Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலிகளை ஆதரிக்கும் மக்களும் புலம் பெயர் அமைப்புக்களும் : கோசலன்

இனியொரு... by இனியொரு...
12/24/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
34
Home பிரதான பதிவுகள் | Principle posts

தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னி இனபடுகொலையின் போது முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள். தெற்காசிய வரலாற்றில் குறுகிய காலத்துள் நிகழ்த்தி முடிக்கப்பட்ட இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்குரிய அத்தனை வலுவும் புலம் பெயர் தமிழர்களிடம் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் புலம் பெயர் புலி சார் அமைப்புக்கள் நிராகரித்துவிட்டன. வடகிழக்கு தமிழ்த் தேசிய இனத்தின் தேசியப் பண்பு இன்று ராஜபக்ச அரசினால் திட்டமிட்டுச் சீர்குலைக்கப்படுகின்றது. இராணுவ மயமாக்கலை நிறுத்த முடியாது என்று ராஜபக்ச வெளிப்படையாகக் அறிக்கை விடுக்கின்ற அளவிற்கு இதுவரை இலங்கையில் அரச பாசிசம் கோலோச்சியதில்லை.

இவை அனைத்திற்கும் புலம் பெயர் நாடுகளிலிருந்து குறைந்தபட்ச அழுத்தங்களையாவது வழங்கவல்ல வலு காணப்படுகின்ற போதிலும் தோல்வியடைந்த அதே வழிமுறைகளைத் தமது வசதிக்காக வரித்துக்கொள்ளும் புலம் பெயர் புலி சார் அமைப்புக்கள் தமக்குள் மோதிக்கொள்கின்றன.

மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் காணப்படும் ஆதரவுத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் வியாபாரிகள் அதே ஆதரவைப் பயன்படுத்தி தமது வியாபாரத்தை விரிவக்கிக் கொள்கின்றனர்.

80 களின் இறுதிக்குப் பின்னர் ஈழத்திலும், அதன் புலம்பெயர் நீட்சிகளான தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏகோபித்த ஆதரவு காணப்பட்டதை யாரும் மறுக்க முடியாது. தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள மட்டுமே செயற்பாட்டுத் தளத்தில் இயங்குகின்ற நிலையில் இந்த மறுதலையான ஆதரவு தவிர்க்க முடியாததாக இருந்தது. புலிகளின் தலைவர் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தின் குறியீடாகவே பெரும்பாலான தமிழர்களால் கருதப்பட்டார்.

மாவீரர் தினம், புலிக் கொடி, கார்த்திகைப் பூ போன்ற அனைத்து சின்னங்களும் இந்தக் குறியீட்டின் இன்ன பிற அம்சங்களாகத் திகழ்ந்தன.
வன்னியில் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையிலிருந்து தப்பியோட முற்பட்ட பல தமிழர்கள் புலிகளின் துப்பாகிகளுக்கு இரையாகியிருக்கின்றனர்.புலிகளால் கட்டாய இராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட சிறுவர்கள் உட்படப் பலர் இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிக்குப் பலியாகியிருக்கின்றனர்.

யுத்கம் ஆரம்பித்த நாட்களிலிருந்து புலிகளின் வெளிப்படையான இராணுவத் தர்பார் ஒன்றே வன்னியில் நடைபெற்றது. வன்னியிலிருந்து தப்பிய எவரும் இதனை மறுக்கவில்லை.

இவை அனைத்தையும் மீறி இன்று வன்னி மக்கள் மத்தியில் மகிந்த ராஜபக்சவும் பிரபாகரனும் தோன்றி தேர்தலில் நேரெதிராகப் போட்டியிட்டால், பிரபாகரன் போட்டியின்றித் தெரிவு செய்யப்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

புலி எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டுமே அரசியலாக வரித்துக்கொண்ட ஒவ்வொருவருக்கும் இது கசக்கலாம் ஆனல் உண்மை நிலைமை இதுதான்.

புலம் பெயர் மக்கள் மத்தியிலும் நிலமை இதுவே. தேசிய இன ஒடுக்குமுறையின் கோரத்திலிருந்து தப்பியோடி அன்னிய தேசங்களில் புகுந்துகொண்ட சாமானியத் தமிழனுக்கு பிரபாகரன் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தின் குறியீடு. புலிகள் அப்போராட்டத்தின் நிறுவனமயமான அலகு.

புலிகளின் போராட்டம் வெற்று இராணுவ யுத்தம் என்பதும் அதன் விளைவுகள் ஏகபோக அரசுகளின் நலன் சார்ந்தது என்பதெல்லாம் அரசியல் குறித்து விஞ்ஞான பூர்வமாக அணுகும் ஒவ்வோர் மனிதனும் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறான்.

புலிகளின் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் கோரவடிவம் குறித்தும் அவர்களின் தவறான வழிமுறை எப்படியெல்லாம் பேரழிவுகளை நோக்கி மக்களை நகர்த்திச் சென்ற என்பன குறித்த சாட்சியங்களும் விளக்கங்களும் பக்கம்பக்கமாக இவர்களிடம் உள்ளன.

பெரினவாதப் பசிக்கு நாளாந்த வாழ்க்கையை இரையாக்கிக் கொள்ளும் தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தளவில் இவை அனைத்தும் அவசியமற்ற அரசியல் மேதாவித்தனமாகவே தென்படும்.

இதனால் புலியெதிர்ப்பு அரசியலை வரித்துக்கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் புலிகளை அழிப்பதே போராட்டத்தை உருவாக்குவதற்கான முன் நிபந்தனையாகக் கருதினர். அதற்காக ஒடுக்கும் பாசிச அரசோடு பலர் கைகோர்த்துக்கொண்டனர். இலஙகை அரசைப் பயன்படுத்தில் புலிகளை அழித்த பின்னர் இலஙகை அரசிற்கு எதிரான போராட்டத்தை முன்வைக்கலாம் என்ற கருத்து பரவாகப் புலி எதிர்பாளர்களால முன்வைக்கப்பட்டது. எவ்வாறு மேற்கு நாடுகளையும் இந்தியாவையும் பயன்படுத்தி இலங்கை அரசை வெற்றிகொண்டுவிட்டு பின்னதாக எமக்கான வழியைத் தேடிக்கொள்வோம் என்று புலிகள் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுள் சிக்குண்டு அழிவுக்கு உட்படுத்தப்படனரொ புலி எதிர்பாளர்கள் இலங்கை அரசினது நிகழ்ச்சி நிரலுள் சிக்குண்டு அதன் துணைக்குழுக்களின் கூறுகளாகச் செயற்பட ஆரம்பித்த்னர்.

புலிகளை அழித்தல் என்ற முழக்கத்தின் கீழ் ஏற்கனவே மக்கள் மத்தியிலிருந்து அன்னியமாகியிருந்த இவர்கள் இலங்கை அரசே இவர்களின் இறுதிச் சரணாலமாகக் கண்டனர். மக்கள் குறித்துப் பேசியவர்கள் மக்கள் விரோதிகளாயினர்.

புலிகள் குறித்த மாயையும், அது குறியீடாகத் தொடரும் நிலையும் ஆபத்தானதே. அவ்வாறான மறுதலையான மாயை நிலவும் போதுதான் அதனைப் புலம் பெயர் அமைப்புக்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இலங்கை அரசின் தமிழ் முகம் கே,பியின் முகவர்களாகத் தொழிற்படுகின்ரவர்கள் “தேசியத் தலைவரின் வழி நடபோம்” என்றால் மக்கள் கைதட்டி ஆரவரிக்கின்றனர். புலிகள் குறித்த இந்த மாயையைப் பயன்படுத்திக்கொண்டு தமது வியாபார நலன்களை தக்கவைத்துக் கொள்கின்றனர்.

இந்த அபாயகரமான சூழல் இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரலை இலகுபடுத்தியுள்ளது.

1. புலி எதிர்பாளர்களின் மக்கள் விரோத செயற்பாடுகளுகு இன்னும் நியாயம் கற்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.

2. புலி ஆதரவுத் தலைமைகளின் அரசியல் வியாபாரத்தைத் தொடரும் சூழலை நிலைக்கச் செய்கிறது.

3. புலிகளின் இருப்பை காரணமாகக் காட்டியே இலங்கை அரசு இனச் சுத்திகரிப்பைத் தொடர வழிசெய்துள்ளது.

இங்கு இலங்கை குறித்துச் செலயாற்றுகின்ற ஒவ்வொருவரதும் பொதுவான எதிரி இலங்கை அரசும் அதன் பின்பலமான ஏகாதிபத்தியங்களுமே.

இந்த வகையில் இந்த சூழல் எதிர்கொள்ளப்பட வேண்டும். புலிகள் குறித்த போலியான மாயைக்கு வெளியில் மக்கள் கொண்டுசெல்லப்பட வேண்டும்.

புலிகளை வெறுமனே திட்டித் தீர்ப்பது இதன் தீர்வாகாது. இலங்கை அரசிற்கு எதிரான உறுதியான அரசியல் இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். சரண்டைவுகள், விட்டுக்கொடுப்புகளுக்கு அப்பாலான அரசியல் இதன் அடிப்படையாக வேண்டும். புலம் பெயர் மற்றும் தமிழ் நாடு அரசியல் சந்தர்ப்ப வாதிகள் இலங்கை அரசிற்கு எதிராக முன்னெடுக்க முனையாத போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பரமக்குடி துப்பாகிச் சூடு :  பொலீஸ் மீது நடவடிக்கை இல்லை

Comments 34

  1. நாயகன் says:
    14 years ago

    தன்னலமற்ற ,தியாக உள்ளம் கொண்ட ,நெஞ்சுறுதியும் ,நேர்மையும் ,சேவை மனப்பான்மையும் கொண்ட ஒருவனே நமக்கு தேவை .அவன் கிடைப்பானா ?

    • Mahendra says:
      14 years ago

      உங்கள் எண்ணம் போலவே ஒருவன் கிடைப்பானா என்ற ஆவல் எனக்கும் எழுகிறது. ஆனால் எங்கள் குரங்கு மனம் மாற்றம் அடையும்வரை அப்படி ஒரு பூமாலை தோன்றக்கூடாது என்றும் பிராத்தனை செய்கிறேன்.

    • kosalan says:
      14 years ago

      நாயகன்,
      30  வருடப் போராட்டத்தின் ஒற்றைத் தலைமைக்குள் பழக்கப்பட்டுப் போனநாம் யாராவது  தலைவர் வருவார் என எதிர்பார்த்துக் காத்திருப்பது தவறு. தலைமை என்பதே மக்கள் மத்தியில்ருந்து உருவாகவேண்டிய  ஒன்று.  தவிர,  தலைமை தாங்குதல் என்பது பலரின் கூட்டு முயற்சியாகவே அமைய வேண்டும்.

    • kosalan says:
      14 years ago

      மகேந்திரா, குமரன்.
      குண்டுச் சட்டிக்குள் இனிமேலும் குதிரை ஒட்டிக்கொண்டிருக்கத் தேவையில்லை.  கட்டுரை புலிகள் கொலைசெய்தனரா இல்லையா என்ற விவாதம் இல்லை மாறாக இவ்வாறான விவாதங்களுக்குள் எம்மை முடக்கிக் கொள்வதால் ஏற்படும் ஆபத்தான விளைவிகள் குறித்தது

    • sarma says:
      14 years ago

      தவறு விடாத தமிழ் இயக்க தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் இல்லை. அனைவரும் தவறிழைத்திருக்கிறார்கள்.
      புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்

      http://www.thinakkathir.com/?p=25770

    • thamizhan says:
      14 years ago

      ..நாயகன் , கிடைத்த ஒரு தேசியத்தலைவனையும் அதுதான் காட்டிக்கொடுத்தும், போட்டிபொட்டும் கொன்று விட் டீர்களே .இனி நீங்கள் எல்லாரும் வானத்தை அண்ணாந்து பார்க்கவும்.நிச்சயம் வானைப்பிளந்து கொன்று ஒரு தேவதூவன் வருவான்.அவனிடம் வரம் வேண்டி தயவுசெய்து ஈழத்தைப் பெற்றுத்த்தரவும். அப்துல்கலாம் “கனவுகாணுங்கள்” என்று சொன்னதிற்க்காக, இப்படி எல்லாமா கனவு காண்பது.

  2. Mahendra says:
    14 years ago

    தப்பியோட முற்பட்ட பல தமிழர்கள் புலிகளின் துப்பாகிகளுக்கு இரையாகியிருக்கின்றனர் எனத் தெரிவித்திருக்கும் கோசலன் அவர்களே! கருணாவின் படைப்பிரிவும் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது புலிகளோடு புலிகளாய் இணைந்து நின்று, ஒருபிரிவு பொதுமக்களை இராணுவத்திடம் சரனடைய வழிகாட்டியதையும், மறுபிரிவு அதே தமிழர்களை நோக்கி சுட்டதையும் தப்பிவந்துள்ள சிலர் தெரிவித்துள்ளனர். அவற்றை நீங்களும் அறியாதிருக்க முடியாது. அவை மறந்துவிட்டதா? அல்லது மறைத்துவிட்டீர்களா?

  3. Kumaran says:
    14 years ago

    புதுகுடியிருப்பில் எனது ஒன்றுவிட்ட சகோதரி முதலில் புலிகளின் பயிற்சிக்காக கடத்தப்பட்டார். 14 பேர் ஆக எனது குடும்பம் வெளியேற முயற்சி செய்த போது சாள்ஸ் அன்டனியும் அவரது குழுவினருமே சுட்டனர். ஒருவர் காலில் காயத்துடன் தப்பினார். 2 பேர் மரணம் அடைந்தனர்.

  4. Mahendra says:
    14 years ago

    பிரபாகரனின் புலிப்படைகள் தவறே செய்யாத, கொலையே செய்யாத புனிதர்கள் அல்ல. கட்டளைக்கு உட்பட மறுத்தவர்கள்மேல் இரக்கம் காட்டப்படவில்லை. அது தவறுமட்டுமல்ல, மன்னிக்கவும் முடியாதது. ஆனால் புலிகள் இல்லாதுவிட்டால் தமிழ்மக்கள் கொல்லப்பட சந்தர்ப்பமே இல்லை என்பதுபோன்ற எழுத்துக்கள் தவறானவை. புலிகளின் தவறுகளை தட்டிக்கேட்கும் காலம் இதுவல்ல என பல அறிஞர்களினால் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை கவனத்தில் கொள்ளத் தவறியதால் இன்று ஒட்டுமொத்தத் தமிழினமும் நிர்கதியாக நிற்கவேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதை மறுக்கமுடியாது.

    “தலைமை என்பதே மக்கள் மத்தியில் இருந்து உருவாகவேண்டிய ஒன்று. தவிர, தலைமை தாங்குதல் என்பது பலரின் கூட்டு முயற்சியாகவே அமைய வேண்டும்”. என கோசலன் குறிப்பிட்டுள்ளார். அந்த வழியிலேயே அமைந்துள்ளது நாடுகடந்த தமிழீழ அரசு. அப்படியானால் கோசலனும், அவரைப்போன்ற திறனுள்ளவர்களும் தங்கள் எழுத்துமூலம் அதனைப் பலப்படுத்த ஏன் முன்வரவில்லை.

    • mamu says:
      14 years ago

      suuupar maama one………….. two …………… three………………. now tune changeu

    • manoharan says:
      14 years ago

      மகேந்திர அவர்களே !
      நாடுகடந்த தமிழீழம் நீங்கள் சொன்ன வழியில் வந்தது அல்ல , அது kp க்கும் , உருத்திரகுமருக்கும் ,
      வெஸ்டன் க்கும் , இந்திய உழவுக்கும் , உள்ள தொடர்பில் வந்தது .மேலும் நாடுகடந்த அரசு மக்கள்
      மத்தியில் இருந்து ,உருவானது அல்ல , அது புலிகளின் பினாமிகளால் உருவாக்கப்பட்டது .

  5. thayanithy thambiah says:
    14 years ago

    விடியலை விரும்பாத விட்டில் பூச்சிகளின் வினை தரும் கருத்தாடல்கள் வலியூட்டுக்கின்றது..சிந்திக்க மறப்பதால் நிந்திக்கப் படுகின்றோம்.. காலம் எமக்காக தரித்து நிற்காது. கடமையை அட்டவணைப் படுத்தி செயல் பட உழைப்பது காலத்தின் கட்டாயம்…புத்தாண்டில் ஒன்று பட்டு நிமிரலாம் வாருங்கள்..
    தயாநிதி

  6. யோகன் says:
    14 years ago

    நல்ல கட்டுரை .
    மீண்டு எழுவதற்கான முயற்சிக்கு
    முன் மாய்ந்த காலத்தை மூடி
    முன் நோக்கிய பாதைக்கு
    அழைக்கும் கட்டுரை .
    நாடு கடந்த தமிழ்ழீழ காரர் மீண்டும் “அப்பகாத்து ” அரசியலுக்கு போய் விட்டார்கள்.
    அவர்களை நம்பினால் மீண்டும் அழிவு தான்.
    வாழ்த்துக்கள் கோசலன்.

  7. அரிச்சந்திரன் says:
    14 years ago

    கோசலனின் பார்வையில் மக்கள்

    மக்கள் -1
    80 களின் இறுதிக்குப் பின்னர் ஈழத்திலும், அதன் புலம்பெயர் நீட்சிகளான தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏகோபித்த ஆதரவு காணப்பட்டதை யாரும் மறுக்க முடியாது.

    மக்கள் -2
    வன்னியில் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையிலிருந்து தப்பியோட முற்பட்ட பல தமிழர்கள் புலிகளின் துப்பாகிகளுக்கு இரையாகியிருக்கின்றனர்.

    மக்கள் -3
    புலிகளின் தலைவர் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தின் குறியீடாகவே பெரும்பாலான தமிழர்களால் கருதப்பட்டார்.

    மக்கள் -4
    தேசிய இன ஒடுக்குமுறையின் கோரத்திலிருந்து தப்பியோடி அன்னிய தேசங்களில் புகுந்துகொண்ட சாமானியத் தமிழனுக்கு பிரபாகரன் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தின் குறியீடு.

    மக்கள் -5
    இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்குரிய அத்தனை வலுவும் புலம் பெயர் தமிழர்களிடம் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

    மக்கள் -6
    புலிகள் குறித்த போலியான மாயைக்கு வெளியில் மக்கள் கொண்டுசெல்லப்பட வேண்டும்.

    மக்கள் -7
    தலைமை என்பதே மக்கள் மத்தியிலிருந்து உருவாகவேண்டிய ஒன்று

    மக்கள் -8
    வன்னி மக்கள் மத்தியில் மகிந்த ராஜபக்சவும் பிரபாகரனும் தோன்றி தேர்தலில் நேரெதிராகப் போட்டியிட்டால், பிரபாகரன் போட்டியின்றித் தெரிவு செய்யப்படுவார்.

  8. Mahendra says:
    14 years ago

    குறை, நிறைகளை வெளிப்படுத்தும் பதிவுகளும், அதற்கான கருத்துக்களும்கூடவே வெளிவந்து ஆரோக்கியமான வழிகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளையும் மனிதர்களுக்கு வழங்குகிறது. உதாரணமாக, புலிப்படைகளின் தவறுகள்பற்றி குறைகூறுபவர் அதனிடமுள்ள திறமைகளையும் கூற முயல்வதையும், அன்றி திறமைகளை கூறுபவர்கள் அதனிடமுள்ள குறைகளை கூற முயல்வதையும் காணமுடிகிறது. இத்தகைய செயற்பாடுகளை புரிந்துகொள்ள முடியாது அதனைக் கேலிசெய்வதையே தொழிலாக கொண்ட சிலரையும் இங்கும் காணமுடிகிறது. அப்படிக் கேலிசெய்பவர்கள் தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்வதை ஏனோ நினைவில் கொள்வதில்லை.

    • manoharan says:
      14 years ago

      எங்கள் போராட்டத்தில் எது குறை ? எது நிறை ? போராட்டத்தை தலைமை தாங்கிய புலிகளும் ,
      தலைமையும் ,விட்ட தவறு தான் இப்போதைய நிலவரம் .இதை எம் மக்கள் மத்தியில் விமர்சனமாகத்தன்னும் சொல்லாமல் , அதை உணராமல் ,அடுத்த கட்ட சரியான தலைமை எப்படி
      உருவாகும் . இத்தகைய விமர்சனத்தை ஏற்க மறுக்கும் மனம் , அதை கேலிசெய்வதாகத்தான் பார்க்கும் . சில விடயங்களை சுய ஆய்வு , சுய விமர்சனம் மூலம் தான் புரிந்துகொள்ளமுடியும்

      • Mahendra says:
        14 years ago

        எதுவித போக்கிடமும், பாதுகாப்பும் அற்ற ஒரு இனம் சுய ஆய்வும், சுய விமர்சனமும் செய்வதற்கு எதிரியானவன் கால அவகாசம் கொடுப்பான் என எதிர்பார்ப்பது பகற்கனவே. கூண்டுக்கிளிக்கு கூண்டு கொடியதாக இருந்தாலும் கிளி அதற்குள் பாதுகாப்பாக இருந்து பூனையைப் பார்த்து பாட்டுப்பாடவும் முடியும்.

        • manoharan says:
          14 years ago

          சுய ஆய்வுக்கும் , சுய விமர்சனத்திற்கும் எதிரி ஆனவன் அவகாசம் கொடுக்கமாட்டான் ,அது தான் அவனது
          நோக்கமும் கூட , ஆகவே நாங்கள் தான் விமர்சனத்திற்கு உட்பட்டு இந்த வெளியில் அடுத்த கட்டம் நோக்கி
          செயல்படவேண்டும் .ஆனால் புலம் பெயல் நாடுகளில் புலிகளின் அமைப்புகள் தங்களை எந்த வித சுய விமர்சனத்திற்கும் ,சுய ஆய்வுக்கும் உட்படுத்தாமல் ,மீண்டும் மக்கள் மத்தியில் வருகிறார்கள் .(btf ,gtf ,நாடுகடந்த தமிழீழம் ,…..) இந்தனை வருட போராட்டம் இருந்த இடம் இல்லாமல் போய்விட்டது , குறைந்த பட்சம் ஒரு ஆய்வு கூட
          செய்யாமல் எப்படி அடுத்த கட்டம் ?
          ஒரு கட்டிடம் இடிந்தால் ,கட்டியவர்கள் அதற்கு உரிய காரணத்தை சொலாவிட்டல் ,உணரவிட்டல் மீண்டும்
          அவர்களிடம் ,கட்டிடம் கட்டபொறுப்பு கொடுக்கட்கூடது .அதே போல் தான் புலம் பெயர் புலிப்பினாமிகளும் .

          கூடுக்குள் இருக்கும் கிளி கூட பாட்டுப்பாடலாம் ,ஆனால் இவர்கள் செத்த கிளிக்கு குஞ்சம் கட்டுகிறார்கள் ,இந்த புலத்து
          புலி வியாபாரிகள் .இவர்கள் கோவில்களிலும் ,தமிழ் பாடசாலைகளிலும் ,சில ஊடகங்களிலும் ,வவ்வால் மாதிரி
          தொங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் .

  9. veeran says:
    14 years ago

    ஐயா போராட்டம் தோற்று போய் விட்டது, காரனம் புலிகலும் புலி பினாமிகலும், வெளிநாட்டு வாழ் தமிழர்களும், சக தமிழர்களை கொலை செய்வதன் மூல்ம் விட்தலை பெறலாம் என எண்ணியதன் விளைவு  இது, வடக்கும் கிழக்கும் விரைவில் சிங்கள மயமாகும்,நீங்கள் வெலிநாட்டில் இருந்து ஒன்றும் கிழிக்க முடியாது,நாங்கள் இங்கே இரண்டாம் தர பிரஜை யாக  வாழ பழகிகொள்கீன்றோம்

  10. veeran says:
    14 years ago

    நஞ்சு காவும் சிவில்சமூகம்: தன்னைத்தானே பகைத்துக்கொள்ளும் பகிஷ்கரிப்பு வாதம்
    – நடேசன்
    யாழ்ப்பாண சிவில் சமூகம் என கூறிக்கொண்டு  வெளியிட்ட அறிக்கையை படித்தபோது அக்கால விடுதலைப் புலிகளுக்கு அறிக்கைகள் எழுதியவர்களின் எழுத்துப் போல் இருந்தது. இந்த அறிக்கையிலிருந்து ஒரு வார்த்தையில் இவர்கள் யார?; என என்னால் கூற முடியும்.
    பாம்புக்கு தலையில் மட்டும் நஞ்சு உள்ளது. தமிழ் அரசியல் சமூகத்தின் மனிதர்களுக்கு நினைப்பிலும் எழுத்தில்  நஞ்சு வடிகிறது.  இவர்களது இந்தநஞ்சு நிச்சயமாக போரில் தப்பிப் பிழைத்து இருக்கும்  சாதாரண தமிழ் மக்களை கொல்லப் போகிறது என்ற பயத்தில் இந்த பத்தியை எழுதுகிறேன்.
    அந்த அறிக்கையில் இரண்டு பந்திகளிலிருந்து, இவர்களும் விடுதலைப்புலிகளைப் போல் ஜனநாயகத்தில் நம்பிக்கையற்றவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு ஜனநாயக சமூகத்தில் உதிரிக்கட்சி என ஒன்று இல்லை. ஒவ்வொரு மனிதனின் கருத்தும் கணக்கெடுக்கப்பட வேண்டியது. மேலும் ஒரு இனம் தனது உரிமையை கேட்கும் போது மத்திய வகுப்பினர் விவசாயிகள் முதலாளிகள் தொழிலாளிகள் என்ற வர்க்கங்கள் மட்டுமல்ல பிரதேச ரீதியாக மக்கள் தேவைகள் ஆராய்ந்து  கணக்கெடுக்கப்பட வேண்டும். யாழ்ப்பாண மக்களது தேவைகள் மட்டக்களப்பு வன்னி மாவட்ட மக்களது தேவைகளில் இருந்து மாறுபட்டது. தமிழ்ப் பேசும் மக்கள் என்னும் போது மலையக இஸ்லாமிய ஏன் தற்பொழுது கொழும்பில் வாழும் மக்களையும் அனுசரித்து அவர்கள் தலைவர்களையும் சேர்த்துக் கொண்டே தமிழ் உரிமைகள் பற்றி பேசப்படவேண்டும். 6,40,000 யாழ் குடாநாட்டு மக்கள் மட்டுமோ அல்லது அவர்களது தலைவர்கள் மட்டுமோ ஏனைய தமிழர்களின் தலைவிதியை பேசிய காலம் இறந்தகாலம். நாங்கள் பார்க்கும் நிகழ்காலம்  தமிழ்மக்கள் அதாவது 4 சதவீதமானோர்  வாழ்வது இலங்கையின் 9.5 வீத நிலப்பரப்பைக் கொண்ட வடக்கு மாகாணம்.
    தற்போதைய அரசியல் நிலையை கருத்தில் கொள்ளாமல் வடக்கு கிழக்கு இணைப்பு தமிழ் தேசியம் காணி பொலிஸ் என கடந்த கால கனவுகளில் வாழ்ந்து வரும் வெளி நாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்கள் போல  கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேல் எதுவித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இந்த அறிக்கை மூலம் தமிழ்கூட்டமைப்பினரை ஆட்டிப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட முனைகிறார்கள். இந்த சிவில் சமூகத்தில் .யாழ் மேலாதிக்க தன்மையின் அசலான கருத்தியல் வடிவம்  தெரிகிறது.  இவர்களில் பலர்  முக்கிய புலி ஆதரவாளர்கள். மடுவில் விடுதலைப் புலிகளால் ஷெல் அடித்து பொது மக்கள் கொல்லப்பட்டபோது  அதனைக்கண்டிக்காமல் மௌனம் காத்தார் மன்னார் ஆயர். இவரது நடத்தை நேர்மையானது அல்ல. மற்றொரு  ஆயர் மக்களுக்காக கொடுக்கப்பட்ட மில்லியன் டொலர் பணத்தை விடுதலைப்புலிகளின் கைகளில் தூக்கிக் கொடுத்தவர். இவர்கள் யார் என்பது அவர்கள் சேவை செய்யும் கர்த்தருக்குத்  தெரியும். இவர்களை தமிழர் கூட்டமைப்புக்கும் தெரியும். இலங்கையில்லாத மேற்கு நாடாக இருந்தால் இவர்களுக்கு பயங்கரவாதத்திற்கு துணை போனதற்காக 25 வருடங்கள் சிறைவாசம் கிடைத்திருக்கும் .
    இவர்களது அறிக்கை மீண்டும் ஒரு ஆயுதப் போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தின் காரணத்தால்தான் இதை கடுமையாக விமர்சிக்க விரும்புகிறேன். வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழர் விடுதலைக்கூட்டணியின் வைத்த போது எனக்கு 17 வயது .அதன் பின் விளைவு  தெரியாமல் போய்விட்டது. ஆனால் 77 இல் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இராசலிங்கம் அவர்களுக்காக  பாhரளுமன்ற தேர்தலில் பத்து பல்கலைக்கழக நண்பர்களுடன் சென்று வேலை செய்து விட்டு ‘உங்கள் தனிநாட்டில் நம்பிக்கை இல்லை’ என அக்காலத் தலைவர் உடுப்பிட்டி சிவசிதம்பரம் அவர்களிடம் சொல்லிவிட்டு அத்தேர்தலில் வாக்குப் போடாமல் மீண்டும் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு திரும்;பினேன்.
    80 களில் இளைஞர்கள் ஆயுதம் எடுத்ததற்கு நியாயமான காரணம் உள்ளது. 83 இல் தமிழர் மேல் திணிக்கப்பட்ட வன்முறை, வெலிக்கடை படுகொலைகளின் பின்பு சிறையில் கூட பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் தமிழர்கள் தற்பாதுகாப்புக்காக ஏந்திய ஆயுதத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். இந்தியா  மேற்கு உலகம் ஏன் ஏராளமான சிங்கள மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அதன் பின்; 86 இல் அப்பாவி சிங்கள மக்களின் மேல் பயங்கரவாதத்தை திணித்து சகோதர கொலைகள் மூலம் தற்பாதுகாப்பு போரட்டம் பயங்கரவாதப் போராட்டமாக மாற்றப்பட்டது. இதில் ஒரு விந்தையான விடயம்; இக்காலத்தில் கூட பிரபாகரனோ புலிகளோ தமிழத்;தேசியம் என்ற  பதத்தைப் பாவிக்கவில்லை.
    வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பொறுத்தவரை மிகவும் இலகுவான கருத்தியல் “சிங்களவர் தமிழர் மேல் வன்முறையை  திணித்தார்கள். நான் இவர்களுக்கு அதே மருந்தை கொடுக்கிறேன். மற்ற இயக்கங்கள் இதற்கு தேவை இல்லாமல் அரசியல்  மாக்சிசம் எனப் பேசி இவர்கள் சிங்களவரையோ ஆமியையோ கொல்லவும் போவதில்லை. அத்தோடு எனக்கும் அரசியல் அது இது என்ற சொல்லி கரச்சல் படுத்துகிறாரகள்;. இவர்களைத் தட்டிப்போட்டு நான் சிங்களவரைப் பார்த்துக் கொள்கிறேன்.” என்பதுதான்.
    இந்த சிம்பிள்டனுக்கு  92 – 95 ஆண்டுவரையும் தமிழ் ஈழம் என்று போரிட்டாலும் தமிழ்த்;தேசியம் என்ற கோட்பாடு இருக்கவில்லை. வெளிநாட்டில் விடுதலைப்புலிகளுக்கு  காசு கொடுத்தவர்களுக்கும்; மதியுரைஞர், டாக்டர் என பல பட்டங்கள் வைத்திருந்த பாலசிங்கத்தாருக்கும் இந்த நினைப்பு இல்லை.
    92-95 இற்கு இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்;;பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில புத்திஜீவிகளும் மற்றும் கொழும்பில் பத்திரிகை நடத்திய சில இடதுசாரி சிந்தனையினரும் சேர்ந்து புலிப் பயங்கரவாதத்திற்கு தமிழ் தேசிய முலாம் பூசி பின்பு வேலுப்பிள்ளையின் மகன் தேசியத் தலைவராக்கப்பட்டார். நடிகர் இராமச்சந்திரன் கிருஷ்ணசாமி என்பவரால் புரட்சித்தலைவராகியது போல் இதுவும் அமைந்துவிட்டது.
    இந்தத் தமிழ் தேசியம் யாழ்ப்பாண மையவாதத்தால் உருவாக்கப்பட்டது. அது கருத்தியலாகியதால்; இது மாற்றுக்கருத்தோ ஜனநாயகமோ அற்ற இயக்கத்துக்கு பொருந்தியது.  யாழ்ப்பாண சாதி அமைப்பில் அதாவது குடிமை – அடிமை அமைப்பில் தாழ்த்;தப்பட்ட சமூகத்தின் மேல்  காலம் காலமாக ;பாவிக்;கப்பட்ட குருரமான வன்முறை கூராக்கிய ஈட்டி வடிவம் பெற்று  இந்த இயக்கத்திற்குள் சென்றது.  எதிரானவர்கள் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் எனவும் சிறு நிழல் போன்ற எதிர்ப்பும் கருவிலேயே அழிக்கப்படவேண்டும் என்ற கருத்தியலாக மாறியது. சிங்களமக்களுடன் ஒப்பீட்டு ரீதியில் தாழ்வு மனப்பான்மையுடன் மற்றவர்கள்  துன்பப்பட நாம்  நாட்டைவிட்டு விட்டு ஓடினோம் என்ற குற்ற மனப்பான்மை கொண்ட   புலம் பெயர்ந்தவர்களால்; அளிக்கப்பட்ட பணத்துடன் இந்த தமிழ்த் தேசியம் வளர்க்கப்பட்டது.
    ;தேசியத் தலைவர்’ என்ற முள்முடியும் தமிழ்த்;தேசிய முலாம் பூசப்படாமல் இருந்தால்  சிலவேளையில் சமாதான ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்கலாம் அல்லது  வேறு ஒருவர் மூலமாவது  சமாதானத்திற்கான  வாய்ப்;பு  உருவாகி இருக்கலாம். பாரிய மனித  அழிவுகள் தடுக்கப்பட்டிருக்கலாம்.
    நரமாமிசம் உண்டு உடலை வளர்த்தாலும் மூளை வளர்ச்சி பெறாத இராட்சதன் தன்னைத் தானே அழிப்பது போல் சுவரில் மோதி இந்த இயக்கம் அழிந்தது. ஜனநாயகம் அற்ற இந்த அமைப்பு தலை போன பின்பு எச்ச சொச்சமில்லாமல் உலகம் எங்கும் சிதறியது. இதனது கூறுகள் தங்களைத் தாங்களே போட்டி போட்டுக்கொண்டு அழிக்கும்.. அது பற்றிய சந்தேகம் எவருக்கும் இருக்க வேண்டியது இல்லை
    பிரச்சினையான விடயம் என்னவெனில் வீட்டுத் தோட்டத்தில் நஞ்சு போட்டு நத்தை இறந்த பின்பு கழற்றி விடப்பட்ட கூடு போல் இந்தத் தமிழ்த்தேசியம் இப்பொழுது கிடக்கிறது. இந்த நத்தை ஓட்டுக்குள் மாக்;சிசம் பேசிய சுரேஸ் பிரேமசந்திரன், முற்றாக இராணுவ வாதம் பேசிய ரெலேவில் இருந்த செல்வம் அடைக்கலநாதன் என எல்லோருமே குடியேறி விட்டார்கள். இதைவிட அமெரிக்காவில் வசிக்கும் உருத்திரகுமாரன் தனது காலையும் விநாயகம் நெடியவன் கோஷ்டிகள் தங்கள் தலைகளையும் இந்த நத்தைக்கூட்டுக்குள் நுழைக்கப் பார்க்கிறார்கள். இது மட்டுமா சில இந்திய சக்திகளும் மேற்கு நாட்டினரும் இந்த நத்தையை உசுப்பி விடப்பார்க்கிறார்கள். டக்ளஸ் தேவானந்தா கூட  பிரபாகரன் கெட்ட கொலஸ்ரோல்  தான் நல்ல கொலஸ்ரோல் எனக் கூறுவது இந்த நத்தை ஓட்டை முற்றாக கை விட மனமில்லாமல்தான்.  
    என்னைப் பொறுத்தவரையில் இந்தத் தமிழ்த்தேசிய  கருத்தியலை சிம்மாசனம் ஏற்றியவர்கள்  ஜுலை 2009 இற்குப்பின்  அந்தரத்தில் தொங்கவிட்டு மீண்டும் இரண்டரை வருடத்தின்பின் மீண்டுவந்து தங்கள் யாழ்ப்பாண ஆதிக்கத்தை முருங்கை மரத்தில் ஏற்ற முனைகிறார்கள்.
    சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வளவுகாலமும் எங்கே இருந்தார்கள்;?
    முள்ளிவாய்க்காலுக்கு  அப்பாவிப்பொதுமக்களை கால்வாய்கட்டி கொண்டு சென்ற போது இவர்கள் எங்கு போனார்கள்? பிரபாகரனின் மகன் ;சார்ள்ஸ் அன்டனி, தப்பியோடியவர்களை சுட்டும் வாள் கொண்டு துரத்திய போதும் நமது மத குருமார்கள் மவுனித்தது ஏன்?
    வலயர்மடத்து தேவாலயத்தில் இருந்து பெண்குழந்தைகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற போது நீங்கள் கர்த்தரின் பேரால் என்ன அறிக்கைவிட்டீர்கள்?
    எந்த ஒரு சமுதாயத்திலும் சிவில் சமூகம் மதிப்புக்குரியது. இந்த மூன்று இலட்சம்  மக்கள் அகதியாக அல்லல்பட்ட இரண்டரை வருடத்தில் உங்களது செயல்பாடுகள் என்ன என்பதை மக்கள் முன்னால் வைத்து விட்டு அறிக்கையை விட்டிருக்கலாம்.
    விடுதலைப்புலிகள் இருக்கும் வரை பொட்டம்மானுக்கு பயந்து பயந்து சீவித்து இப்பொழுதுதான்  கூட்டமைப்பினர் சுதந்திரகாற்றை சுவாசிக்கிறார்கள்.
    அவர்களை சுயமாக நடவடிக்கை எடுக்க விடுங்கள்.
    இப்படிச்சொல்வதனால் நான் கூட்டமைப்பின் ஆதரவாளன் என்று கருதவேண்டாம்.
    ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்;;பட்ட அவர்களை நாடுகடந்த ஈழம் பேசுவோரும் மற்றும் நெடியவன் தலைமையிலான குழுவினரும்   கைப்பற்றி தங்கள் அரசியலை நடத்த விரும்புகிறார்கள். அந்த கோஷ்டியில் சிவில் சமூகம் சேர்ந்து விட்டது.. சிங்கள சமூகத்திலும் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் எதிர்ப்;போராட்டம் நடத்தினால் இதனால் ஏற்படும் விளைவுகள் மீண்டும் ஒரு வன்முறைப்போராட்டத்தையே உருவாக்கும்.  மீண்டும் ஒரு புலி இயக்கத்தை உருவாக்கி குளிர்காய முற்பட வேண்டாம்.  அதனால் அதற்கு பலியாவது நீங்களாகக் கூட இருக்கலாம்.  77இல் தலைவர் அமிர்தலிங்கம் தனது செயல்களால்  89 களில்  தன்னுயிருக்கு ஆபத்து வரும் என்பதை  சிந்தித்திருக்கமாட்டார்.
    நீங்கள் சொல்லும் இந்த இந்தப்பகிஷ்கரிப்பு விடயம் புதிகாக உங்கள் மூளையில் மலரும்  புதிய சாணக்கியம் என பெருமிதம் கொள்ளவேண்டாம். நான் பிறக்க முன்பிருந்தே இதைத்தான் யாழ்ப்பாணத் தமிழன் செய்து கொண்டிருக்கிறான்.
    கொஞ்சம் சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டி பார்ப்போம். தமிழர்களுக்கு பகிஷ்கரிப்பு  புதியதில்லை. 1931இல் டொனமூர் கமிசனால் உருவான சபையை பகிஷ்கரித்த சேர். பொன் இரமநாதன் குழுவினர் வெள்ளாளர் அல்லாதோருக்கு வாக்குரிமைகிடைக்கக் கூடாது என்றனர்.  இளைஞர் காங்கிரஸ், இலங்கைக்கு முழு விடுதலை கிடைக்கவில்லை என பகிஷ்கரித்ததால் யாழ்ப்;பாணம், காங்கேசன்துறை , பருத்தித்துறை ,ஊர்காவற்றுறை போன்ற இடங்களுக்கு தேர்தல் நடக்கவில்லை. பின்னர் யாழப்;பாணமக்கள் தாங்கள் தவறிழைத்து விட்டோம் எனச்சொல்லி  தேசாதிபதிக்கும்  இங்கிலாந்துக்கும் மகஜர் எழுதினார்கள். ஆனாலும்; 1934 ஆண்டில் மீண்டும் நடந்த தேர்தலின்போதுதான் மேற்கண்ட தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இப்படியான முட்டாள்தனமான பகி;ஷ்கரிப்பு இன்றுவரையும் தொடர்ந்து வருகிறது.
    இலங்கையில் தமிழ் அரசியல் என்பது காலம்  காலமாக நல்ல கணவனுக்காக காத்திருக்கும் பெண் கடைசியில் கன்னி கழியாமல் கல்லறைக்கு போவது போலாகிவட்டது. இதுதான்  கடந்த எண்பது வருட சரித்திரம்.
     குப்பை மேட்டு சேவல்; அந்தக் குப்பையைச் சுற்றி கொக்கரிப்பது போல்தான் இந்த பகிஷ்கரிப்பு கோஷமும். யாழ்ப்பாணத்தை விட்டு எப்பொழுது இந்த இலங்கைத் தமிழ் அரசியல் வெளிவருகிறதோ அன்றுதான் தமிழர்களுக்கு நல்லகாலம் தொடங்கும்.

    • shanthan says:
      14 years ago

      சபாஸ் வீரன் சிவில் சமூகம் என்ற பெயரில் சில புலிப்புல்லுருவிகள். இவர்கள் இப்போதே தூக்கி எறியப்பட வேண்டியவர்கள். இவர்களை விட்டால் தமிழ் மக்களுக்கு இன்னொரு முள்ளிவாய்க்கால் தான் கிடைக்கும்.

  11. அரிச்சந்திரன் says:
    14 years ago

    என்ன காமெடி வீரரே, இனித்தான் நீர் இரண்டாம் பிரஜையாக வாழ பழகிக்கொள்ள போகின்றீரோ? ஏலவே அப்படித்தான் கிடக்கின்றீர் என்பதை சொல்லுவதற்கு என்ன வெட்கம் என்ன தயக்கம். நீரும் உம்மைப்போன்றவர்களும் இரண்டாம் மூன்றாம் நான்காம் பிரஜைகளாக கிடந்துவிட்டுப்போங்கள் சூடு சொரணை இல்லாத உங்களால் தாராளமாக அது முடியும். சிவில் சமூகம் அதற்கு தயாரில்லை என்பதினால்தான் தமது எண்ணத்தை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

    மேலும், நாதாரி நடேசனுக்கு ஒரு பின்னூட்டம் உடனடியாக அனுப்பவும் கத்திக் குளறி ஆகப்போவது ஒன்றுமில்லையாமென்றும் நேரத்தை வீணடிக்காமல் வீசும் காற்று மாறும் அதற்குள் ராசபக்ஸாக்களுடனான வியாபாரத்தில் இன்னும் கூடியளவு கவனம் செலுத்தி ஓடியாடி தொப்பையை குறைத்துக்கொள்ளுமாறுமென்றும்.

    • veeran says:
      14 years ago

      போராட்டம் தோற்று போய் விட்டது, காரனம் புலிகலும் புலி பினாமிகலும், வெளிநாட்டு வாழ் தமிழர்களும், சக தமிழர்களை கொலை செய்வதன் மூல்ம் விட்தலை பெறலாம் என எண்ணியதன் விளைவு ,  சூடு சொரனை  உள்ள உங்கள் தேசிக்காய்ப்தலை ஏன் கோவனம் கட்டி வெள்ளை கொடி உடுத்தி ஆமிக்காரனின்  பூட்சைநக்கியதாம், அந்த பன்னாடை உமக்கு த்லைவன் அவரவர்  தகுதிக்கு ஏற்ற தலைவர் தான் கிடைப்பார், புலி  ஆதரவு என்பது காலம்  காலமாக நல்ல கணவனுக்காக காத்திருக்கும் பெண் கடைசியில் கன்னி கழியாமல் கல்லறைக்கு போவது போலாகிவட்டது

    • veeran says:
      14 years ago

      தேசிக்காய் தலையனும் ராஜபக்சவிடம் தேர்தல் பகிஸ்கரிப்புக்காக வாங்கிய 275 கோடியில் தானே தொந்தியை வளர்த்திருந்தான், என்ன செய்ய கடைசியில் பொல்லை கொடுத்து அடி வாங்கி கோவனம் கட்ட வேன்டியநிலை வந்தது, அந் படம் இங்கே வன்னியில் பெரும் கட் அவுட் ஆக உள்ளது, அதை கடந்து செல்லும் மக்கள் ஆடிய ஆட்டம் என்ன என்ற் பாட்லை பாடி செல்கின்றனர்

  12. அரிச்சந்திரன் says:
    14 years ago

    வன்னி மண்ணின் வாசனையறியா காமெடி veera, கோவேறு கழுதைகள் உங்களுக்கு கொழும்புக்காரன் கோவணம் மாட்டிய கோமாளி எவனையோ காட்டி கொழுப்பை ஏற்றி விட்டான். காலம் தன் முடிச்சுக்களை விரைவினில் அவிழ்க்கும்போது உங்களின் கோவணங்கள் உங்களையறியாமலேயே கழிவுடன் அவிழும். நீவீர் என்ன செய்வீர் நக்குண்டீர் நாவிழந்தீர், மதியிழந்தீர், மானமுமிழந்தீர். அதனால்,
    எஜமானர்களைத்தவிர எவர் எதை உங்களுக்கு ஓதி ஓதி ஊட்டினாலும் காட்டினாலும் அது செவிடனின் சோணைகளில் மீட்டிய அதுவே அன்றேல் வேறொன்றுமில்லை.

  13. மகேன் மாசில் says:
    14 years ago

    சிறந்த தலைவனை எதிர்பார்ப்பதை விட தலைமையை ஏற்படுத்துவதிலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும்.. ஒரு தனிமனிதனின் இழ்ப்பின் பின் புலிகள் நிர்வாகம் எவ்வாறு சீர்கெட்டு கிடக்கிறது என்பதிலிருந்தே கற்க வேண்டியவை நிறைய இருக்கிறது. இதற்கு உழைத்த ஆண்டுகள் மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளபட்டால் போதாது 20 ஆண்டுகள் மந்தைபோல் உழைப்பனை விட ஒருநொடியில் கூர்மையாக சிந்திப்பவன் வெற்றி பெறுகிறான்.

  14. veeran says:
    14 years ago

    வ்ல்லிபுறம் விக்டர் படைத்தளம்-1 -தமிழர்களுக்கும், போர்க்கைதிகளுக்குமான சித்திரவதைக்கூடம்
    உலகிலேயே மிகக் கொடூரமான மனித அட்டூழியங்களை புரிந்த அமைப்பே தமிழீழ விடுதலைப் புலிகள்! இதை உலகத்தார் அனைவரும் அறிவர். இவர்கள் “விடுதலை” இயக்கம் என தம்மை பெயர்சூட்டிக் கொண்ட போதிலும், புரிந்த காரியங்கள் யாவும் விடுதலைக்கு மாறானவையே! போர்க்கைதிகளை தவிர, தமது சொந்த இனத்தை சேர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் சிறுவர்களுக்கும் சித்திரவதை செய்வதற்கென இப் புலிகள் பிரத்தியோகமாக இரகசிய கொலை முகாமொன்றை நடாத்திவந்துள்ளமை பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
    இவ்வாறானதொரு முகாமே வல்லிப்புறத்தில் அமைந்துள்ள “விக்டர் படைத்தளம்-1”. இம் முகாமானது விடுதலைப்புலிகளின் உயர்மட்டக் குழுவினரால் மட்டும் கையாளப்பட்டதுடன், மிகவும் இரகசியமாகவும் பேணப்பட்டுவந்துள்ளது.
    இம் முகாம் புதுக்குடியிருப்பு ஏ34 வீதிக்கு அருகாமையிலும், உடையார்கட்டு வனப்பகுதியில் இருந்து 4 கிலோ மீற்றரிலும் அமையப்பெற்றுள்ளது. 1997 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இச் சித்திரவதைக் கூடமானது, எவரும் தப்பியோட முடியாத அளவு இரும்புக் கம்பிக் கதவுகளுடனான 24 அறைகளாக கட்டப்பட்டுள்ளது. எனவே இதில் வெறுமனே 15 காவலர்களே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
    விடுதலைப்புலித் தவைலர் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரால் இச் சித்திரவதை அறைகள் கண்ணானிக்கப்பட்டு வந்துள்ளன. மேலும் பொட்டு அம்மானால் சகல சித்திரவதைகளும் வழங்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்படுவர். இச்சித்திரவதைக்கூடம் ஒவ்வொன்றும் 8 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாகும். கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரின் தகவில்படி ஒவ்வொரு கூடத்திலும் 15 பேரை அடைத்துவந்துள்ளனர். இவற்றைவிட மிகவும் கீழ்த்தரமான விடயம் யாதெனில், இச் சிறிய அறையினுள்ளே அக் கைதிகளுக்கான மசலம் கழிப்பதற்காக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளமையாகும். 
    மேலும் கைதிசெய்யப்படும் அதி முக்கிய பிரமுகர்களை சிறைப்படுத்தும் கூடம், வன்னியின் அடர் காட்டுப்பகுதியில் அமைந்திருந்ததாகவும், இதனை ரட்னம் மாஸ்டர் எனும் விடுதலைப்புலி புலனாய்வு உறுப்பினர் நடத்தி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதைத்தவிர போர்க் கைதிகளாக அகப்படும் இராணுவத்தினருக்கு பொறுப்பாக கோபி எனும் விடுதலைப்புலி உறுப்பினர் பொறுப்பாக இருந்துள்ளார். ஆனால் இப் பயங்கரவாதிகள் வெளிநாட்டு தூதுவர்களுக்கும், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் கைதிகளின் சிறைக்கூடம் என பொய்யான இடங்களையே காண்பித்து வந்துள்ளனர்.
    இப் பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்படுபவர்கள் தொடர்பாக மிகவும் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விடயம் யாதெனில், இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே!
    அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியவர்கள் என்ற சந்தேகத்திலேயே இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களை “நாய்கூடு” எனும் மிகவும் நெருக்கமான கூட்டில்பொட்டு அடைத்து நாட்கணக்கில் வைத்திருப்பார்கள். அக் கூட்டில் அடைக்கப்பட்டவர், அவரது உடம்பை சிறிதளவு கூட அசைக்க முடியாதளவு மிகவும் நெருக்கமாக இருக்கும். இவ்வாறான கொடுமைகள் ஹிட்லரின் காலத்தில் கூட இடம்பெறவில்லை எனக் கூறலாம். இதையா இவர்கள் “தமிழீழம்” எனக் கூறினார்கள்? 

    இவர்களது கொடூர அட்டூழியங்களுக்கு மிகவும் சிறந்த உதாரணமாக குறிப்பிடக்கூடிய விடயமே 2009 மே 8 ஆம் திகது இடம்பெற்ற மிகக் கொடூர நிகழ்வாகும். தமது இயக்கத்திற்காக போராடி காயப்பட்ட 50 பெண் போராளிகளை ஒரு பஸ்ஸில் ஏற்றி அவர்களுக்கு தேநீர் கொடுத்து பின்னர் அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு, குண்டு வைத்து அப் பஸ்ஸை தகர்தனர். அவ் உண்மை சம்பவத்தை பலர் நேரடியாக கண்டு சாட்சியம் அளித்துள்ளனர்.
    இப் பயங்கரவாதிகள் தமது இயக்கத்திற்கு பொருத்தமில்லாத “விடுதலை” என்ற சொல்லை தமது இயக்கத்தின் பெயரில் சூட்டியுள்ளனர்.
    உலகிலேயே இவ்வாறானதொரு மனிதக் கொடுமைமைகளை புரிந்த பயங்கரவாதிகள் இவர்களை தவிர வேறு எவரும் இருக்கமாட்டார்கள் எனக் கூறலாம். இவர்களுக்கெதிராக நடவடிக்கையெடுக்க சர்தேசரீதியில் இயங்கும் எந்வொரு இயக்கம்மும் முன்வராதா?
    30 வருட காலமாக இப் பயங்கரவாதிகள் புரிந்துவந்த, மிகக் கொடூர மனித அட்டூழியங்கள், சர்வதேச அமைப்புகளுக்கும், அதிகாரசபைகளுக்கும் கொடூர குற்றச் செயல்களாக தெரியவில்லையா?
    ஆனால் இப் பயங்கரவாதிகளிடம் இருந்து அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றி அவர்களுக்கு நலன்புரி சேவைகளைப் புரிவதுடன், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாது, அம் மக்களுக்கு தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இராணுவத்தினரின் செயல்பாடுகளை, இச் சர்வதேச அமைப்புக்களும், அதிகாரசபைகளும் குற்றச்செயல்களாக விளங்கிக்கொள்வது சிரிப்பிற்கும்! கவலைக்குமுரிய விடயமாகுமா

  15. Mahendra says:
    14 years ago

    புறநானூற்றுக் காலத்தின்பின் அடங்கியிருந்த தமிழர்வீரம் இருபதாம் நூற்றாண்டில் வெளிப்பட்டு அழிவை சந்தித்துள்ளது. ஆனாலும் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்திடல் வேண்டும் என்ற பாரதியின் கனவை அது நனவாக்கியுள்ளது. மறுபுறம் இந்த அழிவானது, வேற்றின மக்களின் சமூக கலாச்சாரங்களுக்கு தமிழினம் அடிமைகளாக வாழ்ந்துவருவதை தமிழருக்கு இடித்து உணர்த்தியுள்ளதோடு, தமிழினத்தை சிந்திக்கவும் தூண்டியுள்ளது. சிந்தனைகள் அவரவர் தகுதிக்கும், தகமைக்கும் ஏற்ப, பொய்கள் உண்மைபோலவும், உண்மைகள் பொய்களாகவும் வெளிவருகின்றபோதும் இறுதியில் வாய்மையே வென்று சரித்திரம் படைக்கும். இது வரலாறு.

  16. veeran says:
    14 years ago

    வாய்மையே வென்று சரித்திரம் படைக்கும். இது வரலாறு.

    புலி அழிந்த போவாய்மையே வென்று சரித்திரம் படைக்கப்பட்டது

    • Mahendra says:
      14 years ago

      தங்களுடைய இக்கருத்தானது இயலாமையில் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுபோல் தெரிகிறதே தவிர தமிழர் மறுவாழ்வியலுக்கு உரிய கருத்தாக தெரியவில்லை.

      • veeran says:
        14 years ago

        மன்னிக்கவும்,நான் இவர்கள்   கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் கை விட்டு கடைசியில் ராஜபக்சவை பதவிக்கு கொண்டு வந்த்தனரே என்ற ஆதங்கத்தில் எழுதுகின்றேன்  எனவே  புரிந்து கொள்ளவும்

  17. அரிச்சந்திரன் says:
    14 years ago

    லங்கா புவத் செய்தியாளார் காமெடி Veeran அவர்களே, வன்னியில் வல்லிபுறம் என்ற இடமே இல்லை என்பதை கூட அறியாத அரைவேக்காடு தலையரோ நீர். சிங்களவனுக்குத்தெரியும் இன்னும் சரித்திரம் முடியவில்லையென்று அதனால்தான் அவன் தன் படைக்கட்டுமானங்களை இன்னும் பலப்படுத்திக்கொண்டிருக்கின்றான். வால் ஆடும் தலை ஆடாது. அவன் தலை நீவீர் வால்.

    • veeran says:
      14 years ago

      தாங்கள் டூட்டிங், ஈஸ்டாம் என்ற்விபரங்களை பற்றி பேசலாம், வன்னி சனம் மட்டக்களப்பான் என்று பிரித்து பேசும் பரம்பரையில் வந்த உமக்கு வன்னியை பற்றி ஏதும் தெரியுமோ, 

    • veeran says:
      14 years ago

      மன்னிக்கவும்,நான் இவர்கள்   கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் கை விட்டு கடைசியில் ராஜபக்சவை பதவிக்கு கொண்டு வந்த்தனரே என்ற ஆதங்கத்தில் எழுதுகின்றேன்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...