முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு உதவியபோதும், ஒளிவு மறைவாக செய்தது. கடைசிக்கட்டத்தில் பயந்து பின்வாங்கியது. ஆனால், பாரதிய ஜனதா அரசு சிங்கள அரசுக்கு வெளிப்படையாகவே உதவுகிறது. அதனால்தான் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது என்று கடைசித் தேர்தலில் பாரதீய ஜனதாவோடு கூட்டுவைத்துக்கொண்டு அதற்கு ஆதரவாகப் பிரச்சரம் மேற்கொண்ட வை.கோ தெரிவித்துள்ளார்.
ஈழப் பிரச்சனையும் ஈழ மக்களின் கண்ணீரும் தென்னிந்திய அரசியல்வாதிகளால் பந்தாடப்படுகின்றது. தாம் விரும்பிய போது எதிரிகளோடு ஈழத்தின் பேரால் கூட்டு வைத்துக் கொள்வதற்கும் தமக்கு பிழைப்பு நடக்காத போது புதிய எதிரிகளைத் தேடிக்கொள்வதும் வை.கோ போன்ற பிழைப்புவாதிகளின் இயல்பு.
2009 ஆம் ஆண்டு மே மாதம் வன்னியில் இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த் போது மத்தியில் பாரதீய ஜனதா வெற்றிபெறும் வரை காத்திருக்குமாறு கூறியவர் வை.கோ. இதனை நம்பிய புலிகள் மக்களோடு வன்னிக்குள் முடங்கினர். ஆக, இனப்படுகொலையில் வை.கோபாலசாமி பங்களித்துள்ளார். முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து புலிகளை வெளியேறாமல் தடுத்த வை.கோபாலசாமி போன்ற இனக்கொலையின் பங்காளிகள் எந்தக் கூச்சமும் இன்றி இன்னும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள். காப்ரட் வியாபாரிகளால் நியமிக்கப்படும் இந்திய அரசு ஈழத் தமிழர்களின் நலன்களுக்காகச் செயற்படாது என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டே வை.கோ போன்றவர்கள் பாரதீய ஜனதா என்ற இந்து பாசிசக் கட்சியை நம்பக்கோரினார்.
இலங்கை அரசிற்கு ஆதரவளித்த வஜ்பாய் தலைமையிலன அரசில் அங்கம்வகித்த வை.கோ போன்ற கடைந்தெடுத்த பிழைப்புவாதிகள் ஆயிரம் ஆயிரம் உயிர்களோடு விளையாடிய வியபாரிகள். ஈழப் பிரச்சனையிலிருந்து இவர்கள் ஒதுங்கிக்கொண்டாலே மக்கள் போராட ஆரம்பிப்பார்கள். வன்னியில் லட்சக்கணாகான மக்கள் அழிக்கப்பட்ட பின்னரும், பிரபாகரன் உயிரோடு வாழ்கிறார் என்று மக்களை ஏமாற்றி தமிழகத்தில் எழுச்சிகளைத் தடுத்த வை.கோ, அதிகாரவர்க்கத்தின் அடியாள் என்பதைப் புலம் பெயர் பிழைப்புவாதிகள் தெரிந்துகொண்டும் கூட்டுவைத்துக்கொண்டனர்.
வை.கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
உலகின் பூர்வகுடி மக்களான தமிழர்களின் நெடிய வரலாற்றில் தமிழ் இனத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பமும், கேடும் போல இதுவரையில் நேர்ந்ததில்லை. இந்தியாவில் புதிய அரசு பொறுப்பேற்று ராஜபக்சேவை இந்தியாவுக்கு வரவழைத்தபோதே அதை தடுப்பதற்காக நான் எவ்வளவோ நரேந்திரமோடியிடம் மன்றாடிப் பார்த்தேன்.
அக்டோபர் 9 ஆம் தேதி அன்று இந்தியாவின் ராணுவ அமைச்சுத்துறை செயலாளர் ஆர்.கே.மாத்தூர் சிங்கள அதிபர் ராஜபக்சவை சந்தித்து இலங்கையிடம் இருந்துதான் நாங்கள் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
பச்சைக் குழந்தைகளையும், கர்ப்பிணிப்பெண்களையும் கொல்வதும், இளம் பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்வதும், உலகம் தடை செய்த குண்டுகளை வீசி பொதுமக்களை பலியிடுவதும், இவையெல்லாம் இந்திய இராணுவம் சிங்களவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களா? இது மட்டுமல்ல, சிங்கள ராணுவ அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள ராணுவத்தினருக்கு பாடம் வகுப்பு நடத்தப் போகிறார்களாம். பயிற்சி கொடுக்கப் போகிறார்களாம். அதற்கும் ஏற்பாடாகியிருக்கிறது.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு உதவியபோதும், ஒளிவு மறைவாக செய்தது. கடைசிக்கட்டத்தில் பயந்து பின்வாங்கியது. ஆனால், பாரதிய ஜனதா அரசு சிங்கள அரசுக்கு வெளிப்படையாகவே உதவுகிறது. அதனால்தான் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையோ, பிரதமரோ இதுவரை கண்டித்தார்களா? இல்லை. அவரது தனிப்பட்ட கருத்து என்று சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.
வெந்த புண்ணில் வேல் வீசுகிறது இந்திய அரசு. மான உணர்ச்சி தமிழ்நாட்டில் அழிந்துவிடவில்லை. அது அழியாது. அது ஆயிரங்காலத்துப் பயிர். கேள்வி கேட்பார் இல்லை. நாம் எதைச் செய்தாலும் யார் தடுக்க முடியும் என்ற மனோபாவத்தில் மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், சிங்கள கொடியோருக்கு துணையாகவும் செயல்படும் போக்கு எதிர்காலத்தில் விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை காலம் நிச்சயமாக நிரூபித்துக் காட்டும்” என கூறியுள்ளார்.
வை. கோ சீமான் நெடுமாறன் போன்றவர்கள் எமது பணத்திலேயே வாழ்கிறார்கள். நெடுமாறன் படகிலே சாமான் கொணர்ந்தவர் தானே