இதுவரையில் விடுதலைப்புலிகள் தீர்வொன்றை ஏற்றுக்கொள்வோம் எனத் தாமாகவே அறிவித்த வரலாறு கிடையாது. இராணுத் தாக்குதல்கள் மட்டுமே எந்த அரசியற் கோட்பாடுகளுமற்ற புலிகளை வாழவைக்கும் ஒரே அரசியற் தளமாகும்.
அண்மைக்காலமாக இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாத விடுதலைப் புலிகளின் அறிக்கைகளும் ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தமும் கூட இதன் முன்னெபோதுமில்லாத புதிய மாற்றங்களாகும். இதன் அடுத்த எல்லையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற புலிகளின் பாராளுமன்றக் குரலாகச் செயற்படும் அமைப்பின் த்லைவர் இரா.சம்பந்தன், புலிகள் நியாயமான தீர்வொன்றை ஏற்றுக்கொள்வார்கள் எனத் தெரிவித்துள்ளார். இன்று தமிழ் விடுதலைப் போராட்டம் என்ற தொனிப்பொருளில் புதிய இடதுசாரி முன்னணியின் ஒஸ்டின் தொழிலாளர் பாடசாலையில் மாதந்த சொற்பொழிவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சம்பந்தன் இந்த கருத்திளை வெளியிட்டுள்ளார்.
இதே வேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா கொழும்பிலிருந்து விடுத்த அறிக்கையில் வட-கிழக்கு தமிழர் தாயகமென்றும் பிரிக்கப்பட முடியாத அலகுகள் எனவும் தெரிவித்துள்ளார். இதன் பின்னதாக கிழக்குப் பிரிவினையை முன்வைக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்ந்த எந்த உறுப்பினர்களும் இது தொடர்க எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. கருணா இலங்கை சென்றதன் பின்னதாக ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்ட எந்த மோதல்களும் நடைபெறாத அதே வேளை அரசுடன் அவர் முழுமையாகக் கூட்டுச் சேர்ந்ததாகவும் இல்லை. ஆர்ப்பாட்டமாக அரசியல் அரங்கிற்கு வந்த பிள்ளையான் குழு அரசியலில்லிருந்து ஒதுங்கியது போன்ற மயான அமைதி கொண்டிருக்கின்றது.
நாராயணன் உள்ளிட்ட இந்திய ராஜந்திரிகள் குழு இலங்கைக்குத் திடீர் விஜயம் மேற்கொண்டதன் பின்னணி இன்னும் மர்மமாகவே உள்ளது. அரச தரப்பிலிருந்து சார்க் முன்னேற்பாடுகளுக்கான கலந்துரையாடல் எனக்கூறப்பட்ட போதும் அது கண்துடைப்பு விளக்கம் என பல அரசியல் விமர்சகர்கள் கருதினார்கள்.
போர் ரகளைகளுக்கு மத்தியில் இந்தியப் பெருமுதலாளிகளின் முத்லீடுகள் இலங்கையெங்கும் விரிந்து செல்கின்றன. இதில் வடக்குக் கிழக்கும் கூட உள்ளடங்கியிருக்கிறது. இந்தியப் பணமுதலைகள் இந்தியாவின் நந்திகிராமத்தையே தமது முதலீட்டுக்காக அரச ஆதரவுடம் அழித்துச் சூறையாடியவர்கள். இலங்கையில் எந்த எதிர்கால நம்பிக்கையுமின்றி முதலிடுவதற்கு இவர்கள் நாடற்ற அனாதைகளல்லர்.
இதனிடையே இந்திய எதிர்ப்பையே தமது அரசியலின் தத்துவார்த்தச் சாராம்சமாகக் கொண்ட ஜே.வி.பீ யுத்தம் மற்றும் யுத்த நிறுத்தம் என்பனவெல்லாம் இந்தியாவின் முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே நிகழ்வதாக குற்றம் சுமத்துகின்றனர்.
ராஜபக்ஷவைப் பொறுத்தளவில் யுத்ததின் கதாநாயகானாகத் தன்னைக்காட்டிக்கொள்வதே பிரச்சனைகளின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான ஒரே வழி. யுத்தம் வெல்லப்படுவதான பிரச்சாரமும் புலிகளை ஓரம் கட்ட்டிவிட்டோம் என்கிற நம்பிக்கையும் எதையும் செய்யும் சர்வ அதிகாரத்தை இவருக்கு வழங்கியுள்ள நிலையில் இந்திய வியாபார நலான்களுக்களை நிறைவேற்றும் திறனை இவர் இன்றைய நிலையில் பெற்றுள்ளார் என்பது இந்தியாவிற்குச் சாதகமானதே. கிழக்கு என்பது உதாரணம் காட்டப்படத்தக்க வெற்றியாகவும் மக்கள் முன் வைக்கப்படும்.
இந்திய நலன்களடிப்படையில் நீண்ட கால நம்பிக்கையை தமிழ் பேசும் மக்களுக்கு வழ்ங்குவதற்கு தற்காலிகமாகவேனும் வட கிழக்கு இணைந்த தீர்வு அவசியம்.
புலிகள் இந்தியாவின் தீவிர நலன்களை எதிர்த்துக்கொண்டு மரபு வழி இராணுவப் போரை நிகழ்த்த முடியாது. ஒரு இயக்கம் பாசிசமாகப் பரிமாற்றம் பெற்ற பின்னர் மக்கள் ஆதரவுடன் கெரில்லப்போர் முறை சாத்டியமற்றது. இந்தனிலையில் வட-கிழக்கு குறு நில மன்னர்களாவதற்கு தயாராவார்கள் என்பது சில ஆய்வாளர்களின் கணிப்பு. சம்பந்தரது வாக்குமூலம் இதைத் தெளிவுபடுத்துகிறது.
இங்கே இந்திய வர்த்தக நலன், புலிகளின் அதிகார ஆசை, மகிந்தவின் வியாபார அரசியல் நலன் என்ற மூன்றையும் இணைத்தால் சமாதான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படலாம் என்ற நம்பிகைக்கு இடமுண்டு.
இப்போதெல்லாம் போர் நடைபெறுவதற்கான சான்றுகள் இல்லை. இது வெறும் புலிகள் – அரசு ஆகியவற்றின் ஊடகப் பிரச்சாரமென்றும் ஜே.வி.பி சார் ஆய்வாளர்கள் கருதும் நிலையில் புலிகளின் பக்கத்திலிருந்து அரச செய்திகளூக்கு மறுப்புத் தெரிவிக்கப்படுவதில்லை என்பதியும் கருத்திற்கொள்ளலாம்.
தவிர, சமாதான ஒப்பந்ததிற்குப் பின்னதாக சந்திரிக்கா சார் அரசியல் சக்திகளையே அதிகாரத்திற்க்குக் கொண்டுவர இந்தியா விரும்பும் என்பது பலரின் கணிப்பு. இதன் அடிப்படையிலேயே மகிந்த அரசு சந்திரிக்காவின் குடியுரிமை பறிப்புத் தொடர்பாகப் பேசிவருவதும் கவனிக்கத்தக்கது.
தவிர, புலிகள் ஒருதலைப்பட்ட போர் நிறுத்தம் அறிவித்த அதே நாளில் புலிகளுக்கும் அரசிற்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏலவே கைச்சாத்தாகிவிட்டதா கொழும்பு வட்டாரத்தில் உலவும் வதந்தி நம்பத்தகுந்த ஒன்றல்ல.
புகலிட அரசியலிலும் சந்திரிக்கா சார் மேல்தட்டு கனவான்களின் புதிய அரசியல் மாற்றங்களும் இங்கு கவனிக்கத்தக்கது.
புலிகள் தமது தோல்வியை மறைக்க எதேதோ கதையளப்பதுபோல, வீழ்ந்துகொண்டிருக்கும் புலிகளுக்கு முட்டுக்கொடுக்கிறீர்களா உதயகுமார்.
ஏதோ அரசுடன் கூட்டுச்சேர்ந்தான் இந்த தோல்வி என்று….
புலிகள் நியாயமான தீர்வை ஏற்றுக்கொள்வார்கள் என்று இன்று மட்டும் சம்பந்தன் கூறவில்லை.
நீண்டகாலமாகவே கூறிவருகின்றனர் கூட்டமைப்பினர்.
சிவாஜிலிங்கம் பலதடவை கூறிவிட்டாhர்.
சிறிகாந்தா தனது முதலாவது பாராளுமன்ற உரையில்கூட கூறினார்.
சந்திரிகாவுக்கு மகுடம் சூட்ட இந்தியா முயல்வதாகக் கூறுகின்ற நீங்களே, பின்னர் மகிந்தவின் வியாபார அரசியல், புலிகளின் அதிகார ஆசை, இந்தியாவின் வர்த்தக நலன் மூன்றையும் இணைத்தால் சமாதான ஒப்பந்தம் என்கிறீர்கள்;.
தன்னை வீழ்த்திவிட்டு சந்திரிகாவை முடிசூட்ட நினைக்கும் இந்தியாவுடன் மகிந்த கூட்டு என்பது முரண்படுகின்றதே.
என்னவோ, புலிகள் தோற்கவில்லை, இரகசிய ஒபப்ந்தம் செய்திருக்கிறார்கள் என்று புலிகளின் வால்களுக்கு சமாதானம் சொல்கிறீர்கள் அதற்கு போய் எதை எதையோ எல்லாம் முடிச்சுப்போடுகிறீர்கள்.
மோகன்,
புலிகள் எப்போதோ தோற்றுப் போய்விட்டார்கள். போராட்டத்தைச் சீரழித்தவர்களே புலிகள் தான். வெற்றி தோல்வி என்பது எத்தனை பேர் செத்துத் தொலைகிறார்கள் என்பதல்ல. எதனை அடைகிறார்கள் என்பதே அடிப்படையானது. எந்தப் போராட்டமும் மக்கள் சார்ந்த மக்கள் போராட்டமாக உருவாகாத நிலையில் அப்போராட்டமானது அந்தந்தக் குழுக்களின்நலன் சார்ந்த போராட்டமாகவே அமையும். மக்களைப் போராட்டாத்திலிந்து அன்னியப்படுத்திய போதே புலிகள் தோற்றுப் போய்விட்டார்கள். புலி சார்ந்தவர்களோ போராட்டத்தை ஒரு இலத்திரனியல் விளையாட்டுப் போலவே கருதுகிறார்கள். அதிகமாக இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் செத்துப் போனால் அது வெற்றியாகவும் வீரமாகவும் கருதுகிறார்கள். புலியின் பாசிசமும் இதை ஒட்டியே உருவாகிறது.
மக்கள் நலன் சார்ந்த மக்களை அணிதிரட்டி அவர்கள் மத்தியிலான முரண்களைக் கையாளுகின்ற புதிய அமைப்பு பேரின வாததிற்கெதிரான போராடத்தை முன்னெடுக்கும் போதே புலிகள் போன்ற அமைப்புக்கள் அழிக்கப்படும்.
அது வரை புலி அல்லது புலி எதிர்ப்புப் பாசிசம் உங்களையும் என்னையும் மிரட்டிக்கொண்டேயிருக்கும்.
தோற்றுப் போகும் புலிகளும் தோற்றுப்போகும் புலி எதிர்ப்பு-அரச பாசிசமும் தோற்கடிக்கப் படுவதற்காக இணைந்து கொள்வோம். புதிய நமது சூழலிற்கேற்ற கருத்தை உருவாக்க குறுகிய வட்டத்திலிருந்து வெளியேறுவோம்.
நன்றி உதயகுமார்,
மக்கள் நலன் சார்ந்த மக்களை அணிதிரட்டி அவர்கள் மத்தியிலான முரண்களைக் கையாளுகின்ற புதிய அமைப்பு பேரின வாததிற்கெதிரான போராடத்தை முன்னெடுக்கும் போதே புலிகள் போன்ற அமைப்புக்கள் அழிக்கப்படும்.
என்ற உங்களுடைய கருத்து எனக்கும் உடன்பாடானதுதான்.
புலிகளும் அரசும் உடன்பாடு என்பது இப்போது சாத்தியமானதா? இராணுவ ரீதியில் வென்றுகொண்டிருக்கும் அரசுக்கு அப்படியொரு தேவை ஏற்படாது. வேண்டுமானால் அடுத்த தேர்தலில் தமிழ்மக்களை வாக்களிப்பிலிருந்து தடுப்பதற்கு தேவைப்படலாம்.
நடைமுறைக்கு சாத்தியமான தீர்வென்றுக்காக தமிழ்மக்கள் ஒன்படவேண்டியது இன்று அவசரமானதும் அவசியமானதும் கூட.
புலி பாசிசம் என்பது தவிர வேறு எதுவுமே தெரியாத முட்டாள் கூட்டங்கள் நீங்கள் தான். உங்களுக்கு புலி பாசிசத்துக்கும் அதிகாரத்துக்கும் தான் சண்டை படுகிறார்கள் என்றால் உயிரைப் பணயம் வைத்து எத்தனை போராளிகளை இழந்து இருக்கிறார்கள்?
இலங்கை அரசாங்கம் கொடுக்கும் பணம் வேலை செய்கிறது.
தமிழன்,
புலிகள் பாசிஸ்டுக்கள் என்று யாரும் பீற்றிக் கொள்ளவில்லை!
ஆயிரக்கணகில் போராளிகளையும், அப்பாவிகளையும், அறிவு ஜீவிகளையும் கொன்று குவித்து தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தைப் பலவீனமாக்கியவர்கள் இந்தப் பாதகர்கள்.