பொது வேட்பாளர் வெளிநாட்டு சக்திகளின் ஒர் சதித் திட்டமாகும் என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பானது வெளிநாட்டு சக்திகளின் சூழ்ச்சித் திட்டமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழு நாடகமும் மேற்குலக சதி என குறிப்பிட்டுள்ள அமைச்சர் டலஸ் அலகபெரும இலங்கையின் உள்விவகாரங்களில் இராஜதந்திரிகளை தலையிடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் சார்பு புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் சில நாடுகளும் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்காக நிதிவழங்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக போட்டியிடுவது என்ற மைத்திரிபாலவின் முடிவு குறித்து தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆக, எதிர்பார்த்தது போல புலி நாடகத்தை இலங்கை அரச பாசிஸ்டுக்கள் ஆரம்பித்துவிட்டனர்.
1999 ஆம் ஆண்டு தேர்தலுக்குச் சற்று முன்பதாக சந்திரிக்கா குமாரணதுங்கவின் பிரச்சார மேடையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் சந்திரிக்கா ஒரு கண்ணை இழந்தார். இத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சந்திரிக்காவின் மாபியா வலயமைப்பால் திட்டமிட்டு நடத்தப்பட்டது எனவும், தற்செயலாகவே சந்திரிக்கா ஒரு கண்ணை இழந்தார் என்றும் ராவய ஆசிரியர்களில் ஒருவரான விடர் ஐவன் எழுதிய நூலில் குறிப்பிட்டிருந்தார்.
மீண்டும் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மகிந்த கும்பல் தற்கொலைத் தாக்குதல் பாணியிலான குண்டுத் தாக்குதல் ஒன்றைத் திட்டமிடலாம் என்ற அச்சம் நிலவுவதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவிர, கட்சி தாவமலிருப்பதற்காக ஒரு பில்லியன் ரூபா வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிந்த கும்பல் வழங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டலஸ் அழகபெருமா ஊரைதின்ற கள்ளன் ரஜித சேனாரட்ன -உடன் 2006, 2007 அளவில் ராஜபக்ச குடும்பத்துக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளனாக பலகாலம் சந்திரிக்காவுக்கும் பின்னர் மகிந்த ராஜபக்சவுக்கும் அடிமையாய் வேலை செய்த மைத்திரிபால சிரிசேன-இற்கு எதிராக சதி செய்த படியே மகிந்த ராஜபக்சவின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவனாகியுள்ளான்.
ரஜித சேனாரட்ன இப்போது எதிர்க்கட்சிகளின் கூட்டுமுயற்சிக்கு மீண்டும் கட்சி தாவி மும்முரமாகச் செயல்படும் மீன்பிடித்துறை அமைச்சன் – இந்த அமைச்சுப் பதவிகள் மேலதிக அதிகார மோகத்தினால் எப்படி தூக்கிவீசப்படுகின்றன என்பதுவும் கவனிக்கப்பட வேண்டியது.
ராவய ஆசிரியன் விக்டர் ஐவன் சந்திரிகா குமாரதுங்கவும் ஒரளவில் போர்க்குற்றவாளியும் இனவழிப்பாளியும் என எழுதியிருந்தால் அவனெழுதியதை பெரிது படுத்தலாம். ஆனால் பெருங்குற்றவாளி மகிந்த ராஜபக்சவிற்கு அரசியல் குறுக்கு வழிகளைத் தாண்டவே விக்டர் ஐவன் மட்டும் கட்டுக்கதை எழுதியதாக எடுக்கவேண்டும். ஏன் ” சந்திரிக்காவின் மாபியா வலயமைப்பு” என எழுதிய விக்டர் ஐவன் மகிந்த ராஜபக்சவையோ தமிழர் இனவழிப்பு நடைபெறுவதை சுட்டிக்காட்டும் எதையுமே எழுதுவதில்லை. அமெரிக்க அடியாளும் நிரந்தர அரச ஆதிக்கவர்க்கத்தவனுமான மிலிந்த மொறகொட ராவய பத்திரிக்கையை பலமில்லியன் ரூபாய்களுக்கு அண்மையில் வாங்க முற்பட்டான். அதை விக்டர் ஐவன் அமெரிக்க ரகசிய மூலைச்சலவைக்கு தனது ஜே.வீ.பீ ‘புரட்சி’ காலத்திலிருந்து வளர்க்கப்பட்ட சிங்கள இடதுசாரி வாசக மந்தைகளை விற்க முற்பட்டான் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இனியொரு விக்டர் ஐவன் -இன் கபடத்தை கூர்ந்து ஆராயாமல் எழுதுவது கவலைக்கிடமானது. ராவய உண்மையில் மாற்றுக்கருத்துக்களை வைப்பதாயின் எப்படி மகிந்த ராஜபக்சவை தலைமை விருந்தினனாக அழைக்க முடியும்?;-
http://www.colombopage.com/archive_12/Feb29_1330461695CH.php
சந்திரிகா குமாரணதுங்க-இன் களவுகள் (ஒப்பீட்டளவில் சிறிய களவுகள்) பற்றி ராவய எழுதிய போது தான் அவளின் துர்பாக்கியம் தற்செயலாக நடந்தது என எழுதப்பட்டது. ராஜபக்ச குடும்பத்தின் பாரிய களவுகள் மேல் பாராமுகஞ் செலுத்தும் எவன் கூற்றையும் நம்புவது சரியானதா?