சற்றே ஆழப் பார்ப்போமானால், சிறீ லங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தம் என்பது, வெறுமனே இரண்டு பாசிச அமைப்புக்களிடையேயான போர் என்ற நிலையைத் தாண்டி, குறித்த இந்த இரண்டு அமைப்புக்களும் இணைந்த நிராயுத பாணிகளான மக்களுக்கெதிரான யுத்தமாகவே வெளிப்படுகிறது. இந்த இரண்டையும் சுற்றி வினையாற்றும் தனிமனிதர்கள், குழுக்கள், கட்சிகள், அமைப்புக்கள் என்று அப்பாவி மக்களின் அவலத்திலும் அழிவிலும் தமது சொந்த இருபிற்காக அரசியல் வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் ஒட்டுமொத்த மக்களையும், அது தமிழ் பேசும் சிறுபான்மையினராகட்டும், சிங்கள பெரும்பான்மையினராகட்டும், வன்முறைக் கலாச்சாரத்திற்குப் பழக்கப்படுத்திவிட்ட இந்த இரண்டு பாசிச அமைப்புக்களும், ஒற்றைத் திசையிலேயே தம்மை நகர்த்திக் கொள்கின்றன. இதற்கு எதிரானவர்கள் சமூகத்திலிருந்து அன்னியமாக்கப்பட்டு, சமூக விரோதிகளாகவும், தேசத் துரோகிகளாகவும், குற்றவாளிகளாகவும் குறியிடப்பட்டு வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்கள் மீதான வன்முறையும் நியாயப்படுத்தப்படுகின்றது. சமூக அங்கீகாரமாக்கப்படுகின்றது. இதுதான் சுந்தரத்திலிருந்து, ரஜனி திரணகம உள்பட, லசந்த விக்கிரமதுங்க வரை கொலைசெய்யப்பட்ட சமூகத்தின் முன்னோடிகளின் அழிப்பிற்குப் பின்னாலுள்ள சூத்திரமாகும். இது இன்று அப்பாவி மக்கள் வரை விரிவாக்கப்படுகிறது. அப்பாவிகளின் மரண ஓலத்திற்கு மத்தியில் புலிகளை அழிப்பதாக தன்னை நியாயப்படுத்திக் கொள்ளும், மகிந்த குடும்ப அரச பயங்கரவாதம் ஒருபுறத்திலும், மக்களின் இரத்த வெள்ளத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளமுயலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற அதிகார வெறிகொண்ட தனிமனிதனைச் சுற்றியிருக்கும் புலிகள் மறுபுறத்திலும் அழிவிற்காக தம்மாலான அனைத்து சக்திகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அரசின் பாசிச அதிகாரத்துவம், ஒருபுறத்தில் ஒவ்வொரு பெரும்பாயின மனிதனையும், தற்காலிகமாகவேனும், அதன் சிந்தனைத்துவத்தின் அங்கமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. இதன் தவிர்க்கமுடியாத பகுதியாக இலங்கை இராணுவமயப்படுத்தப்பட்டு இந்த இராணுவப் பொருளாதாரத்தில் இலங்கைக் கிராமங்கள் பொருளாதார ரீதியாகத் தங்கியிருக்கும் நிலை உருவாகியுள்ளது. பல சிங்களக் கிராமங்களில் யுத்தம் என்பது வாழ்வாதாரப் பிரச்சனையாக மாறிவிட்டது. அதுவும் தமது சொந்தச் சகோதரர்களான தமிழ் பேசும் மக்களின் அழிவிற்கான யுத்தம்.
சிறீலங்கா மகிந்த குடும்பம், புலிகளிற்கெதிரான யுத்தம் நடாத்திக் கொண்டிருப்பதாக தனது சொந்த அரசியற் சட்ட வரம்புகளை வகுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது புலிகளை அழிப்பதற்கான யுத்தம் நடாத்தவில்லை என்பது தர்க்கரீதியான உண்மையாகும்.
1. புலிகளைக் சுட்டிக்காட்டியே வளரும் அரச பாசிசத்தில் வளர்ச்சியில் நிலைகொண்டிருக்கும் மகிந்த குடும்ப அரசு, புலிகளின் அழியும் பட்சத்தில் நிலைகொள்ள முடியாது.
2. இராணுவத்தை மையமாகக் கொண்டு வளரும் இலங்கைப் பொருளாதாரம், இராணுவத்தின் இருப்புத் தேவையற்ற பட்சத்தில் சிக்கலுக்குள்ளாகும்.
தவிரவும், இவ்விரு காரணிகளும் தான் புலிகளுக்கெதிரான யுத்தம் என்ற போர்வையில் அப்பாவி மக்களை அழிக்கவும் பயன்படுகிறது.
உண்மையாகவே புலிகளின் அழிவில் தான் தனது அரசியலின் இருப்பை உத்தரவாதம் செய்துகொள்ள வேண்டுமென்று மகிந்த குடும்ப அரசு கருதியிருக்குமானால், தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைக்களுக்கான அரசியல் தீர்வை அது முன்வைத்திருக்கும், அதுவும் மகிந்த என்கிற பாசிஸ்ட், தேசிய வீரனாக, சிங்கள மக்கள் மத்தியில் ஓஹோவென்று கொடிகட்டிப்பறக்கும் இந்தசந்தர்ப்பத்திலாவது அதை நடத்திக் காட்டியிருக்க முடியும்.
சர்வதேசச் சூழலை லாவகமாகக் கையாழும் திறன் கொண்ட மகிந்த அரசிற்கு, புலிகள் போன்ற அமைப்புகள் உருவானதற்கான அடிப்படை என்பது தெரியாதவொன்றல்ல. தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக உரிமைகள் பறிக்கப்பட்டபோது, படிப்படியாக எழுந்த போராட்டங்களின் விளைவுதான், புலிகள் அமைப்பும் என்பதை அரசியற் கற்றுக்குட்டி கூட ஏற்றுக்கொள்ளும்.
இந்த சூழலில், மகிந்தவிற்குத் தேவைப்பட்டது போர் மட்டுமே தவிர, புலிகளின் ஒட்டுமொத்த அழிவல்ல.
புலிகளைக் காரணம் காட்டியே இலங்கை மக்களை ஒட்டச் சுரண்டும் வரை மகிந்த அரசு வாழ்ந்து கொண்டிருக்கும்.
மறு புறத்தில், உலகத்தின் மிகவும் பணபலம் கொண்ட அமைப்பான புலிகள், ஆயிரக்கணக்கான மக்களின் குரூரமான மரணத்தின் மத்தியில், தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர், புலிகள் போராட்டம் என்ற போர்வையில் ஏற்படுத்திய அனர்த்தங்களும் அழிவுகளும் ஏராளம். ஒரு சில இராணுவச் சிப்பாய்களின் அழிவிற்காக, நூற்றாண்டுகள் பழமையான, முல்லைத்தீவின் பொருளாதாரத்தின் ஆதாரமான கல்மடுக் குளத்தைத் தகர்த்தபோது, கொண்டாடிக் குதூகலித்த அருவருப்பான பாசிசத்தை வளர்த்து வைத்திருக்கும் புலிகள், மக்களைப் பற்றி எப்போதுமே சிந்திததில்லை. மறு புறத்தில் மக்களின் அழிவிலிருந்தே புலிகளின் அரசியல் கட்டியெழுப்பப்படுகிறது. இன்னும் ” நாங்கள் தோற்கவில்லை” என்று மார் தட்டிக்கொள்ளும் புலிகளின் அரசியற் பொறுப்பாளர் நடேசன், செத்துப் போன அப்பாவிகளுக்காக கண்துடைப்புக்காகவேனும் கண்ணீர் வடிக்கவில்லை.
“புலிகள் பின் வாங்குவதும் மறுபடி வருவதும் வழமை” என்று சமாதனம் வேறு சொல்லித்தரும் நடேசனுக்கு, அவர்கள் “பின்வாங்கும் போதும் மறுபடி வரும்போதும்” கொசுக்கள் போன்று கொன்றூ குவிக்கப்படும் மக்களைப் பற்றி எந்தத் துயரமுமில்லை.
உலகெங்கும் தனது வியாபார சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியுள்ள தெற்காசியக் கோடீஸ்வரர்களுள் ஒருவரான பிரபாகரனுக்குத் தேவை தனது அதிகாரம் மட்டுமே.
ஆக, அரசிற்குப் யுத்தம் தேவை. அதற்குப் புலிகள் தேவை. புலிகளுக்கு மக்கள் தேவையில்லை அதனால் யுத்தம் பற்றி அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.
இன்றைய அரசியற் பகைப்புலைத்தில் புலிகள் என்ற அமைப்பு தன்னைக் கலைத்துக் கொண்டு, தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாயின், அரசாங்கம் யுத்தம் செய்வதற்கான காரணம் வலுவிழந்ததாகிவிடும். அழிக்கப்படும் தமிழ் மக்களை எந்த வகையிலும் பாதுகாக்க முடியாத,மக்களை நம்பாத புலிகள் அமைபுக் கலைக்கப்படுமாயின், அரசாங்கம் தனது இராணுவத்தை வைத்திருப்பதற்கான காரணத்தைச் சிங்கள மக்கள் மத்தியில் முன் வைக்க முடியாது. யுத்தம் நிறுத்த்தப்பட்டு அழிந்து சாம்பாலாகிக் கொண்டிருக்கும் எமது குழந்தைகளும், இளைஞ்ர்களும், முதியோரும், பெண்களும் தற்காலிகமாகவேனும் அழிவின் விழிம்பிலிருந்து காப்பாற்றப்படுவர்.
புலிகளோடு இணைந்து, தேர்தல் வேட்டைக்காக மக்களின் அவலக் குரல்களின் மத்தியில் காத்திருக்கும் EPDP,EPRLF,PLOT,TELO,TNA… போன்ற அனைத்துக் கட்சிகளும் தம்மைக் கலைத்துக் கொண்டால் மகிந்த குடும்ப பாசிசத்திற்கெதிரான மக்கள் சக்தி புதிய உத்வேகத்துடன் முன்னெழும்.
கசப்பான உண்மைகளை ஆதித்யன் துணிந்து வெளிப்படுத்தியுள்ளீர்கள். பாசிச மகிந்தா அரசினுடைய இருப்பு என்பது பாசிச புலிகளின் இருப்பிலேயே தங்கியுள்ளது. பாசிச புலிகளும் பாசிச புலிகளுக்கு சற்றும் சளைக்காத ஏனைய பாசிச மகிந்தாவின் எடுபிடி தமிழ் குழுக்களும் புலிகளின் துதிபாடிகளான ரி.என்.ஏ எல்லாம் மக்கள் மத்தியிலிருந்து துரத்தி அடிக்கப்படவேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும். இந்த பொன்னான காலம் எப்போதுவரும்?
:://புலிகளோடு இணைந்து, தேர்தல் வேட்டைக்காக மக்களின் அவலக் குரல்களின் மத்தியில் காத்திருக்கும் ஏPDP,ஏPற்ள்F,PளோT,Tஏளோ,Tணா… போன்ற அனைத்துக் கட்சிகளும் தம்மைக் கலைத்துக் கொண்டால் மகிந்த குடும்ப பாசிசத்திற்கெதிரான மக்கள் சக்தி புதிய உத்வேகத்துடன் முன்னெழும்//
இதுக்கு அனைத்து தளங்களும் இவர்களையும்
அம்பலபடுத்தினால் தான் அரசின் காலை
நக்குவதை நிறுத்டுவார்கள். முயற்ச்சி செய்வோம்.
ஆதித்தியன் சிங்கள அரசு பாசிசஅரசு என நிறுவமுற்படுவதாலும்
அதிகாரம் இல்லாத சிறுகுழுக்ககலையும் கலைக்கச்சொல்லி அறைகூவல்
விடுவது……. சொந்த இனத்தில் தோன்றிய பாசிசத்தை பாதுகாக்க நடவடிக்கை
எடுப்பது மாதிரியல்லவா நினைக்க தோன்றுகிறது. இல்லையா?
புலிகலின் இருப்பு மகிந்த்வுக்கு தேவை என்பதைநான் ஏற்க்கொள முடியது. மகிந்த ஒரு முட்டாள. சர்வதெச சுழல் அவனுக்கு சாதகமக ஆமைந்து விட்டது. மகிந்த ஒரு கீரோயிசப் பேர்வழி. அரசியலுக்கு வர முதல் அவன் ரிவி நாடகஙகலில், கீரோவாக நடித்தவன். இப்பொதும் அவன் ஒரு கிங் ஆக தான் உருவகபடுத்த்ப் படுகின்ரான்.
அவனது எண்ணம் அவன் ஒரு கிங் ஆக வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும். இந்திய ஜனதிபதி 26ம் திகதி சொன்ன செய்தி ‘பயஙகரவாததை வேரொடு ஒடுக்க உலகநாடுகள் முன்வர வேன்டும். அது தான் இந்தியா உதவுகிறது. இப்போதெ இந்த்ய பதிரிகைகள் மகிந்தவை ஒரு முனுதாரனமாக எளுதுகின்றன. அவன் இனி வெளிட்டு உதவி & முதலீடு நிறய வரும் என்று எதிர் பார்கிறான். உண்மை. சீனா, இந்தியா ஜப்பான் இலங்கை தமது ஆதிக்கதில் வர வேண்டும் என போட்டி போடுகின்றன.
கெல உறுமய வின் அதே கொள்கை தான் மகிந்தவுக்கு. அரசியல் ரீதியாக யோசிப்பதை விட தமிழரை இன அடயாழம் இண்றி ஒளிப்பதையே அவன் விரும்புகிறான். வேன்டுமானால் கொழும்பில் அவனாக குண்டு வைகலாம் ஆனால் புலிகளை விட்டு வைக்க சிறிதும் விரும்ப மாட்டன்.
டேவிட்,
புலிகள் அல்லது அதனை முன் வைத்த கருத்தமைவு மட்டும் தான் மகிந்த குடும்பத்தின் தொடர்ச்சியான இருப்பை உறுதிப்படுத்தும்.
புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டால், மகிந்தவின் பாசிசம் முடிபுக்கு வந்துவிடும். பலஸ்தீனம் இல்லாமல் இஸ்ரேலின் இருப்பு உறுதியற்றதாகிவிடுவதைப் போல…
இது மேலே சொல்லப்பட்ட காரணங்களை வலுப்படுத்தும் மற்றொரு நியாயக் கூறாகும்.
இனி ஒரு தளம் மட்டுமே நடுநிலமையுடன் செயல்படுகிறது .
ஆதித்யன் மென்பொருள் வல்லுனராக இருப்பார் போலும். அவருடைய சிந்தனை அதனைத் தான் புலப்படுத்துகிறது.
மிகச் சாதாரணமாக சில கேள்விகள்.
1. புலிகளைக் சுட்டிக்காட்டியே வளரும் அரச பாசிசத்தில் வளர்ச்சியில் நிலைகொண்டிருக்கும் மகிந்த குடும்ப அரசு புலிகளின் அழியும் பட்சத்தில் நிலைகொள்ள முடியாது.//
புலிகள் அழிந்து விட்டால் ஒரு பூனையை உருவாக்க மகிந்தவுக்கு முடியாதா? ஒரு ஜேவிபி. ஏதாவது ஒன்று. இது ஒனறும் கடினமானதல்ல. கற்பனை எதிரியை உருவாக்கிக் கூட ஆட்சியைத் தக்கவைக்கலாம். இதனைப் புரிந்து கொள்ளவேண்டுமானால் ஜோர்ஜ் ஓவல் எழுதிய 1984 என்ற நாவலை வாசிக்கவும்.
2. முரண்பாடுகளை கையாளும் மார்க்சிய அடிப்படையே ஆதித்யனின் சிந்தனையில் தகர்ந்து போகிறது. மார்க்சிய ஆசான்களான மார்க்ஸ்க்கும் லெனினுக்கும் மாசேதுங்குக்கும் இது புலப்படவில்லையே. புலப்பட்டிருந்தால் தொழிலாளர் போராடுவதால் தான் ஜார் மன்னன் கொடுங்கோலனானான் எனக் கண்டு தொழிலாளர் போராட்டத்தைக் கைவிடும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கலைத்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது. ஜார் மன்னனுடைய இருப்பு தேவையற்றதாகிவிடும். அந்தோ ஜார் மன்னன் ஒழிந்தான் என்று அவன் ஒழிந்து போயிருப்பான்.மாசேதுங் சீன்க் கம்யீனிஸ்ட் கட்சியைக் கலைத்துவிட்டிருந்தால் சீன மக்களுக்கு இவ்வளவு அழிவு வந்திருக்காது. ஜப்பான் தானாகவே ஒடிந்து விழுந்திருக்கும். ஹோசிமிக்குக் கூட அந்த அறிவு வரவில்லையே என்ன செய்வது ஆதித்யன் நீங்கள் அந்தக் காலத்தில் இல்லை. இருந்திருந்தால் இவர்களுக்கெல்லாம் ஆசானாகியிருப்பீர்கள்.
ஆனால் ஆதித்யன் முரண்பாட்டின் மறுதலையை வசதியாக மறைத்து விடுகிறார். அதாவது ஜாரின் கொடுங்கோல் ஆட்சி தான் கம்யூனிஸ் கட்சியின் தோற்றத்தற்கு வழி வகுத்தது என்பதை. சீன மற்றும் வியட்னாமியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உருவாக்கமும் இவ்வழி தான்.
சிங்களப் பேரினவாத அரசின் ஒடுக்குமுறை தான் புலிகளின் உருவாக்கம். அதுவும் உடனடியாகப் புலிகள் உருவாகவில்லை. தமிழரசுக்கட்சி> தமிழ்க்காங்கிரஸ். தமிழா;விடுதலைக் கூட்டணி என்று அதற்கு ஒரு இயங்கியல் வளர்ச்சி இருக்கிறது.
ஒருவரும் ஒன்றையும் கலைக்கத் தேவையில்லை. முடிந்தால் குறைந்த பட்சம் ஒரு சமஸ்டி ஆட்சியை மகிந்த முன்வைத்து நடைமுறைப்படுத்தட்டும். எல்லாம் தானாக உதிர்ந்து போய்விடும்.
ஒடுக்குபவரை ஒடுக்க வேண்டாம் என் றுசொல்வதற்குப் பதில் ஒடுக்கப்படுபவரைப் போராட்டத்தைக் கைவிடச் சொல்லும் இந்தத்திமிர்த்தனம் தான் ஆதிக்கத் திமிர்த்தனம் .
மற்றைய தமிழ்க்ட்சிகள் கூட ஒரு காலத்தில் தமிழ் மக்களுடைய விடுதலைக்காகவே உருவானவர்கள். புலிகளுடைய தவறான எதேச்சாதிகாரப் போக்கும். இந்தக் கட்சிகளுடைய ஆளுபவர்களுக்குச் சோரம் போகும் தலைமையும் தான் தவறானவையே தவிர அந்த தோழர்களின் விடுதலை உணர்வல்ல. அவர்களைக் கூட கலைக்கச் சொல்ல புலிகளுக்கு உரிமை இல்லை எனும் போது ஆதித்யனுக்கு எங்கிருந்து அது வந்தது. ?
இனி ஒரு என்ன மார்க்சியத் திரிப்பா செய்கிறது.
புலியும் ரஸ்ய கம்யூனிசக் கட்சியும் சீனக் கம்யூனிசக் கட்சியும் ஒன்றோ ராவணா?சொல்லு ராவணா!
ஆதித்தியன், ராவணனின் ராவல் கேள்பவிக்குப் பதில் இல்லையா>
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.
ராவணா,
மார்க்சியம் தொடர்பான உங்கள் சந்தேகங்களை இப்போது விவாதிக்கலாம் என எண்ணுகிறேன்.
ஒரு திருடன் சிறு வழிப்பறிகளை செய்து, பின்னர் வீடுகளை உடைத்துத் திருடும் அளவிற்கு முன்னேறி, இப்போ சர்வதேசக் கொள்ளைக்காரனாக மாறிவிட்டான் என்பதையும் நீங்கள் மார்க்சிய இயங்கியலோடு பொருத்தி விடுவீர்கள் போலிருக்கிறது.
இயங்கியலின் சாரம்சம் என்பது மாற்றம் என்பதை முதலாவதாகப் புரிந்துவைத்திருகிறீர்கள். மகிழ்ச்சி!
ஆனால் அதை ஆழப் புரிந்து கொள்வதற்கு மேலும் சில அம்சங்களையும் கருத்திற்கொள்ள வேண்டும்.
ஒரு பொருளில், அது இயற்கை சார்ந்ததாகவோ அல்லது சமூகம் சார்ந்ததாகவோ இருக்கலாம், மாற்றம் ஏற்படுவதற்கு உள்ளார்ந்த காரணிகளும் அதே வேளை வெளிக்காரணிகளும் காரணமாக அமையலாம். ஆனால் புறக்காரணங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உந்துசக்தியாக அமைய உள்ளார்ந்த அகக்காரணிகளே அதன் அடிப்படையாக அமைகிறது.
ஒரு சமூகத்தைப் பொறுத்தவரை அதன் இயக்கத்தில் அகக் காரணிகளாக அமைவது வர்க்க முரண்பாடுகளே. அதன் புறக்காரணிகள் என்பன அதனை ஆளும் தத்துவம், அரசு, கருத்ட்கு, விடுதலை இயக்கங்கள், புலி, மகிந்த … போன்றன அமையலாம். நீங்கள் இங்கு பேசுவது புறக்காரணிகளின் இயக்கத்தைத் தீர்மானிக்கின்றன என்பதையே. இதைத் தான் கருத்து முதல் வாதம் என்பர். அதாவது ஒரு கருத்தானது சமூக வளர்ச்சியை நிர்ணயிக்கும் என்பதே.
இந்து மதமே இந்திய சமூக அமைப்பைத்தீர்மானிக்கிறது என்று கூறும் தலித்திய வாதிகளுகளும் பிராமணர்களும் ஒரே வகையான கருத்து முதல் வாதிகளே. எனவே மார்க்சியத்தின் அடிப்படைகளுக்கு எதிரானவர்களே.
மார்க்சியம் இவ்வாறு வர்க்க முரண்பாடுகளை வெளிப்படையாக, தர்க்க ரீதியாக ஆராய்வதால், வர்க்கப் போராட்டத்திற்கான சாத்தியப்பட்டையும் கூறுகிறது. இதனால் தான் மார்க்சியத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தத்துவம் என்பர்.
நீங்கள் கருத்து முதல்வாதத்தை மார்க்சியம் என்று தவறாகப்புரிந்து கொண்டாலும், மார்க்சியம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தத்துவம் என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் எனநம்புகிறேன் இதனால், இந்தத் தத்துவத்தைப் புரிந்துகொள்வது உங்களுக்கு இலகுவாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
முரண்பாடு தொடர்பாகவும் இதே தவறான கூற்றை பற்றிக் கொள்வதால் தான் எல்லாவற்றையும் குழப்புகிறீர்கள்.
வர்க்கங்களிடையேயன முரண்பாடு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக வாய்ப்பளித்தது. ஆனால் இலங்கையில் இதுவே ஏகாதிபத்தியங்களின் நலனுக்காகக் கையாளப்பட்டதன் விளைவாக, தேசிய இனங்களிடையேயன, பணம்படைத்தோரிடையேயான போட்டியாக உருவெடுத்தது. இதனை உங்களைப்போல் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் இரண்டு பாசிசங்களை வளர்த்தெடுகத் துணைபோனார்கள். அவைதான் அரசும் புலியும்.
இன்று புலி இல்லாமல் ஆதல் என்பது பாசிசம் இல்லாமல் ஆதல் என்பதற்கு சமமானது. அரச பாசிசத்திற்கெதிரான போராட்டத்தைப் பின்னடையச் செய்யும் புலியின் மறைவு என்பது சமூகத்தைச் சரியாகப் புரிந்து கொன்ட புதியவர்களை அரச பாசிசத்திற்கெதிராக முன்நிறுத்த உதவும். அதேவேளை தற்காலிகமாகவேனும் மகிந்த பாசிசத்தின் பிடியிலிருந்து மக்கள் அழிவைப் பாதுகாக்க உதவும்.
புலிகளை மட்டுமல்ல ராவணா, அதன் பாசிச சிந்தனை முறையும் இல்லாமல் ஆதல் வேண்டும். இதற்காகவும் மகிந்த குடும்ப பாசிசத்திற்கெதிராகவும், உலகெங்கும் சுரண்டி வாழும் ஏகாதி பத்தியத்துற்கெதிராகவும், உங்களைப் போல மார்க்சியப் பற்றுள்ளவர்கள் மார்சியத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு போராட முன்வரவேண்டும், இனியொருவும்,நானும் இணைந்து கொள்வோம்.
Hellow, athithyan,
you have not answered the question raised by Ravana. you are trying to establish your point by confusing yourself and the readers by going back to the Marxist philosophy. What i can see is that you have not even gone beyond the level of elementary marxism. and i am sure you have learned it through some confusing literature that has been written to ridicule Marxism.
The plain truth from your logic some way or the other you want to disarm the LTTE. you can straightaway state that without taking so much of trouble of relating it to an unfamiliar philosophy.
Your argument is not much better than that of Mahinda who kill the tamil people in the name of liberating them!
siththan
Hi siththan
Why can you teach me yr advanced Marxism?
How are you contradicting to my elementary Marxism?
How am I confusing the readers?
y cant you do a brief class analysis on LTTE and the government using your advanced Marxism?
தெரிந்து கொள்ள இத்தனை “முகங்களா”?
எனது குறிப்பைத் திரும்பவும் படிக்கவும். புலிகளும் இந்தக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றென்று நான் ஒருபோதும் அதில் குறிப்பிடவில்லை. நான் சுட்டிக்காட்டியதெல்லாம் அந்தத் தர்க்கத்தைத்தான். அதாவது போராட்டம் அல்லது புரட்சி தானாகத் தோன்றுவதில்லை. அது ஒடுக்குமுறையின் எதிர்விளைவு என்பதைச் சொல்லத்தான். ஒடுக்கப்படுபவர்கள் ஆயுதத்தைப் போட்டுவிட்டுச் சரணடைந்தால் எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது என்பதை விளக்கத்தான் அது.
ஆயுதத்தைப் போடுவானேன். முற்றாக அழிக்கப்பட்டு விட்டால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? சரத் பொன்சோகா சொல்கிறார் 95 வீதம் புலிகளை அழித்தாயிற்று. அப்படியே வைத்துக் கொண்டால் இன்னும் மீதமுள்ள 5 வீதத்தையும் அழித்துவிட்டவுடன் பிரச்சினை தீர்ந்து விடுமா? அமெரிக்காவும் சதாமை அழித்து ஒழித்தாயிற்று. ஈராக்கிய மக்களின் பிரச்சினை தீர்ந்து விட்டதா? பற்றிக் லுமும்பாவை அழித்தாயிற்று .அதன்பின் கொங்கோ என்ன ஆயிற்று?
இனி அடுத்த விடயத்துக்கு வருவோம். ஆதித்யன் சொல்கிறார்: நான் புறக்காரணிகள் ( தத்துவம் அரசு கருத்ட்கு விடுதலை இயக்கங்கள் புலி மகிந்த … ) இயக்கத்தைத் தீர்மானிக்கின்றன என்று சொல்கிறேனாம். அது கருத்து முதல் வாதமாம்.
ஒரு வாதத்திற்காக அப்படியே எடுத்துக் கொள்வோம். அதே புறக்காரணிகள் பற்றித் தானே ஆதித்யனும் பேசியிருக்கிறார். புலிகள் ஆயுதத்தைக் கீழே போட்டதும் பிரச்சினை இலகுவாகிவிடும் என்று. இதிலே ஆதித்யன் உருப்போட்ட அகக் காரணியும் பொருள் முதல்வாதமும் வர்க்க முரண்பாடும் மார்க்சியமும் எங்கே போயின?
புலிகளை அழிப்பதால் பிரச்சினை தீராது. இந்த நாட்டில் சிறுபான்மை இனங்கள் சமத்துவமாக சுயகெளரவத்துடன் வாழக்கூடிய ஒரு அரசியல் தீர்வு தேவை என்கிறேன். அதை முன்வைத்தால் இவ்வளவு அழிவு தமிழ் தரப்பில் மட்டுமல்ல சிங்களத் தரப்பிலும் ஏற்படாது என்று சொல்கிறேன். “என்னுடைய மார்க்சிய ஆசானான” ஆதித்யனோ மார்க்சியம் பற்றி எனக்கு வகுப்பெடுத்துவிட்டு இறுதியாக புலிகள் ஆயுதத்தைக் கீழே போட்டதும் பிரச்சினை தீர்ந்து விடும் என்கிறார்.
நானும் புலியைப் பற்றி அதாவது புறக்காரணியப் பற்றிப் பேசியிருக்கிறேன். அவரும் புலி என்கிற புறக்காரணியைப்பற்றித் தான் பேசியிருக்கிறார். இதில் எங்கே போய் வர்க்க முரண்பாட்டையும் அகக்காரணியையும் பொருள் முதல்வாதத்தையும் தேட.
ஆதித்யன் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்று சொல்ல விரும்பினால் சரத் பொன்சேகா போல நேரடியாகச் சொல்லலாம். உங்களுக்கு அதைச் சொல்வதற்கான 100க்கு 200 வீத உரிமை இருக்கிறது. எங்களுக்குப் புரியும். அதற்கு மார்க்சியம் எதுவும் தேவையில்லை.
“காதல் விளையாடி இரு கைவீசி நடந்தாலும் தாதி மனம் நீர்க்குடத்தே தான்” என்பது போல புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் என்னதான் நீங்கள் எ(உ)ங்களுக்குப் புரியாத மார்க்சியம் பேசினாலும் தெளிவாக இருக்கிறீர்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது. இதனைத் தான் கிராமிய உழைப்பாளர் சங்க காலத்திலிருந்து நாங்கள் கேட்டு வருகிறோமே!
//எனது குறிப்பைத் திரும்பவும் படிக்கவும். புலிகளும் இந்தக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றென்று நான் ஒருபோதும் அதில் குறிப்பிடவில்லை. நான் சுட்டிக்காட்டியதெல்லாம் அந்தத் தர்க்கத்தைத்தான். அதாவது போராட்டம் அல்லது புரட்சி தானாகத் தோன்றுவதில்லை. அது ஒடுக்குமுறையின் எதிர்விளைவு என்பதைச் சொல்லத்தான்./ /போராட்டம் அல்லது புரட்சி தானாகத் தோன்றுவதில்லை அது சமூகத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினால் ஏற்படும் உற்பத்தி உறவுகளிடையேயான உள்முரண்பாடுகளின் அடிப்ப்டையிலேயே தோன்றுகிறது. இதை யாரும் மறுக்கவில்லை.
//ஒடுக்கப்படுபவர்கள் ஆயுதத்தைப் போட்டுவிட்டுச் சரணடைந்தால் எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது என்பதை விளக்கத்தான் அது. //
ஒடுக்கப்படுபவர்கள் தமிழ்பேசும் மக்கள், ஒடுக்குபவர்கள் அரசும் புலிகளும். ஆக, இந்த யுத்தம் என்பது இரண்டு பாசிசங்களிடையேயான யுத்தம். இங்கு புலிகளும் ஒடுக்கும் சக்திதான். ஆக, புலிகளின் இல்லாமை பாசிசத்தின் இல்லாமையாகும். அரச பாசிசம் புலிகளைக் காரணம் காட்டித் தமிழ் பேசும் மக்களை ஒடுக்குகிறது.
//ஆயுதத்தைப் போடுவானேன். முற்றாக அழிக்கப்பட்டு விட்டால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? சரத் பொன்சோகா சொல்கிறார் 95 வீதம் புலிகளை அழித்தாயிற்று. அப்படியே வைத்துக் கொண்டால் இன்னும் மீதமுள்ள 5 வீதத்தையும் அழித்துவிட்டவுடன் பிரச்சினை தீர்ந்து விடுமா? அமெரிக்காவும் சதாமை அழித்து ஒழித்தாயிற்று. ஈராக்கிய மக்களின் பிரச்சினை தீர்ந்து விட்டதா? பற்றிக் லுமும்பாவை அழித்தாயிற்று .அதன்பின் கொங்கோ என்ன ஆயிற்று?//
சற்று அறிவீனமாகவே பேசுகிறீர்கள். கட்டுரையில் நானும் இதைத்தான் சொல்லுகிறேன். புலியின் அழிவிற்குப் பின்னனர் பிரச்சனை தீராது. ஆனால் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலிருந்து ஒடுக்கப்பட்டவர்களின் தலைமையில் சரியான போராட்டம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.
கட்டுரையையை மறுபடி படிக்கவும்.
//இனி அடுத்த விடயத்துக்கு வருவோம். ஆதித்யன் சொல்கிறார்: நான் புறக்காரணிகள் ( தத்துவம் அரசு கருத்ட்கு விடுதலை இயக்கங்கள் புலி மகிந்த … ) இயக்கத்தைத் தீர்மானிக்கின்றன என்று சொல்கிறேனாம். அது கருத்து முதல் வாதமாம்.
ஒரு வாதத்திற்காக அப்படியே எடுத்துக் கொள்வோம். அதே புறக்காரணிகள் பற்றித் தானே ஆதித்யனும் பேசியிருக்கிறார். புலிகள் ஆயுதத்தைக் கீழே போட்டதும் பிரச்சினை இலகுவாகிவிடும் என்று. இதிலே ஆதித்யன் உருப்போட்ட அகக் காரணியும் பொருள் முதல்வாதமும் வர்க்க முரண்பாடும் மார்க்சியமும் எங்கே போயின? //
மறுபடி மார்க்சியம் இலகுவானது. ஆனால் புரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் கூறிய சமூகத்தின் இயக்கத்தைத் தீர்மானிப்பதில் சாத்வீகப் போராட்டங்களிலிருந்து புலிகள் வரை தொடர்பு படுத்திய போது தான் இயக்கத்தைத் தீர்மானிப்பது மேற்கோப்பல்ல என்றேன். இப்போது புறக்காரணிகளான மேல் வருபவை சமூகத்தின் இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
//புலிகளை அழிப்பதால் பிரச்சினை தீராது. இந்த நாட்டில் சிறுபான்மை இனங்கள் சமத்துவமாக சுயகெளரவத்துடன் வாழக்கூடிய ஒரு அரசியல் தீர்வு தேவை என்கிறேன். அதை முன்வைத்தால் இவ்வளவு அழிவு தமிழ் தரப்பில் மட்டுமல்ல சிங்களத் தரப்பிலும் ஏற்படாது என்று சொல்கிறேன். “என்னுடைய மார்க்சிய ஆசானான” ஆதித்யனோ மார்க்சியம் பற்றி எனக்கு வகுப்பெடுத்துவிட்டு இறுதியாக புலிகள் ஆயுதத்தைக் கீழே போட்டதும் பிரச்சினை தீர்ந்து விடும் என்கிறார். //
புலிகள் என்ற பாசிச சக்தியை அழிப்பதால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று சொன்னதாகக் கற்பனை செய்துகொண்டு கடாசுகிறீர்கள். அரசாங்கம் அரசியல் தீர்வை முன்வைக்காது. அது பாசிசத்தின் இயல்பு. ஆக உரிமைகளைப் போராடித்தான் பெறவேண்டும். இதற்கான போராட்டத்தைச் சீரழிக்கும் மிகப்பெரிய தடை புலிகள்.
தவிர நான் உங்கள் மார்க்சிய ஆசானாக இருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஏனென்றால் நான் பலருக்கு மாணவனாகவும் இருக்கிறேன்.
ஆதித்யன் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்று சொல்ல விரும்பினால் சரத் பொன்சேகா போல நேரடியாகச் சொல்லலாம். உங்களுக்கு அதைச் சொல்வதற்கான 100க்கு 200 வீத உரிமை இருக்கிறது. எங்களுக்குப் புரியும். அதற்கு மார்க்சியம் எதுவும் தேவையில்லை. /
///
இது சற்று வேடிக்கையாக இல்லை. நான் எனது கட்டுரையில் மார்க்சியம் பற்றிப் பேசவே இல்லை. இது தொடர்பான சந்தேகங்களை எழுப்பியது நீங்கள் தான். ஆக, உங்களின் மார்க்சிய அறியாமையைப் போக்கவே நான் எழுதியது எவ்வாறு மார்க்சியத்திற்கு எதிரானதல்ல என்று புரிய வைத்தேன்.
//புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் என்னதான் நீங்கள் எ(உ)ங்களுக்குப் புரியாத மார்க்சியம் பேசினாலும் தெளிவாக இருக்கிறீர்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது//
உங்களுக்குப் புரியாத தத்துவம் என்ற ஒன்றைப் பேசியதே நீங்கள் தான் அய்யனே! பிறகு உங்களை நீங்களே நொந்து கொள்கிறீர்கள். மனதைத் தளர விடாதீர்கள் ஒடுக்கப்படும் மக்களுக்கான தத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய்யுங்கள்.
hi,inioru.com,
so you have decided not to publish the reply i have written to athithyan,isn’t it? very good…by the way, Is athithyan one of your editors?
or you are waiting to the total demise of ltte and a raise of revolutionary movement in north east from tamils as per his theory to publish my reply?
siththan
புலிப் போராட்டங்களோ எப்போதும் எதிர்நிலைத்தன்மை வாய்ந்தவை. மக்களின் விடிவிற்கு பதில், துயரத்தை துன்பத்தையும் விதைக்கின்றது. இன்று மக்களின் அவலமும், அவர்கள் படுகொலை செய்யப்படுகின்ற பரிதாபமும்; ஒருபுறம். புலிகள் தாம் தப்பிப்பிழைக்க இதை மக்கள் மேல் திணிக்கின்றனர்.
மறுபக்கத்தில் பேரினவாதம் கொக்கரிக்கின்றது, மக்களை விடுவி அல்லது உன்னுடன் சேர்த்து மக்களையும் கொல்வேன் என்கின்றது. மக்களுக்காக தான் தாங்கள் போராடுவதாக கூறுபவர்கள் என்ன சொல்கின்றனர், யுத்தத்தை நிறுத்து என்று கூறி வீதிகளில் இறங்குகின்றனர். அவன் நிறுத்தமாட்டான் என்பது இன்று அறிவுபூர்வமாக தெளிவாகியுள்ளது.
இல்லை நிறுத்துவான் என்ற உங்கள் நம்பிக்கைக்கு புறம்பாக, யுத்தத்தைத் நிறுத்தாவிட்டால், என்ன செய்வது!? அங்கு சிக்கியுள்ள மக்களையும் சேர்த்து கொல்வதையா நாம் ஆதரித்து போராடுகின்றோம். மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் சொல்லுங்கள்.
60 வருடமாக பேரினவாதம் தமிழரின் உரிமையை மறுத்து வந்தது மட்டுமல்ல, இன்று வரை அது நெளிந்துகொடுத்தது கிடையாது. இன்று புலிகள் மக்களை விடுவிக்காவிட்டால் கொல்லுவோம் என்று பேரினவாதம் கொக்கரிக்கின்றது. அவன் தான் அப்படி செய்கின்றான் என்றால், ஏன் புலிகள் மக்களை விடுவிக்கக் கூடாது? இதை ஏன் போராடும் மக்கள் கோரக் கூடாது? இதைக் கோராத வரை, அங்கு பேரினவாதம் மக்களை கொல்வதற்கு போராடும் மக்களும் உடந்தையா!?
எங்கள் இரத்த உறவுகள், இப்படி மடிவதற்காகவா நாம் வீதியில் இறங்குகின்றோம். இல்லையென்றால், மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால், அவர்களை புலிகள் விடுவித்தேயாக வேண்டும். இதைவிட வேறு வழிகிடையாது. புலிகள் கூறுவது போல் மக்கள் செல்ல விரும்பவில்லை என்றால், அவர்களை வெறுயேறும்படி கோர வேண்டும். அதை அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதைக் கோராது, இதை நடைமுறைப்படுத்தாது, புலிகளுடன் மக்கள் அழிவதையா நீங்கள் விரும்புகின்றீர்கள்? இதையா புலிகள் விரும்புகின்றனர்? இந்தக் கேள்வியை எழுப்பாத வரை, அந்த மக்கள் கொல்லப்படுவதையா நீங்கள் ஆதரிக்கின்றீர்கள். புலிகள் அழிவு என்பது அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த வழியில் நிகழ்வது எம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. இவர்களுடன் மக்களையும் சேர்த்தா பலியிட வேண்டும்? சொல்லுங்கள். மனதைத் திறந்து மனச்சாட்சியுடன் சொல்லுங்கள். அங்கு சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற முனையுங்கள்.
ஆதித்யன் வட்டுக்கோட்டைக்கு என்னவழி என்றால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்கிறார்!
நான் புறக்காரணியாகிய கருத்து முதல்வாதம் பேசினேன் என்று சொல்லும் ஆதித்யனும் புறக்காரணியான புலி பற்றியே பேசினார். அதுவும் கருத்துமுதல்வாதம் தானே என்று கேட்டேன். அதற்குப் பதிலைக் காணவில்லை. மற்றையவை அவர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டவை.
அவற்றுக்கெழுத ஏதுமில்லை இப்போதைக்கு!
//ஆதித்யன் வட்டுக்கோட்டைக்கு என்னவழி என்றால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்கிறார்!
நான் புறக்காரணியாகிய கருத்து முதல்வாதம் பேசினேன் என்று சொல்லும் ஆதித்யனும் புறக்காரணியான புலி பற்றியே பேசினார். அதுவும் கருத்துமுதல்வாதம் தானே என்று கேட்டேன். அதற்குப் பதிலைக் காணவில்லை. மற்றையவை அவர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டவை.
அவற்றுக்கெழுத ஏதுமில்லை இப்போதைக்கு!//
இதற்கு முன்னமே எழுதிய பதில்:
////ஒரு வாதத்திற்காக அப்படியே எடுத்துக் கொள்வோம். அதே புறக்காரணிகள் பற்றித் தானே ஆதித்யனும் பேசியிருக்கிறார். புலிகள் ஆயுதத்தைக் கீழே போட்டதும் பிரச்சினை இலகுவாகிவிடும் என்று. இதிலே ஆதித்யன் உருப்போட்ட அகக் காரணியும் பொருள் முதல்வாதமும் வர்க்க முரண்பாடும் மார்க்சியமும் எங்கே போயின? //
மறுபடி மார்க்சியம் இலகுவானது. ஆனால் புரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் கூறிய சமூகத்தின் இயக்கத்தைத் தீர்மானிப்பதில் சாத்வீகப் போராட்டங்களிலிருந்து புலிகள் வரை தொடர்பு படுத்திய போது தான் இயக்கத்தைத் தீர்மானிப்பது மேற்கோப்பல்ல என்றேன். இப்போது புறக்காரணிகளான மேல் வருபவை சமூகத்தின் இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.//
இங்கு மேற்கோப்பு என நான் எழுதியது புறக் காரணிதான். இது உங்களுகுப் புரியவில்லை. மறுபடி சொலிகிறேன். உங்களுக்கு மார்க்சியத்தைப் புரின்ட்குகொள்ள ஆர்வமிருந்தால் அதற்கான உதவிகளைப் புரிய நான் தயார்.
Jorge Oval என யாரும் இல்லை.