சுவிஸ் வங்கிகளில் மக்களிடம் கொள்ளையடிக்கும் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படுவதில்லை. இன்று பல தன்னார்வ நிறுவனங்கள் போன்று பணக்கொடுப்பனவாளர்களிடம் பணம் பெற்றுச் செயற்படும் அமைப்புக்கள் தமது பண மூலத்தை வெளியிடுவதில்லை. அதே வேளை பல்வேறு பணம் வழங்கும் நிறுவனங்களும் தாம் யாருக்குப் பணம் வழங்குகிறோம் என்ற தகவல்களையும் வெளியிடுவதில்லை.
அவுஸ் எய்ட்ஸ், நோர் எயிட்ஸ், யூஸ் எயிட்ஸ் போன்ற அரச நிதி நிறுவனங்கள் உட்பட பெர்கோவ் பவுண்டேஷன் என்ற ஆபத்தான ஜேர்மனிய நிறுவனமும் தன்னார்வ நிறுவனங்கள் போன்று செயற்படும் புலம் பெயர் புலிசார் மற்றும் புலியெதிர்ப்பு அமைப்புகளுக்குப் நிதி வழங்குகின்றன. தவிர, புலம்பெயர் நாடுகளிலிருந்து வெளியாகும் இணைய மற்றும் அச்சு செய்தி ஊடகங்கள் சிலவும் ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்களாக உருமாற்றம் அடைந்துள்ளன.
தன்னார்வ நிறுவனங்கள் மக்களின் போராட்ட உணர்வை அழித்து பல்தேசிய நிறுவனங்களின் மூலதனக் கொள்ளைக்கு வழிதிறந்துவிடும் பணியை மட்டுமல்ல, பல சந்தர்ப்பங்களில் உளவு நிறுவனங்களின் பணியையும் மேற்கொள்கின்றன.
புலம்பெயர் நாடுகளில் இயங்கும் பல்வேறு அமைப்புக்களின் பண மூலங்கள் இரகசியமாகப் பேணப்பட்ட போதிலும் சிலவற்றை சமூக அக்கறையுள்ளவர்களின் உதவியோடு பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருந்தது. ஓரளவு முழுமைப்படுத்தப்பட்ட பட்டியல் கிடைத்ததும் வெளியிடப்படும்.
தன்னார்வ நிறுவனங்கள்(NGO) – எரியும் உலகம்! : சபா நாவலன்
பின் – புலி அரசியல் – NGO களின் பொற்காலம் : சபா நாவலன்