விடுதலைப்புலிகள் அமைப்பில் புதிய இராணுவப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தனிநாட்டை அமைக்கும் நோக்கில் இந்த இராணுவப் பிரிவை அவர்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணையை இன்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
புலிகளின் இந்த நடவடிக்கை காரணமாக அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். என அவர் மேலும் தெரிவித்தார். புலிகளைக் காரணம் காட்டி தமிழ்ப் பகுதிகளில் சிங்களக்குடியேற்றங்களை துரிதமாக மேற்கொள்ளவும், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள சிங்களப் பகுதிகளிருந்து எழும் எதிர்ப்புப் போராட்டங்களை நசுக்கவும் இலங்கை அரசு முனைந்து வருகிறது என ஆய்வாளர்களால் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.