சவேந்திர சில்வாவிலிருந்து இனப்படுகொலையை முன்னின்றி நிகழ்த்திய அத்தனை சூத்திரதாரிகளும் ஐரோப்பியத் தெருக்களில் சாவகாசமாக அலைந்து திரிகிறார்கள். இனக் கொலையாளிகளின் புலம் பெயர் மூளை அம்சா லண்டன் தமிழர்களோடு கைகோர்த்து விழாக்களில் நிலாப்பாட்டுப் பாடுகிறார். கே.பி யின் அடியாட்கள் மகிந்த பாசிசத்தைப் “பகைத்துக் கொள்ளக் கூடாது” என்று பொது நிகழ்ச்சிகளில் மந்திரம் ஓதுகிறார்கள். நமது “தேசியத்தின்” தலைவிதியோ இதுவென புலம்பும் அப்பாவிகளு மத்தியில் தேசியத்தின் பெயரால் அரச எதிர்ப்பாளர்கள் கூடத் தாக்கப்படுகிறார்கள்.
இலங்கை இந்திய அரச ஆதரவாளர்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக்கொண்டிருக்க அதிகாரவர்கத்தின் எதிர்ப்பாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இந்திய அரச பயங்கரவாதம் மூவரைத் தமிழ் நாட்டின் இதயப்பகுதியில் அடைத்து வைத்துத் தூக்குத்தண்டனை வழங்கி சாகடித்தே தீருவோம் என இரத்தம் தோய்ந்த கரங்களோடு காத்திருக்கும் வேளையில் இந்திய அரசை கடுமையான தொனியில் அம்பலப்படுத்திப் புலம் பெயர் நாடுகளில் இருந்து ஒரே ஒரு துண்டுப் பிரசுரம் தான் வெளியானது. வேறு பிரசுரங்கள் ஏதும் மக்கள் மத்தியில் இவ்வளவு தீவிரமாக இந்திய அரசைக் கண்டித்து வெளியாகவில்லை. புதிய திசைகள் என்ற அமைப்பு சார்பில் வெளியான துண்டுப்பிரசுரம் இது.
பிரசுரத்தின் முழுமையும் இனியொரு தமிழ்வின் ஆகிய இணையங்களில் வெளியாகியிருந்தன.
http://www.tamilwin.com/view.
இந்த நிலையில் இத் துண்டுப் பிரசுரத்தை வினியோகித்தவர்களைச் சிலர் தாக்க முற்பட்டிருக்கிறார்கள்.
மிரட்டியவர்கள் துண்டுப் பிரசுரத்தைப் பறிமுதல் செய்துள்ளார்கள். வினியோகித்தவரை தாக்க முற்படும் வேளையில் அருகில் காவலுக்கு நின்ற பிரித்தானியப் போலிசால் தாக்க முற்பட்டவர் தடுக்கப்படுள்ளார்.
யாரிவர்கள்?
இந்திய அரசின் ஆதரவாளர்களா? ‘ரோ’ என்ற இந்திய அரச உளவு நிறுவனத்தின் கையாட்களா?? இலங்கை அரச ஆதரவாளர்களா??? கோதாபயவினதும் அம்சாவினதும் அடியாட்களா????
புதிய திசைகள் செயற்பாட்டாளர்களைத் துண்டுப் பிரசுரம் வெளியிடும் போது தாக்க முற்பட்டவர்கள் மேற்குறித்த யாருமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் நிச்சயமாக இலங்கை இந்திய அரசுகளதோ அல்லது அவர்களின் உளவாளிகளதோ முகவர்களாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.
“தனிமனித படுகொலைகள் அதுவும் பட்டியல் இட்டு படுகொலை செய்வது என்பதை போராட்ட வழிமுறையாக கொண்ட போராட்ட குழுக்களால் தலைமை தாங்கப் பட்டு இறுதியில் சுய அழிவும், மக்களின் பேரழிவையும் சந்தித்த மக்கள் கூட்டம் தான் நாங்கள். தனிமனித அழிப்பு எமது சமூகத்திற்கு எந்த சரியான மாற்றத்தையும் தந்ததில்லை அதற்கு மாறாக எம்மத்தியில் இருந்த பல தேவையான சக்திகளை அழித்ததுடன் எதிர்தரப்பில் மீண்டும் மீண்டும் மிக மோசமான சக்திகளால் அவை பிரதியிடப் பட்டுக்கொண்டிருக்கிறது.” என்ற வசனங்கள் மனதைப் புண்படுத்தியதாகவே தாக்க முற்பட்டவர்கள் தமது நியாயத்தை முன்வைத்தனர். பி.ரி.எப் அமைப்பச் சார்ந்த ஸ்கந்ததேவா உட்பட பலர் இவர்களைத் தடுக்க முயன்ற போதும் அவர்கள் யாரையும் பொருட்படுத்தும் மனோ நிலையில் இருந்திருக்கவில்லை.
புலம் பெயர் நாடுகளில் ஒன்றுமறியா தேசியப் பற்று மிக்க அப்பாவிகளை, புலி ஆதரவாளர்களை, பிரபாகரனைப் பூஜிக்கும் பக்தர்களை நிறையவே காண்கின்றோம். இவர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் இலங்கை இந்திய அரசுகளின் உளவாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இவர்களைத் தூண்டிவிட்டு, உருவேற்றி அரசுக்கு எதிரான போராட்டங்களையும் கருத்துக்களையும் திசை திருப்புகின்றனர்.
முப்பது வருடப் போராட்டமும் அதன் கோரமான அழிவும் ஆயிரம் புரட்சிக் காரர்களை உருவாக்கவ்ல்லை. பல்லாயிரம் அப்பாவிகளையும், சில அரசியல் வியாபாரிகளையும் கொண்ட ஊனமுற்ற சமூகம் ஒன்றை உருவாக்கியிர்ய்க்கின்றது. பேரினவாதத்திற்கு எதிரான சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் அங்கவீனமான சமூகம் புதிய அரசியல் வழிமுறையை நோக்கி வென்றெடுக்க்பபட வேண்டும்.
புதிய திசைகள் இந்தியத் தூதரகத்தின் முன்னால் நடந்த(30.08.2011)
ஆர்ப்பாட்டத்தில் துண்டுப் பிரசுரம் வினியோகித்த போது அவற்றைப் பறிமுதல் செய்து தாக்க வந்தவர்களிடன் பேசியபோது அவர்களுக்கு துண்டுப்பிரசுரத்தின் உள்ளடக்கமே தெரிந்திருக்கவில்லை.
இலங்கை அரசிற்கு எதிராகவும் அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் போராடும் உரிமைக்காக எம்மவர்கள் மத்தியிலேயே நாம் போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.
புலம் பெயர் நாடுகளில் பல்வேறு நோக்கங்களுக்காக மக்களின் அவலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு அரசியலின் பின்புலத்திலும் அதற்கே உரித்தான வர்க்க நலன்களும் அடையாளங்களும் காணப்படுகின்றன. தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தில் மிகப்பெரும் அரசியல் வெற்றிடத்தைக் காண்கிறோம். தமது சமூக இருப்பைப் பேணிக்கொள்வதற்கும் அதற்கான சமூக அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் அதனை மேலும் மெருகேற்றி வளர்த்துக்கொள்ளவும் முளைவிடுகின்ற பலர் இந்த அரசியல் வெற்றிடத்தைப் பிரதியிட முனைகின்றனர். நீண்ட கற்றலும் அதற்கான அரசியல் நடைமுறையும் உலகின் அத்தனை போராட்ட சூழலும் வேண்டி நிற்கும் இன்றைய தேவையாகும். எதிரிகள் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கான நடைமுறை வடிவங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். மக்கள் போராட்டங்களைத் திசை திருப்பி சமூகத்தைச் சீரழிக்கிறார்கள். அந்தச் சீர்குலைவில் தமது வெற்றியை நிலைநாட்டிக்கொள்கிறார்கள்.
இவற்றிற்கெல்லாம் எதிரான அரசியல் உருவாக்கப்பட வேண்டும். அறுபது வருட அழிவிற்கு எதிரான ஒற்றைப்பரிமாண வலது சாரித் தீவரவதச் சிந்னையே ஒவ்வோர் சமூக அரசியல் அங்கத்திலும் மேலோங்கியிருக்கின்றது. இவற்றிற்கு எதிரான தீவிரமான அரசியல் போராட்டம் சிந்தனைத் தளத்திலும் செயற்பாட்டுத் தளத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கான ஒன்றிணைவின் அவசியம் முன்னணிச் சக்திகளால் உணரப்பட வேண்டும்.
இவ்வாறான வன்முறைகளை அரசியல் நிதானத்துடன் பகுத்தறிவதும் புதிய திசைவழியைப் வகுத்துக் கொள்வதும் சமூகப்பற்று மிக்க ஒவ்வொருவரதும் கடமை.
முப்பது வருட ஆயுதப் போராட்டம் பலவிதமான அழிவுகளுடன் ஆயிரக் கணக்கானா ஆண் பெண் போராளிகள் வதைமுகாமில் அடைக்கப் பட்ட நிலையில் ஒரு முடிவிற்கு வந்திருக்கிறது. எமது உரிமைப் போராட்டம் புதிய பரிமாணத்தில் பயணிக்க வேண்டிய தேவையை எமது எதிரிகள் ஒவ்வொரு தடவையும் உணர்த்தி வருகிறார்கள். இவ்வாறான மிரட்டல் சம்பவங்கள் ஒன்றும் தற் செயலானவையல்ல; அதே நேரத்தில் பேசித் தீர்க்கப் பட முடியாதளவிற்கு எல்லா கதவுகளும் மூடப் பட்ட நிலையோ புரிந்துணர்வு அறவே இல்லாத சமூகமாகவும் நாம் இல்லை. தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்கள் பொது எதிரிக்கெதிரான வேலைத் திட்டங்களை உருவாக்கவும் எமக்குள் இருக்கக் கூடிய பகையற்ற முரண்பாடுகளைத் தீர்க்கவும் ஏதுவாக அமையலாம். மாறாக கடந்த கால நிகழ்வுகளை மனதில் கொண்டு காழ்ப்புணர்வுடன் இவ்வாறான நிகழ்வுகளை அணுகினால் மேலும் மேலும் நாம் முகாம்களாகப் பிரிந்து நிற்பது தவிர்க்க முடியாதது.
கடந்த கால அரசியல் இராணுவ தவறுகளை உணர்த்தாதவரை ,அதாவது உள்ளக தவறான போக்குகளை திருத்தாதவரை நாம் புற எதிரிக்கு எதிராக மட்டும் (இந்திய மற்றும் ஸ்ரீ லங்கா அரசுகள்) மக்களை அணிதிரட்டுவது நாம் மக்களை ஏமாற்றும் செயல்.ஜனரஞ்சக பொறிக்குள் அரசியல் செய்வது வேறு ,ஜனத்திட்காக(மக்களிற்காக ) அரசியல் செய்வது வேறு. தூக்குத் தண்டனையை கையில் எடுத்து இந்திய எதிர்ப்பு அரசியல் மட்டும் செய்வது என்பது ஜனரஞ்சக பொறிக்குள் அரசியல் செய்வது போன்றதாகிவிடும்.
பொது எதிரிக்கு எதிராக ஓரணியில் ஒன்றிணைவோம் , எம்மிடையே ஒற்றுமை தேவை என்ற கோசங்கள் மட்டும் ஒற்றுமையை, ஒரினைவை தந்திடாது.
.
கடந்த கால அரசியல் இராணுவ தவறுகளை உணர்த்தாதவரை, உணராதவரை ,அதாவது உள்ளக தவறான போக்குகளை திருத்தாதவரை நாம் பொது எதிரிக்கெதிரான வேலைத் திட்டங்களோடு மட்டும் மக்களை அணிதிரட்டுவது நாம் மக்களை ஏமாற்றும் செயல் .மக்கள் ஏமாறத் தயாரில்லை
2௦ வருடத்திற்கும் மேலாக அடியாள் மனோபாவத்துடன் வளர்க்கப்பட்டபுலி சார் தேசிய சக்திகளை எவ்வாறு கையாள்வது?அந்த சக்தியை மக்கள் சார்பாக சிந்திக்கத்
தூண்டக்கூடிய வழிமுறைகளை தேடவேண்டிய நிலையில் உள்ளோம்.அந்த
சக்திகளுடன் முரண்பாடுகளை, மோதல்களை தவிர்த்தல் கட்டாய நிபந்தனை ஆகின்றது என்பதையும் கருத்தில் கொள்ளல் அவசியம்.எவ்வாறு கையாள்வது?
இந்த மிரட்டல்காரர்களில் றோவுமில்லை சிஜஏயுமில்லை. நான் அறிந்தவரையில் பிரபாகரனிசத்தில் வளர்ந்த குடுகுடுப்பு உசார் மடையர்கள் தான் இந்த மிரட்டல் அடிதடி பேர் வழிகள்.
முன்னர் 1986 இல் விஜிதரன் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் போன போது நெல்லியடியில் சுக்குளாவின் கீழ் செயற்பட்டு பல்கலைக்கழக மாணவர்களை தாக்கிய நெல்லியடி நிருபன் என்பவரே இந்த மிரட்டல் காரன் என நான் அறிகிறேன்.
இந்த நிருபன் புலிகள் இயக்கத்தில் இருந்து புலிகளின் தலைவரால் மண்டையில் போடக்கூடிய தண்டனையில் இருந்து ஏதொ வாறு தப்பியவர் என்றும் புலிகள் அமைப்பில் இருந்தே நீக்கப்பட்டு கலைக்கப்பட்டவர் என்றும் தெரிகிறது. 2009க்கு பின்னர் பிரபாகரனிசம் இல்லாதவிடத்தை லண்டனில் நிருபன் நிரப்ப முற்படுகிறார்.
தம்பி நிருபன் இன்னும் நீர் சரம் கட்டிய புலியாய்தான் லண்டனிலும் உன் சிந்தனை இருக்கிறது. பிரான்சில் சுக்குளா இப்போது திருந்திவிட்டதாக அறிகிறேன்.
இனியாவது சிந்தித்து செயற்படும்
இப்படியானவர்களைத்தான் உளவு தாபனங்கள் குறிவைப்பதையும் மறக்க வேண்டாம்.
நெல்லியடி நிருபன் லண்டனில் நாடுகடந்த தமிழ் ஈழப் பிரமுகர் ஒருவரின் அடியாள் ஆக கடமை ஆற்றுகிறார். அவர்களுக்கு கே.பி கொம்பனியோடு அண்ணன் – தம்பி உறவு. இப்ப விளங்குது வன்முறையின் பின்னணி.
வருமானம் வருமென்றால் எங்கேயும் செல்வார்கள்.
தம்பி உமக்கு தெரியும் வி.பு முடிவு எடுத்தால். மாற்றம் இருக்காது.
அது நிருபனாக இருந்தால் என்ன நீராக இருந்தால் என்ன
உமக்கான முடிவு இன்னமும் எடுக்கவில்லை. அதன்பின்
சந்திப்போமே.
நீர் என்ன நிருபனின் பாடிகாட்டா?
சந்தேகமே இல்லை நீங்க தான்
லண்டனில் இருக்கும் புலி வருடிகள்
பார்ப்போம் நீங்கள் இருவருமாவது
காட்டிக்கொடுக்காமல் ஒத்துமயாய்
புலி வளருங்க பார்ப்போம்.
தலைப்பு இப்படி சொல்கிறது.
“புலி ஆதரவாளர்கள் சிலர் இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மிரட்டல்!”
உள்ளிருக்கும் எழுத்து இப்படிக் கேட்கிறது.
“யாரிவர்கள்?
இந்திய அரசின் ஆதரவாளர்களா? ‘ரோ’ என்ற இந்திய அரச உளவு நிறுவனத்தின் கையாட்களா?? இலங்கை அரச ஆதரவாளர்களா??? கோதாபயவினதும் அம்சாவினதும் அடியாட்களா????”
இதில் புதிய திசை எங்கே?
புதிய முட்டியில் பழங்கள்ளாக……….
புலிக்கொடி தமிழரின் தேசியகொடியென்றால் இந்த நிகழ்வில் அதுவேன் ஏந்தப்படவில்லை. பிரசுர வினியோகம் தடைபட்டது அமைப்பாளரின் சனநாயக வரட்சியையே காட்டுகிறது. புதிய திசைகளும் இதனை எதிர்பார்த்து B பிளான் வைத்திருந்திருக்க வேண்டும். அமைப்பின் நிர்வாகிகளே கலந்துகொள்ளாத அமைப்பு எப்படி மக்கள் போராட்டத்தை நகர்த்த போகிறது
அதாவது நிருவன் போலை ஆட்களும் இல்லை என்றால் ?,இவர்கள் நாட்டுக்காக போராடிய முற்பது ஆயிரம் மாவீரர்களையும் முட்டாள்கள் என அடுத்த கட்டுரையில் எழுதி அடுத்து வரும் நிகழ்வில் வினையோகம் செய்வார்கள் .. கட்டுரை எழுதின அண்ணா நீங்கள் இத்துடன் நிறுத்துவதனால்த்தான் நீங்கள் உண்மையான தமிழனாக முடியும் ..இல்லை என்றால் நீங்கள் { சி }????
நிருவன் போலை ஆட்களும் ////
புலம் பெயர் நாடுகளில் ஒன்றுமறியா தேசியப் பற்று மிக்க அப்பாவிகளை, புலி ஆதரவாளர்களை “”(நிருவன் போலை ஆட்ககளை)”” , பிரபாகரனைப் பூஜிக்கும் பக்தர்களை நிறையவே காண்கின்றோம்.
இவர்களின்””(நிருவன் போலை ஆட்ககளின்)”” உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தூண்டிவிட்டு, உருவேற்றி அரசுக்கு எதிரான போராட்டங்களையும் கருத்துக்களையும் திசை திருப்புகின்றனர்.
முப்பது வருடப் போராட்டமும் அதன் கோரமான அழிவும் ஆயிரம் புரட்சிக் காரர்களை உருவாக்கவில்லை. பல்லாயிரம் அப்பாவிகளையும்””(நிருவன் போலை ஆட்ககளையும்)””, சில அரசியல் வியாபாரிகளையும் கொண்ட ஊனமுற்ற சமூகம் ஒன்றை உருவாக்கியிர்ய்க்கின்றது. பேரினவாதத்திற்கு எதிரான சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் அங்கவீனமான சமூகம் புதிய அரசியல் வழிமுறையை நோக்கி வென்றெடுக்க்பபட வேண்டும்.
///
இவர்கள் நாட்டுக்காக போராடிய முற்பது ஆயிரம் மாவீரர்களையும் முட்டாள்கள் என அடுத்த கட்டுரையில் எழுதி அடுத்து வரும் நிகழ்வில் வினையோகம் செய்வார்கள் ////
We all should review our strategy and tactics. should be fool proof.
http://www.tamilnet.com/art.html?catid=99&artid=34392
Tamilnet:
Though it was admired by its people and praised by many international observers as unparalleled in the World and a stronger match to the GoSL, why and how did the Liberation Movement meet its ‘disaster’ in 2009?
The simple answer is that the International Community cheated the Liberation Movement and that the CFA was a trap.
WHY?
It is common sense that the Liberation Movement is not a match to the combined strength of 30 or more powerful establishments of the World. There was no support to the Liberation Movement outside the Homeland except from the Tamil Diaspora.
WHY only Tamil Diaspora?
* * *
Simple answers will not help in reformulating successful strategy and tactics. Further repeated cheating by ‘Friends’ implies that something is fundamentally wrong. The fundamental mistakes were “””not understanding and applying Geopolitics as well as misconception about our friends and enemies”””.
http://www.tamilnet.com/art.html?catid=99&artid=34392
ஈழமகன்
!!!
Please come out and ask your questions. put your views without any second thoughts.you have your own rights to ask,comment here. We need you.
2௦ வருடத்திற்கும் மேலாக அடியாள் மனோபாவத்துடன் வளர்க்கப்பட்டபுலி சார் தேசிய சக்திகளை எவ்வாறு கையாள்வது?அந்த சக்தியை மக்கள் சார்பாக சிந்திக்கத்
தூண்டக்கூடிய வழிமுறைகளை தேடவேண்டிய நிலையில் உள்ளோம்.அந்த
சக்திகளுடன் முரண்பாடுகளை, மோதல்களை தவிர்த்தல் கட்டாய நிபந்தனை ஆகின்றது என்பதையும் கருத்தில் கொள்ளல் அவசியம்.எவ்வாறு கையாள்வது?
ஈழமகன்! please tell us எவ்வாறு கையாள்வது?
தீர்ப்புக்கு பின் விசாரணை. ராஜிவ் கொலை விசாரணை போல…!!! 🙂
ஐயா! தேவன் 2!
நான் நடைமுறையதார்த்தத்தை எழுதியபோது அதை இனியொரு இணையம் முழுமையாக நீக்கியது. ஆனால் புதியதிசையினர் புனைந்த அவதூறு புலியெதிர்ப்பு பிரசுர விநோயகம் சிலரால் தடுக்கப்பட்டவுடன் வன்முறையென ஒலமிடுகிறீர்கள்.
எனது ஆதாரமிக்க உண்மைத் தகவலை முழுமையாக தணிக்கை செய்தது இனியொருவின் கருத்துச் சுதந்திர மறுப்பில்லை. சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் நிகழ்சிநிரலை முன்னேடுக்கும் புலிகளிற்கெதிரான அவதூறு துண்டுபிர விநியோகத்தை தடுத்ததுதான் வன்முறையோ! யாரை பேய்காட்டுகிறீர்கள்!
நிர்மலன்!
புலம் பெயர் நாடுகளில் ஒன்றுமறியா தேசியப் பற்று மிக்க அப்பாவிகளை, புலி ஆதரவாளர்களை “”( நிர்மலன்
போலை ஆட்ககளை)”” , பிரபாகரனைப் பூஜிக்கும் பக்தர்களை நிறையவே காண்கின்றோம்.
இவர்களின்””(நிர்மலன்
போலை ஆட்ககளின்)”” உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தூண்டிவிட்டு, உருவேற்றி அரசுக்கு எதிரான போராட்டங்களையும் கருத்துக்களையும் திசை திருப்புகின்றனர்.
முப்பது வருடப் போராட்டமும் அதன் கோரமான அழிவும் ஆயிரம் புரட்சிக் காரர்களை உருவாக்கவில்லை. பல்லாயிரம் அப்பாவிகளையும்””(நிருவன் ஈழமகன்,நிர்மலன்
போலை ஆட்ககளையும்)””,
சில அரசியல் வியாபாரிகளையும் கொண்ட ஊனமுற்ற சமூகம் ஒன்றை உருவாக்கியிர்ய்க்கின்றது. பேரினவாதத்திற்கு எதிரான சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் அங்கவீனமான சமூகம் புதிய அரசியல் வழிமுறையை நோக்கி வென்றெடுக்க்பபட வேண்டும்.
ஒருவர் கருத்துச் சொல்லும் போது அக்கருத்தை எதிர்கொள்ள முடியாத அப்பட்டமான கோழைகள் என்ன செடய்வார்கள்.? அடிதடி, குத்துவெட்டு சேறடிப்பு போன்றவற்றில் இறங்குவார்கள். அப்படி அடிதடி என்று வரும் போது ஒன்று இரண்டு தரம் தெளிய வைக்கலாம். அதற்குப் பிறகு தற்காப்பு யுத்தம் தான் நடத்த வேண்டும்.
நிர்மலன் போன்றவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக் உருவேத்தி விடுபவர்கள். இவர்களுக்கு அரசாங்க ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என்பது எல்லாம் கவலையில்லை. தமது வியாபாரம் நடக்க புலியை தூக்கிப் பிடித்தால் சரி. இந்த ஊர்வலத்தை நடத்திய சேனன் அண்ணாசி இங்க ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினராகும் கனவில் புலி ஆதரவு வேசம் போட அவரது கட்சியின் இலங்கைப்பிரதி நிதி ராஜபக்சவுக்கு வால்பிடிக்கிறார். ஆக, இலங்கை அர்சாங்கத்தின் வேலைத்திட்டம் மிக்க நன்றாக வேலைசெய்கிறது/
தேவன்2! அடுத்தவர்களை “ஒன்றுமறியா தேசியப் பற்று மிக்க அப்பாவிகள்” “பிரபாகரனைப் பூஜிக்கும் பக்தர்கள்” என்று விளிப்பதன் ஊடக தாங்கள் எல்லாம் தெரிந்த அறிந்த அறிஜீவி என சுயதிருப்பதி கொள்ளும் சுயதம்பட்டத்தை பார்த்து பரிதாபப்படலாம். வேறு என்ன செய்ய முடியும்!
முப்பது வருடப் போராட்டம் இலட்சக்கணக்கான போராளிகளை தமிழர் மத்தியில் உருவாக்கியுள்ளது. அதைதான் புலத்தில் மட்டுமல்ல தமிழகம் புலம் பெயர்ந்தநாடுகள் … என எங்கும் பார்க்கிறோம். நீங்கள் நித்திரை கொள்பவன் போலை பாசங்கு செய்பவர். உங்களை ஒன்றுமே செய்ய முடியாது.
தமிழர் சமுதாயத்தில் வக்கிரசிந்தனைதான் போலிக்கொம்முனிசமாய் தொடங்கி ஈபீஆர்எல்எப் புளொட் ஈபிடிபி என வளர்ந்து புலத்தில் பலபத்து பெயர்களில் உதிரிகளாக சிறிலங்கா இந்திய சேவகம் செய்வதை பார்க்கின்றோம்.
சிறிலங்கா அரசபயங்கரவாதம் எதை புலம்பெயர் தமிழ்தேசிய உணர்வாளர்களிற்கெதிராக திட்டமிட்டு செய்ய முயற்சிக்கிறதோ அதைதான் “இனியொரு இணையம்” “புதியதிசைகள்” ….. போன்ற அமைப்புக்கள் முன்னெடுக்கின்றன. உதாரணத்திற்கு
1) புலிக்கொடியெதிர்ப்பு 2) தமிழ்தேசீயவாதிகளின் ஒன்றுகூடல்களில் குழப்பம் விளைவித்தல் 3) புலிஆதரவாளர்கள் மீது அபாண்டமான அவதூறுகளை சுமத்தி பிரச்சாரம் செய்தல். 4) சிறிலங்கா முஸ்லீம் அடிப்படை வாதத்தை ஆதரித்து தமிழருக்கெதிராக தூண்டிவிடல் 5)சிறிலங்கா பேரினவாதிகளை( போலிக் கொம்முனிசிட்டுக்களை) தமிழர் நட்புசக்தியாக காட்டுதல். ….
நீங்களே அங்கவீன புத்தியுடையவராக இருந்து கொண்டு ஈழத்தமிழரை அங்கவீன சழுதாயமென விளிப்பது பெரும் நகைப்புக்குரியது.
//ஒருவர் கருத்துச் சொல்லும் போது அக்கருத்தை எதிர்கொள்ள முடியாத அப்பட்டமான கோழைகள் என்ன செடய்வார்கள்.? //காவடி
தர்க்கரீதியான யதார்த்த கருத்தை தான் கருத்தால் எதிர்கொள்ளமுடியும். குதர்க்கமும் விதாண்டவாதம் நிறைந்த குழப்பவாதிகளை ஒருபோதும் கருத்தால் எதிர்கொள்ளமுடியாது. அப்படி முயற்சிப்பதும் விழலுக்கு இறைக்கும் செயல் போன்றது.
தற்பாதுகாப்பு யுத்தமா!? என்ன சுவரொட்டி ஒட்டுவதும் சோத்து பார்சல் கட்டுவதும் காட்டிக்கொடுப்பதும்தானே தங்களிற்கு தெரிந்த விடயம் .இதிலெங்கே யுத்தமிருக்கு? என்ன அம்சா அடியாள் தரலாமென சொல்லியுள்ளாரா?
உங்கள் துண்டு பிரசுரம் கொடுப்பதற்காகவா தமிழ்தேசீய பற்றார்கள்கள் ஒன்றுகூடல் ஊர்வலம் செய்கிறார்கள்! நீங்கள் அவர்களின் நிகழ்வை குழப்புவீர்களாம் அதை அவர்கள் வேடிக்கை பார்க்கணுமா!
தமிழ்தேசீய பற்றார்களால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வு தவிர்ந்த வேறு தமிழர் ஒன்றுகூடு மிடங்களில் போய் குதர்க்கமும் விதாண்டவாதமும் நிறைந்த உங்கள் துண்டுபிரசுரத்தை கொடுங்களேன். யார் தடுத்தது!
நிர்மலன்! மன்னிக்கவும்!! நீங்கள் ஒன்றுமறியா தேசியப் பற்று மிக்க அப்பாவி அல்ல ,
ஆனால்
புலம் பெயர் நாடுகளில் ஜனநாயக சக்திகளை ,மனித உரிமை ஆர்வலர்களை தேசியப் பற்று மிக்க ஆர்வலர்களை, புலி ஆதரவாளர்களை, மாவீரர் குடும்பத்தவர்களை, அவர்களின் நண்பர்களை, பிரபாகரனைப் பூஜிக்கும் பக்தர்களை நிறையவே காண்கின்றோம்.
இது மறுக்கமுடியாத உண்மை.நியம்
இவர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தேசியம் சார் பொது வேலைத்திட்டங்களுடன், அடிப்படை மனித உரிமைகளை , மற்றும் ஜனநாயக விழுமியங்களை வேண்டி ஓரணியில் திரள்வதை,திரட்டுவதை தடுப்பதே இலங்கை இந்திய அரசுகளின் உளவாளிகளின் இன்றைய வேலைத்திட்டமாக இருப்பது யாவரும் அறிந்ததே. இதற்கு சில அரசியல் வியாபாரிகளையும் களத்தில் இறக்கியுள்ளது.
இதுவும் மறுக்கமுடியாத உண்மை.நியம்.
இலங்கை இந்திய அரசுகளின் உளவாளிகளின் இன்றைய வேலைத்திட்டங்களை முறியடிக்க வேண்டுமாயின் அணைத்து தேசியப் பற்று மிக்க சக்திகளிடையே தொடர் கலந்துரையாடல்கள், கருத்துப்பரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட
வேண்டிய பாரிய பொறுப்பும் இங்குள்ள தேசியம் சார் தமிழ் அமைப்புகளிடம் உள்ளது..
இந்த கருத்தில் ஏதும் தவறு உண்டா?
நிர்மலன்,நிரூபன்….
வன்னியிலிருந்து அழிக்கப்படுவது கண்டு அஞ்சியோடிய அப்பாவிகளை £12 பவுண்ட்ஸ் வாங்கிக்கொண்டு இந்தோனேசியாவில் இறக்கிவிட்டு யார் தேசியம் பேசினார்கள்?
என் அருமை தேசியத் நண்பர்களே!
வாருங்கள்!
அவுஸ்திரேலியத் தூதரகத்தின் முன்னால் ஆர்பாட்டம்நடத்துவோம்..
தேசியத்தின் பேயாரால் பணம்பார்க்கும் வன்முறைக் குழுக்களையும் அம்பலப்படுத்துவோம்…. நாங்க ரெட்டி! நீங்க ரெட்டியா இல்லியா??
யார் அவர்களென்பது பற்றி எனக்கு தெரியாது உங்களிடம் ஆதாரமிருந்தால் அம்பலப்படுத்துங்களேன்! அவுஸ்திரேலியாவின் மனிதமற்ற நடவடிக்கை அந்நாட்டு உயர்நீதிமன்றாலேயே தடுக்கப்பட்டுவிட்டது. இதையும் தாண்டி ஆர்பாட்டம்நடத்த வேண்டிய தேவை எனக்கில்லை. அதைவிட ஒருவரின் பின்புலம் தெரியாது நான் ஒருபோதும் அவருடன் சேர்ந்து இயங்க மாட்டேன்.
விகடகவி என நாம் தென்னாலிராமனைத் தான் கேள்விப் பட்டிருக்கிறோம். பொய்கும் குருட்டுத்தன்மைக்
னைக்கும் பெயர் போனவர்களை இன்னும் நாம் காணவில்லை. இலக்கியத்திலும் தேடிப் பிடித்துவிட முடியாது.
அந்த குறையைத் தீர்ப்பதற்கே இங்கு நிர்மலன் வந்திருக்கிறார். அவர் சொல்லுகிறார்…முப்பதுவருட போராட்டம் இலட்சக்கணக்கான போராளிகளை தமிழ்மக்கள் மத்தியியில் உருவாக்கியிருக்கிறது.
இந்தவிந்தையை யாருக்கு சொல்லி அழமுடியும்?. லட்சக்கணக்கில் விதவையானவர் கதைசொல்லவா? வாழவேண்டிய வயதில் வாழமுடியாமல் ஊனமாகப் போனவர் கதைசொல்லவா? உழைப்புக்கே பெயர் எடுத்த வன்னிமக்கள் பயணக்கைதியாகிய வரலாறு சொல்லவா? இல்லை போராட்டம் தொடங்கியநாட்களிலிருந்து அழகிய கிளிநொச்சி நகரம் புதையுண்டு புதர்மண்டி மீண்டும் தமது வாழ்வை தொடங்குவதற்கு வதற்கு அஞ்சிநிற்கும்மக்கள் கதை சொல்லவா?.
ஓ..நிர்மலன் அவர்களே! பல்லாயிரம்மையில் தூரங்களில் இருந்து கொண்டு கப்பம் குறைவடைந்துவிட்டது. கள்ளக்கிறடிற் காட்டும் புழக்கத்துக்கு விடுவது கஷ்ரமாக இருக்கிறது. அவதிப்பட்ட மக்களை நாடுகளுக்கு நாடுகடத்துவதும் தர்மசங்கடமாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் கோடீஸ்வரர் என்கிற ஸ்தானத்தை அடைவதற்கே தடையாக இருக்கிறது. ஈழத்தமிழ் மக்களின் அமைதி உங்களை குறுக்கீடு செய்கிறது. அப்படித்தானே?.
மகிந்தா ஒரு மாதனமுத்து அவரின் கோளையா டக்ளஸ் அந்தக்கோளையவின் கோளையா தாங்கள்.
தமிழருக்கு ஏற்பட்ட சேதங்கள் அனைத்தும் இந்தியா சிறிலங்கா அரச பயங்கரவாதத்தாலும் அதன் துணை இராணுவக்குழுக்களாலும் அதன் ஆதரவாளர்களினாலுமே தவிர விடுதலைப்புலிகளால் அல்ல. விடுதலைப்புலிகள் திட்டமிட்டு ஒருபோதும் தமிழர்களை கொல்லவில்லை. அதற்காக பத்மநாபா கேதீஸ் சுபத்திரன் போன்றவர்கள் தமிழரில்லையா என அசட்டுத்தனமாக கேட்கக்கூடாது. அவர்களை குறிப்பதற்கென உலகமொழிகளில் இழிவான சொற்கள் இருக்கு. எனவே அவர்கள் மனிதர்களே இல்லை இந்நிலையில் அவர்கள் தமிழர்களாக இருக்க முடியாது.
சிறிலங்கா அரச பயங்காவாத ஆதரவாளரான தங்களால் சொல்லப்படுபவை லங்காபுவத் அறிக்கையே தவிர வேறில்லை.
பிரபாகரனின் ஆறறிவுட்படாதவேலைகளினாலேயே டக்கிளஸ் தேவானந்தா மகிந்தராஜயபக்சாவின் அரசியல் தோற்றம் பெற்றது. இல்லையேல் ஈழத்துதமிழ்மக்கள் அழிவுகளும் இடபெயர்வுகளும் தொடர்ந்து கொண்டிருக்கும். ஆயுதத்தரகர்களும் தமது வருமானத்தை பன்மடங்காக பெருக்கியிருப்பார்கள்.
இதை புரிந்துகொள்வதற்கு அகலமான மூளைதேவையில்லை. சதாரணமனிதயறிவிருந்தாலே போதுமானது.! மற்றைய இனத்துடன் பகைமைவெறி கொள்பவன் தனது சொந்தயினத்திற்கு அறிவுபுகட்ட தகுதியில்லாதவன்.
//நீங்கள் ஒன்றுமறியா தேசியப் பற்று மிக்க அப்பாவி அல்ல ஆனால்
புலம் பெயர் நாடுகளில் ஜனநாயக சக்திகளை மனித உரிமை ஆர்வலர்களை தேசியப் பற்று மிக்க ஆர்வலர்களை புலி ஆதரவாளர்களை மாவீரர் குடும்பத்தவர்களை அவர்களின் நண்பர்களை பிரபாகரனைப் பூஜிக்கும் பக்தர்களை நிறையவே காண்கின்றோம்//.
தேவன்2 மன்னிக்கவும் நான் மட்டுமல்ல உலகில் வயதுவந்த யாரும் அப்பாவியோ அறிவிலியோ அல்ல. தனிப்பட்ட எல்லோரும் தம்மை தம்மை பாதுகாப்பதில் கவனமாகத்தான் இருக்கிறார்கள்.
சந்தர்பவாதிகளையும் சுயநலக்காரர்களையும் ஏமாற்றுக்காரர்களையும் மட்டுமே தமிழர்களின் தலைவர்களாக இருந்த கசப்பான அனுபவத்திற்கு மாறாக பிரபாகரன் இருக்கிறார் அதனால் பிரபாகரனில் மிகப்பெரும்பாலான தமிழர் நம்பிக்கை மரியாதை வைப்பதற்கு காரணமே அவரின் தனிமனித நேர்மை. கண்மூடித்தனமான நம்பிக்கையே பக்தியென உருமாறுகிறது. இங்கு யாரும் பிரபாகரனை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை.
பிரபாகரனை எதிர்ப்பவர்கள் யாரென்று பார்த்தால். என்றுமே தமிழினத்தை காட்டிக்கொடுத்து பிழைப்பு நடத்திய போலிக்கொம்முனிசிட்டுக்களும் துணை இராணுவபின்னனியை கொண்டவர்களும் சமூக இன விரோதிகள்தான். இது மேலெழுந்தவாரியான முடிபல்ல. பட்டறிந்த முடிபு.
//இலங்கை இந்திய அரசுகளின் உளவாளிகளின் இன்றைய வேலைத்திட்டங்களை முறியடிக்க வேண்டுமாயின் அணைத்து தேசியப் பற்று மிக்க சக்திகளிடையே தொடர் கலந்துரையாடல்கள்இ கருத்துப்பரிமாற்றங்கள் நிகழ்த்தப்படவேண்டிய பாரிய பொறுப்பும் இங்குள்ள தேசியம் சார் தமிழ் அமைப்புகளிடம் உள்ளது..இந்த கருத்தில் ஏதும் தவறு உண்டா?//
இக்கருத்தில் தவறில்லை. ஆனால் செயற்பாடு “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில்” என்ற வகையில் அல்லவா உள்ளது. புலிக்கொடி எதிர்ப்பு. புலியதரவாளர்களால் முன்னெடுக்கப்படும் ஊர்வலங்களை குழப்புதல். மாவீரர்களை கொச்சைப்படுத்தல் …. என்பதாகவே அல்லவா உள்ளது. இதுவா நீங்கள்சொல்லும் ஆரோக்கிய கருத்துப் பரிமாற்ற முறைமை?
சிறிலங்கா இந்திய பயங்கரவாத அரசுகளின் குறி புலியதரவு தமிழ் தேசீய உணர்வாளர்களே தவிர வெட்டிப் பேச்சு வித்துவான்ளல்ல என்பது கண் கூடு. வெட்டிப்பேச்சு வித்துவான்கள் செய்வது சிறிலங்கா இந்திய பயங்கரவாத அரசுகளின் தமிழ்தேசீயத்திற்கெதிரான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது மட்டுமே.
தமிழ்தேசீயத்திற்காக இதயசுத்தியுடன் இயங்குபவர்கள் ஒரு போதும் மிகப்பெரும்பாலான தமிழர்களால் நீண்ட பட்டறிவிற்கு பின் தமது தலைமையாக ஏற்றுக்கொண்ட புலிகள் அமைப்புக்கு எதிராக இயங்க மாட்டார்கள். இந்நிலையில் புலியை எதிர்ப்பதென்பது தமிழ்தேசீய எதிர்ப்பே.
உங்களிடம் தமிழ்தேசீயத்திற்காதரவான நிலைப்பாடு என்று ஒன்று இருந்தால்? தமிழ்தேசீயத்தின் பிரதான எதிரிகளான சிறிலங்கா இந்திய பயங்கரவாத அரசுகளையும் அதன் ஆதரவு துணைஇராணுவ குழுக்களையும் என்றும் சிறிலங்கா அரசபயங்கரவாதத்துடன் சேர்ந்து தமிழர்களை அழிக்கும் சிறிலங்கா முஸ்லீம்களையும் அவர்களது நயவஞ்சக அரசியலையும் எதிருங்கள். பார்க்கலாம்?
உங்களின் மிகப்பிரதான செயற்பாடே மிகப்பெரும்பாலான தமிழர்களால் தமது தலைமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புலியெதிர்ப்பு செயற்பாடு மட்டுமே.
இன்றுவரைக்கும் தமிழ்தேசியமென்பது யாழ்பாணமேட்டுகுடி தேசியமே!. என்று… இலங்கைவாழ் முஸ்லீம்மக்கள் மலையகமக்களை ஒருதமிழன் ஏற்றுக்கொள்ளுகிறானோ? அன்றிலிருந்தே தமிழ்தேசியம் உருவாகிறது.
பிரபாகரன் தன்வெறிதனத்தாலும் புத்திபேதலித்த தன்மையானும் ஈழத்தமிழ்மக்களை மண்டியிடபண்ணியதால் வரலாற்றில் ஒரு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டான். இவனை யார் புகழ்கிறார்கள் என்றால்
புலம்பெயர்நாட்டில் குடியுரிமை பெற்றவர்களும் தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களுமே! இவர்களுக்கு வேறு நோக்கங்கள் உண்டு. அது ஈழத்தமிழ்மக்களின் சமூகபொருளாதார வாழ்வு பற்றியதல்ல. இதை நிர்மலன் அவர்கள் தெளிவற- ஐயம் தீர உணர்ந்து கொள்ளவேண்டும்.
பிரபாகரனை எதிர்ப்பவர்கள் யாரென்று பார்த்தால். என்றுமே தமிழினத்தை காட்டிக்கொடுத்து பிழைப்பு நடத்திய போலிக்கொம்முனிசிட்டுக்களும் துணை இராணுவபின்னனியை கொண்டவர்களும் சமூக இன விரோதிகள்தான். இது மேலெழுந்தவாரியான முடிபல்ல. பட்டறிந்த முடிபு.
தங்கள் பட்டறிவில் நிரூபிக்கப்பட்ட உண்மையான கொம்முனிஸ்ட் யார் என்று சொல்லுங்கள்.
எவர் ஒடுக்கப்பட்ட மக்களின் / இனத்தின் நலனை உரிமையை முன்னிறுத்தி நேர்மையான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கிறரோ அவர்தான் உண்மையான கொம்முனிஸ்ட்.