தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர்கள் குறித்த விசாரணைகளின் போது அரச சார்பற்ற நிறுவனங்களின் தலையீடு அதிகமாக காணப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தெற்கில் மறைந்திருந்து குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளும் முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகளின் போது அரச சார்பற்ற நிறுவனங்கள் அழுத்தங்களை பிரயோகிப்பதாக கொழும்பு ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதச் செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த புலிஉறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களுக்குச் சென்று அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கைது செய்யப்பட்ட திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு அழுத்தங்களை பிரயோகிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.