தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தடையை நீடித்து இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை விடுதலைப் புலிகள் மீதான தடையை இரண்டு ஆண்டுகளுக்கே நீடிக்கப்படுவது வழமையாக இருந்தது வந்தது. புதிய தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்திய அதிகாரவர்க்கத்தின் நலன்களுக்காக இலங்கையில் நடத்தப்பட்ட இனவழிப்பு மாதத்தில் இத் தடை நீடிப்புச் செய்தியை பீரிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் வலுவை பல்தேசிய வர்த்தக நிறுவனங்களே கொண்டுள்ளன. மக்கள் வெறும் மந்தைகள் போன்று வாக்களிக்கும் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர். பல்தேசிய நிறுவனங்கள் தமது கொள்ளையைத் தீவிரப்படுத்தவும் இலங்கையின் உதாரணங்களிலிருந்து கற்றுக்கொண்டு இந்தியா இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தவும் நரேந்திர மோடி போன்ற பாசிஸ்டுக்களை இந்த நிறுவனங்கள் ஆட்சியதிகாரத்தில் அமர்த்தவிருக்கின்றன. இந்திய அதிகாரவர்க்கமான பல்தேசிய நிறுவங்களதும் ஏகபோக அரசுகளதும் பங்காளிகள், காங்கிரஸ் கொள்ளையிட அனுமதிக்கும் அளவு போதாது என்று மிக நீண்டகாலமாகவே அதிர்ப்தி தெரிவித்து வந்தன.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் தீவிரம் போதாது என அமெரிக்காவில் அமர்ந்துகொண்டு இந்திய அரசை ஒபாமா கடிந்துகொண்டார். இப்போது காங்கிரஸ் என்ற பேய்களிடமிருந்த அதிகாரம் பாரதீய ஜனதா என்ற இரத்தம் குடிக்கும் பேய்களிடம் ஒப்படைக்கப்படப் போகின்றது.
இந்த வேளையில் இந்திய அதிகாரவர்க்கத்தின் ஆணையின் அடிப்படையில் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது.
நரேந்திர மோடி என்ற கோரமான இனக்கொலையாளி ஆட்சிக்கு வந்த பின்னர் புலிகள் என்று காரணம்காட்டி போராட்டங்களையும் மக்கள் இயக்கங்களையும் அழிப்பதற்கு இன்று கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதுவும் இனவாதிகளான தமிழ்த் தேசிய வியாபாரிகளின் ஏகோபித்த ஆதரவோடு அழிவுகளை ஆரம்பிக்க மோடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
They will stop all kinds of organisations all over the world, No more violence.
Dr, all over the world they’ll stop what kind of organizations…?
No more violence in India or all over the world…?
But for USA & weapon manufacturing countries they need violence in other countries…