24.03.2009.
பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதை நிறுத்தும்வரை அவர்களுக்குப் புத்துணர்வு ஏற்படும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் செயற்படாது ஐக்கிய நாடுகள் சபைக்கான இராஜதந்திரவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வன்னியில் மீட்கப்படாத பகுதிகளிலுள்ள மக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லவிடாது தடுத்துவரும் விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும், அல்லது அவர்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான பெயர் குறிப்பிட விரும்பாத தூதுவர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பொதுவாக சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விடயங்கள் குறித்தே கலந்துரையாடப்படும் எனச் சுட்டிக்காடடியிருக்கும் அந்தத் தூதுவர், விடுதுலைப் புலிகள் அமைப்பு மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சந்தர்ப்பங்களை வழங்கும் எந்தவொரு பிரேரணைக்கும் ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதரகமும், ஏனைய உறுப்பு நாடுகளும் அனுமதி வழங்காது என்றார்.
“அதேநேரம், இலங்கை அரசாங்கம் முகவர் அமைப்புக்களுடன் தொடர்புகளை வலுப்படுத்தி இராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது” எனவும் அந்தத் தூதுவர் கூறியுள்ளார்.
இவ்வாறு சில தூதுவர்கள் கூறுகின்றபோதும், இலங்கை விடயம் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் சில நாடுகளின் பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர்.
இலங்கை விடயம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் முன்கொண்டுவரப்பட்டால் அதற்குத் தாம் ஆதரவு வழங்குவோம் என ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சுசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானமொன்றை நிறைவேற்றும் முயற்சிகளில் சில நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. எனினும், அதற்கு சீனாவும், ரஷ்யாவும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.
இலங்கை விடயத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் முதன்முதலில் மெக்சிக்கோ கொண்டுவர முயற்சித்தபோது பிரித்தானியாவும், ரஷ்யாவும் எதிர்த்தன. இரண்டாம் தடவை கொண்டுவர முயற்சித்தபோது சீனா எதிர்த்துள்ளது. எனினும், இலங்கைக்கு எதிராகப் பிரேரணையொன்று பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்குவோமென அமெரிக்கா கூறியுள்ளது.
inllanka.
புலம் பெயர்நாட்டில்லுள்ள இரு தொலைக்காட்சிகள் தமிழ் தாதாக்கள்
தமிழ்நாட்டில்லுள்ள சில அரசியல்நடிகர்களை தவிர புலிகளை முற்றுமுழுதாக நிராகரிக்கிறது.
தமிழ்மக்களின் உரிமைகளையோ போராட்டத்தையோ உலகத்தில் யாரும் மறுதலிக்கவில்லை.
ஈழவாழ் தமிழ்-முஸ்லீம் அன்றாட வாழ்வு பல ஆண்டுகள் சிதைக்கப்பட்டதிற்கும் போராட்டம்
திசை மாறி போவதற்கும் புலிகளும் சில புலம்பெயர் புல்லுரிவிகளுமே காரணம் என முன்பு
என்றும் இல்லாதவாறு அம்பலமாகிறது.
//போராட்டம்
திசை மாறி போவதற்கும் புலிகளும் சில புலம்பெயர் புல்லுரிவிகளுமே காரணம் என முன்பு
என்றும் இல்லாதவாறு அம்பலமாகிறது.
// சந்திரன் ராசா!
எந்தப் போராட்டத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்? உங்கள் தலைவன் மகிந்தவின் இன அழிப்பைபற்றியா?