித்தது.
பஞ்சாப் இன் முக்கிய குழுக்களில் ஒன்றான அகாலி தள் இன் தலைவர்களில் ஒருவரான சிம்ரஞ்சித் சிங் உரையாற்ற முற்பட்ட வேளையில் சிக்கல்கள் ஆரம்பமாகின.
இதில் புளுஸ்டார் ஒப்ரேஷன் தொடர்பாக ஐ.நா., குழு விசாரணை வேண்டும் என்று ஒரு தரப்பினர் குரல் எழுப்பினர். ஆனால் சிலருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை தாக்க முற்பட்டனர். தொடர்ந்து கையில் தயாராக வைத்திருந்த நீள வாள் மற்றும் பல அடி நீளம் கொண்ட ஈட்டி போன்றவற்றால் மாறி, மாறி தாக்கினர்.
This is very stupid.Some body doing violence by the name of god.No one god will accept any violence.If they do means they are doing against god.