அண்மையில் நண்பர்களுடன் விவாதித்த விடயங்களை எழுதும் போது நெதர்லாந்தில் புலிகளின் நிதி சேகரிப்பாளர்கள்; கைதான செய்தி வந்தடைந்தது. இந்த செய்தியுடன் தொடர்புபட்ட விடயங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மேற்கைரோப்பிய நாடுகளில் தமிழ்மக்கள் சம்மந்தப்பட்ட பொது நிறுவனங்களான தமிழ் பாடசாலைகள் கோவில்கள் அகதி நிறுவனங்கள் அகதிகளுக்கான வீடமைப்பு நிறுவனங்கள் போன்றவை புலிகளுக்கு பணம் காய்க்கும் மரங்களாகவும் பிரச்சாரத்திற்கு பயன்படும் இடங்களாகவும் உள்ளது. இவை எவ்வாறு அவர்களின் கைகளுக்கு சென்றது? இதை நாம் எவ்வாறு அனுமத்pத்தோம்.? நாம் சரியாக வியூகம் அமைக்கவில்லையா? அல்லது பேசுவதிலும் எழுதுவதிலும் மாத்திரம் காலத்தை கடத்தி விட்டோமா?
நாங்கள் புலிப்பினாமிகள் நடத்தும் பாடசாலைக்கு எமது பிள்ளைகளை அனுப்புவதில்லை. ஏனெனில் எமக்கு புலித் தமிழ் பிடிக்காது. (கணிசமான அளவு புலி எதிர்ப்பாளர்கள் ஆங்கிலத்திலேயே சிந்திப்பவர்கள். எனவே அவர்கள் தமிழைப் பற்றி பொருட்படுத்துவதில்லை.) கோவில்களுக்கு நாம் போவதில்லை. ஏனெனில் கடவுள் மீது நம்பிக்கையில்லை. ஏதாவது திருமணத்திற்காக சென்றாலும் வெளியில் இருந்து அரசியல் பேசுவதில் எமது கவனம் இருக்குமே அன்றி கோவில்களில் என்ன நடக்கிறது? நிர்வாக சபை யார்? அதற்கு ஏன் அடிபடுகிறார்கள் என சிந்திப்பது இல்லை. லண்டனில் 80 களின் இறுதிப்பகுதிகளில் புலிகள் தமிழ் அகதிகள் நடவடிக்கை குழுவில் இருந்த மாற்று அரசியல் கருத்து உடையோரை வெளியேற்றி அதனை கைப்பற்றியதை பலர் அறிந்திருக்க கூடும்.
அந்த நாட்களில் புலிகளின் அராஜகங்களிற்கு முகம் கொடுக்க முடியாது போனது என காரணம் கற்பித்தாலும் புலம் பெயர் தமிழர்கள் கண்மூடித்தனமான ஆதரவை புலிகளுக்கு வழங்கியமையாலும் எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதன் மறுபக்கத்தில் புலி எதிர்ப்பு என்பதற்கும் தீர்மானகரமான அரசியல் இருந்திருக்கவில்லை. அதன் உச்சபட்ச வர்க்க இணைவு என்பது பாசிச இலங்கை அரசோடு கைகோர்க்கும் அளவிற்குச் சென்றிருக்கிறது. புலம் பெயர் மக்கள் அல்லது போராட்ட அரசியல் தளத்தில் நேரடியான பங்களிப்பு இல்லாதிருந்த பொது மக்களுக்கு ஒரு இலகுவான சமன்பாடு இருந்தது. இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது அனைத்து ஒடுக்கு முறைகளையும் ஏவிவிட்டுள்ளது. அந்த ஒடுக்கு முறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடுபவர்கள் புலிகள். ஆக புலிகளுக்கு எதிரானவர்கள் அரச ஆதரவாளர்கள். இது தான் அந்த எளிய சமன்பாடு. இதற்கு மேல் இந்தக் கருத்து சரியானதா தவறானதா, போராட்டம் வெற்றியை நோக்கி நகர்த்தப்ப்டுகிறதா, அதன் விளைவு என்ன, தமிழ்ப் பேசும் மக்களுக்கான அரசியல் ஒன்று முன்வைக்கப்படுகிறதா என்றெல்லாம், யாரும் சிந்திததில்லை. வெற்று உணர்ச்சிகளுக்கு உட்பட்ட சார்பு நிலை தான் அரசியலானது.
இந்தச் சமன்பாட்டை உறுதிப்படுத்திய ஒரு பகுதிப் புலியெதிர்ப்புக் குழுவினர் அரசோடும் அதன் தொங்குதசைகளான துணைக் குழுக்களோடும் கைகோர்த்துக் கொண்டனர். இதற்கெதிரான போராட்டம் புலிகளிடமிருந்து போராடுவதற்கான ஜனநாயகம் கோரியவர்களாலேயெ புலியெதிர்ப்பு குழுக்களுக்கு எதிராக நடத்தப்பட்டது.
இதற்கு வெளியிலிருந்த சாதாரண மக்கள் இவைபற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. இலகுவான சமன்பாட்டில் மூழ்கிப் போயிருந்தனர்.
ஆனால் இன்று நிலமைகளில் சற்று மாற்றம்; ஏற்பட்டுள்ளது. புலிகளின் ஆதரவாளர்களில் பத்து வீதத்திற்கும் குறைவானவர்களே இந்த பினாமிளாவார். மேலும் சிறிய பகுதியினர் படித்து விட்டு நல்ல பதவிகளில் இருந்து கொண்டு சமூக அந்தஸ்திற்காக புலிகளை ஆதரிக்கின்றனர். சாதாரண கூலி வேலைகளில் இருக்கும் இவர்கள் தமது தகுதிக்கு மீறி வழங்கிய உதவிகளை இன்று புலிப்பினாமிகளே அனுபவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டுள்ளனர்.
புலிகள் கைகோர்த்திருந்த ஆதரவு சக்திகளே அவர்களையும் போராட்டத்தையும் காட்டிக்கொடுத்திருக்கிறது. மக்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அண்மையில் தமிழ் திரைப்பட நடிகையை ஒரு புலிப்பினாமி திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு முன்பே ஒரு கோடி இந்திய ரூபாயில் BMW காரை பரிசளித்துள்ளார். இப்பணம் எமது மக்களின் பணம். பேக்கரிகளிலும் உணவு விடுதிகளிலும் திறந்த சந்தைகளில் மூட்டை தூக்கியும் தமிழ் கடைகளிலும் சுப்பமாக்கெற்றுகளிலும் நாய்படாத பாடு பட்டு உழைத்த பணம். இந்த நபர் மாத்திரமல்ல பல புலி பினாமிகள் தமிழ் மக்களின் பணத்தை தென்னிந்திய திரைப்பட நடிகைகளிடம் தொலைக்கிறார்கள். (எமது பெண்ணியவாதிகள் உண்மையை உடைத்தற்ககாக மன்னித்து விடுங்கள்) புலி ஆதரவாளருடன் பேசும் போது இந்த விடயம் பேச்சில் வந்தது. ‘சிங்களவர் அடித்தால் கோபம் வருகிறது. லாட்ஜ் இல் இருந்து பிடித்துப் போய் பணம் பறித்தால் (90 களில்) கோபம் வருகிறது ஆனால் உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றிய புலிப் பினாமிகளிடத்தில் ஏன் உங்களுக்கு கோபம் வருவதில்லை என கேட்ட போதுஅவர் ஏற்றுக் கொண்டார்.
; புலிகளுக்கு தொடர்ந்து; பணம் கொடுத்து வந்த நெதர்லாந்தில் இருக்கும் எனது நெருங்கிய உறவினர் புலிகள் இரண்டரை வருடங்களின் பின் தருவதாக கூறி பற்றுச் சீட்டு கொடுத்து வாங்கிய பணத்தை திரும்ப கேட்டுள்ளார். (;முன்பு தொடர்ச்சியாக கொடுத்த பணத்தை அல்ல. திருப்பித் தருவதாக சொன்னபணத்தையே )மேலும் பணம் கொடுத்த போதே இப்பணத்தை எவ்வாறு தருவீர்கள் என கேட்ட போது அதற்கு அவர்கள் தாங்கள் அப்பணத்தை எதிலோ முதலீடு செய்வதாகவும் அதன் வருமானத்தில் இருந்து குலுக்கல் முறையில் பகுதி பகுதியாக திருப்பித் தருவதாக கூறியிருந்தனர். அவர் புலி நிதியாளரிடம் எனக்கு தெரியும் நீர் அந்தப் பணத்தை எடுத்திருக்க மாட்டீர் எனவும் அந்த பணத்தை எங்கு அனுப்பினீர் எனவும் கேட்டுள்ளார். புpன்பு பணம் போன இடம் அறியமுடியாது என்ற நிலையில் புலிகள் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டனர் என கடிதம் தருமாறு கோரினார். அதற்கும் புலிகள் மறுத்தபோது பணத்தை தருமாறு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இச்சமயத்தில் காகம் இருக்க பனம் பழம் விழுந்தது போல நிதிசேகரிப்பாளர்களின் கைது நடந்தது. புலிகள் எனது உறவினரையும் அவரது நண்பரையும் துரோகிகள் என அழைத்தபோது ‘இப்போது துரோகிகள் அதிகரித்து விட்டார்கள.;; நீங்கள்(புலிகள்) சிறிய பகுதியாகி விட்டீர்கள’; என அவர்களுக்கு பதிலளித்துள்ளார். அத்துடன் இவ் வழக்கு வெற்றி பெறுவதை புலிகளிடம் பணம் கொடுத்த ஏராளமானோர் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
கைதானவர்களில் பலர் குடும்பம் குழந்தைகள் என உள்ளவர்கள் எனவும் சிலர் எவ்வித சுயநலமும் இன்றி வேலை செய்தவர்கள் எனவும் கூறப்பட்டாலும் நெதர்லாந்தில் சிறைச்சாலைகள் ஓரளவு வசதியானது. அவர்களின் குடும்பங்களை நெதர்லாந்து அரசு ஒரு குறைவும் இன்றி கவனித்துக் கொள்ளும் என்பதையும் இலங்கையில் ஆயிரக்கணக்கான மனித நேயம் மிக்க போராளிகள் கொல்லப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டும் உள்ளனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே நண்பர்களே தொடர்ந்தும் புலி பினாமிகள் எம்மக்களை குறி வைத்து பணம் சேர்ப்பதை தடுக்க நீங்கள் உங்கள் உறவுகளை தெளிவுபடுத்துங்கள். புலி பினாமிகளை தூக்கி எறியச் சொல்லுங்கள்.
கொஞ்சம் மூடிக்கிட்டு இரு எவன் சாப்பிட்டாலும் அது தமிழன்
சாப்பிட்டு போகட்டும் தமிழன் பேரை கண்ட எல்லாம்
தமிழன் பணத்தை தின்னுது புதுசா பேச வந்து**
புலம் பெயர் நாடிலிருந்து தான் நீங்கள் மக்கள் பற்றிச் சிந்திக வேண்டுமா? ஏன் இலங்கைக்குப் போகக் கூடாது?
ஏன் போக வேன்டும்?
இது புலம் பெயர்ந்த தமிழரை மொட்டையடிப்பதைப் பற்றிய விடயமல்லவா!
அம்பலப் படுத்துகிறவர்கள் இலங்கைக்குப் போனால் புலி பினாமிகளுக்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
xxx புலிகளும் பிரபாகரனும் களத்தில் நின்று போராடினார்கள். நீங்கள் இங்கே இருந்து கொண்டு யாவாரம் தானே செய்கிறீஙள்? முடிந்தல் களத்தில் நில்லுங்கள். புலத்து ஒட்டுக் குழுக்களாக மாறாதீர.
உங்களுக்கு மனம் குளிர்விக்க முடியாததற்கு வருந்துகிறேன். நான் இலங்கையிலே தான் இருக்கிறேன்.
உங்களோடு ஒத்து ஊதாத எல்லருக்கும் ஒட்டுக்குழு என்று பட்டம் சூட்டி ஓரங்கட்டிய காலம் மலையேறிவிட்டது.
இப்போது போரடிய புலிகள் இல்லை அவர்களின் பேராலும் ஈழத் தமிழர் பேராலும் அள்ளிய பணத்துக்குக் கணக்குக் கேட்க வேண்டியவர்கள் கேட்கிறார்கள்.
ஏன் பயந்து நடுங்குகிறீர்கள்?
“முடிந்தல் களத்தில் நில்லுங்கள்.” என்கிறீர்களே! எந்தக் களத்தில்? முப்பது வருட டொலர், பவுன், யூரோ அறுவடைகளை எல்லாம் சூடடித்து அள்ளிச் சுருட்டுகிற கொள்ளைக் கூட்டம் நிற்கிற களத்திலா?
நீங்கள் எந்தக் களத்தில்நிற்கிறீர்கள்?
நீங்கள் எங்கே யாருக்கு எப்போது கொடுத்தீர்கள்? அப்படி கொடுத்திருந்தாலும் இப்பதான் வாங்கி இருப்பிங்களே???!!!
மணியன், தேவன்
நீங்கள் இருவரும் நல்ல கருத்துச்சொன்னீகள். பாண்டியன் தம்பிராசா போன்றோர் ஆங்கிலத்தில் சிந்தித்து, கதைத்து, அழுது ஆங்கிலதில் ***** அருகதை இருக்கு தமிழைப் பற்றி தமிழரைப் பற்றிக்கதைப்பதற்கு. உவங்களை தமிழிலேயே திட்டக்கூடாது. தமிழின் தரம் குறைந்து விடும்.
pandyan, you are right!
you are the 1st one to bring this issue for the 1st time in the public ground. please go on!
இங்கு என்னை திட்டி எழுதியுள்ள நண்பர்களுக்கு!
ஒட்டுக்குழு, துரோகி, சிங்களவனுக்கு பிறந்தது எலும்புத் துண்டு நக்கி……..போன்ற பட்டங்களை உடைய நான் ஒரு போதும் அநியாயங்களுக்கு துணை போனதில்லை. இந்த அநியாயங்களை இலங்கை அரசோ அல்லது புலிகளோ அல்லது மாற்று இயக்கங்களோ புரிந்திருப்பினும் அதை ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. இதை எழுதும் நீங்கள் தான் ஒன்றில் புலியையோ அல்லது அரசையோ ஆதரித்திருப்பீர்கள். எனக்கு இந்த பட்டங்களை வழங்குவதற்கு உங்களுக்கு எந்தவித அருகதையும் இல்லை என்பது தெரிந்தும் கூட உங்களுக்கு சில விளக்கங்களை தருவதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஏதேனும் நல்லது நடந்திட உங்களையும் சேர்த்து செல்லவே விரும்புகிறேன். உங்களின் கருத்துக்களின்படி பார்த்தால் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய விடயங்கள் இருப்பது போல உள்ளது. தயவு செய்து மறைந்திருந்து (புலிகளைப் போல்) கல்லெறியாமல் உங்கள் தொடர்புகளை நேரடியாக ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மாற்றுக்கருத்து எனச் சொல்லும்,ஒரு சாராரின் கருத்துக்களை நீக்குகிறீர்கள் அல்லது நீங்கள் என்ன புகழ் விரும்பியா? உங்களை புகழ்வோரின் கருத்துக்களை அளிக்காமல் மற்றவர்களின் கருத்துக்களை அளிக்கிறிர்கள்? (நாங்கள் மறைந்திருந்து கல் எறிவதாகச் சொல்லும் உங்களுக்கு என்ன தகவல்கள் வேண்டுமென்று பட்டியல் படுத்துங்கள்…புலிகள் எப்போது மறைந்திருந்து தாக்குதல்களை நிகழ்த்தினர்? முதுகில் குத்துபவனுக்கு பதிலடியும் அவ்வாறே.)
“சிங்களவனுக்கு பிறந்தது” என்று எழுதுகிறவர் மிகக் கேவலமான புத்தியுள்ளவராகவே இருக்க இயலும்.
விடுதலைப் புலிப் பிரபலங்கள் சிலரின் மனைவியரும் தாய்மாரும் சிங்களவர்கள் தான்.
தமிழனுக்குப் பிறந்ததெல்லாம் யோக்கியமான பிறவியா?
பிறப்பால் மனிதரை நிந்திக்கிற இவர்களுக்கெல்லாம் எப்போது தான் அறிவு வருமோ?
தைரியமாக எழுதுங்கள். மிரட்டலுக்க்ப் பணியாதீர்கள்.
மிரட்டலுக்கு பனியாதீர்கள் – ஒட்டுக்குழுக்களின் மிரட்டலுக்கு மட்டும் பணியுங்கள். தலைவர் இல்லை என்ட நினைப்பில் வாய் சவடால் காரருக்கு எல்லாம் நல்ல காலமையோய்
யாருக்கு யர்ர் தலைவர்? தமிழனாகப் பிற்ந்த் ஒவ்வொருவனிற்கும்
தானே தான் தலைவன். புலத்தில் வாழும் சிலர் புலிக்கொடியையும்
பிரபாகரனின் படத்தையும் கண்டுவிட்டு
அத்ன் பின் செல்வது, இடையன் பின் செல்லும் மந்தைகள் போன்றதேயாகும்.
துரை
இடையனுக்கு பின் மந்தைகள் செல்லவில்லை;மந்தைகளை வழிநடத்தியே இடையன் செல்வான். புலிகளை தப்புசொல்லி தங்களை வழிநடத்த முனைபவர்களுக்கு சாதாரண விடயங்களையும் மாற்றிச் சொல்ல பழகிக்கொண்டார்களா? இல்லை இவர்கள் வேற்றுக்கிரகத்தில் தமிழ் படித்தவர்களா?
இடையன் விரும்பிய இடத்திற்கே மந்தைகளைக் கொண்டு செல்வான். அவ்ன் முன்னும் போவான் பக்கத்திலும் போவான் பின்னாலும் போவான். கருத்து விளக்கமே
முக்கியம். துரை
மந்தைகள் இருந்தால் இடயன் தேவைதானே
ராஜேஸ்
தமிழ் மக்கள் மந்தைகள் என்பது தான் உங்கள் எண்ணமா?
தயவு செய்து உங்களுக்காகப் பேசுங்கள்.
இடையன்களாக வந்தவர்கள் இப்போது மடையன்களாகி விட்டார்களே!
இங்குதான் தமிழ் முக்கியப்படுகின்றது, தமிழில் உவமானம்,உவமேயம்…என்றெல்லாம் உண்டு,வழிநடத்த ஒருவர் என்பதையிட்டு நான் அவ்வாறு சொன்னேன். மடையன்களாகவில்லை நீங்கள் அப்படி ஆக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறீர்கள்,பலனழிக்காதென்று தெரிந்தும்.
“மந்தைகள் இருந்தால் இடையன் தேவைதானே” என்பது தான் தமிழ்ச் சனத்தின்நிலை பற்றிய உங்கள் உவமை என்றால் ஒன்று சொல்லுகிறேன்.
தமிழர் எவ் வகையிலும் மந்தைக் கூட்டமல்ல. வழிநடத்த ‘ஒருவர்’ ஏன் தேவை?
ஒரு “மேய்ப்பர்” எல்லாரையும் வற்புறுத்தி முள்ளிவாய்க்காலில் ஓநாய்களிடம் கொன்டு போய்ச் சேர்த்தது போதாதா?
உவமானங்கள் பொருத்தமாகவும் இருக்க வேன்டும், ராஜேஸ்.
சிலர் இடையர்களாக கால்ம்முழுவதும் வாழ்வதற்கு
தமிழர் மந்தைகளாக்வே
இருக்கவேண்டுமென் விரும்புகின்றார்கள்.
இதனாலேயெ புத்தி சொல்பவர்களையெல்லாம்
மாற்ருக்கருத்துக்காரர், துரோகிகள், என்று போட்டுத்தள்ளியவர்கள். இனியாவது இந்த்த் தவறினை செய்யாதிருந்தால் தமிழினம்
தானாகவெ தம்துருமையை வென்றெடுக்கும்.
துரை
தேவன்
உங்களுடைய வாய்ச் சவடாலும் உள்ளபடியே உள்ளது.
பிறகென்ன கவலை?
யாரும் பொய் சொன்னால் அம்பலப் படுட்ர்க்துங்கள். திரிப்புக்களை அவிழ்த்துப் போடுங்கள். மக்கள் உண்மைகளை அறியட்டுமே!
ஒட்டுக் குழுக்களை காட்டி ஏன் மற்றவர்களின் வாயை அடைக்கப் பார்க்கிறீர்கள்?
Hello Mr. Pandian
Now it is too late for everything. I don’t know it was by force or by accident or automatically our people were trained and got used to language of weapons and the news of violence, torture and destructions of culture, religions and languages. The respect is the most expensive commodity in the market of world. First of all we all have to learn to repect each other. The time is very powerful and whent the time comes back the people will get ready themself to rectify what is not good and what is not need in their life.Sorry for I am typing my comments in English because I don’t know how to type in Tamil. I know three type of Tamil. one is my village tamil.It has tough and ugly style. The second one is Colombo Tamil . It hides our own personality and to make other Colombo tamils to think thatt I am also educated and decent fellow otherwise they won’t talk to us. The third tamil is now in Canada. The half english and tamil with our children and younger generations, no tamil with no-tamil speaking people and quarter english mixed tamil to our age people of fifies, and complete pure tamils to the ninties especially in their funeral home. Pandian brother don’t think that people do not know what you have written. As I told you the time is the main issue.The first female greatest philosoper “AVVAIYAR” said those who don’t give charity to those who are needy and poor,will be robbed by bad guys. In 1983 there was a saint named MOHIDEEN BABA, was living on the 2nd cross st in Jaffna, said the place going to be for the war and the blood and human beings will not able to live in peace.So all written game had been taken place and the time has come again for other change but it will not be done in over night. We have to unite and there are so many ways to unite and only the way we can solve the problem. It is not the way pointing our other people mistakes. A strong love can destroy the worst enemy. Whe Hitler was in Germany, there was Gandhi in India. Hitler has no statue in his own land today but there are statues for Gandhi all over the world. So, my brother don’t hate each other and think that fighting with Pandian is going to bring good name for you. Just listen to what he writes if you don’t like send your comment in a decent ways. That is it. I never ever found fault in any one life. Thank you.
வணக்கம் பாண்டியன்.!
இந்திரன் ஒரு பினாமி என குறிப்பிடும் செய்தியை நாங்களும் செவிவழி செய்தியாகவே அறிகிறோம். ஆனால் செவிவழி செய்திகள் ஒரு போதும் பலனை தராது. தாங்களும் இதை ஒரு செவிவழி செய்தி போன்ற விதத்திலேயே எழுதியிருக்கிறீர்கள். இதை விரிவாக ஆதாரங்களுடன் விளக்க முடியுமா?. இந்திரன் எந்த நாட்டில் புலி பினாமியாக இருந்தார்?, எப்போதிலிருந்து அவ்வாறாக செயற்பட்டார்?. அவரை முன்னர் வழிநடத்தியவர்கள் யாவர் ? சுருக்கமாக சொன்னால் இந்திரனை பற்றி அக்குவேறு ஆணி வேறாக ஆராய்ந்து பதிவிடமுடியுமா? அப்படி பதிவிடும் பட்சத்தில் இது போன்ற இச்செய்திகள் இன்னும் பலரை சென்றடையும். முடிந்தால் வெளிநாடுகளில் இன்னும் யார் யார் பினாமிகளாக இருக்கிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் பட்டியலிட்டு வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள். எம்மை நாமே கீறிப்பார்க்க வேண்டிய நிலையில் மேலும் ஏமாற்றப்படாமல் இருக்க இது உதவலாம்.
மேற்குலக ஆக்கிரமிப்பாளர்களின் கப்பலில் ஏறி தப்பக் காத்திருந்த புலித் தலைமை ஒட்டுக் குழு இல்லையா? பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்ற பேச்சையே எடுக்காமல் தமிழ் மக்களின் பணத்தை மட்டும் கறப்பதற்கு அணிதிரண்டு நாடு கடந்த அரசு வட்டுக் கோட்டை என கிளம்பியுள்ளவர்களை விட ஒரு துரோகக் கும்பல் தமிழ் மக்களுக்கு உண்டா
?
புலிகள் எப்போது மறைந்திருந்து தாக்குதல்களை நிகழ்த்தினர்? முதுகில் குத்துபவனுக்கு பதிலடியும் அவ்வாறே”
சபாலிங்கம் படுகொலை அமிர்தலிங்கம் படு கொலை வாமதேவன் படுகொலை……எல்லாம் என்ன?முதுகில் குத்துபவனுக்கு பதிலடியும் அவ்வாறே” கடைசியில் நீங்கள் குத்தியது தமிழ்மக்களின் முதுகில் அல்லவா?
அவமானம்!
ரோட்டு ஓரம் அடித்துகொண்டு…….
திரு பிரகாஷ் அவர்கள் பாண்டியன் கட்டுரையை வடிவாக வாசிக்காமல் எதோ இந்திரனை பற்றி எழுதிஉள்ளார். பாண்டியன் இந்திரனை பற்றி ஒன்றும் எழுதவில்லையே.
பனைமரத்தை பற்றி எழுதச்சொன்னால் பன்னைமரத்தில் கட்டிஉள்ள மாட்டை பற்றிய எழுதுவதா. அதில் இந்திரன் என்பவர் பற்றி எதுவுமே வரவில்லை. இந்திரன்
நெதர்லாந்தில் உள்ளார். அவரை புலிபினமிகள் துரோகி என்கிறார்கள். அவருடன் தொடர்புகொள்ள விரும்பினால் சொல்லவும் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கிழ்காணும்
முகவரிக்கு அனுப்பவும் (icadhollan@yahoo.com) அவரிடம் கொடுக்கின்றேன். அவரே தொடர்புகொள்வர். நன்றி
//திரு பிரகாஷ் அவர்கள் பாண்டியன் கட்டுரையை வடிவாக வாசிக்காமல் எதோ இந்திரனை பற்றி எழுதிஉள்ளார். பாண்டியன் இந்திரனை பற்றி ஒன்றும் எழுதவில்லையே.//.
//அண்மையில் தமிழ் திரைப்பட நடிகையை ஒரு புலிப்பினாமி திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு முன்பே ஒரு கோடி இந்திய ரூபாயில் BMW காரை பரிசளித்துள்ளார்.//
பாண்டியன் குறிப்பிடுவது மேற்படி நபர்.
திரு.மோகன்,
நான் கீழே தந்துள்ள சுட்டியில் உள்ள செய்தியில் உள்ளதை போல ஏராளம் செய்திகள் ரம்பா இந்திரன் திருமண செய்திகள் இணையத்தில கிடைக்கின்றன. அதில் இந்திரன் பற்றியும் செய்திகள் உள்ளன. பாண்டியன் குறிப்பிடுவது போல் பெறுமதியான காரை திருமணத்திற்கு முன் பரிசளித்து நடிகையை திருமணம் செய்து கொண்ட நபர் இவர்தான். இணையத்தில் கிடைக்கும் செய்திகள் எல்லாம் நம்பகத்தன்மை உடையவை அல்ல. சினிமா கிசுகிசு செய்திகள் போல எந்த செய்தியையும் குறிப்பிடாமல் ஆதாரங்களை முன்வைக்குமாறு வினவியது தவறா? http://www.alaikal.com/news/p=35830, http://www.lankafocus.com/cinema/?p=582.
http://www.lankafocus.com/cinema/?p=582
http://www.alaikal.com/news/?p=35830
இந்திரனைப் பற்றி இங்கு பேசி கட்டுரையின் பெறுமதியை குறைத்து விடாதீர்கள். இனியொரு இணையம் ரம்பா இந்திரன் படத்தை அனாவசியமாக பிரசுரித்துள்ளது. இப்படி ஆதாரமில்லாமல் பிரசுரித்து தமிழரங்கம் போன்ற இணையத் தளங்களின் தரத்திற்கு இனியொரு தாழ்த்திக் கொண்டுள்ளது. பாண்டியன் சொல்வது மக்கள் பணம் மக்களுக்கே சேரவேண்டும், என்ற ஆவல் தானே ஒழிய வேறு ஏதும் இல்லை. தங்கள் தங்கள் வாழும் நாடுகளில் என்னும் தகவல்கள் தெரிந்தால் மற்றவர்கள் இங்கு சொல்லலாமே. இருக்கும் காசை அகதிகளுக்காவது பாவித்துக்கொள்வோம்.
முற்றாக உடன்படுகிறேன். இனியொரு இவ் விடயத்தில் கவனம் காட்டுவதுநல்லது.
இந்திரனிடம் இருக்கும் பணம் யாருடையது என்று கனடாவில் இருக்கும் எல்லோரும்க்கும் தெரியும். அவர் முன்வந்து இல்லை என்று மறுக்கட்டும் பார்க்கலாம்.
அவருக்காக மற்றவர்கள் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை
கட்டுரையின் பெறுமதியை குறைக்கும் நோக்கம் எதுவும் இல்லை நண்பரே. இது போன்ற பினாமிகளை ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டு காட்டுவதே சிறந்தது. அனாவசியமாக யாரையும் விமர்சிப்பது வீண்.
பாண்டியன் தம்பிராஜா!
All we can do being in europe is to recover the LTTE’s money contributed by all of us and send it to the sri tamil refugees. if pandiyan can organise an independent body for this purpose, we can be with him. as he says in his article. we have to do something, not just writing and reading .
Thanks
புலிகளின் பணம் எங்கு போனதோ யார் யார் என்ன முதலீடுகளெல்லாம் செய்துள்ளனரோ
தெரியாது. ஆனால் பண்ம வாங்கியவர்கள் அயலவராகவே வாழ்கின்றன்ர். சிலர்
சொந்த வீட்டுடனும்,, கடைகள் ,சிறு வியாபாரங்கழும் செய்கின்றன்ர். இவர்களில் சிலர் கையெழுத்திட்டே
பண்ம் புலிக்காக பெற்றுள்ளனர். இந்த்த் தொகை உலகளாவியளவில் கணக்கிட முடியாது.
இத்ற்கான் ஓர் அமைப்பொன்று பாதிக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களால் சட்ட ஆலோசகர்களிந்தும்
அந்தந்த நாட்டு பொலிசாரின் ஒத்துழைப்புடன் ஆரம்பித்தல் வேண்டும்,
தவ்றின் முன்பு தலைவர் சொல்லி விட்டவர் இப்ப உருத்திரக்குமார் சொல்லியனுப்பியுள்ளாரெனக் கூறிக்கோண்டு வீட்டு வாசலில் வருவார்கள். துரை
வானதி,
புலம்பெயர்ந்த தமிழர் ஈழத்தில் உள்ளோருக்காக வழங்கியதை தமக்குள் போட்டியிடும் கொள்ளைக் கூட்டங்களும் சில்லரைத் திருடர்களும் அள்ளிக் கோண்டு போவது எல்லாருடையதும் அலுவல்.
நாமேன் ஒருவர் தலையில் இப் பொறுப்பைச் சுமத்த வேண்டும்?
பணம் கொடுத்த ஒவ்வொருவருக்கும் தட்டிக்கேட்க உரிமை இல்லையா?
வாங்கிப் போனவர்களிடம் அறிந்த விடயங்களைச் சொல்லிக் கணக்கைக் கேளுங்கள்.
மெல்ல மெல்ல எல்லாரும் பேசத் தொடங்கினால் தான் ஏதாவது நடக்கும்.
//அண்மையில் தமிழ் திரைப்பட நடிகையை ஒரு புலிப்பினாமி திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு முன்பே ஒரு கோடி இந்திய ரூபாயில் BMW காரை பரிசளித்துள்ளார். // மக்களிடம் பெறப்பட்ட பணம் மக்கள் முன்னேற்றத்துக்கே பயன்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை அதே நேரம் அதிகமாக பணம் வைத்திருக்கும் புலம்பெயர் தமிழர்கள் எல்லாம் புலிப்பினாமியாக முடியாது. சொந்த வர்த்தகம் சுயமுன்னேற்றம் இதனூடாக சுரண்டல் போன்றவற்றால் பணம் சேர்த்து ஆடம்பர வாழ்வை வாழ்பவர்களை புலிப்பினாமியாக இனம் காண முடியாது. ஒருவரிடம் பணம் இருக்கின்றது ஒருவர் நடிகையை திருமணம் செய்தார் ஒரு கோடிக்கு மோதிரம் போட்டார் கார் வாங்கினார் போன்ற வாயை ஓ வெண்டு பிளக்கும் செய்திகள் அடிப்படையில் அவர் புலிப்பினாமியாக முடியாது. ஒரு தனிமனிதனின் நடவடிக்கைகள் கற்பனை அடிப்படையிலும் ஊகத்திலும் விமர்சனமாக முடியாது வலுவான ஆதரங்களும் அவசியம் என்பதை இனியொரு நிர்வாகம் கவனத்தில் எடுக்கவேண்டும்.
அந்தத் தனி மனிதரிடம் அத்தனை பணமேது? அதையாவது விசாரிப்போமா?
எங்கள் பணம்தான் சந்தேகம் வேண்டாம்
திரு Thurai பணம் கொடுத்தவர்கள் முன்வருவர்கலேயானால் சட்ட ஆலோசகர்,பொலிசார் , போன்ற விடயங்களை தாரளமாக நெதர்லாந்தில் நான் செய்து கொடுப்பேன்,தொடர்புகளுக்கு
icadholland@yahoo.com நன்றி
இப்பதிவில் வெளியான சில பின்னூட்டங்கள் தொழில்நுட்பப் பிரச்சனை காரணமாக அழிந்து போய்விட்டது என்பதை வருத்ததுடன் தெரிவிக்கிறோம்.
ஏன் இப்படி மாறி போணிர்கள், மனது கணக்கிறது. தூற்றியது போதும்.நிறுத்துங்கள்.
This is probably the most atrocious thing one can say about an individual. Indiran graduated from University of Waterloo and started the company “Magic woods” in his basement. He grew with shear hard work and made it big. He has been featured in several magazines in Canada as a young entrepreneur. Some of these people that want to attack LTTE just looks for anything that suits their needs without verifying anything. I am sure the Inioru group is the same ilk. If you are jealous of someone’s achievements, now you can discredit them by attributing their success to LTTE’s wealth. This is a real low for our community. This is why Tamils who have been successful in many ways just like to stay out of the community and its activities.
மிகவும் சரியாகச் சொன்னீர்கள். இந்திரன் ஒரு கனடாவில் வாழும் தமிழ் நபர். அவர் ஏதோ நெதர்லாந்தில் வாழ்வதாகக் சிலர் குறிப்பிட்டுள்ளனர். அது பிழையான தகவல். அவர் ஒன்றும் மக்கள் பணத்தை ரம்பாவுக்குக் கொண்டுபோய் கொடுக்கவில்லை. அது அவருடைய உழைப்பில் வந்த பணம். அதைக் கொடுப்பதோ விடுவதோ அவரது சொந்த விடயம். இந்தக் கட்டுரையின் ஆசிரியர் தன்னுடைய கற்பனையில் உதித்த ஒரு விடயத்தை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக அனைவரையும் விமர்சிப்பதைத் தவிர்த்திருக்கலாம். அல்லது இந்திரன் – ரம்பா விடயத்தை ஆதாரமாகக் கட்டுரையில் இணைக்காமல் இருந்திருக்கலாம்.
இப்படியொரு ஆதாரமில்லாத செய்தியைத் தனது கட்டுரையில் சேர்த்தது மட்டுமன்றி படத்தையும் தேவையில்லாமல் இணைத்து சொல்ல வந்த விடயத்தில் நம்பிக்கையில்லாமல் செய்திருக்கிறார் திரு. பாண்டியன் தம்பிராஜா.
இனி வருங்காலத்தில் இவரின் ஆக்கங்களை சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டிய தேவையை இந்தத் தவறு சுட்டி நிற்கின்றது.
இந்தியா ஓரு புலியும் சில ஆடுகளும் வளர்த்தது, இலங்கைக்கு பூச்சாண்டி காட்டப்பார்த்தது. ஆடுகளுக்கும் புலிக்கும் ஒரே உணவையே இந்தியா ஊட்டப்பார்த்தது. ஆடுகள் எதுபோட்டாலும் உண்டு தள்ளின. புலி மட்டும் தனக்கு வேண்டின “தமிழீழம்” மட்டும்தான் உண்பேன். இல்லையேல் உயிரை விடவும் தயார் என்றது.(புலி பசித்தாலும் புல்லை உண்ணாது என்பர்) புல்லை உண்ணச்சொன்ன எசமானயே புலி அடிச்சது என்றார்கள்.(வளர்த்த கடா மார்பிலே பாய்ந்தது என்பார்கள்) எசமானை புலி அடிச்சுதா? அல்லது ஆடுகள் முட்டிக்கொண்டனவா? இது இன்னமும் யாருக்கும் புரியாத புதிர். புலிகளின் காலத்துக்கு முன் இலங்கையில் ஆண்டுக்குஆண்டு இனக்கலவரத்தில் ஆங்காங்கு பலர் இறந்தனர், சொத்துக்கள் அழிக்கப்பட்டன. புலிகளின் காலத்தில் காட்டிக்கொடுத்தோர் தண்டிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட முப்பது வருடங்களின் பின் ஒட்டுமொத்த தமிழினமே அழிக்கப்படுகிறது. இது இந்தியா தான் ஒரு வல்லரசு தான் விரும்பினால் எல்லா ஈழத்தமிளினத்தையும் இல்லாமல் செய்யமுடியும் என உலகிற்குநிரூபித்த சம்பவம்.
வளர்ந்த நாடுகளில் மக்களால் மக்களுக்காகவே தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் செய்த செய்து கொண்டிருக்கிற அட்டூழியங்களைவிடவா இவர்கள் செய்துவிட்டார்கள்?
தமிழீழ விடுதலைக்காக போராடிய புலிகளுக்கு பணம் கொடுத்து ஆதரவளித்தவர்கள் உண்டு. புலிகளின் பிரதிநிதிகளாக அவற்றைப்பெற்று உரிய இடத்தில் ஒப்படைத்தவர்களும் உண்டு. எந்த உதவியுமே செய்யாது புலிகளை வசைபாடுபவர்கள் உண்டு. புலிகளின் பிரதிநிதிகளாக நடித்து பணத்தை கொள்ளையிட்டு உல்லாசமாக வாழ்பவர்களும் உண்டு. மாவீரர், தற்கொடைஞர், நாட்டுப்பற்றாளர் இவர்களோடு எத்தர்கள், எட்டப்பர்கள், திருடர்கள், பினாமிகள் என்போரும் நிறைய உண்டு. இத்தனை குணங்களுடைய மக்கள் ஊடாகவே தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் நடைபெற்றதை பொய்யென்றுரைக்க முடியாது. ஏமாற்று வித்தையென்று கூறமுடியாது. பினாமிகள் புலிகளோடு இருந்தது, இருந்துவருவது உண்மை. அதனை யதார்த்தமாகவே கண்டுவருகிறோம். ஆனால் இங்கு புலிகள் அனைவரையுமே பினாமிகளாக்க முனையும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களையே காணமுடிகிறது. பினாமிகளை இனம்கண்டு ஆழிக்கவேண்டியது ஒவ்வொரு தமிழரதும் கடமை அதற்காக வீட்டிற்குள் புகுந்த பாம்பை விரட்ட வீட்டையே கொளுத்திவிடும் செயல்பாடு எங்களுக்கே கேடாகவிளையும் இதனை மிகவும் நிதானமாக, கவனமாக மேற்கொள்ளவேண்டும். புரட்சி வென்றால், வென்றவன் தேசத்தலைவன். தோற்றால் அவன் தேசத்துரோகி. இது விளைவைப் பொறுத்தது. வினையை பொறுத்ததல்ல. மிகப்பல நூற்றாண்டுகளின் பின்னர் தமிழனுக்கென்று ஒரு தலைவன் தமிழர் கைகளில் பூமாலையாக கிடைத்தான். பிய்த்தெறிந்துவிட்டோம்.
Mahendra, உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன்
சரியாக சொன்னீர்கள் மகேந்திரா. என்னசெய்வது இதுதான் எமது தலைவிதி.
புலிகளின் பெயரில் கொள்ளை அடிக்கும் இந்த பினாமிகளை இனம் காணும் அதேவேளை வெறும் விமர்சகர்களாக இருப்பது எவ்வித பயனையும் தராது. இந்த புலிஎதிர்ப்பு விமர்சகர்கள் கடந்த ஒரு வருடங்களில் என்ன செய்தனர் என்பதை தெளிவு படுத்தவேண்டும்
நாங்கள் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.
திருடர்கள் நழுவ வழி காட்டாதீர்கள்.
இந்த புலிஎதிர்ப்பு விமர்சகர்கள் கடந்த ஒரு வருடங்களில் என்ன செய்தனர் என்பதை தெளிவு படுத்தவேண்டும் ”
ஐயருடைய கட்டுரையை தொடர்ந்து பொறுமையாக படித்து வரவும். உங்களுக்கான பதில் கிடைக்கும்.
புலிஎதிர்ப்பாளர்களாக மாறிய தமிழர்கள் இன்று தமிழின எதிர்ப்பாளர்களாகவே மாறிவிட்டனர். இவர்களுடன் பினாமிகளும் என்ன செய்தனர், செய்துவருகின்றனர் என்பதை தெளிவுபடுத்த என்னிடமும் வலுவான சில ஆதாரங்களும் சாட்சியங்களும் இருக்கிறது. இருந்தும் இதனை வெளியிடுவதினால் பலன் எதுவும் ஏற்படப்போவதில்லை. முறைப்பாடுகளை விசாரித்து உண்மை பொய் அறிந்து குற்றவாளிகளைத் தண்டித்து நீதியை நிலைநாட்டக்கூடிய அதிகாரம் கொண்டவர்கள் அல்லது நிறுவனங்கள் தற்போது எங்களிடம் இல்லை.
இதுவரைகாலமும் ஈழத்தில் தமிழீழ அரசானது, நிழலரசாக இருந்தாலும் தவறுசெய்பவர்களை தட்டிக்கேட்டு, தண்டனையும் கொடுத்துவந்தது. அதன் பலத்தில் மக்கள் துரோகிகளுடன் வாதம்புரியவும் முரன்படவும் முடிந்தது. இன்றைய நிலையில் இவர்களை தட்டிக்கேட்பதற்கு தமிழினத்திற்கு வலுவுமில்லை, தலைமையுமில்லை. தற்போது தோற்றம் கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு ஒன்றுதான் நம்பிக்கை ஊட்டிநிற்கிறது. இவ்வரசு தமிழினத்தை பாதுகாக்கும் அரணாக நிலைகொள்ளும்போது அவ்வரசின் துணையுடன், பாதிப்புகள் எதுவுமின்றி துரோகிகளை அடையாளம் காட்டி தண்டனையும் பெற்றுக்கொடுக்க முடியும். அதுவரை ஆதாரங்களை கொண்டுள்ளவர்கள் அதனை பொறுமையுடன் பேணிப்பாதுகாத்து வைத்திருப்பதே நல்லது.
நாங்கள் இனி என்ன செய்யலாம் என்று யோசிக்க தேவையில்லை. தமிழினம் தன் மண்ணில் உரிமையோடு வாழ்வதற்கான போராட்டத்தை முன்னெடுக்க நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவியுள்ளது. அது தன்னை உறுதிப்படுத்திக்கொண்டதும் அதன் ஆளுமையின்கீழ் நாங்கள் வாழும் புலம்பெயர் நாடுகளில், எங்கள் மொழி கலாச்சாரங்களை வளர்தெடுக்கக்கூடிய திறன்கொண்ட ஈழவிடுதலை உணர்வாளர்களை தெரிவுசெய்து செயல்பட வைக்கவேண்டும். தமிழ்மக்களது சகல துறைகளையும் நிர்வகிக்கும் நிர்வாகிகள் மக்கள் தெரிவினால் பெறப்படவேண்டும். இந்நாடுகளிலுள்ள சட்டங்களின் அனுசரணையுடன் விடுதலைப்புலிகள் போன்று முகமூடியணிந்து உலாவும் பினாமிகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயன்றாலும் மக்கள் ஒருங்கிணைந்தால் அவர்களை இனம்கண்டு ஒதுக்கிவிடலாம். உதாரணமாக பினாமி என சந்தேகப்படும் ஒருவரால் சட்டப்படி நடாத்தப்படும் பாடசாலை ஒன்றிற்கு ஈடாக மக்கள் ஒருங்கிணைந்து ஒரு பாடசாலையை உருவாக்கிக்கொண்டால், பிள்ளைகளின்றி அந்தப் பினாமியால் பாடசாலையை நடாத்தமுடியாது. மக்கள் சுரண்டப்படுவதும் தடுக்கப்படும்.
“நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவியுள்ள” கூட்டதின் அரசியல் பின்னணி என்ன? அக்கறைகள் என்ன்? அது இன்னொரு மாபியா இரகசியக் கும்பல்.
முதலில் எல்லாவற்றையும் வெளி வெளியாகப் பேசுகிற சூழ் நிலையை உருவாக்காமல் தமிழ் மக்களிடமிருந்து சுருட்டிய பணத்தில் அரசியல் வியாபாரம்நடதுகிற, அமெரிக்க முகவர் கூட்டங்களை எப்படி நம்புவது?
நாடுகடந்த அரசாங்கம் புலிகளின் ஓர் நிழல் அமைப்பே என்பதே இன்னமும் புரியவில்லையா?
இவர்கள் தாங்கள் செய்த குற்ரங்களிலிருந்து தப்பவும், தம்மைப் பாதுக்காகக்வுமேயாகும்.
இந்த் உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் புலி கொடியுடனேயே நாடுகடந்த அரசாங்கம்
ஆரம்பிக்கப்பட்டது.
துரை
மகேந்திரா உங்கள் கருத்து உண்மைதான் எல்லோரையும் திருடர்கள் என்று சொல்ல முடியாது தூய உள்ளம் சேவை
மனப்பான்மை கொண்டவர்களும் இருக்கிறார்கள் தான் ஆனால் நிறுவனப் படுத்தப் பட்டுள்ள புலிகளின் பணம்
தனி நபர்களின் கைகளுக்கு போகக்கூடாது.வெளியே விட்டால் கூட எங்கே போவது என்று தெரியாததால் நாங்கள்
உள்ளே இருக்கிறோம் என்று சில பெண் புலிகள் இருப்பதாக கேள்விப்பட்டேன். புலிகளின் சொத்துக்களை வைத்திருப்பவர்கள்
தாங்களாகவே முன்வந்து முளுப்பெறுமதியை அங்குள்ள மக்களுக்கும் போராளிகளுக்கும் கொடுத்தல் வேண்டும்.
என்ன செய்கிறார்கள் என்று பார்த்து இல்லை எனில் அவர்களை மக்கள் மன்றில் அம்பலப்படுத்தியே ஆகவேண்டும்.
இந்தச் செய்தியில் ஒரு பரபரப்பிற்காகவே இந்திரன்-வம்பா திருமண புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்பது போல் அவர்கள் இருவரின் திருமணத்தை இழுத்துவிட்டிருக்கிறார் இக்”கட்டுரைச் செய்தியாளர்”.இவர்களின் திருமணத்தின் போது பரபரப்பாக பினாமிச் செய்திகள் வெளிவந்தன.ஆனால் கனடாவில் உள்ள ஒருவரிடம் விசாரித்த போது இந்திரன் பினாமியல்ல என்றும் அவர் ஒரு கனடாவிற்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வந்து இன்ரீரியர் டிசைனில் துறைசார் கல்விகற்று அதில் தொழில் அதிபரானவர் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.இந்திரனின் சகோதரரும் தொழில் அதிபராகவே இருக்கிறார் என்பதை அறிய முடிந்தது.தொழில் அதிபராக இருப்பவர்கள் தமிழீழ விடுதலையை ஆதரிக்ககூடாதென்பதில் ஏதாவது கட்டாயம்.அப்படி ஆதரிப்பவர்கள் எல்லாம் பினாமிகள் என்பதில் என்ன நியாயம் உண்டு.இஸ்ரெலியர்கள் தமது போராட்டத்திற்காக வங்கிகளை நடத்தினார்கள் பல முதலீடுளைச் செய்தார்கள்.ஒரு போராட்டத்தை நடத்துவதற்கு பன்முக செயல்பாடுகள் தேவை அது போன்றதே முதலீடு என்பது.மகேந்திரன் மிகத் தெளிவாகவே எழுதியுள்ளார்.தேவையில்லாமல் தனிப்பட்ட திருமணப் படத்தை இந்த இணையத்தளம் பிரசுரித்துள்ளது.இந்திரன் பினாமியல்ல.இந்த புகைப்படத்தை இச்செய்திலிருந்து எடுத்து விடுவதே இவ்விணையத்தளத்திற்கு கெளரவமாகும்.எவர் மீதும் எவரும் சேறு அடிக்கலாம் ஆனால் அது அழகல்ல.
பிழை திருத்தம்:முதல் வரி “இந்திரன்-ரம்பா”என்றிருக்க வேண்டும்.தவறுக்கு வருந்துகிறேன்.
பிழை திருத்தம்:கட்டாயம் உண்டா…(9தாவது வரி)