விடுதலைப் புலிகளை விமர்சித்துள்ள கருணாநிதி ரெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்னம், அமிர்தலிங்கம் உள்பட பல அரசியல் தலைவர்களைக் கொலைசெய்தமை தவறானது என்கிறார்.
இலங்கையில் 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களை கேட்டுக் கொண்டமை ஒரு அவசர முடிவாகும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதன் விளைவு, விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்திருந்த ரணில் விக்கிரமசிங்கவை மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்க உதவியது என்று தெரிவித்த கருணாநிதி, அதிலிருந்து பேச்சுவார்த்தை முடக்கப்பட்டு விட்டது என்றும் கூறியுள்ளார்.
பகிஷ்கரிப்பு கோரிக்கையை அடுத்து 7 லட்சம் தமிழர்கள் முற்றாக வாக்களிக்காத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரணில், விக்கிரமசிங்கவை 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குளால் வெற்றி பெற்றார். அன்றைய அவசர முடிவின் இன்றைய விளைவு என்ன? இன்று இலங்கை இராணுவத்தினால் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டுவது போல் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து இலங்கை பிரச்சினைக்காக தி.மு.க. நடத்திய அறப்போராட்டங்களும், எடுத்த வாதப்போராட்டங்களும், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி எறிந்த நிலைகளையும், இருமுறை ஆட்சியை இழந்த சரித்திர சம்பவங்களையும் தனது அறிக்கையில் நினைவூட்டியுள்ளார்.
கருணாநிதி எமது தேசியத்தலைவரைப் பற்றி விமா;சனம் செய்வதற்கு உங்களுக்கு அருகதை இல்லை. ஈழத்தமிழா;கள் செய்த தவறு உங்களை தமிழன் என நம்பியதுதான். எங்களது போரைத் தோற்கடித்தது எமது தமிழகத்தமிழா;கள் தங்களது அரசுக்கு தலைவா; என எனவைத்த ந{யும். ஈழத்தமிழா; மூலமாக தமிழகத் தமிழா;கள் தற்போதுள்ள அடிமை நிலையில் இருந்து (இந்தியாவின் நினைப்பு) விடுதலையடைந்து விடுவார்களோ என்று செய்த துரோகமுந்தான். அமிர்தலிங்கத்தின் கொலையைப் பற்றி ந{ பேசாதே இந்தியா தானனே அந்தக்கொலையைச் செய்துவிட்டு எமது தலைவா;ம{து பழியைச் சுமத்துகிறது. வாதிட நான் தயார் ந{ர் தயாரா?
கருணாநிதி என்னும் தந்திரக்கார கோழை தனது கடைசி ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். ஒரு பிரச்னையை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்றுப் போகும்போது கருணாநிதி உடனே உண்ணாவிரதம் அறிவித்துவிடுவார். தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் காக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை செய்வதற்கு தமிழினத்துக்கு கிடைத்திருக்கிற ஒரே தலைவன் உண்ணாவிரதம் இருப்பதுகண்டு தொண்டர்கள் கொதிப்பார்கள். ‘அய்யோ தலைவா’ என்று அழுவார்கள், கதறுவார்கள். இப்போதும் அதுவேதான் நடக்கிறது. கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு எதிரே நின்றபடி ‘கைவிடுங்கள், கைவிடுங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்’ என்று கோஷம் போட்டபடி இருக்கிறார்கள் கருணாநிதியின் ரசிகர்கள். போரை நிறுத்தச்சொல்லி ஒப்புக்கேனும் கூட இலங்கையை எதிர்த்து, ராஜபக்ஷேவை எதிர்த்து கோஷம்போட அவர்களுக்குத் தோன்றவில்லை.
சக்கர நாற்காலியில் உண்ணாவிரதம் இருக்கும் கருணாநிதியைப் பார்த்தால் பாவமாக இருப்பதாக நண்பர்கள் சிலர் சொல்கிறார்கள். எனக்கோ வெட்கமாக இருக்கிறது. அரசியல் அதிகாரங்கள் அற்ற ஏதிலிகள், அதிகாரத்தில் உள்ளவர்களை நடவடிக்கை எடுக்கச் சொல்லி உண்ணாவிரதம் இருக்கலாம். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் கருணாநிதி ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்? அதை செய்வதற்கு எதற்கு கருணாநிதி? நீங்களோ, நானோ செய்துவிட்டுப் போய்விடலாமே..?
தமிழினத்தை நம்பவைத்து கழுத்தறுத்த மிக மோசமான நயவஞ்சகனாக கருணாநிதியை வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஒரு தலைமுறை என்பது 33 வயது என்று சொல்வார்கள். கருணாநிதிக்கு இப்போது 85 வயது. அவரது உண்மை முகத்தை தெரிந்துகொள்ள மூன்று தலைமுறைகளை செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஈழத்தில் இருந்து அணுதினமும் வந்துகொண்டிருக்கும் செய்திகளைப் படிக்கவும், புகைப்படங்களை, வீடியோக்களைப் பார்க்கவும் முடியவில்லை. மனம் பிறழ்வுறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் மிக மோசமான மனித குல அழிப்பை முன்னெடுக்கும் சிங்கள அரசை நேரடியாக கண்டிக்க இந்தியா என்னும் இறையாண்மை உள்ள புடுங்கி தேசத்துக்கு வக்கில்லை. மத்திய அரசை நிர்பந்தித்து போரை நிறுத்தவோ அல்லது பதவி சுகங்களை துறந்து தமிழினப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தவோ வேண்டிய முத்தமிழ் காவலர் உண்ணாவிரதம் இருப்பது எதற்காக? ‘ஐயோ, இந்த தள்ளாத வயதில் உண்ணாவிரதம் இருக்கிறாரே..’ என்ற கழிவிரக்கத்தை ஏற்படுத்தி அவற்றை தேர்தல் ஓட்டுக்களாக மாற்றுவதே திருக்குவளை தெட்சிணாமூர்த்தியின் திட்டம். ஆனால் அவரது ஐம்பது ஆண்டுகால பொதுவாழ்க்கையில் இந்தவகை நாடகங்களை மக்கள் நிறையவே பார்த்துவிட்டார்கள். எந்தத் தமிழனும் இந்த உண்ணாவிரதத்தை உண்மை என்று நம்பவில்லை. டீ கடை முக்குகளில் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் அம்பலப்பட்டு நிற்கிறது.
உண்மையில் பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான மிக மோசமான இருண்டகாலத்தை தமிழகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தின் இன்றைய கொடூரமான நிலை குறித்தும், தமிழக ஓட்டுப் பொறுக்கிகள் ஈழ மக்களுக்கு இழைக்கும் துரோகம் பற்றியும் பெரியார் திராவிட கழகம் தயாரித்த சி.டி.க்களை வெளியிட அரசாங்கம் தடை விதிக்கிறது. பெரியார் திராவிடர் கழக அலுவலகங்கள் ஏதோ விபச்சாரம் நடக்கும் லாட்ஜ்களைப் போல ரெய்டு நடத்தப்படுகின்றன. சிவகங்கையில் ப.சிதம்பரத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரசாரம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதற்கு காவல்துறையால் சொல்லப்பட்டக் காரணம், ‘பப்ளிக் நியூசென்ஸ்’. ஏண்டா நாய்களா… பப்ளிக்கை குண்டுபோட்டுக் கொல்வது நல்ல விஷயம். அதைப்பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்வதுதான் நியூசென்ஸா..? தேர்தல் களத்தில் எதை பிரசாரம் செய்ய வேண்டும், எதைப் பிரசாரம் செய்யக்கூடாது என்பதை இன்று கோபாலபுரம் கும்பலே தீர்மாணிக்கிறது. அதை எதிர்க்கும் அத்தனை பேர் மீதும் காவல்துறையை ஏவிவிட்டு வழக்குப் போடுகிறது. அந்த வழக்குகள் கோர்ட்டில் நிற்காது என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனால் அது விசாரணைக்கு வந்து முடிவு தெரிவதற்குள் தேர்தல் முடிந்துவிடும் என்பதால், தெரிந்தேதான் செய்கிறார்கள்.
இதோ இந்த நிமிடம் இதை டைப் செய்துகொண்டிருக்கும்போது ‘இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதாக அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து நான் உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன்’ என கருணாநிதி அறிவித்திருக்கிறார். எதன்பொருட்டும் போர் நிறுத்தம் என்பது அவசியமான ஒன்றே. ஆனால் அதை முன்கூட்டியே தெரிந்துவைத்திருக்கும் தமிழினத் துரோகி கருணாநிதி, அதை தேர்தல் அறுவடையாக மாற்ற உண்ணாவிரதம் இருந்த நாடகத்தை என்னவெனச் சொல்ல? இந்த போர் நிறுத்தம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இதில் கருணாநிதியின் பங்கு என எதுவும் இல்லை. சர்வதேசங்களிலும் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டங்களின் விளைவாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம் கருணாநிதியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்த வேண்டும். போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்த தமிழினத் தலைவரை வாழ்த்தி இந்நேரத்துக்கு அறிக்கைகளும், போஸ்டர்களும் தயாராகியிருக்கும். அந்தப் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும். இந்த உண்ணாவிரதம் என்பது கருணாநிதி நடத்திய நாடகத்தின் இன்னொரு பகுதியே என்பதை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும். ஓட்டுப் பொறுக்கிகள் அனைவருமே தமிழர்களின் பிணங்களை நக்கிப் பிழைக்கும் நாய்களாக இருக்கிற சூழலில் தேர்தல் புறக்கணிப்புதான் என் தேர்வும். ஆனால் இந்த தேர்தல் அதற்கான சூழல் அல்ல. தமிழ் இன அழித்தொழிப்பை மேற்கொள்ளும் காங்கிரஸுக்கும், அதற்கு துணைபோகும் தி.மு.க.வுக்கும் எதிரான நிலைபாட்டை இந்த தேர்தலில் எடுக்க வேண்டும். இதன் அறுவடை ஜெயலலிதா என்னும் பார்ப்பன சக்திக்குதான் போய்சேரும். ஆனால் தமிழர்களுக்கு சொரணையும், சுய மரியாதையும் இருக்கிறது என்பதைக்காட்ட இந்த எதிர்நிலைபாடு அவசியமாகிறது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் குருஜி சொன்ன பிறகுதான் ஜெயலலிதாவுக்கு இலங்கையில் நடப்பது தெரிகிறது என்பதிலிருந்தே அவரைப் புரிந்துகொள்ளலாம். அவர் எந்நாளும் தமிழ் இன உணர்வின் விரோதி. நிச்சயிக்கப்பட்ட எதிரி. இதனாலேயே ஜெயலலிதாவை வீழ்த்துவதும் சுலபம். ஆனால் கருணாநிதி சொந்த வீட்டுக்குள் இருந்து காட்டிக்கொடுத்து கழுத்தறுக்கும் துரோகி. அவரை வீழ்த்துவதும் சிரமம். அவர்தான் முதலில் கருவருக்கப்பட வேண்டும். கொளத்தூர் மணி சொன்னதைப்போல ‘கறுப்பனைக் கட்டி வைத்து அடிக்கிற அடியில், வேலன் வேலியை முறித்துக்கொண்டு ஓட வேண்டும்’!