ஈழத் தமிழர்களின் தன்னுரிமைக்கான போராட்டம் என்பது சிக்கல்களும் சிதைவுகளும் நிறைந்ததாக மாற்றமடைந்துள்ளது. 70களின் ஈழத் தமிழர்கள் உட்பட்ட தமிழ்ப் பேசும் சிறுபான்மையினருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் இலங்கைப் பேசின வாத அரசு பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தது.
40 வருடங்களில் ஒன்று மட்டும் நிகழ்ந்திருக்கிறது! உலகத்தின் ஒரு பகுதியாவது ஈழத் தமிழர்கள் உரிமை மறுக்கப்படுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ராஜபக்ச அரசும் அதன் அடிவருகளும் இலங்கைத் தீவில் இனப்பிரச்சனை என்பது இல்லை என்று பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது. தவிர, புலம் பெயர் நாட்டில் புலிகளும் தமிழ் நாட்டில் அதன் ஆதரவாளர்களும் தான் தேசிய இனப்பிரச்சனை உருவாக்குகிறார்கள் என்று தொடர்ச்சியான அப்பட்டமான பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.
பௌத்த சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்டு வரும் இந்தப் பிரசாரங்களை முறியடிக்க எமக்கு முன்னால் இருக்கும் தடைகளில் பிரதானமானது புலம் பெயர் புலிகளின் அடிப்படைவாத விசுவாசிகள். அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் உயிர்களையும், அவர்களின் தன்னுரிமையையும் விட புலிகள் என்ற அடையாளமே அவர்களுக்கு முதன்மையானதாக உருத் தெரிகிறது. ஒரு தந்திரோபாயத்திற்காகவேனும் புலி அடையாளத்தைக் கைவிடத் துணியாத இவர்களில் இருவகையினர் காணப்படலாம்.
1. அரசின் நோக்கத்தை வலுப்படுத்த முனையும் அரச உளவாளிகள் மற்றும் வியாபாரிகள்
2. அப்பாவித்தனமாகப் புலி அடையாளத்தைப் பற்றிக் கொள்கிறவர்கள்.
இந்த இரண்டு பகுதியினருமே இலங்கை அரசிற்கும் அரசியல் வியாபாரிகளுக்கும் மறைமுகமாவோ நேரடியாகவோ துணை போகின்றனர்.
இங்கு முதலாவது பகுதியினர் எதிர்கொள்ளப்பட இரண்டாவது பகுதியினர் வென்றெடுக்கப்பட வேண்டும்.
அவர்களை வென்றெடுப்பதற்கான அரசியல் வேலைத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும்.
1. தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முற்போக்கு ஜனநாயக சக்திகள் முன்னெடுக்க வேண்டும்.
2. மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான ஜனநாயக சூழலை ஏற்படுத்துவதற்கு அரசிற்கு எதிரான அழுதங்கள் வழங்க வேண்டும்.
3. உலகில் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்கும் முற்போக்கு சக்திகளோடு இணைந்து கொள்ள வேண்டும்.
மக்கள் மீது பற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் இந்த அடிப்படை வேலைத் திட்டங்களில் இணைந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை நம் அனைவர் மத்தியிலும் உள்ளது.
இது வரைக்கும் இந்த வழிகளை நிராகரித்திருக்கிறோம்.
1. தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பதில் முற்போக்கு ஜனநாய சக்திகள் இணைக்கப்படவில்லை.
2. மக்கள் போராட்டங்கள் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன.
3. சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளோடும் அதிகாரப் பற்றுக்கொண்டோரும் தான் எமது நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தார்கள்.
இது வரைக்கும் இந்த வழிகளை நிராகரித்திருக்கிறோம்.
1. தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பதில் முற்போக்கு ஜனநாய சக்திகள் இணைக்கப்படவில்லை.
2. மக்கள் போராட்டங்கள் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன.
3. சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளோடும் அதிகாரப் பற்றுக்கொண்டோரும் தான் எமது நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தார்கள்.
இவை முழுமையான அரசியல் வேலைத் திட்டமல்ல ஆனால் அழிவிலிருந்து ஆரம்பிப்பதற்கான முதலாவது ஆரம்பமாக அமையலாம்.
ஆனால் நமது போராட்டமோ புலிகொடிக்குள்ளும், தேசியத் தலைவருக்குள்ளும் இன்னமும் முடங்கிப் போயிருக்கின்றது என்பது துர்பாக்கியமானதே.
புலிக் கொடி பற்றீப் பேசினாலே பொங்கும் தமிழரால் இதயம் நொருங்கிப் போகிறது.இன்னும் தலைவர் இருக்கிறார் எனும் கற்பனையை மீறீ வர முடியாத நண்பர்கள நினைத்து மனம் வேதனையடைகிறது.அரசும் அதன் கூட்டாளீகளூம் நம் மீது அழுத்தங்கள பிரயோகிக்க இவை எல்லாம் காரணமாகிறது என்றூ தெரியாமலே நாம் அரசுக்கு வாய்ப்புக்கள வழங்கி வருகிறோம்.பழைய பாடல்கள் கேட்பதில் சுகம்தான் ஆனால் நாம் புதிய பாடல்கள் எழுதியாக வேண்டும்.
ஓ..அப்படி என்றால் தயவுசெய்து நீங்கள் கணனிக்கு முன் அமர்ந்து கத்தாமல், புதியபாடலை தாங்களே, பிள்ளையார் சுழி போட்டு எழுதுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம். 35 வருடங்களாக ஒரு இலட்சியத்துக்காகப் போராடுவது என்பது ஒரு பெரியதவம் . அந்தத் தவத்தை தொடங்கியவர்கள் பலபேர். ஆனால் அந்தத் தவத்தை தொடரமுடியாமல், ஆசாபாசங்களுக்கும், ஆசைகளுக்கும் அடிமைப்பட்டு ஓடிப்போனவர்கள்தானேநீங்கள் எல்லாரும். தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவேர்கள் , இவ்வள்வு தூரம் தமிழினத்துக்காக தவமிருந்து பாடுபட்டுவிட்டு, அவ்வளவு சீக்கிரம் எமது போராட்டத்தை விட்டுப் போகமாட்டார் என்பதே எமதுநம்பிக்கை. அப்படி போவாராய் இருந்தாலும்,நாம் தமிழர் எமக்கு நிச்சயம் மாற்று வழி ஒன்றை செய்து விட்டே வீரமரணம் அடைந்த்து இருப்பார். புதிய பாடலைநீர் எழுதி , வேணும் என்றால் ஒட்டுக்குழுக்களுக்கு இரங்கற்பா பாடும்.
திரு வன்னியன் அவர்கள் கேட்டுக் கொண்டதிற்காக மன்மதன் அன்பு காற்றலையில் வருகிறது……………….
இப்போது நீங்கள் முடிவு செய்ய வேண்டிய நேரம்: இலட்சியமா இயக்கமா எது முக்கியம்?
இலட்சியத்திற்காகத் தான் இயக்கம். இயக்கம் இயக்கம் என்று கத்தி இலடசியத்தைக் கோட்டை விட்டு (அல்லது காட்டிக் கொடுத்து) விடாதீர்கள்.
பிரபாகரனே சொன்னது போல போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது. இன்று; புலிகள் மீதான அதிருப்தி பல தமிழர்களையும் பிரித்து வைத்துள்ளது. எனவே இலட்சியத்திற்காக புலிக்கொடியை வைத்து விட்டு வாருங்கள்.
நாடி கழண்ட தமிழீழ அரசு, கிளீக்கோட்டுத் தீர்மானம், பேரவை,புதிதாக மக்கள் அவை, இதில எந்த பஸ்ஸீல ஏறீ எங்க போறது, ஏறீ எங்க இறங்குறது எண்ட ஓரே குழப்பம்.யாராவது வழி காட்டினால் நல்லது.எல்லோரும் பிரதம மந்திரியாகி சிட்டிசன் அட்டை எண்டு செலவு வைக்காமல் இருந்தால் சரி.
>>>புலிகள் மீதான அதிருப்தி பல தமிழர்களையும் பிரித்து வைத்துள்ளது << 🙂 ஜயோ அண்ணாமார்களே அந்தப் " பிரிந்த" வீர, இலட்சிய, மானத் தமிழர்கள் யாருங்கோ.ஓ..டக்கிளஸா, சித்தார்த்தரா, சங்கரியா, வரதராசப்பெருமாளா,சிறிதரா,கருணாவா, பிள்ளையானா, ராஜன் கூலா,இல்லை இந்தப்பட்டியலில் இறுதியாக இணைந்த இமெல்டா சிவகுமரா………? இவெர்களையெல்லாம் தமிழர் என்றால், அப்போ தமிழரை எல்லாம் என்ன என்று சொல்வதோ. தமிழ்மக்களால் அடித்து துரத்தப்பட்டுக் கலைக்கப்பட்ட இந்தக் கழிவுகள் அன்று கூட புலிகளைக் கூட எதிர்க்க ஒன்று பட வில்லை, இன்று தமிழரைக் காக்கக்கூட ஒன்று படவில்லை. "சாதி , சமய , பிரதேசவாத என்று பிரிந்து இருந்த தமிழர்களை ஒன்றுபடுத்தியதே புலிகளும் , புலிக்கொடியும் , தேசியத்தலைவரும் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
“சாதி இ சமய இ பிரதேசவாத என்று பிரிந்து இருந்த தமிழர்களை ஒன்றுபடுத்தியதே புலிகளும் இ புலிக்கொடியும் இ தேசியத்தலைவரும் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.”
— மரணத்தில் மட்டுமே ஒன்று படுத்தினார்.
மாத்தயா, கேபி, கருணா, தயாமாஸ்டர் மேலும் பலர்.
வன்னித்தலைமை அழிந்ததன் பின்பு வந்த வெற்றிடத்தை விட, வன்னித்தலைமையால்
இதுவரை மறுக்கப்பட்ட அரசியலின் வெற்றிடமே மிகப்பெரிதாக இருக்கின்றது. இதை அனைத்து
புலம் பெயர் நாடுகளிலும் பார்க்கலாம். வன்னித்தலைமை அழிக்கப்பட்டபின்பு புலம் பெயர் நாடுகளில்
ஒரு பலமான கட்டமைப்பு இல்லை. மாற்றுக்கொடுக்கக்கூடிய தலைமையில்லை. நடந்தது என்ன என்று பேசக்கூட ஒருத்தர் இல்லை. ஆனாலும் இவர்களிடம் மிஞ்சி இருப்பதில் புலிக்கொடியும் ஒன்று
சின்னம் என்று சொல்கின்ற சிறு கலர் துணியில் எங்கள் நம்பிக்கையை அல்லது நாங்கள் வேண்டிய ஒன்றை எம் சுய நலத்திற்காக பாதுகாக்க விரும்பினால் அந்த பாதுகாப்பு இயக்கமே எம்மை பொதுவான மக்களின் உரிமைப் போராட்டத்திலிருந்து வெளியேதான் கொண்டுபோகும்
தேசியத்தலைவர் ஒரு புதிய மாற்றுவழியைக் காட்டாமல் போயிருக்கமாட்டார் என்பது உண்மையே. சர்வதேச ஆதரவைப் பெற வேண்டுமாயின் ஆயுதப்போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று அவர் எமக்குச் சொல்லாமற் சொல்லி விட்டுப் போய்விட்டார். தலைவரின் சொற்களை எதிர்பார்த்துக் காத்திருந்தால் காலமெல்லாம் காத்திருக்க வேண்டியதுதான். அவரின் செயல்களிலிருந்து நாம் சிலவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டம். மாபெரும் அழிவுக்குள்ளான நேரத்தில் கூட அப்பாவிச் சிங்களவரைத் தாக்காமல் விட்டமை இனிவரும் காலங்களிலாவது சர்வதேசம் தமிழர்களைப் பழிசொல்லக் கூடாதென்பதற்காகவே. அனைவரும் ஒன்று சேர்ந்து உலகில் யாரையும் பகைக்காமல் (சிங்களவர் உட்பட) எமது உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதே தலைவரின் செய்தியாகும்.
well. usefull.
//தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவேர்கள் , இவ்வள்வு தூரம் தமிழினத்துக்காக தவமிருந்து பாடுபட்டுவிட்டு, அவ்வளவு சீக்கிரம் எமது போராட்டத்தை விட்டுப் போகமாட்டார் என்பதே எமதுநம்பிக்கை. அப்படி போவாராய் இருந்தாலும்,நாம் தமிழர் எமக்கு நிச்சயம் மாற்று வழி ஒன்றை செய்து விட்டே வீரமரணம் அடைந்த்து இருப்பார்.//
உங்கள் தேசியத் தலைவர் மேதகு தன்னைப் பாதுகாக்க லட்சம் தமிழர்களைக் காவு கொடுத்து விட்டு தானும் சரனடைந்து செத்துப் போய்விட்டார். அந்தக் கேவலத்தை எல்லாம் பேசவைப்பதே உங்களைப் போல சில கோமாளிகள் தான்.
“தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய அருவருப்பான செய்கைகளை புலம்பெயாந்தவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.”
இதுதான் இன்றைய இலங்கை அரசாங்கத்தின் தேவையாக இருக்கிறது, இதுவே இனியொருவின் தேவையுமாக இருக்கிறதா அல்லது இதற்க்குமப்பால் சென்று ஒரு பொது கருத்தியலை உருவாக்கி அத்திசைவழி தமிழ்தேசியத்திற்கு உரமூட்டுமா…..
கிறுக்கன் அவர்களுக்கு,
1) தமிழ்த் தேசியம் = புலிகள்
2) தமிழ்த் தேசியம் = புலிகள் = பேரினவாத வெற்றி
3) மக்கள் பற்று + போராட்ட உணர்வு = தமிழ்த் தேசியம்.
இந்த மூன்றில் முதலாவது உங்கள்டையது. இரண்டாவது இலங்கை அரசாங்கத்தினுடையது. மூன்றாவது உண்மையாகவே தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர்களுடயது. முதலாவதைப் பிழை என்று நிறுவ வேண்டும். அப்போது தான் இரண்டாவது தவறானதாகும். ஆக மூன்றாவது உண்மையானதாகும். இபோது மனோகரன் செய்து கொண்டிருப்பது முதலாவதை உடைத்து மூன்றாவதை உண்மையாக்கும் முயற்சி. இதனை இரண்டாவதுடன் ஒப்பிடல் அபத்தம்!
புலிகள் அடையாளமும் புதிய வன்முறையின் ஆரம்பமும் என்று தலையங்கமிட்டிருக்கலாம்
அஜித்தின் சமன் பாட்டு முறைமை ஏற்று கொள்ளக் கூடிய கன பரிமாணம் உடையது. தமிழ் தேசியம் + புலிகளின் போராட்ட வழிமுறை = ஈழப் போராட்டத்தின் தோல்வி என்பதுவே எனது அவதானிப்பாக இருக்கின்றது. மோதகன் நீங்கள் பொரித்த மோதகமா? அவிச்ச மோதகமா? இலட்சம் தமிழர்கள் கொலை செய்யப் பட்டு இறந்துபோனது உங்களுக்கு கேவலமா? இது குறித்து கவலையோ கண்டனமோ இல்லையா? ஒரு விடயத்தை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் புலிகள் பல லட்சம் மக்களை கேடயமாக பாவித்தனர் என்பது உண்மையாக இருப்பினும் அந்த உண்மையை திரும்ப திரும்ப கூறும் சக்திகள் மிக கொடிய இனப் படுகொலையை மறைப் பதற்கும் , மறைக்க துணை நிற்பதற்கும், முயற்சிபதாகவே நான் அடையாளம் காணுகிறேன். மக்கள் கேடயமாக இலங்கை இனவெறி அரசினாலும் பயன் படுத்தப் பட்டனர் என்பதையும் சேர்த்தே பலர் மறைக்க முயல்கின்றனர். இருப்பினும் ஒரு விடுதலை இயக்கம் மக்கள் குறித்து செலுத்திய அவதானம் தவறானது என்பது உண்மை. கிளிநொச்சி வீழ்ச்சிக்கு பின்னர் புலிகள் செஞ்சிலுவை சங்கம் மூலம் மக்களை வெளியேற்றி விட்டு தமது போராட்ட வழிமுறைகளை மாற்றி இருக்கலாம் இதன் மூலம் சிங்கள இனவெறி அரசின் சாட்சியமற்ற படுகொலைகளை ஓரளவு தவிர்த்து இருக்க முடியும். இருப்பினும் ஐ நாவின் அனைத்து நிறுவனங்களும் உலக நாடுகளும் சேர்ந்து எத்தனை மக்களை கொன்றேனும் புலிகளை அழிக்கும் நோக்கத்தை, புலிகள் நிகழ்வு போக்குகளின் ஊடாக அறிந்து இருக்க வேண்டும். ஐநாவின் பூரண உதவியோடுதான் மிகப் பெரிய வன்னி படுகொலை சிங்கள பேரின வாதத்தால் சுபமாக நிறை வேற்றப் பட்டது இந்த உண்மை தெரியாது புலிக்கொடியையும் பிரபாகரனின் படத்தையும் தூக்கிக்கொண்டு இதோ யுத்த குற்றத்தை, யுத்த குற்றவாளியை அமெரிக்கா தண்டிக்கப் போகிறது பிரிட்டன் கண்டிக்கப் போகிறது ஐநா கண்டிக்கப் போகிறது எனக் கூறுகிறார்கள். தமது கீரோயிசத்தை நிலைத்து நிற்க அனைத்து கடைந்து எடுத்த முட்டாள் தனமான நடவடிக்கையிலும் ஈடுபடுவதன் மூலம் மகிந்தவினதும் சிங்கள இனவெறி அரசினதும் அனைத்து நிகழ்ச்சி நிரலுக்கும் புலிப் பினாமிகள் துணை போய்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே இதிலிருந்து வெளிவந்து போராட புலிகள் அமைப்பில் வெளிநாடுகளில் இருக்கும் புரட்சிகர சக்திகள் ஏனைய புரட்சிகர சக்திகளுடன் இணைந்து போராட முன்வரவேண்டும்.
வன்னியானின் துரோகிகள் பட்டியலை பார்த்தால் தமிழ் மக்கள் மத்தியில் தேசப் பற்றாளர்களை விட துரோகிகள் அதிகம் போல இருக்கின்றது. ஒரு உன்னதமான அமைப்பாக பூஜிக்கப் பட்ட புலிகளில் இருந்து தான் அதிகம் துரோகிகள் தோன்றி இருக்கிறார்கள். பிரபாகரனின் நம்பிக்கையாளர், தமிழீழத்தின் கொள்கை வகுப்பாளர் எனக் கூறப் பட்ட மு.திருநாவுக்கரசு (ஈழநாதம்/அரசியல் ஆய்வாளர்) மிகக் கூடியதும் கொடியதுமான துரோகியும் காட்டி கொடுப்பாளரும் என்பதை நான் அறிகிறேன் அந்த கறுப்பாடு உட்பட பல விடுதலை புலிகளின் கருப்பாடுகள் இந்திய உளவுப் படையால் பத்திரமாக கூட்டிச் செல்லப் பட்டனர் என அறியும் போது அந்த திருநாவுகரசின் சொல்லை வேதவாக்காக கேட்டு பிரபாகரன் களைஎடுத்த எந்தனை பேர் துரோகிகள் ஆக்கப் பட்டனர் குறிப்பாக மாற்று இயக்கங்கள், யாழ் பல்கலை மாணவர்கள், இன்னும் எத்தனை பேர்?
முள்ளாய் தக்கும் உண்மஎந்த புற்ரிள் எந்த பாம்மு எBர்யன் அரியாம்ல் ம்ல்க்
ராகவன்! நீங்கள் எழுதியவைக்கு “…பிரபாகரனின் நம்பிக்கையாளர், தமிழீழத்தின் கொள்கை வகுப்பாளர் எனக் கூறப்பட்ட மு.திருநாவுக்கரசு (ஈழநாதம்/அரசியல் ஆய்வாளர்) மிகக் கூடியதும் கொடியதுமான துரோகியும் காட்டி கொடுப்பாளரும் என்பதை நான் அறிகிறேன் அந்த கறுப்பாடு உட்பட பல விடுதலை புலிகளின் கருப்பாடுகள் இந்திய உளவுப் படையால் பத்திரமாக கூட்டிச் செல்லப் பட்டனர் என அறியும் போது அந்த திருநாவுகரசின் சொல்லை வேதவாக்காக கேட்டு பிரபாகரன் களைஎடுத்த எந்தனை பேர் துரோகிகள் ஆக்கப் பட்டனர் குறிப்பாக மாற்று இயக்கங்கள், யாழ் பல்கலை மாணவர்கள், இன்னும் எத்தனை பேர்?..” தொடர்ந்து ஆதாரங்களை முன்வைக்கவேண்டும்.
மு.திருநாவுக்கரசு (ஈழநாதம்/அரசியல் ஆய்வாளர்) பற்றி மேலும் தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகிறேன்
மு.திருநாவுக்கரசு குறித்து சுருக்கமாக கூறுவதானால் ஈழப் போராட்டத்தை சிதைத்து அழிக்கும் சிதைவுவாத கருத்தியலை இந்திய உளவுத்துறையின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப புலிகளின் மத்தியில் எடுத்துச் சென்ற ஒரு பெரும் துரோகச் செயலுக்கு
சொந்தக் காரன். அவரை பற்றி விரிவாக சொல்ல விடுதலைப் புலிகளில் தெளிவான சிந்தனை உள்ள, நிகழ்வுப் போக்குகளை உள்வாங்கியிருக்கக்
கூடிய யாராவது உயிருடன் இருக்கிறார்களா? என்பது எனக்கு தெரியாது. அப்படி யாராவது இருப்பின் அவர்கள் வாய் திறப்பதன் மூலம் ஈழப் போராட்டம் எவ்வாறான அழிவுகளையும், திசை மாறல்களையும், உட்கட்சி படுகொலைகளையும், சகோதரப் படுகொலைகளையும், மற்றும் அரசியல் பகுப்பாய்வுஅற்ற நிகழ்ச்சி நிரல்களிற்குள் புலிகள் எவ்வாறு தள்ளப்பட்டனர்
என்ற உண்மைகள் தெரியவரும். அதனை தமிழ் மக்கள் அறிந்து கொள்வதன் மூலம் மீண்டும் மீண்டும் பிறழ்வுவாத
கருத்தியலில் சிக்குண்டு போகாமல் பார்த்து கொள்ளமுடியும்.
டெலோவின் அரசியல் ஆலோசகராக இருந்த சந்திரகாசன் என்ன செய்தார்?, தற்போது என்ன செய்கிறார்? என்பதை நீங்கள் அறிவீர்கள். மு.திருநாவுக்கரசும் அதை ஒத்த பணியினையே தமது எஜமானர்களுக்காகச் செய்து கொண்டிருக்கிறார். சமூக விடுதலை புரட்சியினை, புரட்சிகர விடுதலைப் போராட்டத்தை சிதைத்து அழிக்கும் பணியினை இவர்கள் மேற்கொள்ளுவார்கள். புத்தியீவிகளாக தம்மை இனங் காட்டும் இவர்கள் தம்மை எச் சந்தர்பத்திலும் தமது குணாதிசயத்தை வெளிக்காட்டாமல் இறுதியில் தமது எஜமானர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் விடுதலைப் போராட்டத்தையும் மக்களையும் தள்ளி விடுவார்கள். மிகவிரைவில் அவர் இந்திய உளவுத் துறையின் தயாரிப்பில் நடிக்கக் கூடும். அது சந்திரகாசன் போல காந்திய முகத்திரையா? அல்லது வன்முறை அரசியலின்
பின்னுந்தியாகவா என்பது தெரியவில்லை. நவீன புலனாய்வு அரசியல் குறித்து புலிகள் உணராதவர்களாக இருந்து இருக்க
வாய்ப்பில்லை இருப்பினும் அதனை அவர்கள் கையாள்வதில் தோற்று விட்டார்கள் என்பதை புலிகள் முள்ளிவாய்கால் வரை சென்று தோற்று போகும் வரை பார்த்திருக்க வேண்டியதே எமது அவலமாகப் போனது.
விஜே கேட்டு கொண்டதற்கு இணங்க இது பற்றிய கவனம் ஒன்றை செலுந்துங்கள் என்பதே வாசகர்களிடம் நானும் வேண்டிக்கொள்கிறேன்.இந்தியாவில் குடும்பத்தோடு செட்டிலாகியிருக்கும் மு.திருநாவுகரசு
பற்றி புலிகளின் சமாதான செயலகத்தில் செயல் பட்ட முன்னாள் போராளி ஒருவர் அவரின் காட்டிகொடுப்புகள் உண்மையானது என்றும் மீதம் இருக்கும் புலிகள் உறுபினர்களை இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வழி நடத்தக் கூடும் எனச் சொல்கிறார்.
ராகவன்! ஆதாரம் என்பது கதை விடுதல் அல்ல.கறுப்பாடு என முத்திரை குத்தியிருக்கிறீர்கள்.இவர் சொல்லி,பிரபாகரன் கொன்றார் எனகிறீர்கள்.நீங்கள் அருகிருந்து பார்த்திருக்கிறீர்கள்.அல்லது நம்பிக்கையானவர் சொல்லி கேட்டிருக்கிக்கிறீர்கள்.விபரங்களை வெளியிடும் பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு.இல்லையெனில் உங்கள் பின்னணியைத் தெரியப்படுத்துங்கள்.அதன் பிறகாவது,’கறுப்பாடு’ பற்றி அறிந்து கொள்ளலாம்.இந்திய உளவுப் படையால், பத்திரமாக கூட்டிச் செல்லப் பட்ட மற்றைய கறுப்பாடுகள் யார்?
தயிர் கடைந்து மோர் ஆவது போல செய்திகள் செய்ய்ப்படுகிற்தா அல்லது புனயப்படுகிறதா புரிய்வில்ல
எஸ்.ஜீ.ராகவன், ஒரு விடயத்தைக் கூறும் போது நிதானமாகவும் ஆதரங்களோடும் கூறவேண்டும். உங்களுக்கு ஒன்று தெரியுமா, முதல் முதலில் இந்தியத் தலையீடு தொடர்பில் எழுதியவர் திருநாவுக்கரசு என்பதை மறந்துவிடாதீர்கள். 84 ஆம் ஆண்டு இந்தியா இலங்கையை எப்படி ஆக்கிரமிக்கும் என எதிர்வு கூறியவர். அவரது தலையீட்டின் பின்னர் தான் இந்தியாவிற்கு எதிரான அலை வட கிழக்கில் தோன்றியது. திருநாவுக்கரசு எப்போதும் புலிகளை முழுமையாக ஏற்றுக்கொண்டதில்லை.
ராகவன்! நீங்கள் யார்? இதற்கு இனியொருவும் உடந்தையா?
இந்தக் குற்றச்சாட்டின் ஆதாரம் முன் வைப்பதற்கு,”இனியொரு”வுக்கும் தார்மீகப் பொறுப்பு உண்டு.
அந்த சமாதானச் செயலகப் பேர்வழி வெளிவர வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்ட “ஈழப் போராட்டத்தை சிதைத்து அழிக்கும் சிதைவுவாத கருத்தியல்” என்ன? விளக்கம் தாருங்கள்?
இல்லையெனில் யாருடைய ஊட்டச்சத்தால் இப்படி கூறுகிறீர்கள் என எழுதுங்கள். இதற்கான தன்னிலை விளக்கம் இனியொருவும் தரட்டும்.
விடுதலைபுலிகளின் முக்கியஸ்தர்கள் எல்லாம் வடிகட்டி தூக்கப் பட்டபோது சீமான் மிகப் பாதுகாப்போடு இந்தியா சென்றிருக்கிறார் ஆனால் பல விடுதலைப் புலிகள் பணத்தை கொடுத்து தப்பிச் சென்றபோது, ஒரு முக்கிய பிரமுகர்
இலங்கை அரசின் வடிகட்டலில் தப்பிச் சென்றது எப்படி?. மு.திருநாவுக்கரசு புலிகளின் அரசியல் பயிற்சி பள்ளி உட்பட அரசியல் மற்றும் ராணுவ துறையால் நன்கு அறியப்பட்டவர். இந்திய வில் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு எதிராக விடுத்த அறிக்கையே அவரை அறியப் போதுமானது. இதில் பலர் மூலத்தை சொல்லுங்கள் எனக் கேட்பது மிகவும் அபத்தமானது இது எனது மூலத்தை கிளறும் அவா ஆகும். புரிதலும் பகுப்பாய்வும் தேடலும் அனுமானமும் சரியாக இருப்பதன் மூலம் இனிமேலும்
எதிர்கால அவலத்தை ஏமாற்றங்களை தவிர்க்க வேண்டும் என்பதே எனது அவா. புலிகள் எவ்வாறு மேயப்பட்டனர், விடுதலைப் போராட்டம் எவ்வாறு காவு கொள்ளப்பட்டது என்பதே எனது பேசுபொருள்.
இருப்பினும் மிகுந்த தயக்கத்துடன் நான் சொல்கிறேன்; மன்னார் களமுனையில் காயமடைந்து இந்தியாவில் சிகிச்சை பெற்று மிக அண்மையில் மேற்கு நாட்டுக்கு புலம் பெயர்ந்தவரின் நேரிடையான கருத்து பரிமாறல் ஒன்றினை அடிப் படையாக
வைத்தே மு.திருநாவுக்கரசு பற்றி நான் சொல்கிறேன். தலைவரும் நீயும் மு.திருநாவுக்கரசும் உடன் இருந்தாயா எனக் கேட்பது விகாரமான கேள்வி. திருநாவுக்கரசு எப்போதும் புலிகளை முழுமையாக ஏற்றுக்கொண்டதில்லை என்ற விடயத்தை star எந்த மூலத்தில் இருந்து நிதானமாக பெற்று கொண்டீர்கள்?. பலர் என்னை என்னை போன்றோரை அவர்களின் விமர்சனத்தை (அல்லது ஈழ விடுதலைப் போராட்டத்தையும் கூட) புலி ஆதரவு புலி எதிர்ப்பு என்ற கோணத்தில் இருந்தே பார்க்கிறார்கள் இது மிகவும் அபத்தமான பார்வை.
அவர் இந்திய விஸ்தரிப்பு வாதம் குறித்த கட்டுரைகளே அவர் வெள்ளாடு என்பதற்கு போதுமான சாட்சியாக
இருக்குமானால் நீங்கள் நவீன புலனாய்வு அரசியல் குறித்து விளங்கி கொள்வதற்கு சற்று சிரமமாகவே இருக்கும்.
இருப்பினும் கிட்டு மாத்தையா போன்றோர் உடன் 1980 களில் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய புலிகள் இத்தளத்தில் இருப்பின் அவர்கள் வாய் திறக்கவேண்டும். நான் நினைக்கிறேன் 1980 களின் ஆரம்பம் மு.தி யின் விடுதலைப் புலிகள் உடனான இணைவுக் காலம் என நினைக்கிறேன். இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கைகூலிகளாக டெலோ EPRLF போன்ற அமைப்புகளை சித்தரித்து அவர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அல்லது தடைக்கு திருநாவுகரசே காரணம் எனச் சொல்லப் படுகிறது. டெலோ புலிகள் மோதல் மூலம் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை சிதைவு நிலைக்கு தள்ளிய நிலைக்கு இந்திய உளவுத்துறைக்கு கணிசமான பங்கு உண்டு என்பதை உறுதியாக நம்புகிறேன். ஆனால் ஸ்ரீசபாரத்தினம் இந்திய உளவுத்துறையின் நெருக்குவாரங்களில் இருந்து தப்பவே இலங்கை வந்தார் என்பதையும் டெலோ வினர் சொன்னதை கேட்டிருக்கிறேன் (சிறி பின்தளம் திரும்பிய கதை உண்மையா? பொய்யா? என்பதை சபா நாவலன் அவர்கள் சொல்லவும்) இது உண்மையாகின் மு.திருநாவுக்கரசு குறித்த எனது படிப்படியான பகுப்பாய்வும் அதனூடான எனது அனுமானமும் வேறு பல அவதானிப்புகளும் மற்றும் அப்போராளியின் தகவலும் சேர்ந்து நான் சொன்ன விடயத்தை உண்மையாக்கும்.
இந்திய விஸ்தரிப்பு வாதத்தை தீவிரமாக எதிர்த்த நபர்கள் பலரை பல அனுபவங்களின் பின்னும் வெள்ளாடுகளாக பார்க்கின்ற அவலம் எம்மில் இன்றும் உள்ளது என்பதே எனது கவலை. தயான் யயதிலக, வரதராசப் பெருமாள் …….. இன்னும் பட்டியல் தேவையானால் தருகிறேன். வரதர் மு.திருநாவுகரசுவோடு சேர்ந்து புலிகளுக்கு அரசியல் வேலைத்திட்டங்கள் செய்ததாக ஒரு கேள்வியானம். இப்படித்தான் இந்திய விஸ்தரிப்புவாதம் பேசும் பலர் அமெரிக்க எதிர்ப்பு வாதம் பேசும் பலர் கறுப்பாடுகளாக உலாவருவர். மு.திருநாவுகரசு பற்றிய எனது பார்வைக்கு மிக விரைவில் காலம் பதில் சொல்லும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.
நெருஞ்சி நீங்கள் கிட்ட நெருங்கி வருவது போல் தெரிகிறது. அன்டன் பாலசிங்கத்தின் அரசியல் வகிபாவம் ஈழப் போராடத்தில் அவர் எடுத்த முடிவுகள் பல தலைமையால் தட்டிகழிக்கப்பட்டதற்கு திருநாவுகரசு ஒரு காரணம் என்பதை யாருடைய தகவலும் இன்றி நான் பூரணமாக நம்புகிறேன். நெருஞ்சி உங்களின் கருத்து என்ன? சர்வதேச சமுகத்தை கையாள்வதில் அன்டன் எடுத்த முடிவுகள் தவிடு பொடியாக காரணமான வன்னி கொள்கை வகுப்பாளர் யார்? மு.திருநாவுகரசே என்பது எனது பதில். மகிந்த ராஜபக்சே அரியாசனம் ஏறுவதற்கு கொள்கை வகுத்து கொடுத்தவர் யார்? அதனை ஆதரித்து வெள்ளி ஈழநாதத்தில் ஆய்வு அரசியல் செய்தது S .G .ராகவனா இல்லையே அரசியல் ஆய்வாளர்? மு.திருநாவுகரசர் அல்லவா? SLFP இக்கும் இந்திய அரசுக்கும் உள்ள நீண்ட அரசியல் உறவை மறந்து மகிந்தவை அரியாசனையில் ஏற்றி பார்க்க அந்த வெள்ளாட்டுக்கு(?)! எப்படி? அவரின் தீர்க்க தரிசனம் நிறைந்த பார்வை இடம் கொடுத்தது? 1987 களில் தமது அரசியலுக்காக இந்தியாவை மகிந்தர் எதிர்த்த காரணத்திலாவா? சொல்லுங்கள் நெருஞ்சி சொல்லுங்கள். நெருஞ்சி ஈழவிடுதலைப் போராட்டம் நொறுங்கி வீழ்ந்து விட்டதே வெறும் அவலத்தை மாத்திரம் எம்மிடம் தந்து விட்டதே என்ற பித்து பிடித்தலையும் மக்கள் கூட்டத்தில் நானுமாய் இன்னும் எனது நிதானத்தை இழக்காது எமது மக்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகருகையில் மேலும் எவ்வித அவலங்களையும் சுமக்கக் கூடாது என்ற வெறி பிடித்த அவாவில் மாத்திரம் இங்கு எனது கருத்தினை சொல்லுகிறேன். ஆகா மு.திருநாவுக்கரசின் தீர்க்க தரிசனம் விடுதலைப்புலிகளின் அழிவுகளின் பின்னர் புலிகளின் ஒரு அரசியல் இயக்கத்தையோ தலைமைஜையோ கூட உருவாக்க முடியாமல் போனதோ? சொல்லுங்கள் நெருஞ்சி?
star இந்தியா பற்றி தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை மற்றும் வங்கம் தந்த பாடம் என்பன 1980 களில் நிறைய கூறிவிட்டன அவ்வாறு கூறிய புத்தகங்கள் பலவற்றை வீதியில் போட்டு கொளுத்தி (பருத்தித்துறை ஓராம் கட்டைச் சந்தியில்) இந்திய விஸ்தரிப்பு வாதத்தை மு. திருநாவுகரசின் ஓர் பக்க சிந்தனையாளர்கள் அன்றே ஏற்று கொண்டு விட்டார்கள் போலும்.
புலிகள் பேச்சுவார்த்தைக்குப் போனபோது இனிய நண்பர் சொன்னார் அவர்கள் தமது அழிவைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள்.பாலஸ்தீனியர்களது போராட்ட வலுவை உடைத்தவர்கள நம்பிப் புலிகள் போகிறார்கள் இது அவர்களது ஆபத்தான தேர்வு.இழுத்தடிக்கப்பட்ட நான் கு வருடம் என்பது புலிகளூக்குள் மற்றவர்கள் ஊடுருவக் காரணமாயிற்றூ தமக்குள் ஊடுருவோரை புலிகள் கவனிக்க தவறீ விட்டார்கள் இன்னும் பல புறக்காரணீகளீல் புலிகள் எச்சரிக்கையாய் இருக்கவில்லை.இந்த திருநாவுக்கரசு வெறூம் தும்மல்.குளீர் ஏற்கணவே புலிகள பிடித்து விட்டது.
திருநாவுக்கரசை 1980 களில் தமிழ்த் தேசிய அரசியலைப் பேசும் ஒருவராக இனங்காணப்பட்டார். புலிகளின் கருத்தியல் சார்புடையவராகவும் புலிகளின் ஆதரவாளராகவும் கருதப்பட்டார்.
பின்னர் இலங்கை – இந்திய ஒப்பந்தம் மற்றும் இந்திய இராணுவ வருகையின் பின்னர் இந்திய விஸ்தாpப்பு வாதம் பற்றி அதிகம் பேசியதுடன்> அது தொடர்பான நூலொன்றினையும் வெளியிட்டார். அவரும் அவரது நண்பரொருவரும் அதிக தகவல்களைத் தேடிப்பெற்று அந்நூலை உருவாக்கியதுடன்> குழு நிலையில் விவாதத்தினை நடாத்திய பின்னர் அந்நூல் நூல் வடிவில் வெளியிடப்பட்டது.
வன்னியில் வாழ்ந்து வந்த ‘திரு’ புலிகளின் ஒரு உறுப்பினராக இருந்ததாக செய்தி வரவில்லை. ஒரு ஆசிரியராக வாழ்வை நடத்தி வந்தார். ஆனால் புலிகளின் கருத்தியலுடன் அவர் இருந்தார் என்றே கூறப்பட்டது. 2009 ஆரம்பத்தில் புலிகள் குறுகிய நிலப்பரப்பிற்குள் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் – தமிழகத்தின் மூலம் இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்> அதனால் தமிழா;களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற கருத்துப்பட கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.
அகதிகள் முகாமில் தஞ்சமடைந்து> பின்னர் இந்தியாவிற்கு சென்று அங்கு அகதிகள் முகாமில் இருந்து வந்ததாக அறிய முடிந்தது. அவருடை பேட்டி ஒன்றை இந்தியப் பத்திரிகை அகதி முகாமில் வைத்துப் பெற்று வெளியிட்டது.
வன்னியில் அகதி முகாமிலிருந்து பெருமளவானோர் வெளிநாடுகளிற்குச் சென்றிருக்கிறார்கள். இதற்கு பெருமளவு பணமும் செல்வாக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. திருவுக்கு சில வேளைகளில் இரண்டினதும் உதவியும் கிடைத்து அதனால் வெளியேறியிருக்கலாம்.
நீங்கள் கூறுகிற படி அவர் ஒரு இந்திய உளவாளியாகியிருப்பதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை. ஆனால் நீங்கள் கூறுகிற காரணங்கள் தக்க ஆதாரங்களாக கொள்ள முடியாதுள்ளது.
ராகவன்! உங்களால் எந்த ஆதாரங்களையும் வைக்கமுடியாது,வெறும் அவதானிப்புகளை, அனுமானங்களைத் தவிர.
உங்கள் ” நவீன புலனாய்வு அரசியல்” வரைவின்படி,தமிழீழப் போராட்டத்தை ஆரம்பித்த,அனைத்து தலைமைகளும்,அதற்கு ஆதரவளித்தவர்களும் “மிகக் கூடியதும் கொடியதுமான துரோகிகளும், காட்டி கொடுப்பாளர்களும்” என்ற பொதுப்படுத்தலுக்கு கொண்டு செல்கிறீர்கள்.
எல்லோரும்1983 இல் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை ஏற்று, 2009 இல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்பார்த்து அழிந்து போனது வரை,’வெள்ளாடு,கறுப்பாடு” பட்டியலை,”வேதவாக்காக” வெளியிடுங்கள்.
உங்கள் .குற்றச்சாட்டுகளை நிருபியுங்கள்;கருத்துகளை கட்டுரையாக எழுதுங்கள்,வாதிப்போம்
நெருஞ்சி உங்கள் மனச்சாட்ச்சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் என்னால் வெளிப்படையாக பதிலிறுக்க முடியுமா? இதில் வேறு எனது பின்னணியை கேட்கிறீர்கள். ஒருவராவது நான் குறிப்பிட்ட கறுப்பாடு தற்போது என்ன செய்கிறார்?, எங்கு பாதுகாப்பாக இருக்கின்றார்? என்பதை அறிய முற்பட்டீர்களா? அல்லது தர்க்க ரீதியாகத் தானும் இவ்விடயத்தை அணுக முற்படுகிறீர்களா இல்லையே? நாம் எதிலும் தவறு செய்யமாட்டோம் என்ற உளவியல், உங்களுக்கு நிலைமைகளை உய்த்து அறிந்து பார்பதற்கு இடங்கொடுக்காது. சமாதான ஒப்பந்த காலப் பகுதியில் மட்டக் கலப்பில் இருந்து தினக்கதிர் பத்திரிக்கை வெளிவந்தது அப் பத்திரிகையின் ஆசிரியர் குழாமில் அரச ஆதரவு பெற்றோர் இருந்தனர் அப் பத்திரிகையை பின்னின்று இயக்கியவர்களில் த.சிவராமும் ஒருவர் புலிகளை விமர்சிக்கின்றோம் எனக் கூறி கடுமையான பிரதேசவாதத்தை அப்ப பத்திரிக்கை கிளப்பி விட்டது. அப் பத்திரிக்கை ஒரு NGO வின் ஆதரவுடனே செயற்பட்டது. “இது பற்றி இனிஒருவில் முதலே குறிப்பிட்டுளேன்”. தற்போது அப்பத்திரிகையாளர் தயா மாஸ்டர் உடன் இணைந்து செயல் படுவதாக புலிசார் இணையம் ஒன்றில் அறிந்தேன். ஆகவே மு. திருநாவுகரசுவுக்கும் காலம் பதில் சொல்லும் என்பதே எனது பதில்.
ராகவன், ரெலோ இயக்கத்தில் எனது வாழ்வு சற்றேறக்குறைய 7 மாதங்கள் மட்டும்தான். 1983 செப்ரெம்பரில் ஆரம்பித்து 1984 மே மாதம் முடிந்து போனது அதிலும் இறுதிக்காலங்கள் ரெலோ தலைமைக்கு எதிராக மனோமாஸ்டரின் போராட்டங்களோடு இணைந்திருந்தேன். 84 மே மாதத்தின் பின்னர் ரெலோ இயக்கத்திற்கு தலைமறைவாக வாழ்தலில் சில காலங்கள் மறைந்துபோயின. “திரு ” வாழ்ந்த வீட்டில் சில காலங்கள் தங்கியிருந்ததாலும், பல்கலைக்கழகத்தில் அவருடனான உரையாடகளுக்குச் சந்தர்ப்பம் வாய்த்தாலும் 84 இலிருந்து 90 வரை பல சந்தர்ப்பங்களில் அவரை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னக்குத் தெரிந்தவரை
1. மிகத்தீவிரமான இந்திய எதிர்ப்பை முன்வைத்தவர்.
2. ஆரம்பத்தில் மாத்தையாவுடன் நம்பிக்கையான தொடர்புகளைப் பேணிவந்தார்.
3. 85இன் இன் இறுதிகளில் புலிகளுக்கு முழுமையான எதிர்க் கருத்தைக் கொண்டவராக குறைந்தபட்சம் நான் சார்ந்தவர்களுக்குக் காட்டிகொண்டார்.
4. புலிகளின் கொலைப்பட்டியலில் எந்த நேரத்திலும் தான் இடம்பெறலாம் என்ற நிரந்தரப் பயத்தின் மத்தியில் வாழ்ந்தவர்.
என்னுடன் பேசவருமாறு அழைத்துவிட்டுப் புலிகளுக்குப் பயத்தில் அவர் தங்கியிருந்த வீட்டிற்குப் பின்னால் இருந்த குறுகிய வெளிச்சமற்ற ஓடையில் பல மணிநேரங்கள் நின்றபடி உரையாடியதை மறக்கமுடியாது. புலிப் போபியாவால் பீடிக்கப்பட்டவர் போலத்தான் காணப்பட்டார்.
86 ஆம் ஆண்டளவில் புலிகளுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் இருப்பதாக சிவத்தம்பி இன்னொரு விரிவுரையாளருக்குக் கூறியிருந்தார். அந்த விரிவுரையாளர் ஈ.பி.ஆர்.எல்.எப் முன்னணி உறுப்பினர் ஒருவருக்கு இதைக் கூற டக்ளஸ் வரை அச்செய்தி சென்றுவிட்டது. மறு நாளே ஆயுதங்களோடு டக்ளஸ் பல்கலைகழகத்திற்கு வந்து சிவத்தம்பியிடம் இது பற்றிக் கேட்டபோது சிவத்தம்பி அதிர்ச்சியடைந்துவிட்டார்.
பின்னதாக இந்தச் சம்பவத்தை எனக்கு விபரித்த திரு, ஈ.பி.ஆர்.எல்.எப் ஐ புலிகள் தாக்குவதற்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டிருப்பதாகத் தானும் நம்புவதாகவும், ஆனால் தனது கருத்தாகவின்றி பொதுவாக அவர்கள் யாரிடமாவது தெரிவிக்குமாறு கூறினார்.
ஆக, வேறுபட்ட சாட்சிகளும் உள்ளன. திருவின் பயந்த சுபாவத்தை இந்திய உளவுத்துறை கூடப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருந்ததிருக்கலாம். ஆனால், புலிகள் எந்த உளவுத்துறையாலும் பயன்படுத்தப்படக் கூடிய அரசியலையே கொண்டிருந்தனர் என்பதே பிரதானமானது.
நாவலன்,ராகவன்!
‘திரு’ இலங்கையில் இருந்த வாழ்நிலை ராஜபோகம்(புலி,இந்திய தொடர்பிருப்பின்) நிரம்பியதா?
‘திரு’ தப்பிப் போவதற்கு பணயுதவி செய்தவர்கள்,அரசியல் துறவறம் புரிந்தவர்கள்.சொந்தமாக உழைத்த பணம் சேர்க்கப்பட்டு,அனுப்பப்பட்டதும் உண்மை.
TRO
‘ரெஜி’ பணம் கொடுத்ததாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
திசை தெரியாத திட்டியில் இறக்கப்பட்டு,மீட்கப்பட்டது இந்திய மீனவர்கள் உதவியால்.இது இந்துப் பத்திரிகையில் வந்த செய்தி. இது உண்மை.
.
கரை இறங்கிய போது, வெளினாட்டுத் தொடர்பாளர்கள் சிலர் தம் அரசியலுக்காக, ரா’விடம் திருவைக் கையளித்திருக்கிறார்கள் என்பதே அதிகபட்ச உண்மை.
இந்திய உளவுத்துறை கூடப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள்,இப்போது உண்டு.
ராகவனின் “ஆரம்பத்திலிருந்து இந்திய உளவாளி” கூற்று,வெறும் கூத்து,அதீத கற்பனை.
அன்ரன் பாலசிங்கத்தை அமெரிக்க உளவாளீ என்றார்கள்.குடும்பிக்காரர் ஒருவரை றோ என்றார்கள் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு காரணத்தை கண்டு பிடித்து விலத்தி வைத்து வில்லங்கம் வளர்ப்பது இல்லை என்றால் அவனும் ஒரு துரோகி என முத்திரை குத்துவது.பாணூம் சம்பலும் சாப்பிட்டு வெறூங்காலோடு போரிட்டு காயம் பட்டவர்கள காப்பாற்ற சரணடைந்த பெரிய கைகள், சனம் சாகுது ஒருத்தரும் காப்பாத்துகினமில்ல எண்டு நாடகமாடி சரணடைந்த புண்ணீய ஆத்மாக்கள் அரசு வைத்த ஆப்பில் பரலோகம் போனார்கள்.தமக்கு மட்டுமல்ல மக்களூக்கும் உண்மையாய் இல்லாத தலைவர்கள் மக்கள மடையராக்க நினைத்து மடையரானார்கள்.இதில் தப்பிப் பிழைத்த திருநாவுக்கரசு போன்றோர் தலைவரது தீர்க்க தரிசனத்தில் சுகமாய் வாழ்ந்து கடைசியில் கம்பி நீட்டினர்.மொத்தத்தில் போராளீகள தவிர அனைவரும் சுயநல வாழ்வு வாழ்ந்தோரே.
சகோதரர்களே தங்கள் ஆர்வத்துக்கும் தகவலுக்கும் எனது நன்றிகள். எனது அனுபவங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்கிறேன் இவை இனிவரும் காலங்களில் பகுப்பாய்வும், எச்செரிக்கை உணர்வும், எதனையுமே கேள்விக்கு உட்படுத்தி விவாதிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளும் தெளிவின் மூலம் நாம் சரியான பாதைகளில் செல்ல வழி வகுக்கும் என்பதே என் கருத்து. 1986 களில் ரகீம், கிட்டு பற்றிய எமது தோழர்கள் வட்டத்தில் கலந்து உரையாடினோம் அப்போது ரகீம் கிட்டுவை ஏதோ நோக்கம் ஒன்றிற்காக பயன் படுத்த முனைகிறார் என விவாதித்தோம் பின்னாளில் புலிகள் கிட்டு சலசலப்பு நடந்ததை நாம் அறிவோம், ரகீம் இலங்கை புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்புகளை பேணியதையும் நாம் அறிந்தோம். அவர் புலிகள் பற்றிய பல தகவல்களை இந்திய இலங்கை அரசிற்கு கொடுத்திருக்கிறார் . அர்புதன் அரசியல் தொடரில் ரகீம் அம்பலப் படுத்தப் பட்டார்.
மாத்தையா பிரபாகரன் பிளவினை ஏற்படுத்த இந்திய உளவுத்துறை திட்டமிடுவதாக இந்திய ராணுவம் ஈழத்தில் நின்ற காலங்களில் சாதாரண மக்களே வடமராச்சியில் பேசிக்கொண்டனர். பின்னர் மாத்தையா பிரபாகரனை சுட்டுக் கொன்றதாக செய்தி பரப்பப் பட்டது அன்றே ஒரு பிளாட் அமைப்பின் முன்னாள் போராளி குறிப்பிட்டார் மாத்தையாவுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் பொறியினை வைக்க ரோ காரன் தொடங்கி விட்டான் இருந்து பார் என்றார். நான் சொன்னேன் பிளாட் போல கட்டுபாடற்ற இயக்கமல்ல புலிகள் அவர்கள் அதனை உடைத்தெறிவார்கள் என்று, இறுதியில் நடந்ததை நீங்கள் அறிவீர்கள்.
கருணா புலிகள் முரண்பாடு குறித்து ஒரு அரசியல் பின்புலம் உள்ள இஸ்லாமிய நண்பர் 2001 ஆம் ஆண்டு எதிர்வு கூறியிருந்தார். உண்மையில் அது எதிர்வு கூறல் அல்ல அவர் கிஸ்புல்லா அபிமானி அவர்மூலமகவே இத்தகவல் எனது நண்பருக்கு வந்தது. நான் அதன் சாத்தியம் குறித்து எனது நண்பர் வட்டத்துடன் விவாதித்திருக்கிறேன் பலர் அதனை நிராகரித்து இருந்தனர் இருப்பினும் நானும் சிலரும் இதன் சாத்தியப் பாடுகள் குறித்து எதிர்வு கூறியிருந்தோம்.
தர்த்போது பிரான்ஸ் இல் இருக்கும் ஒருவரிடம் ஸ்கைப் இல் கதைக்கும் போது பாப்பா குறித்து கேட்டேன் (இவரும் பாப்பாவும் ஒரே ஊர் காரர் போராளி குடும்பம் வேறு) அவர் சொன்னார் அடே உவங்கள் முகமாலையில் உள்ள வீடுகளுக்கு அண்மையில் இருந்து கொண்டு ஆர்மி ஓட பேசுறன் ஆர்மி ஓட பேசுறன் எண்டு (புலிகளின் தேவைக்காக) உவங்கள் உதுதான் முந்தியே பேசினவங்கள் என்று சர்வசாதாரணமாக.
நெருஞ்சி கூறுகிறார் ‘திரு’ இலங்கையில் இருந்த வாழ்நிலை ராஜபோகம்(புலி,இந்திய தொடர்பிருப்பின்) நிரம்பியதா? என்று, இது தர்க்க ரீதியாகச் சரியாகப் படலாம் ஆனால் ராஜபோக வாழ்க்கை வாழவில்லை என்பது மாத்திரம் யாரையும் தூய்மை படுத்தாது.
உங்கள் ” நவீன புலனாய்வு அரசியல்” வரைவின்படி,தமிழீழப் போராட்டத்தை ஆரம்பித்த,அனைத்து தலைமைகளும்,அதற்கு ஆதரவளித்தவர்களும் “மிகக் கூடியதும் கொடியதுமான துரோகிகளும், காட்டி கொடுப்பாளர்களும்” என்ற பொதுப்படுத்தலுக்கு கொண்டு செல்கிறீர்கள் என குறைபடும் நெருஞ்சி, இவ்வாறன வார்த்தை பிரயோகம் ஒன்றை நான் செய்திருக்கிறேன் ஏற்று கொள்கிறேன் இது அனைத்து தலைமைகளையும் ஆதரவாளர்களையும் குறிப்பிட்டு நான் சொல்லவில்லை, அவ்வாறான பொதுப் படுதலை நோக்கியும் நான் நகரவில்லை. சிலரை அல்லது சில சம்பவங்களை அடிப்படையாகவே வைத்தே சொன்னேன்.
“ஈழப் போராட்டத்தை சிதைத்து அழிக்கும் சிதைவுவாத கருத்தியல்” என்ன? விளக்கம் தாருங்கள்? என்பதற்கான புரட்சிகரப் போராட்டம் ஒன்றின் போது கருத்தியலை மறைமுக அல்லது நேரடி நிகழ்ச்சி நிரல்களின் மூலம் சிதைத்தல். இது குறித்து நான் பல விடயங்களை, எனது அவதானிப்புகளை உள்ளடக்கி கட்டுரை ஒன்றை விரைவில் தருவேன்.
விஜே கூறுகிறார் நீங்கள் (ராகவன்) கூறுகிற படி அவர் ஒரு இந்திய உளவாளியாகியிருப்பதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை. ஆனால் நீங்கள் கூறுகிற காரணங்கள் தக்க ஆதாரங்களாக கொள்ள முடியாதுள்ளது. நான் என்ன ஏதேனும் பிரதிதாள்களையா இதற்கு சமர்ப்பிக்க முடியும். அவசரப் பட்டு சொல்ல கூடாதவற்றை சொல்லிவிட்டேனோ என்று நான் நினைக்கிறேன் சில விடயங்களை தவிர்த்து எழுதியிருக்க முடியும்.
ஈழப் போராட்டத்தை சிதைத்து அழிக்கும் சிதைவுவாத கருத்தியல்” என்ன? விளக்கம் தாருங்கள்? என்பதற்கான விளக்கம்; புரட்சிகரப் போராட்டம் ஒன்றின் பொது கருத்தியலை, மறைமுக அல்லது நேரடி நிகழ்ச்சி நிரல்களின் மூலம் சிதைத்தல். இது குறித்து நான் பல விடயங்களை, எனது அவதானிப்புகளை உள்ளடக்கி கட்டுரை ஒன்றை விரைவில் தருவேன்.
வே பிரபாகரனின் ஆலோசகராக இருந்த மு திருநாவுக்கரசும் ஒருவர். கட்டுரை குறிப்பு தொடர்பாக;;;
இதில் எழுதிய எல்லா நண்பர்களுக்கும்!!
இதில் நாவலன் எழுதியது பின்னூட்டம் மட்டும் 99வீதம் உண்மையானதாக பார்க்கிறேன்.
முன்னர் மு.தி தொடர்பாக வேறு ஒரு தளத்தில் எழுதிய பின்னூட்டத்தை வரலாற்றுதேவை கருதி மீளிடுகின்றேன்.
மு.தி ஒரு போதும் பிரபாகரனின் ஆலோசகராக இருந்ததில்லை.முதி யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து புலிகளின் அனுதாபியாக இருந்து வந்தவர்.மாத்தையா புலிகள் இயக்கத்தில் இருக்கும் வரைநெருக்கமாக உறவு வைத்திருந்தவர்;பரா;யோகி;பாலகுமாரன் எனப்பலர் முதியிடம் அரசியல் கலந்துரையாடல்களை நடத்துவதுண்டு; மாத்தையா பிடிபட்டதும் யாரும் இவரிடம் போவதில்லை.1996 இடம்பெயர்வுடன் வவுனியா ஒமந்தை பகுதியில் விவசாயம் செய்த இவர் அந்த காலப்பகுதியில் தனது பல்கலைக்கழக மாணவியை திருமணம் செய்தும்கொண்டவர்.இந்த காலத்தில் மனைவியின்நெருங்கிய உறவு முறையான வவுனியா கிராமசேவகர் ஒருவர் புலிகளின் பகிரங்க மரணதண்டனைக்குள்லானதில் மனைவி புலிகளை திட்டி தீர்த்துவந்தவர்;மனைவி ஒரு ஆசிரியையும் கூட. பின்னய இடம்பெயர்வுகளுடன்
மல்லாவிக்கு வந்த முதியும் நிலாந்தனும் யோகபுரம் வளன் நகரில் ஒரு ஆங்கில பட்டறை( இங்கிலீஸ் ரியூசன் சென்ரர்)
என்று தான் அழைத்துக்கொண்டார்கள்; வழமையான கல்வி முறையில்லாமல் எல்லோரும் வட்டமாக கூடியிருந்து படிக்கும் முறையை கையாண்டார். இந்த ஆங்கில வகுப்பில் முதி கணிசமான விடயங்களை அரசியலுடன் சம்பந்தப்படுத்தியே வகுப்பை கொண்டும் சென்றார். இந்த வகுப்பில் பல்வேறு புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களும் காசு கொடுத்து கல்வி கற்றனர். அப்போது புலிகளுக்கு ஆங்கில அறிவின் தேவை இருந்ததால் கணிசமானோர் கல்வி கற்றதுடன் முதியிடமிருந்து இடையிடையே அரசியலையும் கற்றுக்கொண்டனர். இதில் நிலாந்தனும்; முதியும்; முதியின் மனைவியும் ஈடுபட்டனர்.
சமாதானம் தொடங்கும் வரை மல்லாவியில் நீடித்த இந்த ஆங்கிலப்பட்டறை நடத்திய நிலாந்தன் முதிக்குள் ஏற்பட்ட முரண்பாட்டினால் இருவரும் பிரிந்துகொண்டனர். அதேவேளை ஆங்கிலபட்டறைக்கு வந்த ஒரு நடன ஆசிரியையை காதலித்த நிலாந்தன் திருமணமும் செய்துகொண்டார். நிலாந்தன் முதிக்கு எதிராக வட்டக்கச்சியில் ஒரு ஆங்கிலப்பட்டறையை நிறுவினார். இதனால் ஆத்திரம் கொண்ட முதி கிளிநொச்சியில் மஞ்சுளா பேக்கறி சந்தியில் ஒரு ஆங்கில பட்டறையை தொடங்கினார்.
இந்த காலத்தில் தான் தனியாக செயற்படவேண்டிய சூழலில் முதி மோட்டார்சைக்கிள் ஓடவும் கற்றுக்கொண்டார் என்பது இன்னொரு விடயம்; இதை இந்த இடத்தில் சொல்லவேண்டிய தேவையுள்ளதால் இதனையும் சொல்கிறேன்; புலிகலின் அரசியல் பிரிவினர் முதியை தமது அரசியல் பிரிவினருக்கான அரசியல் வகுப்புக்களுக்கு பயன்படுத்தினர்; இவரை அவ்வாறு பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் இருந்தது; அதாவது வகுப்பு என்றால் இவரை ஒரு வாகனத்தில் ஏற்றி இறக்க ஒருவர் முதி மோட்டார் சைக்கிள் பழகும்வரை தேவைப்பட்டார்.
அடுத்து சமாதானம் மெல்ல நகரத்தொடங்க ஆரம்பத்தில் நிலாந்தனும்; பின்னர் போட்டியாக முதியும் ஈழ நாதத்தில் மீண்டும் புலிகளால் எழுத வைக்கப்பட்டனர். முன்னர் யாழில் ஈழ நாதம் இயங்கிய போது ஈழ நாதத்துக்கு அழகன் பொறுப்பாக இருந்தபோது முதி; நிலாந்தன் இருவரும் எழுதிவந்தனர்; ஆனால் நிலாந்தன் ஒரு கறார் பேர்வழி தனது கட்டுரையில் கத்தரிப்பதை விரும்பாதவர் இந்த சிக்கலால் புலிகளுக்கு இசைவாக எழுதுவதில் இருந்த சிக்கலில் எழுதுவதை நிறுத்தினார்; அடுத்து முதிக்கும் அவரது நண்பரும் ஈழ நாதம் ஆசிரியருமான ஜெயராஜ்க்கும் எழுந்த முரண்பாட்டில் முதியும் எழுதுவதை நிறுத்தினார்; அதே நேரத்தில் மாத்தையாவின் கைதும் நிகழ்ந்தகாலம் முதி புலிகளால் பாவிக்காமல் விடப்பட்டார்.
இந்த நீண்ட இடைவெளியின் பின்னர் 2003 காலத்தில் மீண்டும் முதி ; நிலாந்தன் ஆகியோர் புலிகளின் ஊடகங்களில் இடம்பிடித்தனர்; மீண்டும் யோகியும்; பாலகுமரனும்; பராவும்; என ஒரு நீண்ட புலிப்பட்டியல் இவர்களை நாடியது. இங்கு இன்னொரு மிகமுக்கிய விடயத்தையும் சமாதான தூதர்களை சந்திக்கும் புலிகளின் உயர் மட்டத்தினர் பலர் முதியிடம் ஆங்கிலம் கற்க தனியான வகுப்புகளுக்கும் சென்றனர்; இதில் நடேசன்; தமிழேந்தி கூட சென்றனர்.
சமாதான காலத்தில் வன்னிக்கு சென்ற பாலசிங்கமும் முதியை சந்தித்துக்கொண்டார்; உண்மையில் பாலசிங்கத்துக்கு முதியின் பல கருத்துக்களுடன் உடன்பாடு இருந்ததில்லை. இவங்கள் குழப்பவாதிகள் மாக்சிசம் மண்ணாங்கட்டி என்று சொல்லி குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் என்ற கண்னோட்டத்துடன் பாலா இந்த குழுவினரை பார்ப்பதுண்டு.
எனினும் இவர்களின் அரசியலை பயன்படுத்தும்படி சிபார்சு செய்ததில் பாலசிங்கமும் ஒருவர்; இதனால் புலிகளின் தேசிய தொலைக்கட்சியிலும் தோன்றினர்; மூத்த அரசியல் ஆய்வாளர் ஆகினர். இதுவே பிரபாகரனின் அரசியல் ஆலோசகராக வெளிக்காட்டியது; நான் நினைக்கிறேன் பிரபாகரன் இவரை சந்தித்ததில்லை என்றே; அப்படி சந்தித்திருந்தாலும் ஒரு மரியாதையின் நிமிர்த்தமே. ( நான் சொல்வது சந்தித்ததில்லை என்பது அருமை பெருமையாக சில தடவைகள் சந்தித்திருக்க வாய்ப்புண்டு. இங்கு கருத்து எழுதியவர்கள் சொல்வது போன்று ஆலோசகராக கொள்கைவகுப்பாளராக இருப்பின் பல டசின் கணக்கான சந்திப்பாக இருந்திருக்கும்)
இதுதான் முதியின் உண்மையான வரலாறு. தேவைப்பட்டால் இந்த அடிபடைதரவுகளை வைத்து யாரிடமும் விசாரித்துப்பார்த்து எழுதுங்கள்.
மேலும் சில தரவுகள்……
முதி ஆரம்பகாலத்தில் வரதருடன் சேர்ந்து புலிகளுக்கும் வேலை செய்தவர். வரதர் ஈபிஆர் எல் எவ் க்கு வேலை செய்வதற்கு முன்னர் குலமக்காவின் குரு நகர் இல்லத்தில் வைத்து மாத்தையாவுக்கு அறிமுகமாகி ஆரம்பத்தில் புலிகளுக்கு வேலை செய்தவர் என்பதை நான் அறிவேன்.
முதியின் அறிமுகம் ஆரம்பத்தில் புலிகளுக்கு பண்டிதர், சுகந்தன் மூலமாக ஏற்பட்டிருக்கவேண்டும். சுகந்தன் புலிகள் அமைப்பில் இருந்து விலகியிருந்த போது சுற்றிவளைப்பில் சயனைட் அருந்து மரணமானவர். இந்த சுகந்தனின் பெயரிலேயே முதியும் வேறு சிலரும் ( தனினாயகம், சிவரஞ்சித் என நினைவு) சுகந்தன் வெளியீட்டாக தான்பரீன், மற்றும் வேறு சில வெளியீடுகளை செய்தனர். அக்காலத்தில் புலிகளுடன் கருத்தியல் ரீதியாக முதி குழுவினர் 1984க்கு பிற்பகுதியில் முரண்பட்டிருந்தனர். எனினும் முதி புலிகளின் கிட்டு, திலீபன், மாத்தையாவுடன் தொடர்பில் இருந்தவர்.
மாத்தையா, யோகி போன்றோர் தமிழீழத்தின் சிறந்த சிந்தனையாளராகவே மு.தியை கருதி வந்தனர். இதனை பிரபாகரன் கிரகித்துக்கொண்டாரே தவிர ஏற்றுக்கொண்டவர் அல்ல. இவ்வாறான சிந்தனைபோக்கு கொண்டவர்கள்தான் புலிகள் இயக்கத்தின் ஆரம்பத்தில் புலிகள் அமைப்பை உடைத்தவர்கள் என்ற எண்ணப்பாங்கு எப்போதும் பிரபாகரனிடம் இருந்துவந்தது. இதனை பிரபாகரன் எல்லோருக்கும் சொல்வதில்லை. தன்னை முற்றாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு சொல்லிக்கொண்டவர் என்பது நான் அறிந்தது.
மு.தி; நிலாந்தன் போன்றோர் புலிகளை ஆதரிக்கும் எல்லாக்கூட்டங்களையும் போன்று பிரபாகரனை , அண்ணை என்றோ தேசியத்தலைவர் என்றோ அழைப்பது கிடையாது. எப்போது பிரபாகரன் என்றே விழித்து பேசுபவர்கள். இதனை அவதானித்த புலிகளின் போராளி எனக்கு கூறியது.
மு.தி வவுனியா முகாமில் இருந்து தப்பி மன்னார் கடல் வழியாக தப்பி வருவதற்கு பண உதவி புரிந்தவர்களையும் நான் அறிவேன். இவர்கள் எல்லோரும் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள். எனினும் எதேட்சையாக படகோட்டி தீடையில் விட்டுவிட்டதால் மு.தி ஆரம்பத்தில் கடலோர காவற்படையிடம் மாட்டிக்கொண்டாலும் மேலதிக விசாரணையில் இவரை அடையாளம் கண்டுகொண்டதால் சிபிஜ; றோ ; கியூபிரிவுகளின் அதி உயர்பீடம் வரை விசாரணைகளை மேற்கொண்டது என்பது உண்மைதான். எம்மவர்களுக்கே இருக்கும் மு.தி தொடர்பான குழப்பம் அதாவது மு.தி பிரபாகரனின் அரசியல் ஆலோசகர் என்ற கோதா இந்திய புலனாய்வாளர்களுக்கும் மு.தியை அந்தக்கோணத்தில் வைத்து விசாரிக்கவேண்டிய தேவை இருந்திருக்கும். அதே நேரம் மு.தியின் இந்திய எதிர்ப்புவாதம் பற்றியும் அப்புலனாய்வாளர்களுக்கு மு.தியை கையாள வேண்டிய தேவை இருந்திருக்கும் என்பது சாதாரண அறிவுள்ளவர்களுக்கே தெரியும்.
இங்கு மு.தி வெள்ளாடு; கறுப்பாடு என்ற கற்பனாவாதங்கள் வெறும் இட்டுக்கட்டல்கள்தான். மு.தி எங்கு எப்படி இருக்கிறார் என்பது தெரியாதவர்களுக்கு தெரியாது தானே. மு.தி கூடுதல் கண்காணிப்பில் தமிழ் நாட்டில் இருக்கிறார் என்பது மட்டும் வெளிப்படையான உண்மை.
நாவலன், விஜய்,
85 இன் பின்பு பல்கலைக் கழகத்தில் நடந்த சம்பவங்களை எழுதினால் பல விடயங்களை அறிந்து கொள்ளலாம். இப்போது பல்கலைக்கழத்தில் படிப்பவர்கள் அப்போதைய பங்கை திரும்பிப்பாக்கவும் சந்தர்ப்பம் கிடைக்கும். சம்பந்தங்கள் இல்லாத ஜெயபாலன் போன்ற பலர் தமது லாபத்துக்காக எழுதுவதை நீங்கள் பார்த்துவிட்டு அமைதியாக இருப்பதும் தவறானது.
ஜெயபாலன் ரவுசர் போட்டாலும் சாறம் கட்டிய சண்டித்தனக்காரர் அவரோடு மல்லுக்கு நிற்கேலுமே
நாவலன்! முப்பது வருசம், விடுதலை இயக்கமாகவிருந்து ஆட்சி புரிந்தவர்களை,இப்போது தோற்றுப் போனார்கள் என்ற காரணத்தால்,”ஆனால், புலிகள் எந்த உளவுத்துறையாலும் பயன்படுத்தப்படக் கூடிய அரசியலையே கொண்டிருந்தனர் என்பதே பிரதானமானது.” என மொட்டைக்கருத்து சொல்லும் உங்கள் மேதாவித்தனம் பெரியதே.
இடதுசாரி நாடுகளென்ன,ஏகாதிபத்திய நாடுகளென்ன உளவுத்துறையால் வாழ்ந்தும்,வீழ்ந்தும் போய்க் கொண்டிருக்கிறார்கள்.இதில் புலி முப்பது வருசம் தாக்குப் பிடித்தது………..,
ஆமா!
அது சிறியதுதான்?…
இவிளங்கா,
-நல்ல பேர் தான் வைத்துள்ளீர்கள். 30 வரியம் அழித்து அழித்து இனி நீண்ட நாளைக்கு தமிழ்ர்களுக்கு தலைமை இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். எத்தனை போராளிகள், உணர்வாளர்கள், தேசிய சக்திகள், ஜனநாயக வாதிகள்.. புலிகள்நடத்திய அழிப்பில் உச்ச அழிப்பு என்ன தெரிவுமோ? இனி நீண்ட காலத்திற்கு போராட்டத்திற்கான சூழலே இல்லாமல் செய்து விட்டார்கள்.
உங்கிடையும் நல்ல பேருங்கோ.
1948 ற்கு அப்புரமா,60 வரியத்தின்ர முதல் 30 வரியத்திற்கும்,அடுத்த 30 வரியத்திற்கும் ஒரேஒரு வித்தியாசம் பாருங்கோ.
அதுதான் கொலை. கொலை மட்டுந்தான்.
அதுக்கு நாம எல்லாரும் பொறுப்பு பாருங்கோ.யாரிலையும் பழி போட்டு,சும்மா இருக்கிரதும் சுகந்தானுங்கோ.
மத்தப்படி பேசி ஏமாந்ததும்,தோத்ததுந்தான் விளைவு.
உவையள் (போராளிகள், உணர்வாளர்கள், தேசிய சக்திகள், ஜனநாயக வாதிகள்) இருந்தாலும் ஒண்டு,இழந்தாலும் ஒண்டு.
“சூழல்” தேடிப் போரார்ற எண்டா, சுழல் கதிரை நாற்காலில,சுகமான கனவோடதான் போரடலாம்.பின்ன வரட்டே.
இருந்த இடத்தில் இருந்து எதையும் பேசலாம் ஆனால் எழுந்து பார்த்தால்தான் சூழல் தெரியும்.அரசியல் கூட்டம் என்றூ சிங்கிள் மோல்ட் விஸ்கி அடித்து ஆங்கிலத்தில் பேசி கலையும் நமக்கு குழந்தைகள் சுமந்த ஆயுதத்தின் பாரம் தெரியாது அதனால் இன்னும் குண்டுகள் வெடிக்கும் எனப் பேசி கைதட்டல் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.இனியும் போரென்ற நமது சிந்தனை மாற்றம் பெற வேண்டும் நாம் இழந்தது போதும்,இனயாவது இருப்பதைக் காப்[பொம்.
நிலாந்தன் காக்கா கடைச்சந்தியில் இருந்து வட்டக்கச்சி செல்லும் பாதையில் திருவையாற்று பகுதியில்
ஆங்கில வகுப்பை நடாத்தினார். “திரு”வை நிலாந்தன் சமாதான காலப் பகுதியில் புகழ்ந்து உரைத்தது யாபகமாக இருக்கிறது.
திரு பற்றி அறிவதற்கு நான்கு காலப் பகுதிகள் இங்கு அவதானிக்கபடுகிறது. ஒன்று 1980 -1987 வரை, மற்றையது 1987 – 1990 வரை, மூன்றாவது 1990 – இருந்து சமாதான ஒப்பந்த காலம் வரை, நான்காவது சமாதான காலப் பகுதி. இதில் எனது கவனம் இந்திய
ராணுவ காலகட்டம், இந்திய எதிர்பாளர்களை இந்திய ராணுவமும் அதன் புலனாய்வு அமைப்பும் தேடி வேட்டையாடிய காலம். அளவில் சிறியதும் செயல் திறன் அற்றதுமான இந்திய எதிர்ப்பு கொள்கையுடைய தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை உறுபினர்களையே இந்திய ராணுவமும் புலனாய்வுப் பிரிவும் மாற்று அமைப்புகளின் உதவியுடன் தேடி வேட்டையாடலில் ஈடுபட்டிருந்தது, அக்காலத்தில் தீவிர இந்திய எதிர்ப்பாளரான திருவை இந்திய ராணுவம் விட்டு வைத்திருந்ததா?….. என்பது எனக்கு தெரியாது.
1980 – 1987 இக்கு இடைப்பட்ட கால கட்டம் குறித்து நாவலன், Professor தரும் தகவல்கள் உண்மையாக இருப்பினும் இவை புலனாய்வு அரசியலை விளங்க போதுமானவை அல்ல. ஏனெனில் யாழ் பல்கலைகழகம் கிழக்கு பல்கலைகழகம் போன்றவற்றில் இருந்த பல விரிவுரையாளர்கள் முற்போக்கு முகமூடிக்குள் இருந்து கொண்டு வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்களுக்கு பகுப்பாய்வு
வேலைத்திட்டங்களுக்கு பல ஆய்வுகளை வாரி வழங்கி இருக்கின்றனர். இந்திய துணை தூதுவர் மாணிக்கத்துடன் கல்விசார்
சந்திப்புகள் என்ற போர்வையில் பலர் பலவித தொடர்புகளை பேணி வந்தனர்.
பலர் நினைப்பது போன்று இந்தியா ஈழப் பிரச்சினைக்கு பின்பே தமது முகவர்களை யாழ்பாணத்தில் பேணி வந்தனர் என்பது தவறு. யாழ்ப்பாணத்தில், இந்திய முகவர்கள் வேறு வேறு முகங்களில் பல்வேறு கால கட்டங்களில் இருந்திருக்கின்றனர். மலையாளிகள், சமயம் சார்ந்தோர், கல்வியாளர்கள் சமூகப் பெரியோர் இப்படி பல்வேறு ரூபங்களில் முகவர்கள் செயல் பட்டனர்.
சமய சொற்பொழிவாளர் ஒருவரை கூட புலிகள் இனங்கண்டு யாழ்பாணத்தில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள். பின்னர் இவர்கள் கொழும்பில் இருந்து கொண்டு சந்திரிகா அரசின் காலத்தில் இலக்கிய சந்திப்புகள் சமய சந்திப்புகள் எனக் கூறி பல கழுத்தறுப்புகளையும் காட்டிகொடுப்புகளையும் செய்ய முனைந்தனர்.
சமாதான காலகட்டத்தில் வெளியக கருத்தூட்டல்களுக்கு பல விடுதலைப் புலிகள் முக்கியஸ்தர்கள் அகப் பட்டிருக்கக் கூடும் என்பது மற்றியவர்களைப் போன்று எனது அவதானமும் அதனையே நம்புகின்றது.
எது என்னவோ ஈழ விடுதலை போராட்டம் குறித்து இவ்வளவு அவதானிப்பும் பகுப்பாய்வும் இருக்கும் பலர் இந்த தளத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியும் வரவேற்பிற்கும் உரியது. இவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ் மக்களின் எதிர்கால வரலாற்று கடமைகளில்
செயல் திறன் மிக்க சக்திகளாக ஏன் உருவாக முடியாது? தமிழ் மக்களின் விடுதலையில் அவர்கள் செல்லும் பாதையில் நுண்ணறிவுடன் கூடிய பகுப்பாய்வும் செயல் திறனும் இருப்பதன் மூலம் தனி சிறந்த கொள்கைவகுப்பை உருவாக்கின் தனி ஒருவரின் மூலமாக ஏற்படுத்தப்படும் கொள்கை வகுப்பில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பில் இருந்து அல்லது தனிநபர் செல்வாக்கில் இருந்து அல்லது தெரிந்தோ தெரியாமலோ வெளிநாட்டு புலனாய்வாளர்களின் வலையில் வீழ்ந்தவர்களின் கருத்தில் இருந்து தப்ப முடியும். அத்துடன்
மேல் சொன்னவாறு செயல் படுவதன் மூலம் தமிழ் மக்கள் அனைத்து வித ஒடுக்கு முறைகளில் இருந்து விடுதலை பெற உதவும் அழுத்த குழுக்களாகவும் இருக்க முடியும்.
ஆக துரோகி – தியாகி அரசியல் இன்னமும் முடிவடையவில்லை.
முதி பல்கலைக் கழகத்தில் நிரந்தர வேலை பெற பலதடவை முயற்சி செய்தார்- ஆனால் கிடைக்கவில்லை. புலி கூட அவரிற்கு உதவவில்லை.
அவர் யார் என்பதை விடுத்து அவரது செயல்கள் எவ்வாறு மேலாதிக்க சக்திகளிற்கு உதவின என்று எழுதுவது பயன்தரும்.
இயக்கங்களின் நடவடிக்கைகள் மிகவும் சிறுமையானவை எதற்காக நீங்கள் யாவரும் அவைகளை மிகவும் பெரிதுபடுத்துகிறீா்கள்,யாருக்கும் உண்மைகள் முழுமையாகத் தெரியாது இயக்கங்களின் தலைவா்கட்கே முழு உண்மையும் தெரியாது
ஏனெனில் பிராந்தியத்தலைவா்களின் நடவடிக்கைகள் தலைமைக்கு போவதில்லை.
ரெலோவின் பிராந்தியத்தலைவா் ஒருவா் தன் தனிப்பட்டமுடிவில் கொக்காவில் முகாமை தாக்குவதற்கு முடிவெடுத்து இறுதியில்தான் தலைமைக்கு தெரியப்படுத்தி உதவி கேட்டிருந்தார் ஆனால் தாக்குதல் படுதோல்வியடைந்தது அவரும் அதில் கொல்லப்பட்டுவிட்டார்.
ராகவன் கடவுள் இருக்கின்றார் என்று கூறுகின்றார் மற்றவா்களோ இல்லை என்று கூறுகின்கிறார்கள் அத்தோடு இருந்தால் காட்டு பார்ப்போம் என்கின்றார்கள் ஆனால் அவா்களும் இல்லை என்பதை நிரூபிக்க தயாரில்லை.
ராகவன் இன்னொரு கோணத்தில் சிந்தித்து நம்மை நாற்காலியின் நுணீக்கு இழுக்கின்றார் அவரைக் கலைப்பதற்கு நாம் முயலக்கூடாது ஏனெனில் சிந்தனையாளர் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்.கிறூக்குத்தனம் கேணத்தனம் விட்டு குமார் தரும் தகவல்களூம் நாம் அறீயாதவை புதிய திசை நோக்கி சிந்திக்க இவை அவசியமானது.
அப்போ கொக்காவில் முகாம் தாக்குதலில் தாஸ் தலைமை ஏற்கவில்லையா? தாஸ் தலைமை ஏற்றதாக ஒரு நினைவு… கொக்காவில் முகாம் தாக்குதலில் தாக்குதலுக்கு முதல் நாளே தாக்குதல் திட்டத்தை அறிந்த ராணுவம் கொழும்பில் இருந்து RPG தருவித்து பலப் படுத்தியதாக அச்சண்டையில் நின்ற ராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் குறிப்பிடத்தை நான் அறிவேன். இது தகவல் கசிவால் வந்த அவலம். ஆம் தாக்குதல் திட்டத்தை வரைந்தவர்களின் கவன குறைபாடு.
அத்தாக்குதல் திட்டத்தை வரைந்தவர் மீசோ என்பவராகும் அவா் உதவி கேட்ட வேளையில் தாஸ் குறுாப் சென்றது,அந்த காலகட்டத்தில் தாஸ் ஏறக்குறய ஒரு தனி இயக்கம் போலவே தனக்கு விரும்பியவா்களை ஒன்று சோ்த்து இருந்துவந்தார் சிறி சபா நாட்டிற்கு வந்து நிற்பதற்கு இதுவே காரணம்,இந்திய புலனாய்வுப்படையின் நெருக்குதல் அல்ல அத்தோடு ரெலோவிற்குள் வடமாராட்சி என்கின்ற பிரதேசவாதம் மிகவும் ஓங்கியிருந்தது இதனால் கிழக்கு மாகாண இளைஞா்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்து முரண்படத்தொடங்கினார்கள்.
சில வேளைகளில் பிரபாகரனை குற்றம் கூறுகின்ற போது அத்தனை தவறுகளையும் பிரபாகரன் மேலேயே போட்டுவிட முடிவதில்லை காரணம் யாழில் நடப்பது வன்னிக்குத் தெரிவதில்லை வன்னியில் நடப்பது மட்டக்களப்பிற்கு புரிவதில்லை தொடா்பு சாதனங்கள் அற்ற நிலைமையும் இயக்கங்களிற்குள்ளேயே தனி நபா் பயங்கரவாதங்களும் மிகவும் அதிகமாகும்.
புலம் பெயா்ந்த நாடுகளில் ஒரு சங்கத்தை தொடங்கி 10 பேரை வைத்து உங்களால் எத்தனை நாட்களை ஒற்றுமையாக கழிக்கமுடியும் சொல்லுங்கள், மிகவும் கடினமல்லவா? அப்படி இருக்கும் போது பலதரப்பட்ட குணங்களையும் கொண்ட ஒரு பெரிய கூட்டத்தை வழிநடத்துவதென்பது இமாலய சாதனை என்றே எண்ணுகிறேன்.
தமிழ்தேசிய அரசியலின் செயற்பாட்டாளர்களாக இருந்த திருவையோ மு.நித்தியானந்தனையோ, நிர்மலாவையோ, ரஜனிதிரணகமவையோ, அன்றேல் பல்லாயிரக்கணக்கான உயர்தரவகுப்பு மாணவர்களின் பெருமரியாதைக்குரிய இந்திய அடிவருடிகளால் கொல்லப்பட்ட பொருளியல் ஆசிரியர் கிருஸ்ணானந்தன் அவர்களையோ என்றுமே ஏற்றுக்கொண்டவனல்ல. காரணம் புலிகள் வெளிப்படையாகவே பாசிச அரசியல் பேசியபோது புலிகளுடன் இணக்கப்பாடான அரசியல் செய்தவர்கள். தங்களுடன் முரண்பட்டால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இரண்டாம்பட்சபடுத்தவேண்டியிருக்கும்(அதன் அர்த்தம் அந்த அமைப்புக்களை அழித்துவிட்டுத்தான் மறுவேலை) என்றும் ஊர்மிளா விவகாரத்திற்காக முகுந்தனுக்கு என்றுமே மரணதண்டனை என்றும்(வெறும் சில உதாரணங்கள்) வெளிப்படையாகவே பேசியும் எழுதியும் வந்தார்கள். கூடவே தங்களைப் போன்ற செயல்பாடுகள் மூலம் போட்டியாளர்களாக வரக்கூடியவர்களாக கருதியவர்களை (சுந்தரம், ஒவ்றோய் தேவன் ரெலி ஜெகன் நீண்ட பட்டியல்) கொன்றொழித்தும் வந்தார்கள். அதற்காக திருவையோ ஏனைய புத்தியீவிகளையோ இந்திய உளவாளிகள் என்று கற்பிதம் கொள்ளுதல் தவறு. நாவலனின் கருத்து சரியானது. புலிகளின் அரசியல் உளவுஅமைப்புக்களால் கையாளப்படக்கூடியதாகவே இருந்தது என்பதுதான் உண்மை. புரபசர் தெரிவித்திருக்கின்ற தகவல்களுக்கு நன்றி. விசாரணைகளிலிருந்துதான் எமது அரசியலை ஆரம்பிக்கவேண்டும் என்பதிலும் விமர்சனங்களுக்கும் திறனாய்வுக்கும் அப்பால் எந்த கருத்தியலும், தனிமனிதர்களும் இல்லை என்று திடமாக நம்புகின்றபோதிலும் அரசியல் தளத்தில் செயல்பட்டவர்கள் மீது (அவர்களுடன் உடன்படாதபோதும்) அமெரிக்க இந்திய உள்வாளிகள் என்று சேறுபூசுதல் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. கருத்துமுரண்பாடு உள்ளோரை உள்வாளிகள் என்று சுட்டும் மனோவியாதிக்குட்படாமல் இருப்போமாக. புலிகளின் அமைப்பு சக்கரவர்த்திக்கு கட்டுப்பட்ட சிற்றரசர்களும், குறுநிலமன்னர்களையும் கொண்ட நிலபிரபுத்துவ ராணுவ அமைப்பாகவே செயல்பட்டார்கள். தலைவரை சூரியத்தேவனாக கரிகாலச்சோழனாக சித்தரித்து உருவாக்கப்பட்ட தனிநபர்விசுவாசமும், குறுந்தேசியவாதமும், முக்கியமாக பேரினவாத ராணுவஒடுக்குமுறையுமே புலிகளை அமைப்பாக வைத்திருந்தது. சிற்றரசர்கள் சக்கரவர்த்திக்கு விசுவாசமாக இருக்கும்வரை அவர்களிடம் வானளாவிய அதிகாரம் இருந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் இதெல்லாம் தலைவருக்கு தெரியாமல்தான் நடக்கின்றது என்று நம்பினார்கள். நாசிச ஜேர்மனிய படைகள் கூட(பிரபாகரனின் விருப்புக்குரிய) வெளியே சிறந்த ஒழுங்கமைப்பு கொண்டவர்கள் போன்ற தோற்றத்தை கொண்டிருந்தாலும், கிம்லர் உட்பட பல தளபதிகள் யூதர்களுடைய சொத்துக்களை கிட்லருக்கு தெரியாமல் தனிப்பட்டமுறையில் சேர்த்துவைத்திருந்தார்கள். கிழக்கு மாகாணத்தில் புலிகளுடன் ஆரம்பத்தில் இணைந்த போராளிகள் “கடவுள்” உட்பட பலர் எண்பதுகளிலேயே விலகிப்போயினர். கிழக்குமாகாணத்து சிறுவிவசாயிகளின்,சிந்தனைக்கும், வாழ்க்கை முறைக்கும்,புலிகளின் யாழ்மேலாதிக்க, தூய்மைவாத சிந்தனைமுறைக்கும் எந்தசம்பந்தமுமே இல்லை. கிழக்கில் எமது மக்கள் அனுபவித்துவந்த பேரினவாத படுகொலைகளும்,புவியியல்சார் நிலைகாரணமாக தொண்ணூறுகளின் இறுதிவரை புலிகளின் குறுநில ஆட்சியின் கீழ் மக்கள் வாழாததும்( புலிகள் பெரும்பாலும் கெரில்லாக்களாகவே இருந்தார்கள்) பெரிய அளவில் முரண்பாடு தோன்றாமைக்கான காரணங்களாக இருக்கலாம்.
பாலியல் தொடர்பு மரணதண்டனைக்குரியது என்ற அமைப்பின் தலைமையில் இருந்து கொண்டே,தவறு புரிந்தவனை என்ன செய்வது?
கொலைகளை,கொள்ளைகளை “தனிநபர் பயங்கரவாதமாகச்” சித்தரித்து,இயக்கத்தைப் பிளவுபடுத்தி,போட்டி இயக்கம் ஆரம்பித்து,அதே தனி நபர் பயங்கரவாதத்தை செய்தவர்களை என்ன செய்வது?
இயக்கத்தின் கோட்பாடுகளை ஏற்று,அதன் பின்னணியைப் புரிந்து,ஒண்டியிருந்து விட்டு,”இடம் கிடைத்த இடத்தில் மடம் புடுங்கியவர்களை என்ன செய்வது?
உமாவை வளர விட்ட தவறை,புலிகள் அறியு முன்னே,உமா தானழிந்து போனார்.புலிகளை பேரினவாதத்துடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியதே,ஆள ஊடுருவல் அணியாக,இராணுவத்துடன் செயற்பட்ட PLOT காரணம் என்பது வரலாறுதான்.
“a voter ” – அவர் யார் (திரு) என்பதை விடுத்து அவரது செயல்கள் எவ்வாறு மேலாதிக்க சக்திகளிற்கு உதவின என்று எழுதுவது பயன்தரும். உண்மை அவ்வாறு தான் கருத்தை கொண்டு சென்றிருக்க வேண்டும். நான் இங்கு திருவை துரோகி, காட்டிகொடுப்பாளர் என்று விழித்தது மிகத் தவறு, நவீன புலனாய்வு அரசியல் சகதிக்குள் மாட்டுப் பட்டவராக நான் இனங்காட்டியிருக்க முடியும். எனது அதீதமான உணர்ச்சி வசப்பட்ட நிலைமை எனது கருத்துகளை சொல்லும் போது பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது அப்படிப்பட்ட பக்க விளைவுகளே ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதன்மை விளைவுகளாகப் போய் எமக்கு அழிவுகளையும் அவலத்தையும் தந்தது என்பதை நான் அறியாதவன் அல்ல.
இனிஒரு எமக்கொரு களம் அமைத்து தரட்டும் திரட்ச்சியாய் மேல் எழுந்து எமது உரிமைகளை மீட்டு எடுக்கும் வழிமுறைகளையும் அதன் பின்னான ஆற்றல் மிகு அமைப்பாவதன் மூலம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களையும் புரட்சிகர சக்திகளையும் அணி திரட்டி உலகத்தின் மனச்சாட்சியை தட்டி எழுப்புவதற்கு இனிஒரு எமக்கு களம் தரட்டும். களத்தில் உள்ள மக்கள் தமது உரிமைக்காக குரல் கொடுக்க முடியாத நிலைமையே இன்று உள்ளது. எனவே புலம் பெயர் நாம் ஆற்றலுடன் செயர்த்பட வேண்டும் என்பதே எல்லோரையும் போன்று எனது அவாவாகும்.
சிவசம்பு குறிப்பிடுவது போன்று, போரற்ற முறையில்!, எங்களை நாம் சரியாகப் புடம் போட்டால் இன்றுவரை
அழிவில் சிக்குண்டு நிலத்தை, வாழ்வுரிமையை, மொழியை, அடிப்படை உரிமைகளை நிதம் இழந்து கொண்டு அழிவில் இருக்கும் மிகவும் அகச் சிறுபான்மை ஆக்கப் பட்ட எமது தேசிய இனத்தை அதன் அழிவுகளில் இருந்து சாணக்கியமாகவும்
சாமர்த்தியமாகவும் மீட்க முடியும். இன்றைய உலக ஒழுங்கில் மாட்டுப் பட்டு முழிக்கும் இலங்கை அரசின் நிலைமையை எமக்கு சாதகமாக பயன்படுத்தி காலத்தால் ஆகக் கூடிய உச்ச பயனைப் பெற முடியும். அதற்காக நாம் கடந்த கால நிகழ்வுகளை எமக்கு படிப்பினையாக கொண்டு எம்மை புடம் போடுவோம். இதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்?…………………..
குமார் தங்களின் கருத்து தொடர்பாக,
தாஸ் உட்பட சிறியால் கொல்லப்பட்ட ஐவரில் இருவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் அல்லவா? சுமார் 20 வரையிலான கிழக்கு போராளிகள் தாசுடன் இருந்து இருக்க கூடும். தாஸ் கொல்லப்பட்ட பின்னர் வடமராச்சியில் இருந்து சென்ற எதிர்ப்பு ஊர்வலத்தின் மீது கடுமையான காழ்புணர்ச்சியை பொது மக்கள் மேற் கொள்ளும் வகையில் சிறி அணியினர் பிரதேச வாதத்தை தூண்டி நடந்து கொண்டனர். வடமராட்ச்சியாருக்கு தண்ணி கூட கொடுக்கக் கூடாது என்று கல்வியங்காடு,ஆவரங்கால்,நீர்வேலி பகுதிகளில் பொதுமக்கள் நடந்து கொண்டதாக வடமராச்சி மக்கள் குறை பட்டுக் கொண்டனர். பல்கலை கழக மாணவர்கள் இதனில் தலையிட்டு சுமுக சூழலை ஏற்படுத்தி கொண்டனர்.
ஒரு டெலோ போராளி சுதன், ரமேஷ் மற்றும் பொபி, தாஸ் பிரச்சினை குறித்து கதைத்த போது அவர் தமது இயக்கத்தை நியாயபடுத்த சொன்னார் ஒரு குடும்பத்துக்குள் எத்தனை பிரச்சனை வருகின்றது வேறு வேறு பின்னணியில் இருந்து வரும் ஆயிரம் பேரை கட்டிவளர்க்கும் போது பிரச்சினைகள் வரும் தானென்றார். இது பிரச்சனைகளை கையாளத் தெரியாதவர்களின் கையாலாகத்தனம் என்றே சொல்லமுடியும். அரசியல் தெளிவுகளில் நம்பிக்கையற்ற டெலோ, புலிகள் இவ்வாறுதான் தமது அமைப்புகளை வழி நாடாத்தினர். நாம் வித்தியாசமாக நடந்து பார்ப்போம் இங்கு ஆயுத அரசியல் இல்லாத படியால் நாம் வெற்றிகரமாக பயணிக்க முடியும். நான் கூறவருவது புரட்சிகர வேலைத் திட்டங்களுக்கு அழுத்தக் குழுக்களாக இருப்பதை மட்டும்.
உதாரணமாக புலத்தில் தமிழர் தாயகத்தில் நடக்கும் அடக்கு முறைகளை வெளி உலகிற்கு அம்பலப்படுத்தல்.
வெளியுலகை தமிழர் நலன் குறித்து முடிவெடுக்க அழுத்தம் கொடுத்தல்
நாடுகடந்த அரசு, புலிகள் இன்னும் பிற சக்திகள் தமிழர் நலன் குறித்த செயல் பாடுகளை எடுக்கும் போது ஆய்வு முறையில் ஆலோசனைகளை வழங்கல்
மக்களை ஆக்க பூரவமான விடயங்களுக்கு அணிதிரட்டுதல்
மிகச் சரியான முறையில் புலம் பெயர் நாடுகளில் மக்கள் எதிர்பியக் கண்களை உருவாக்கி வினைத்திறனுடன் போராடல்
இன்று வடக்கு கிழக்கில் நடக்கும் கடத்தல் காணாமல் போகும் மற்றும் படுகொலைகள் அத்துமீறிய பேரினவாத நிலப் பறிப்புகள் கலாச்சார ஆக்கிரமிப்புகள் என்பவற்றை எதிர்த்து உலக நாடுகளில் போராட எதிர்ப்பு காட்ட எவரும் இல்லையே ராஜபக்சேவுக்கு பிரபாகரனின் கொடியையும் புலிக்கொடியையும் காட்டி விட்டு வாலைச்சுருட்டி கொண்டது விட்டார்கள் போலும். பொதுவாக நாட்டு தலைவர்களை வரவேற்பதற்கே தேசிய கொடிகளை காண்பிப்பதுண்டு அந்த வகையில் புலிகள் பிரித்தானியாவில் மகிந்தவை வரவேற்பளிக்கும் கூட்டத்திற்கா? அல்லது எதிர்ப்பு காட்டும் கூட்டமா? என்பது தெரியவில்லை. ஏனெனில் இப்போது தான் பாரிய எதிர்ப்பு போராடங்களை செய்ய வேண்டும் இவை தொடர்ச்சியாகச் செய்யவேண்டும். ஏனெனில் இப்போது எங்களிடம் இருக்கும் ஆயுதம் அதுவொன்றே, உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் முறையான வழியில் சகலரும் விழிப்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும்.
சிங்களத்தில் தேசிய கீதம் பாட எதிர்ப்பு காட்டிய ஒரு கல்வி அதிகாரியின் நிலைமையை பார்த்தீர்களா? இது மோசமான ஒரு ஆபத்து நிலைமை. பொலநறுவை மட்டக்களப்பு வீதியில் வெலிகந்தையில் நின்று கொண்டு மட்டகளப்பு வீதியை பார்த்து கொண்டு இருப்போம் என்றால் எமது வலக்கை முற்றாக அபகரிக்கப் பட்டுவிட்டது இங்கு எச்ச சொச்சமாக இருந்த தமிழர் வாழ்விடங்கள் தொப்பிகல முற்றுகையுடன் அனைத்தும் முடிந்து விட்டது. இடக்கை பக்கம் தற்போது நாகர்கோவில் மணல் காடு வரை சிங்கள மீனவர்களின் வருகையோடு முற்றுகைக்கு உள்ளாகிவிட்டது. எனவே இவற்றை எதிர்பதற்கு எம்மிடம் இருக்கும் ஒரே வழி முறை புலம் பெயர் நாடுகளில் இவற்றை முன்வைத்து இவ் இன அழிப்பை நிறுத்தக் கோரும் எதிர்பியக்கங்களை, எதிர்ப்பு போராட்டங்களை நாம் நடாத்த முன் வரவேண்டும்.
”அரசியல் தெளிவுகளில் நம்பிக்கையற்ற டெலோ, புலிகள் இவ்வாறுதான் தமது அமைப்புகளை வழி நாடாத்தினர்.”
டெலோ பற்றி எழுதும் நீங்கள் ஏன் அதற்குள் புலிகளைப் நசூக்கமாகப் புகுத்துகிறீகள்?
ராகவன், உங்கள் எழுத்துக்கள் மெது மெதுவாக எங்கோ போகின்றன. புலிகள் என்னதான் பிழை விட்டிருந்தாலும் அவர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?
சூரியா இதில் ஆதங்கப் பட என்ன? இருக்கிறது சிலவேளை புலிகள் வேறு குட்டையில் ஊறிய மட்டைகளாக இருக்கக் கூடும் புலிகள் உட்பட அனைவரும் அரசியல் வங்குரோத்து நிலையிலே இருந்தனர் இன்றும் இருக்கின்றனர். ஒரு பேச்சுக்கு ஏனையவர்களை விட்டுவிடுவோம் புலிகளை எடுத்துக் கொள்வோம் மே 19 இன் பின்னர் அவர்களின் நிலைமை என்ன? புலிகள் ராணுவ இயக்கமாக வளர்ந்த அளவுக்கு அரசியல் நிலைமைகளில் வளரவில்லை என்பது புலனாகவில்லையா? விடுதலை புலிகள் ஏனைய அமைப்புகளை விட மிகவும் கட்டுகோப்பாக வளர்க்கப்பட்ட இயக்கம் அதனால் அவர்கள் தமது கொள்கைக்காக ஒரு ராணுவ இயக்கத்தை நேர்த்தியாக கொண்டு செல்லக் கூடியதாக இருந்தது. டெலோவை பொறுத்தவரையில் கட்டுப் பாடும் இல்லை அரசியல் தெளிவும் இல்லை, பிளாட் அமைப்பை பொறுத்தவரையில் இரண்டும் இருப்பதாக நம்பப் பட்டது பின்னர் அந்த நம்பிக்கை சில காலங்களில் தகர்ந்து போனது. எது என்னவோ நாம் பூச்சியத்தில் தான் இருக்கிறோம்
என்ற தெளிவு இருந்தால் போதுமானது