இந்திய இராணுவம் இலங்கையை ஆக்கிரமித்த 80 களின் இறுதிப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசின் அன்றைய ஜானதிபதி ரனசிங்க பிரேமதாச ஆயுதங்களை வழங்கினார். இந்திய ஆக்கிரமிப்பை அகற்றுவேன் என்று பிரச்சாரம் மேற்கொண்டே பதவிக்கு வந்த பிரேமதாச இந்திய அரசிற்கு எதிராகப் போராடுவதற்காகப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார்.
அதே காலப்பகுதியில் பிரித்தானிய அரசு ஜே.வி..பி ஐ அழிப்பதற்காக தியத்தலாவை இராணுவ முகாமை மையமாகக்கொண்டு இலங்கை அரச படைகளுக்கு பயிற்சி வழங்கியது.
இந்திய அரசிற்கு எதிராகப் ஆயுதப் போராட்டம் நடத்திய ஜே.வி.பி இன் ஆதரவாளர்கள் பிரேமதாசவினால் உள்வாங்கப்பட ஜே.வி.பி செல்வாக்கிழந்து போக பிரேமதாச அரசால் 89 ஆம் ஆண்டின் இறுதியில் ஜே.வி.பி இன் ஆயுதக் குழுக்கள் முற்றாக அழிக்கப்பட்டன.
90 ஆம் ஆண்டு புலிகளின் அலுவலகம் ஒன்று கொழும்பில் அமைக்கப்பட்டது. பிரேமதாசவின் அன்றைய தொடர்பாளராக மாத்தையா நியமிக்கப்பட்டிருந்தார். புலிகள் அமைப்பின் பிரதித் தலைவராகவிருந்த மாத்தையா பின்னதாக இந்திய அரசின் உளவாளி என்று குற்றம் சுமத்தப்பட்டு பிரபாகரனால் கொலை செய்யப்பட்டார்.
90 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்த அலுவலகத்தில் சூசை, பதுமன் போன்றவர்களும் வலம் வந்தனர்.
இன்று பிரேமதாச புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிப் பலப்படுத்தினார் என்றும் தாம் புலிகளை அழித்தோம் என்றும் மகிந்த பரிவரங்கள் பிரச்சாரம் செய்ய புலிகளைப் பிழவுபடுத்தவே ஆயுதங்களை வழங்கினோம் என்ற பொய்யை சஜித் பிரேமதாச கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.
Who ever supplied weapons or money, LTTE dig their own pit…
First fought with IPKF… killed Rajiv…
Then went upto Mullivaikkaal…
Now TNA thinking for a alliance(support) with either one major party…
All are ‘Deal or No Deal’…
Now the common candidate for the president is from SLFP…
SLFP’s General Secretary Maithiribala have alliance with UNP…
So, who is going to blame who in armed… financed LTTE…?
உலகத்தில் பல உண்மைகள் உறங்கவில்லை. காலத்தின் விதிக்கு யார்கடமை செய்தார்கள் என்பதனை விட அவரவர் தவறுகளுக்கு அடுத்தவர்கள் தண்டனை வழங்குவதனை விலக்கிக்கொண்டால் ஆண்ணடவன் தீர்ப்பு வரை அவரவர் செயல்பாடுகளை அவரவர் திருத்திக்கொள்வதே மனிதன் தவறுகளில் இருந்து மீள முடியும்.
அந்த வகையில் யார் யார் தவறு செய்தார்கள் என்பதனை விட யார்யார் உண்மைக்காக போராடி இருக்கின்றார்கள் என்பதனை ஆராயப்பட வேண்டும். அந்த வகையில் கருணாவையே நிரபராதி ஆக்க முயற்ச்சிக்கும் தமிழர்களும் டக்ளஸ் நிரபராதி என வாழ்த்துரைக்கும் தமிழர்களும் கூட இருக்கும் போது கே.பி மாத்தையா போன்றவர்கள் மட்டும் துரோகி ஆக்கி கொள்வதில் அர்த்தம் இல்லை பலர் தவறுகளை தெரிந்து செய்கின்றார்கள் சில்ர் தெரியாமல் செய்கின்றார்கள் அதிலும் சிலருக்கு தவறுகள் திணிகப்படுகின்றது காரணம் ஊழல்வாதிகள் அவர்களை தரோகி ஆக்கி தமக்கு சந்தற்பங்களைத் தேடுகின்றார்கள் அதனால் ஏற்படும் பிளவு சகலரையும் ஆட்டம் காண வைக்கின்றது.
அந்தவகையில் யாரையும் தவறுகாணவோ சரிஎன நிரூபிக்கவோ முன்பு ஆதரங்களை சரியாக தேடிக்கொள்ள வேண்டும். தவறுகளுக்காக ஆதரங்களை தேடுவதும் தவறுகளை தொடர்வதற்காக தம்மை நிராபராதிகள் ஆக்குவதும் கடந்த காலங்களில் சாதகமாக இருந்திருக்கலாம் . ஆனால் யாதார்தத்தை உணராதவரை தவறுகளில் தம்மை வளர்க்க முடியாது என்பதனை புரிந்து கொண்டு தமிழர்கள் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய காலமே இதுவாகும்.
இன்றைய நிலையில் தமிழர்கள் தமிழர்களாக வாழும் போது எதிரியின் அரசியல் பலம் ஆட்டம் காணும் என்ற நிலையில் அர்பணிகப்பட்ட உயிர் தியாகங்கள் ஒரு உன்னத விடுதலையை உலகத்தமிழினத்திற்கு வழங்கி உள்ளது அதற்கான அடுத்தகட்டமாக உருவாக்கம் பெற்ற நா.க.தமிழீழ அரசாங்கத்தை உலகத்தமிழர்கள் சரியான பாதையில் ஏற்காதமை . இன்றைய பின்னடைவுகளை கொண்டுள்ளது என்பதே யதார்தமும் வரலாறும்.