தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு இலங்கை அரசுக்கு மிகவும் பக்கபலமாக இருந்த இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான் இன்று மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசிடம் கேள்விகளை எழுப்பியுள்ளன. சர்வதேச சமூகத் தால் எழுப்பப்பட்ட இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை இலகுவில் இலங்கை அரசு தட்டிக்கழித்துவிட முடியாது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனை ஒப்புக்கொண்டுள்ளார்.
இலங்கை அரசின் மீது போர்க்குற்றச் சாட்டுக்களைச் சுமத்தியவாறே இன அழிப்பிற்கும் ஐரோப்பியநாடுகளும் இந்தியாவும் உதவின.
சம்பந்தரின் புதிய ஞானம் குறைந்தபட்சம் மக்களுக்கு நண்பர்களையும் எதிரிகளையும் இனம்காட்டட்டும்.
இவர்களை அழிக்க யார் உதவப்போகிறார்கள்?
ஐயா சம்பந்தரே … குடியும் குடித்தனமுமாக சிவனே என்டு வாழ்ந்த உங்கள திரும்ப அரசியலுக்கு கொண்டந்து கேவலபடுத்துராங்களே யோ…………..