எந்தப் பெறுமானமுமற்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைப் பேரவையின் உயர் ஆணையாளராக நவநீதம் பிள்ளை 2008 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் செயலாளர் பன் கீ மூன் முன் மொழிவின் அடிப்படையில் லூயிஸ் ஆர்பர் பதவி விலகியதைத் தொடர்ந்து கலாநிதி நவநீதம் பிள்ளை அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று ஆய்வு செய்துவிட்டுத் திரும்பியதும் வழமை போல புலி ஆதரவாளர்கள் தரப்பிலிருந்தும் பேரினவாதிகள் தரப்பிலிருந்தும் நாய்ச் சண்டை ஆரம்பமாகிவிட்டது. மக்கள் சார்ந்து எந்தப் பெறுமானமுமற்ற நவநீதம் பிள்ளையின் பயணத்தின் விளைவுகள் ஒருபுறமிருக்க இந்த நாய்ச்சண்டையில் நசுங்கிச் செத்துப்போவது அப்பாவி மக்களே.
குறிப்பாக நவநீதம் பிள்ளை புலிகளின் மனித உரிமை மீறல் குறித்த சில கருத்துக்களைக் கூறியதும் புலம் பெயர் நாடுகளிலுள்ள புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் -தேசிய விடுதலையின் ஆதரவாளர்கள் அல்ல- துடித்துப் போனார்கள். நவநீதம் பிள்ளைக்கு முன்பதாக ஈழப் போராட்டத்தில் ஏதோ ஒருவகையில் உள்நுளைந்த அத்தனை பேரும் புலிகள் மீதான போர்க்குற்றங்களை முன்வைத்திருக்கிறார்கள்.
நவி பிள்ளையின் நோக்கம்…
எரிக் சொல்கையீம், நவி பிள்ளைக்கு முன்பதாக மனித உரிமை ஆணையாளராகப் பதவி வகித்த லூயிஸ் ஆர்பர், தஸ்ருமன் தலைமையில் ஐ.நா அறிக்கை சமர்ப்பித்த அனைவரும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை வேறுபட்ட அளவுகளின் முன்வைத்திருக்கிறார்கள். இலங்கையில் ராஜபக்ச பாசிச அரசு இடதுசாரிகள் என்று முடிசூட்டிக்கொண்டவர்கள், வன்னிப் படுகொலையின் பின்னர் இனங்களின் ஐக்கியம் குறித்துத் துயர் கொள்ள ஆரம்பித்த ஜனநாயகக் கனவான்கள், புலியெதிர்ப்பையே அரசியல் என்று வரித்துக்கொண்ட கும்பல்கள், அரச துணைக் குழுக்கள் என்று நீண்டு செல்லும் பட்டியல் ஒன்று புலிகளின் ‘தவறுகளை’ யும் கொலைகளையும் பற்றிப் பேசுவதையே தொழிலாகக் கொண்டுள்ளன.
மேற்குறித்த நீண்ட பட்டியலுக்குள் அடங்கிப் போகும் ஒவ்வொரு மனிதனதும் நோக்கமும் நவநீதம் பிள்ளையின் நோக்கமும் ஒன்றுதான். இவர்கள் அனைவருமே புலிகளைக் குறைகூறுவது மக்கள் மீதான அக்கறையிலிருந்தல்ல. புலிகளைக் காரணமாகச் சுட்டிக்காட்டி தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்தையே தவறு என்கிறார்கள். ஒரு தேசிய இனம் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடினால் அழிவுதான் மிஞ்சும் என்கிறார்கள். ஒடுக்கும் பாசிச அரசோடு பேசியும் அவ்வப்போது அழுத்தங்களையும் வழங்கி ‘பிரச்சனைகளை’ தீர்த்துக்கொள்ள முடியும் என்று பொதுவான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளார்கள்.
நவி பிள்ளைக்கு புலிகளை விமர்சிக்க உரிமை உண்டா?
நவநீதம் பிள்ளை உட்பட மேற்குறித்த அனைவரும் புலிகளின் குற்றங்கள் குறித்துப் பேசுவதற்கு அடிப்படைக் காரணம் இலங்கையில் மக்கள் போராடிவிடக்கூடாது என்பது மட்டுமே. தமிழ்ப் பேசும் மக்களை அழித்தோ, இனச்சுத்திகரிப்பு நடத்தி அவர்களின் தேசியத் தன்மையைச் சீர்குலைத்தோ இலங்கையில் தேசிய இனப்பிரச்சனையை இல்லாது அழித்துவிட்டால் ‘சந்தைக்குரிய சூழலை’ உருவாக்கிவிடலாம் என்பதே மேற்கு ஏகபோக அரசுகளின் நோக்கம். இதுவே ராஜபக்ச அரசின் நோக்கமும். இந்தப் புள்ளியில் ராஜபக்ச அரசும் மேற்கு ஏகதிபத்திய அரசுகளும், இந்திய மேலாதிக்கமும் சந்தித்துக்கொள்கின்றன.
மக்களின் நிலைமையோ முற்றிலும் மாறுபட்டது. இலங்கையில் பிரதான முரண்பாடாக இன்றும் தேசிய இன முரண்பாடே காணப்படுகின்றது. தேசிய இன ஒடுக்குமுறை வெறும் கருத்தளவிலன்றி இராணுவ ஒடுக்குமுறையாக மக்களைத் கொன்று தின்கின்றது. சமாதானமாக வாழ விரும்பும் மக்களை இலங்கை அரச பாசிஸ்டுக்களே ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கிறார்கள். ஆக, இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஒடுக்குமுறைகு எதிரான போராட்டம் என்பது தவிர்க்க முடியாத முன்நிபந்தனை. இப் போராட்டத்தின் வழிமுறை குறித்து முரண்பாடுகள் இருப்பினும் அது தவிர்க்க முடியாதது என்பது வெளிப்படையானது.
இங்கு புலிகளை விமர்சிக்கின்ற, அதன் அரசியலை நிராகரிக்கின்ற ஒருவரது அரசியல் நோக்கம் இத் தவிர்க்க முடியாத போராட்டத்தைச் செழுமைப்படுத்துவது என்றால் அது மக்கள் சார்ந்தது, நியாயமானது. அதே வேளை புலிகளை குறம்சுமத்தும் ஒருவரது நோக்கம் தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையையே நிராகரிப்பது என்றால் அது மக்கள் விரோதமானது, நியாயமற்றது. இந்த வகையில் நவநீதம் பிள்ளையினது குற்றம்சாடல் என்பது சமூகவிரோதமானது. புலிகள் குறித்து மட்டுமல்ல போராட்டத்தின் எந்தக் கூறுகளையும் விமர்சிப்பதற்கு நவி பிள்ளைக்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது.
புலி ஆதரவாளர்களின் கோழைத்தனம்
இந்த உலகத்தைக் குத்தகைக்கு எடுத்துகொண்ட மொத்தவியாபாரிகளான அமரிக்கப் பயங்கரவாதத்தின் அடியாளான நவநீதம் பிள்ளையின் புலிகள் குறித்த கருத்திற்கு மறுபக்கத்திலிருந்து புலி ஆதரவாளர்களின் ‘ஆய்வுகள்’ புலம் பெயர் இணையங்களை ஆக்கிரமித்துக்கொண்டன. அதில் மிகவும் குறிப்பானது பரணி கிருஷ்ணரஜனி என்பவரது தொடர் கட்டுரைகள். நவி பிள்ளை என்பவர் இல்குஅங்கைக்கு ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியாகச் சென்று, மக்களின் கண்ணீரைக் கண்டு மனிதாபிமானியாக மாறி, இறுதியில் இலங்கை அரசின் தாக்குதலுக்குப் பயந்து புலிகள் மீது குற்றம் சுமத்துகிறார் என்று ஆரம்பிக்கிறார்.
நவி பிள்ளை ஐ.நாவின் அடியாளாகவே இலங்கை சென்று அதன் அடியாளாகவே திரும்பியிருக்கிறார். இடையே எந்த மாற்றமும் நிகழவில்லை.
நவிப் பிள்ளையோ தனது குற்றப் படலத்தின் ஆரம்பத்திலேயே புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியால் கொல்லப்பட்ட நீலன் திருச்செல்வம் கொலைசெய்யப்பட்டதைக் நினைவு நாளுக்காகவே முதல் தடவையாக இலங்கைக்குச் சென்றதாகக் குறிப்பிடுகிறார். இலங்கை அதிகாரவர்க்கத்தின் மற்றொரு ஒட்டுண்ணியான நீலன் திருச்செல்வம் புலிகளால் கொல்லப்பட்ட அரசியல் வழிமுறையை நிராகரிக்க ஆயிரக்கணக்கில் மனிதாபிமானிகள் அணிதிரள்வார்கள். ஆனால் அதிகாரவர்க்கம் மட்டுமே அவருக்காகக் கண்ணீர்வடிக்கும். நீலன் திருச்செல்வத்தைப் புலிகள்தான் கொலை செய்தார்கள் என்றும் அதனைக் கேட்க நவிப் பிள்ளைக்கோ அதிகாரவர்க்கத்தின் எந்தக் கொம்பன்களுக்கும் உரிமைகிடையாது என்றும் அதற்காக நாங்கள் அழுதுவடிக்க மாட்டோம் என்றும் புலிகளின் வீரம் பேசும் பரணி கிருஷ்ணரஜனி சொல்வார் என்று பார்த்தால் அது நடக்கவில்லை. வழமையான புலிகளின் விசில்களைப் போன்று நவி பிள்ளை ஆதாரமில்லாமல் புலிகளைக் குறைசொல்வதாகக் கோழைத்தனமாக நொந்துகொள்கிறார்.
‘நீங்கள் புலிகளைக் குறை சொல்வது தேசிய இன விடுதலைப் போராட்டத்தைக் கொச்சப்படுத்தவும் அழிக்கவுமே தவிர மக்கள் மீது உங்களுக்குள்ள பற்றினால் அல்ல’ என நெஞ்சை நிமிர்த்தி வீரம் பேசுவார் என்றால் புலிகளை அனாவசியமாகக் நவிப்பிள்ளை குறைசொல்கிறார் என்று உடைந்து போகிறார். அதே கோழைத்தனத்தோடு பரணியைச் சுற்றிவருகின்ற ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நவி பிள்ளை புலிகளைக் குறை சொல்லவேண்டாம் என கூனிக் குறுகிக் கோரிக்கைவிடுக்கிறார்கள்.
மனித குலத்தின் ஒரு பகுதி வன்னியில் அழிக்கப்பட்டு நாலரை வருடங்களைக் கடந்தாயிற்று. இன்னும் உலகின் இரத்தக்கறை படிந்த காட்டேரிகளை நம்பியே வாழ்க்கை நடத்தும் கூட்டம் மக்களைப் போராட வேண்டாம் என்று மறைமுகமாகக் கூறுகின்றது. இந்தியா வருகிறது, அமரிக்கா அடிக்கத் தயாராகிவிட்டது, ஐ.நா ரஜபக்சவைத் தூக்கிலிடுகிறது என்று நாளுக்கு நாள் மந்திர உச்சாடனம் செய்து மக்களின் போராட்டங்களுக்கு மறியல் செய்கிறார்கள்.
இதற்கிடையே இனப்படுகொலையோடு அழிந்து போன புலிகளை உயிர்ப்பித்து, பிரபாகரனுக்கு வாழ்வுகொடுத்து பிழைப்பு நடத்துகின்றவர்கள் சமூகத்தின் மீது பற்றுக்கொண்டவர்களா?!
மக்கள் மீது பற்றிருந்தால் பினவரும் முடிவுகளுக்கு வருவார்கள்.
1. இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பிரிந்துசெல்லும் உரிமைக்காகப் போராடுவது தவிர்க்க முடியாத விடுதலைக்கான முன்நிபந்தனை.
2. 30 வருடம் தேசிய விடுதலை இயக்கங்களும் குறிப்பாகப் புலிகளும் நடத்திய போராட்டம் தோல்வியடைந்துள்ளது
3. இறுதியாகப் புலிகளால் தலைமைதாங்கப்பட்ட அரசியல் தவறானது, அழிவுகளுக்கு வழி செய்திருக்கிறது, இத் தவறான அரசியலிலிருந்து கற்றுக்கொண்டு பேரினவாத எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை மக்கள் யுத்தமான உருவாக்க வேண்டும்.
இவ்வாறான குறைந்தபட்ச முடிவுகளுக்கு வரத் தயங்குகின்றவர்கள் இரண்டுவகைப்படும்
1. புலிகள், பிரபாகரன் போன்ற அடையாளங்களைப் பயன்படுத்திப் பிழைப்பு நடத்தும் வியாபாரிகள்.
2. இந்த வியாபாரிகளைக் கண்மூடித்தனமாக நம்பும் விடுதலை மீது பற்றுக் கொண்டவர்கள்.
முதலாவது வகையினர் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும். இரண்டாவது வகையினர் மக்கள் சார்ந்த அரசியலில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
ஈழத்தில் செத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு புலிகள் என்ற அடையாளத்தைவிட எதிர்காலத்தில் தவிர்க்கவியாலாது உருவாகவிருக்கும் சுய நிர்ணய உரிமைக்கான மக்கள் யுத்தமே முதன்மையானது.
புலிகளின் வெளிப்படையாகத் தெரிந்த கொலைகளையும், அரசியலையும் மூடி மறைப்பது நவி பிள்ளை போன்ற ஏகபோகங்களின் அடியாட்களுக்கும் புலியெதிர்ப்புக் கும்பல்களுக்கும் தான் பயன் தரும். நாங்கள் புலிகளின் அரசியலை நிராகரித்து சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன் வைக்கும் போது மட்டுமே எமது தவறுகளை நவிப் பிள்ளை போன்றவர்களும், ராஜபக்சக்களும் குற்றச்சாட்டாக முன்வைக்க முடியாது. சுய விமர்சனமின்றிய எந்த அரசியலும் ஒரு அங்குலம் கூட முன்செல்ல முடியாது.
அனேகமான கூடார காவிகளுக்கு இன விடுதலை பற்றிய அக்கறை இல்லை. பலர் இயக்க விடுதலை பேசுகிறார்கள்.இல்லையெனில் ‘இடதுசாரியம்’ ஏறுகிறார்கள்.
மகிந்த ‘மக்கள் போராட்டம்’ என்கிறான்.ஹமரூனும்,ஒபாமாவும் ‘மக்கள் பிரதிநிதிகளின் போராட்டம்’ என்கிறார்கள்.
‘இடதுசாரியம்’ பேசிய ரஷ்யாவும்,சீனாவும் ‘எட்வேர்ட் ஸ்னோடன் போராட்டம்’ என்கிறார்கள்.
இப்படித்தான் உலகம் உருண்டு கொண்டு போகிறது;உருக்குலைந்து போகிறது.
இதில் யருக்கும் உரிமை இருக்கா இல்லையா எனச் சொல்லவும்,நமக்கு உரிமை இருக்கிறதா?
புலிகள் இறுதி நேரத்தில் விட்ட தவறுகள் அதற்கு யார் பொறுப்பு அர்களின் தோல்வி சா;வதேச அரசியலை சரவரப் பூpந்நு கொள்ளத் தவறியமை …………….
ஆகா, இது தப்பிக்கொள்வதற்காக சொல்லும் சாட்டு! உலகத்தில் எல்லாரையும் எதிரிகளாக்கி, சிங்கள மக்களை எதிரிகளாக்கி, முஸ்லீம்களை எதிரிகளாக்கி, மலைய மக்களைப் புறக்கணித்து ஏனைய இயக்கங்களை அழித்து போராட்டத்தை தனிமை படுத்தியது புலிகளே. இறுதியில் மக்களை மண்மூட்டையாகப் பாவித்து ராஜபட்ச நாய்களுக்கு கடிக்கக் கொடுத்ததும் புலிகளே, உங்ளுக்கு யாவாரம் ஓட புலிகள் தேவை அவ்வளோதான். அதற்காக நீங்கள் எல்லாத்தையும் மறைத்து இனியும் இப்படி தான் நடக்க வேண்டு, என்பீர்கள்.
தவறுகள் இருக்கலாம் தேசிய தலைவரும் அவர் குடும்பமும் தமது வாழ்க்கையையே தமிழீழத்துக்கு அர்ப்பணித்தவர்கள். உலகின் மிகப்பெரும் தியாகச் செம்மல்கள்.
புலிகளை எதிர்த்து எழுதப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரை இறுதியில் இன்னொரு மக்கள் போராட்டத்துக்குத்தான் தீண்டுகிறது. அது தவறன்று! இந்தக் கட்டுரை கூறுவது போல் மக்கள் போராட்டமே இன்றைய தேவை. அதில் எனக்கும் சரி, வேறு யாருக்கும் சரி மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அதற்காக விடுதலைப்புலிகளை ஏன் குற்றம் சொல்ல வேண்டும் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. நீண்ட நெடியதொரு போராட்டம் நிகழ்த்தப்படும்பொழுது அதில் ஆங்காங்கே சில தவறுகள் நிகழ்வது தவிர்க்க இயலாதது. இன்று புலிகளைக் குறை சொல்லும் யாரும் அன்று தமிழர்கள் நடுத்தெருவில் துகிலுரியப்பட்டபொழுதோ, வெட்டவெளியில் துள்ளத் துடிக்கக் கொன்று குவிக்கப்பட்டபொழுதோ காப்பாற்ற வரவில்லை. அன்று மக்களைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்தி, தமிழினத்தைக் காத்த காவல் தெய்வங்கள் விடுதலைப்புலிகள்தாம்! அவர்களின் போராட்ட வழிமுறைகளில் குறையிருப்பதாகக் கருதினால், இன்றுதான் அவர்கள் இல்லையே, வேறு ஒரு புதிய போராட்ட வழிமுறையை நீங்கள் அறிமுகப்படுத்துங்களேன்! அதை விட்டுவிட்டு இல்லாதவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன பயன்? குறை சொல்வது யார்க்கும் எளிது. செயலில் காட்டுங்கள்!
புலிகளைக் குறை சொல்வதற்கு நாங்கள் ஒன்றும் வேலிச் சண்டையப் பற்றிப் பேசவில்லை. தேசியத் தலைவரின் வழியில் என்று ஆரம்பிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம். தேசிய விடுதலைப் போராட்டம் எனப்தே அன்னிய ஆதிக்கத்திற்கு எதிரானது. புலி உட்பட அனைத்துக் ஆயுதக் குழுக்களும் அன்னியர்கள் தலையிடுவதற்கான அழுத்தக் குழுக்களாகத் தான் பயன்பட்டன. வேண்டுமானால் தேச விடுதலை[ப் போராட்டம் அதன் வழி முறைகள் குறித்துப் பேசுங்கள்
இலங்கைப் பிரச்சினை என்பது மற்ற நாடுகளில் நிலவும் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் போன்றது இல்லை. மற்ற நாடுகளிலெல்லாம் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அந்தப் போராட்டக்காரர்களுக்கும் அந்த நாட்டு அரசாங்கத்துக்கும் இடையிலானதாக மட்டுமே இருக்கும். ஆனால், ஈழப் பிரச்சினை என்பது தமிழர் – சிங்களர் இடையிலான பிரச்சினை மட்டுமில்லை இது பன்னாட்டுப் பிரச்சினை. உண்மையில், இந்தியா எனும் உலகப் பெரும் சந்தையைக் கைவிட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், இந்தியப் பெருங்கடல் மீதான ஆதிக்கத்தில் உள்ள ஆர்வம் காரணமாகவும், இது போன்ற இன்னும் பல புவிசார் அரசியல் காரணங்களாலும் இது பன்னாட்டுப் பிரச்சினையாக, வருகிற போகிற நாடுகளெல்லாம் தலையிட விரும்புகிற பிரச்சினையாக இருக்கிறது. பன்னாட்டுப் பிரச்சினை ஒன்றில் மற்ற நாடுகள் தலையீடு இல்லாமல் ஒரு குழு இலங்கையில் விடுதலைப் போராட்டம் நடத்துவது என்பது கனவிலும் நடக்காது.
புலிகள் இல்லையென்றால் ஈழ வடுதலைப் போராட்டமும் இல்லாது ஏனைய இயக்கங்கள் போல் அந்நிய சக்திகளின் கூலிப்படைகளாக மிக மோசமான மனித உரிமை மீறல் குற்றங்களளைப் புரிந்திருப்பர். அநேகமான குழுக்களின் விடுதலைப் போராட்டமே அப்படித்தான் இருந்தது இப்பவும் இருக்கிறது. புலிகளின் மீறல்கள் மக்கள் நலன் சார்ந்தே இருந்துள்ளன. ஒரு சில விதிவிலக்குகள் உள்ளதை மறுக்கமுடியதது. அத்தகையன ஒரு பெரிய அமைப்பில் சில குளறுபடிகள் தவிர்க்க முடியாது என்பதால்.
சர்வ தேச அரசுகளின் தலையீடுகளே முக்கிய காரணி என்பதைட நடுநிலை நின்று ஆய்வு செய்வோர் அறிவர்.
இன்று விழுந்த மாட்டில் குறி சுடப் பலரும் முற்படுகின்றனர் என்பது வேறுவிடயம்.
Did some one write about Lawyer Viswanathan Rudrakumar meeting Ms. Navi PIllay? Then this TGTE guys are indeed doing something it looks like.
Don’t know he’ll meet or not.
But he gave an appeal for her…
In an urgent appeal to the UN High-Commissioner for Human Rights Navi Pillay, the Prime-Minister of the Transnational Government of Tamil Eelam (TGTE), Visuvanathan Rudrakumaran , urged her to ensure that those Tamils who met her in the NorthEast of the island are protected from harassment and abuse by the Sri Lankan Security forces and intelligence agencies.
For more in detail…
https://www.colombotelegraph.com/index.php/tamils-who-met-un-rights-chief-threatened-in-sri-lanka-rudrakumaran/
That is god news Alex. Three by Three.
விடுதலைப்புலிகள் அமைப்பு போராடியது தமிழினத்திற்காக என்பதனை அவர்கள் நிரூபித்துள்ளார்கள் அவர்களது போராடத்தை சுயநலன்களுக்காக பயன்படுத்தியவர்களே இன்னமும் அதனை தவிர்த்துக் கொள்ளவில்லை. அதனால்தான் இன்று அனைவருக்கும் சந்தற்பம் கொடுத்துள்ளார்கள் உண்மை எது என்பதனை புரிவதற்கு. வரலாற்றின் வழியில் ஈழத்தின் விடுதலை காலத்தின் திசையில் உண்மைக்கான நியாயம் . அதுவே வரலாற்றினது தீர்ப்பு .
64வருட அரசியல் சுதந்திரத்தை அனைததுலகம் அறிவதற்கும் பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் மனித குலத்திற்கே எதிரானது என்பதனை நிரூபிக்கவும் ஈழத்தில் அதர்மம் தோன்றக்காரணமான மகாவம்சம் அழிகப்பட வேண்டும் என்பதற்காக உலகத்தமிழினம் உருவாக்கப்பட்டு உண்மையை உணரவைத்துள்ளமையை உலகத்தமிழினம் எற்றாக வேண்டும்.
அதனைப்போல் ஒடுகப்பட்ட இனம் விடுதலைக்காக போராடித்தான் ஆகவெண்டும் என்பது காலத்தினத விதி மட்டுமல்ல ஈழவரலாற்றினது விதி என்பதனை உலகத்தமிழினம் ஏற்றாக வேண்டும்.
காலங்காலமாக நம்பிக்கை என்று கருதி பின்பற்றிவரும் சில சமூக பழக்கவழக்கங்களை சுத்த மூடநம்பிக்கை கைவிட்டுவிடுங்கள் என்று கேட்டால் உமக்கு பைத்தியமா பிடித்துள்ளது என்று கேட்பார்களா இல்லையா அதேபோன்றதே புலிகளது தவறுகளை ஒப்புக்கொண்டு அதிலிருந்து போராட்டத்தை ஆரம்பிப்போம் என்று கேட்பது.. புலிகளை இட்டு தமிழா்களில் பெரும்பான்மையானவா்களின் தலைக்குள் பதிந்திருக்கும் மூடநம்பிக்கைகளை கழைந்து தமிழ் மக்கள் என்ற பெயரில் புதிய போராட்டம் ஆரம்பிப்பதென்பது மிகவும் கடினமாகும்.
The author of above and the owner of above article deny the existence of UN system .
That means in local language he says the animal is dead.
He is here with a forgone conclusion .
Others , some say Navi is right , other say Navi is wrong .
In local language some say there is heart beat , other say no heart beat .
Now think about how can you discuss about heat beat when the forgone conclusion was that the animal is dead.
There fore first of all we all should agree that the animal is not dead .
That means UN is world body.
All the countries without exception agree the above .
If Anyone who thinks that UN is not a body representing all the countries ,
They are either alians OR not in a real world mind set
They are idealist targeting some thing which would never happen .
In UK history there was a culture called puritan culture .
Those who reject UN system are of the type puritans .
Puritans finally disappeared from British culture .
Same will happen to those who reject UN system .
I dont know who this author is and what his role in formation of Tamil Nation. But he simplly falters on Mr. Parani. It is because Parani’s role in FB and Twitter that he effectively answers/ explains facts and needs for Tamil Nation and turned if not a large audience atleast considerable numbers. Supporters of Tamil Nation is increasing day by day, hour by hour and Parani has a important role in it.
ஐநா முன்றலில் தீக்குளித்து இறந்த செந்தில்குமரன் இரத்தின சிங்கம் என்ற (35) நபர் யார்? அவர் எதற்காக தீக்குளித்தார்…???
ஐநா முன்றலில் தீக்குளித்து இறந்த ஈழத் தமிழரான செந்தில்குமரன் இரத்தினசிங்கம் என்பவர் தமிழீழ விடுதலை போராட்டத்துக்கு (புலிகள்) ஆதரவாக தீக்குளித்தவரா…???
அல்லது தீபெத்திய போராட்டத்துக்கு ஆதரவளித்து தீக்குளித்தவரா…???
அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக தீக்குளித்தவரா…???
என்பது இன்னும் கேள்விக் குறியாய் உள்ளது.
தீக்குளித்து இறந்த செந்தில்குமரனின் மரணத்தையிட்டு பல விடயங்கள் மர்மமாகவுள்ளன…
FOR FULL ARTICLE…
http://www.athirady.com/tamil-news/howisthis/265020.html
There are no tigers and lions here in Sri Lanka. Only leopards. Ted Kennedy once asked where was George? Charleston Heston said that he was home with his own wife. Where was Sarath Fonseka in 1995? I was in Cambridge, MA, USA, with Dr. Anis Haroon Khimani of Mumbhai, India.
Not leopards either… now peacocks are flying free in Vanni!
புலிகள் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கு என்னுடைய பதில் இதுதான். பார்க்க http://tinyurl.com/osaj7u2.
“இது எனது அண்மையை நேர்காணல் ஒன்றை கழுவி ஊhத்தும் கட்டுரை.
இதை இணைப்பதற்கு காரணம் இந்த கருத்துக்களுடன் நான் முற்றிலும் முரண்பட்ட போதிலும் எந்த முகமூடியம் போடாமல் சொந்த பெயருடன் எழுதிய அறத்திற்கும் நேர்மைக்கும்தான்..
இப்போதெல்லாம் ஒன்று சொந்த பெயருடன் அரசியல் விழிப்புணர்ச்சி இல்லாமல் முட்டாள்தனமாக உளறுபவர்கள் ஒரு புறம் இரண்டு முகமூடிகளுடன் வந்து வாந்தி எடுப்பவர்கள் மறுபுறம் என்று ஊடகச்சூழல் ஆரோக்கியமாகவே இல்லை. அதிலும் சமூக வலைத்தளங்களின் நிலை சொல்லி வேலையில்லை.
எனவே எதிர்கருத்தாயினும் முரண்பாடாயினும் நேர்மையாக தனிப்பட்ட சுய காழ்ப்புகளின்றி எழுதப்படும் விமர்சனங்களை வரவேற்க வேண்டியுள்ளது.
மற்றபடி இந்த பதிவிற்கு நீண்ட எதிர்வினை ஒன்று எழுத வேண்டும். கட்டாயம் விரைவில் எழுதுவேன்.”
https://www.facebook.com/parani.krishnarajani?fref=ts